பக்கங்கள்

திருக்குறள்

வெள்ளி, மார்ச் 23, 2012

காசநோய் எய்ட்சைவிட ஆபத்தானது!!!

இந்தியாவில் ஆண்டுதோறும் காசநோய்க்கு 3 லட்சம் பேர் பலி : சி.எம்.சி. டாக்டர்கள் பேட்டிவேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரி நுரையீரல் சிகிச்சை பிரிவு டாக்டர் கிறிஸ்டோபர், நுண்ணுயிரியல் பிரிவு டாக்டர் ஜாய்ஸ், சரோஜினி மைக்கேல் ஆகியோர் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார்.

அப்போது அவர்கள் கூறியதாவது:-
காசநோய் எய்ட்சைவிட ஆபத்தானது. இந்தியவில் ஆண்டு தோறும் காச நோயால் 15 லட்சம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். 3 லட்சம் பேர் மரணம் அடைகிறார்கள். காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அருகில் 15 நிமிடம் இருந்தால் காசநோய் கிருமி தொற்று பரவும் அபாயம் உள்ளது. காசநோயை 6 மாதம் தொடர்ந்து சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும்.
காசநோய் குறித்த ஆய்வு மையம் தமிழ்நாட்டில் 2 இடங்களில் செயல்படுகிறது. இதில் ஒரு மையம் வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் இயங்கி வருகிறது. காசநோய் தொற்று கண்டறிய நீண்ட காலம் ஆகிறது. இந்நிலையில் 2 மணி நேரத்தில் காசநோய் தொற்று குறித்து கண்டு பிடிக்கும் கருவி குறித்து சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் ஆராய்ச்சி நடந்து வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக