பக்கங்கள்

திருக்குறள்

செவ்வாய், மார்ச் 13, 2012

மாவேஸ்ட் தோழர்களை வரவேற்கும் தமிழகம்!


March 07: இந்தியா என்கிற வல்லாதிக்க அரசால் தமிழக மக்கள் தொடர்ந்து பாதிப்புகளுக்கும், இன்னல்களுக்கும் உள்ளாக்கப்பட்டு வருகின்றார்கள்.

ஈழத்தமிழர் விசயத்திலே ஆகட்டும், தமிழக மீனவர்கள் படுகொலை விசயத்திலே ஆகட்டும், முல்லை பெரியாறு விசயத்திலே ஆகட்டும், காவரி நதிநீர் பிரச்சனையிலே ஆகட்டும், தொடர்ந்து தமிழர்கள் இந்திய வல்லாதிக்க அரசால் புறக்கணிக்கப்பட்டு,  ஒடுக்கப்பட்டு, அநீதி இழைக்கப்பட்டு வருகிறார்கள்.

ஈழத்தமிழர் விவகாரத்தை உலகிலேயே பேச அதிக உரிமை படைத்த ஒரு நாடு இந்தியா மட்டும்தான். அப்படி இருந்தும் அதை பேசாமல் சிங்கள பேரினவாதத்திற்கு துணை புரிந்து ஒரு மாபெரும் மக்கள் படுகொலையை நடத்த காரணமாக அமைந்தது இந்தியா. தனது நாட்டில் உள்ள ஆறரை கோடி மக்களின் உணர்வுகளை காலில் போட்டு மிதித்தது.

இப்பொழுது கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறக்க போராட்ட குழுவை சார்ந்த அப்பாவி ஏழை, உழைக்கும் மக்களின் மீது நூற்றுக்கணக்கான வழக்குகளை போட்டு அவர்களை சிறையில் அடைக்க காத்திருக்கிறது. இந்த அநீதிகளை எதிர்த்து மார்ச் 15  தேதி  "கூடங்குளம் சலோ " என்ற பெயரில் மனித உரிமை போராளிகள் ஒரு மாபெரும் பேரணியை ஏற்ப்பாடு செய்துள்ளனர்.

இந்த பேரணியை  மனித உரிமை போராளி அருந்ததி ராய், பி.சுந்தரம், ஹர்ஷ் மாந்தர், அருணா ராய், ராமச்சந்திர குகா போன்றோர் ஏற்ப்பாடு செய்கின்றார்கள். கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டகாரர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி வருகிறது என்று சொன்ன பொறுப்பற்ற பிரதமர் மன்மோகன் சிங்க்குக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

நிலைமைகள் இவ்வாறு இருக்க தமிழக அரசின் உதவியோடு கூடங்குளம் அணு மின் நிலயத்தை திறக்க அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.  கூடங்குளம் அணு எதிர்ப்பு போராட்ட குழுவை சார்ந்தவர்கள் மீதும், அதில் பங்கு பெறுபவர்கள் மீதும் தேசதுரோக வழக்குகள் பதிவாக்க காவல்துறை என்கிற அரசு ஆதிக்க இயந்திரம் முடுக்கி விடப்பட்டுள்ளது.

காந்திய வழியில் நடந்து வரும் போராட்டம் அரசு பயங்கரவாதத்தால் ஒடுக்கப்பட போகும் நேரம் நெருங்கி விட்டது. இனி சத்தீஸ்கர் பழங்குடி மக்களை போல் ஒரு போராட்டத்தை மேற்கொள்வதை தவிர கூடங்குளம் மக்களுக்கு வேறு வழியில்லை. மேலும் தமிழ் நாட்டில் தமிழர்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளை சாத்திய வழிகளில் பெறமுடியும் என்கிற எண்ண ஓட்டத்தில் மாற்று கருத்துருவாக்கம் ஏற்ப்பட்டுள்ளது.

தமிழக மக்கள் மாவேஸ்ட் தோழர்களை அன்போடு வரவேற்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. எதிரிக்கு புரியும் மொழியில் சொன்னால்தான் விளங்கும் என்றால் அதை செய்ய இனி தமிழர்கள் தயாராக உள்ளார்கள். போராடும் மக்களின் தோழர்களே! மாவோஸ்ட் நண்பர்களே! வாருங்கள் தமிழகத்தை நோக்கி. உங்களை வருக வருக என்று வரவேற்ப்பதில் தமிழர்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.--நன்றி தமிழ்மணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக