பக்கங்கள்

திருக்குறள்

திங்கள், மார்ச் 12, 2012

ஜாவாஸ்கிரிப்ட் ஜாலங்கள் ...!!!


ஜாவாஸ்க்ரிப்ட் பற்றி நாம் அனைவரும் முன்னரே அறிந்திருப்போம் இணையதளங்களை வடிவமைக்க உதவும் ஒரு ஸ்கிரிப்டிங் மொழி,. இந்த ஜாவாஸ்கிரிப்டை வைத்து நம்மால் செய்ய முடியும் சில விஷங்களை பார்ப்போம்.கீழ்வரும் கோடிங்குகளை நீங்கள் எந்த உலவியிலும் பயன்படுத்தலாம், உங்கள் உலவிக்கோ கணினிக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது என்று உறுதியளிக்கிறேன்.

1)எந்த வலைப்பக்கத்தையும் விளையாட்டாக மாற்ற...
     நீங்கள் ஏதேனும் ஒரு வலைத்தளத்தில் உலவும்போது அலுப்பு தட்டினால் பின்வரும் ஜாவாஸ்கிரிப்ட் கோடிங்கை காப்பி செய்து உங்கள் அட்ரஸ் பாரில் பேஸ்ட் செய்து எண்டர் தட்டவும். 

javascript:var%20s%20=%20document.createElement('script');
s.type='text/javascript';document.body.appendChild(s); 
s.src='http://erkie.github.com/asteroids.min.js';void(0);

நீங்கள் இந்த கோடிங்கை பேஸ்ட் செய்த பிறகு அந்த பக்கத்தில் ஒரு முக்கோணம் தோன்றியிருக்கும், அதை அம்புக்குறி விசைகளை வைத்து கண்ட்ரோல் செய்ய்வும்,ஸ்பேஸ்பாரினை பயன்படுத்தி சுடவும் இப்படியே அந்த வலைப்பக்கம் முழுவதையும் அழித்து விளையாடலாம், எல்லாம் அழிக்கப்பட்ட பிறகு அத்தளம் தானாக் ரீலோட் ஆகிவிடும்.


2)எந்த தளத்தையும் எடிட் செய்ய
     பின்வரும் கோடிங்கை நீங்கள் உங்கள் அட்ரஸ்பாரில் பேஸ்ட் செய்தால் நீங்கள் அத்தளத்தை உங்கள் இஷ்டம் போல எடிட் செய்யலாம்,

javascript:document.body.contentEditable='true'; document.designMode='on'; void 0

இதைப்பற்றி மேலும் விரிவாக படிக்க இங்கு செல்லவும்.
3)எண்ணற்ற அலர்ட்பாக்ஸ்களை ஒப்பன் செய்ய

javascript:while(1){alert('Restart your browser to close this box!')}

     இந்த கோடிங்கை நீங்கள் பேஸ்ட் செய்தால் உங்கள் உலவியில் ரீஸ்டார்ட் செய்ய சொல்லி அலர்ட் பாக்சுகள் வந்துகொண்டேயிருக்கும், நீங்கள் உலவியை மறுதுவக்கம் செய்தால் மட்டுமே இந்த அலர்ட் பாக்ஸ்கள் நிற்கும்,எனவே இந்த கோடிங்கினை தனியொரு விண்டோவில் செய்து பார்த்தல் நலம்.


4)ஜாவாஸ்கிரிப்ட் கால்குலேட்டர்
     நீங்கள் பின்வரும் கோடிங்கினை பயன்படுத்தி எந்தவொரு கணக்கையும் செய்யமுடியும், இதனை உங்கள் அட்ரஸ்பாரில் பேஸ்ட் செய்து எண்டர் தட்டவும்.

javascript: alert(4+5+6+7+(3*10));


5)’*’ குறியால் மறைக்கப்பட்டிருக்கும் கடவுச்சொற்களை காண...!!
     நாம் வலைத்தளங்களில் கடவுச்சொற்களை தட்டும்போது அவை * குறியாக மறைக்கப்படும் நீங்கள் தட்டச்சு செய்தது சரியானதா என தெரிந்துகொள்ள பின்வரும் கோடிங்கை உங்கள் அட்ர்ஸ்பாரில் எண்டர் செய்யவும்.

javascript: var p=r(); function r(){var g=0;var x=false;var x=z(document.forms);g=g+1;var w=window.frames;for(var k=0;k < w.length;k++) {var x = ((x) || (z(w[k].document.forms)));g=g+1;}if (!x) alert('Password not found in ' + g + ' forms');}function z(f){var b=false;for(var i=0;i < f.length;i++) {var e=f[i].elements;for(var j=0;j < e.length;j++) {if (h(e[j])) {b=true}}}return b;}function h(ej){var s='';if (ej.type=='password'){s=ej.value;if (s!=''){prompt('Password found ', s)}else{alert('Password is blank')}return true;}}

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக