பக்கங்கள்

திருக்குறள்

திங்கள், மார்ச் 12, 2012

ஐ.ஜி. பிரமோத்குமார் வீட்டில் சி.பி.ஐ. ரெய்டு ! ராசாத்தியின் பினாமியும் சிக்குகிறார்?

PDF அச்சிடுக
Share   நெடு நாளைக்குப் பிறகு சி.பி.ஐ. சிலிர்த்துக் கொண்டு நீதியை நிலைநாட்ட புறப்பட்டிருக்கிறது. அதில் ஒரு சிறப்பம்சம் தான் ஐ.ஜி. பிரமோத் குமாரின் சென்னை மற்றும் பீகார் வீடுகளில் இன்று சி.பி.ஐ. சோதனை நடத்தினர்.

pramoth_ips-newஇந்தச் செய்திக்காகத்தான் தமிழ் லீடர் ஒரு வருடத்துக்கு மேல் காத்துக்கிடந்தது. 2011ம் ஆண்டு மார்ச் மாதம் 4ம் தேதி, ‘’575 கோடி ரூபாய் மோசடி: நிதி நிறுவன பெண் இயக்குனரை கடத்தி சீரழித்த போலீசார்’ என்று தமிழ் லீடர் செய்தி வெளிட்டது.

தமிழ் லீடரின் தொடக்கமே, இந்தச் செய்திதான் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த சில நாட்களிலேயே, ”பை நிறைய பணம் வாங்கிய ஐ.ஜி.

இன்ஸ்பெக்டர் அதிரடி வாக்குமூலம்” என்ற செய்தியை தமிழ் லீடர் வெளியிட்டது.

”திருப்பூரில் அவினாசி சாலையில் பாசி போரக்ஸ் டிரேடிங் கம்பெனி என்ற நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிதி நிறுவனத்தின் இயக்குனர்களாக கதிரவன், அவரது மகன் மோகன்ராஜ் மற்றும் கமலவள்ளி பணியாற்றி வந்தனர். இந்த நிதி நிறுவனம் 2007ம் ஆண்டு தொடங்கி, இரண்டு ஆண்டுகளில் கோவை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, நெல்லை, விழுப்புரம் உள்ளிட்ட 27 இடங்களில் கிளைகள் உருவாகின.

மாதம் 50 ஆயிரம் ரூபாய் செலுத்தினால், அடுத்த மாதம் முதல் நான்கு மாதங்களுக்கு 13 ஆயிரத்து 750 ரூபாய் தருவார்களாம். ஐந்தாவது மாதம், 50 ஆயிரம் ரூபாயுடன் 13 ஆயிரத்து 750 ரூபாயும் தருவார்களாம்.

திடீரென, நிதி நிறுவனத்தில் இருந்து முதலீட்டாளர்களுக்கு வர வேண்டிய பணம் வரவில்லை. இந்த நிதி நிறுவனத்தில், முதலீட்டாளர்கள் கிட்டத்தட்ட 575 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருப்பதாக, மத்திய குற்றப்பிரிவினரால் கண்டிபிடிக்கப்பட்டது. ஆனால், யாருமே புகார் தரவில்லை. புகார் ஏதும் கொடுக்கமாலே போலீசார் களத்தில் இறங்கினர். திருப்பூர் வடக்கு காவல் நிலைய போலீஸார் ஆளாளுக்கு, நிதி நிறுவனத்துக்குச் சென்று வசூல் வேட்டையை வாங்கிச் சென்றனர்…………”

mohanraj“பாசி நிதி நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு பணம் தர தாமதமாகிறது என்ற விஷயம் அரசல் புரசலாக, அப்போது மேற்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த பிரமோத்குமாருக்கு தெரிகிறது. பாசி நிதி நிறுவனத்தைப் பற்றி, தனது நண்பரும் பாஸ்போர்ட் விவகாரத்தில் மோசடி செய்து சி.பி.ஐ.யினரால் கைது செய்யப்பட்ட ஜான் பிரபாகரன் மூலம் தெரிந்துக் கொண்டார். பாசி நிதி நிறுவனத்துக்கு வெளிநாட்டில் 400 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்திருப்பதை அறிந்த ஜான் பிரபாகரன், ஐ.ஜி. பிரமோத்குமாரிடம் தெரிவிக்க, பின்னர் இருவரும் சேர்ந்து ஓர் திட்டம் தீட்டுகின்றனர்.

ஐ.ஜி. பிரமோத்குமார், தனது உத்தரவை துணிச்சலாக செய்யும் இன்ஸ்பெக்டரை திருப்பூர் மாவட்ட மத்திய குற்றப்பிரிவுக்கு கொண்டுவர திட்டமிட்டார்.

அப்படி வந்தவரின் பெயர் மோகன்ராஜ். இவர் வந்த பிறகுதான், கமலவள்ளி கடத்தப்பட்டார். அவரை கடத்தி வைத்துக் கொண்டு, பணம் பறிக்கப்பட்டது. ஒரு முறை அல்ல, பல முறை பணம் பறிக்கப்பட்டது.

பொதுமக்களை மோசடி செய்து, பணத்தை சுருட்டலாம் என்று நினைத்த கமலவள்ளியை, போலீசாரே மோசடி செய்திருப்பதுதான் வேடிக்கை. மோசடி பேர்வழியை, இன்னொரு மோசடி கும்பல்தான் கடத்தி பணத்தை பறிப்பது வழக்கம். ஆனால், இதை போலீசாரே செய்திருப்பது வேதனை.

---இப்படி செய்தி ஒரு செய்தியை கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழ் லீடர் வெளியிட்டது. சும்மா வெளியிடவில்லை. இந்த வழக்கில் சிக்கிய  இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் கொடுத்த வாக்குமூலம், போலீசார் சீரழித்த நிதி நிறுவன பெண் இயக்குனர் கமலவள்ளியின் வாக்குமூலங்களின் ஆதாரத்தோடு, தமிழ் லீடர் வெளியிட்டது.

இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவில் முதலில் வருகிறது. அங்கிருந்து சி.பி.சி.ஐ.டி.க்கு வருகிறது. பின்னர் சென்னை ஐகோர்ட் மூலம், சி.பி.ஐ.க்கு வருகிறது.

அப்படி வந்த வழக்கு கிட்டத்தட்ட ஒரு வருடமாக தூங்கிக் கொண்டிருந்தது. என்ன நினைத்ததோ சி.பி.ஐ. ஒரு மாதமாக பம்பரமாக சுற்றி சுற்றி திரிந்து, ஐ.ஜி. பிரமோத்குமாருக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்து, பீகாரில் இருக்கும் சொத்துக்களையும் கண்டறிந்து, இன்று காலை அதிரடியாக சென்னையிலும் பீகாரிலும் பிரமோத்குமாருக்கு சொந்தமான வீடுகளில் சோதனை நடத்தியது.

இது மட்டுமில்லை. இதுவரை இந்த வழக்கில் வெளிவராத தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதுதான், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் துணைவி ராசாத்தின் சி.ஐ.டி காலனி வீட்டில் ஏ.சி. மெக்கானிக் வேலை பார்த்த டேனியலும் சிக்கிக் கொண்டிருக்கிறார்.

பாசி போரக்ஸ் நிதி நிறுவன பெண் இயக்குனர் கமலவள்ளியை கடத்தி பணம் பறித்ததில், பல கோடி ரூபாய் டேனியலிடம் இரண்டு போலீஸார் ஒப்படைக்க வந்துள்ளனர்.

”ஐ.ஜி. சொல்லித்தான் டேனியலிடம் பண மூட்டையை கொடுத்தோம்” என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள் அந்த இரண்டு போலீஸாரும்.

அதன்படி, இன்று டேனியல் வீட்டிலும் சோதனை நடந்திருக்கிறது. இது தவிர சென்னையில் முக்கியமான ஆடிட்டர் வீட்டிலும் சோதனை நடந்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

எது எப்படியோ… பொதுமக்கள் பணத்தில் மஞ்சக்குளிச்ச ஐ.ஜி.யும் அவரது கூட்டாளிகளும் விரைவில் கம்பி எண்ணினால் தான், இந்த வழக்கில் பொது மக்களுக்கு நீதி கிடைக்கும்.-நன்றி தமிழ் லீடர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக