பக்கங்கள்

திருக்குறள்

ஞாயிறு, அக்டோபர் 14, 2012

சித்தர்கள் சொன்ன மருத்துவக் குறிப்புக்கள்..!



மூலிகை மருந்துகள்

1. சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் ‘குமரி’ என அழைப்பர். காய கல்பத்தில் அதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை எடுத
்துச் சற்றே அலசிப் பின் மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால், அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.

2. தினம் தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள் பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிப்பதுடன், முகப்பொலிவும் உண்டாகும்.

3. சர்க்கரை நோய் கட்டுப்பட வெந்த்தயத்தைப் பொடி செய்து தினம்தோறும் ஒரு டீஸ்பூன் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையின் சாற்றையும் பயன் படுத்தலாம்.

4. செம்பருத்திபூவைக் காயவைத்து பொடி செய்து தலையில் சீயக்காய்போலத் தேய்த்துக் குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை போகும். நன்கு தலை முடி வளரும். முடி கொட்டுவதும் நின்றுவிடும். மேலும் கண்களுக்கும் உடலுக்கும் குளிர்ச்சி தரும்.

5. தேனை தினமும் வெந்நீரிலோ, பாலிலோ சிறிதளவு கலந்து குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். நாள் பட்ட இருமல், சளி குணமாகும்.

6. மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான இருமலாலும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு, குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் உடன் அனைத்துச் சளியும் வாந்தியாக வெளியில் வந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

7. ஆண்மைக்குறைவைப் போக்க விரும்புபவர்கள் முருங்கை விதையைப் பொடி செய்து, பாலில் கலந்து, இரவில் படுக்கப் போகும் முன் சாப்பிட்டுவர விரைவில் பலன் கிடைக்கும். துரித ஸ்கலிதம் ஆகுபவர்களுக்கு இம்மருந்து கை கண்டதாகும்.

8. இரவில் தினந்தோறும் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீரை அருந்திப் பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிதளவு கருப்பட்டி அல்லது வெல்லம், அல்லது சர்க்கரையைச் சாப்பிட்ட பின் உறங்கச் செல்லலாம்
9. அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன், உடல் உஷ்ணமும் தணியும்.

10. எந்த மருந்துகளை உட் கொள்பவராக இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் உடையவராகவோ அல்லது புகைப்பிடிப்பவராகவோ இருந்தால் அது உடலில் மருந்தின் செயல்பாட்டு வீரியத்தைக் குறை
க்கும்.

11. உடல் வெளுப்பு மற்றும் தேமல் குணமாக வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்துக் குளித்து வரக் குணமாகும்.

12. குருதிக் கொதிப்பு எனப்படும் இரத்த கொதிப்பு நோய் குணமாக இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒருமுறை அகத்திக் கீரையை உணவில் சேர்க்க குணம் ஏற்படும்.

நன்றி: சித்தாந்தம்

திங்கள், அக்டோபர் 08, 2012

மின்வெட்டு... நிஜப் பின்னணி


இது 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த கதை. மகாராஷ்டிரத்தில் மின் உற்பத்தி நிலையம் அமைக்க அமெரிக்காவின் 'என்ரான்’ நிறுவனத்தைக் கொண்டுவந்தார் அன்றைய காங்கிரஸ் முதல்வர் சரத் பவார். மகாராஷ்டிரத்தின் மொத்தத் தேவையில் 18 சதவிகித மின்சாரத்தை 'என்ரான்’ கொடுத்தது. அதற்கு மகாராஷ்டிர மின் வாரியம் கொடுத்த விலை என்ன தெரியுமா? முழு திவால்.    தேசிய அனல் மின்சாரக் கழகம் ரூ.1.80-க்கு ஒரு  யூனிட் மின்சாரத்தை விற்ற காலத்தில், 'என்ரான்’ நிறுவனத்திடம் ரூ.6.80 கொடுத்து வாங்கியது அரசு. தவிர, மகாராஷ்டிர மின் வாரியம் மின்சாரத்தை வாங்குகிறதோ, இல்லையோ... மின் கட்டணம் போக மாதம் ரூ.95 கோடியை நிலைக்கட்டணம் என்ற பெயரில் 'என்ரான்’ நிறுவனத்துக்குக் கொடுத்துவிட வேண்டும். அப்படி ஓர் ஒப்பந்தம். இந்திய மின் துறை வரலாற்றில் மறக்கவே முடியாத கொள்ளை அது.  இப்படி எல்லாம் நடக்குமாஎன்று தானே கேட்க வருகிறீர்கள்? தமிழக அரசு 2005-06ல் 'அப்போலோ குழும’த்திடம் இருந்து வாங்கிய மின் சாரத்தின் விலை என்ன தெரியுமா? ஒரு யூனிட் ரூ. 17.78.  ஒருகட்டத்தில் கட்டுப்படி ஆகாமல், மின்சாரம் வாங்குவதை நிறுத்தியதற்காக அதே ஆண்டில் 'அப்போலோ குழும’த்துக்குத் தமிழக அரசு கொடுத்த நிலைக்கட்டணம் ரூ.330 கோடி. இப்போதும்கூட தமிழகத்தில் உள்ள தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் வெளி மாநில நிறுவனங் களைவிடக் கூடுதலான விலையையே கேட்கின்றன.

 மின்வெட்டு பிரச்னையைப் பற்றி எல்லோருமே பேசுகிறோம். ஆனால், அதன் பின்னணியில் இருப்பது வெறும் பற்றாக்குறை மட்டும் அல்ல; பல்லாயிரம் கோடிகள் புரளும் பன்னாட்டு அரசியல். நமக்கு மின்சாரம் என்பது வெறும் எரிபொருள். ஆட்சியாளர்களுக்கோ அள்ள அள்ள வரும் அரிய வளம். தாதுச் சுரங்கங்களை யும் அலைக்கற்றைகளையும் எப்படித் தனியாருக்கு விற்றுக் காசாக்கினார்களோ, அதேபோல, மின் வளத்தையும் விற்றுக் காசாக்குகிறார்கள். இதற்காகவே கொண்டுவரப்பட்ட அமைப்புதான் மின்சார ஒழுங்குமுறை ஆணையம். நாம் 14 மணி நேர மின்வெட்டைப் பற்றிய கவலையில் இருக்கும் இந்த நேரத்தில்கூட, இன்னொரு மின் கட்டண உயர்வுக்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. மாநில அரசுகள் விரும்பாவிட்டா லும், ஒழுங்குமுறை ஆணையத்தின் விருப்பப்படி கட்டண உயர்வு நடக்கும். 'மின்சாரச் சட்டம் 2003’ மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு அவ்வளவு அதிகாரங்களை அளிக்கிறது.

கடுமையான மின் பற்றாக்குறை நிலவிய மாதங்களில் ஒன்றாகக் கடந்த மாதத்தைக் குறிப்பிடுகிறது மத்திய மின் துறை. முரண்பாடாக, அதே காலகட்டத்தில்தான் பங்குச்சந்தையில், மின் உற்பத்தி நிறுவனப் பங்குகளின் விலை ஏழு சதவிகிதம் வரை அதிகரித்தது. எப்படி? நாட்டின் மின் உற்பத்தித் திறனை 1,22,000 மெகா வாட் ஆக அதிகரிக்க மன்மோகன் சிங் அரசு முடிவு எடுத்தது. பொதுத் துறை நிறுவனமான 'கோல் இந்தியா’ அரசு நிர்ணயித்த இலக்கில் பாதி மின்சாரத்துக்கான நிலக்கரியை மட்டுமே தர வல்லது. இதையே சாக்காகவைத்து, கூடுதல் தேவைக்காக இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி யின் விலைக்கு ஏற்ப, மின் கட்டணத்தை மாற்றி நிர்ணயித்துக்கொள்ள மின் உற்பத்தி நிறுவனங்களுக்குச் சமீபத்தில் அனுமதி அளித்தது அரசு. இதன் தொடர்ச்சியே பங்குகள் விலை எழுச்சி.

நாட்டின் மின் உற்பத்தியை நடப்பு ஐந்து ஆண்டுத் திட்டக் காலத்தில் 88,425 மெகா வாட் உயர்த்த அரசு இலக்கு நிர்ணயித்து இருக்கிறது; இதில் தனியார் பங்களிப்பு இலக்கு எவ்வளவு தெரியுமா? 52 சதவிகிதம்! முந்தைய ஐந்து ஆண்டுத் திட்டக் காலத்தில் தனியார் பங்களிப்பு 19 சதவிகிதமாக இருந்தது. இந்த ஐந்து ஆண்டுத் திட்டக் காலத்தில் 52 சதவிகிதம். எனில், அடுத்த ஐந்து ஆண்டுத் திட்டத்தில்?

புதிதாக மாநில அரசுகள் மின் உற்பத்தி நிலையங்கள் தொடங்குவதை மத்திய அரசு ஊக்குவிக்கவில்லை. மறுபுறம் ஏற்கெனவே தன்வசம் உள்ள பொதுத் துறை மின் உற்பத்தி நிலையங்களையும் படிப்படியாகத் தனியாருக்குத் தாரைவார்க்கிறது. சமீபத்திய உதாரணம், நெய்வேலி அனல் மின் நிலையத்தின் 8.33 கோடி பங்குகள் விற்பனைக்குக் கொண்டுவரும் அரசின் திட்டம். இதன் மூலம் அரசிடம் உள்ள பங்குகள் 93.56 சதவிகிதத்தில் இருந்து 88.56 சதவிகிதமாகக் குறையும். தனியார் கை ஓங்கும்.

ஒருபுறம் இப்படி மின்சார உற்பத்தி தனியாரிடம் சிக்க, மறுபுறம் உற்பத்தியாகி வரும் மின்சாரமும் பெருநிறுவனங்களுக்கே அர்ப்பணம் ஆகிறது.உள்ளூர் தொழில் நிறுவனங்கள் 14 மணி நேர மின்வெட்டில் சிக்கிச் சின்னாபின்னமாக,     பன்னாட்டு நிறுவனங்களோ 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரத்தில் கிளைபரப்புகின்றன.

இந்தக் கொடுமை எல்லாம் கொசுக்களுக்குத் தெரிகிறதா என்ன? போர்வையைப் போர்த்தினால் வியர்க்கிறது; விலக்கினாலோ கொசு கடிக்கிறது!


***************************************
காரணத்தைத் தேடுகிறது அரசு!

மின்சாரம் தனியார்மயமாக்கப்படுவதை எதிர்க்கும் சா.காந்தி, தமிழ்நாடு மின் துறைப் பொறியாளர்கள் அமைப்பின் தலைவர். மின் துறைச் சீர்கேடுகளைத் தொடர்ந்து அம்பலப்படுத்துபவர்.

''அரசு மின் வாரியங்கள் - ஊழியர்களின் திறமையற்ற செயல்பாடுகள் தானே மின் துறை         தனியார்மயமாக்கப்படக் காரணம்?''

''இவ்வளவு பெரிய நாட்டில் வலு வான மின்சாரக் கட்டமைப்பை உருவாக்கியது யார்... அரசு மின் வாரியங்கள்தானே? தமிழகத்தையே எடுத்துக்கொண்டால், 1971-ம் ஆண்டிலேயே 99 சதவிகிதக் கிராமங்களுக்கு மின்சாரத்தைக் கொண்டுசென்றுவிட்டோம். 1992-2008-க்கு உட்பட்ட 16 ஆண்டுகள் மின்வெட்டே இல்லாத மாநிலம் இது. ஆனால், 1989-க்குப் பின் பெரிய மின் உற்பத்தித் திட்டங்கள் எதையுமே அரசு கொண்டுவரவில்லை. தவறான பாதையைத் தேர்ந்தெடுத்துவிட்டுக் காரணத்தைத் தேடுகிறது அரசு!''

''அப்படி என்றால் மின் வாரியங்களின் நஷ்டத்துக்கு என்னதான் காரணம்?''

''அரசின் நிர்வாகச் சீர்கேடுகள்தான் காரணம். பத்து ரூபாய்க்கு மின்சாரத்தை வாங்கி மூன்று ரூபாய்க்குக் கொடுக்க வேண்டும் என்றால், நஷ்டம் வராமல் என்ன செய்யும்? முதலில் இது லாப - நஷ்டக் கணக்கு பார்க்கும் வணிகத் துறை இல்லை. உலகம் முழுவதும் மக்கள் நல அரசுகள் மின்சாரத்தைச் சேவைத் துறையாகத்தான் வைத்திருக்கின்றன!''

''நவீன உலகின் உயிர்நாடியான மின் துறையை அரசு தனியார்மயமாக்க விரும்புகிறது என்று எப்படிச் சொல்கிறீர்கள்?''

''தனியார்மயத்தின் வருகைக்குப் பிறகுதானே 1.76 லட்சம் கோடி ஊழல், 1.86 லட்சம் கோடி ஊழல்களை எல்லாம் பார்க்கிறோம்? தனியார்மயம் எங்கு புகுத்தப்படுகிறதோ, அங்கே ஊழல் திளைக்கும். மின்சாரம் என்பது காசு கொழிக்கும் வளம்!''

@ஆனந்தவிகடன்

திருட்டு வாகனமா..? சில விநாடிகளில் கண்டுபிடிக்கலாம்!




ஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு, அதன் உரிமையாளர் பெயரை உடனே தெரிந்துகொள்ளலாம். 

மத்திய அரசால் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டம், சட்ட விரோதமாகப் பயன்படுத்தப்படும் வாகனங்களை உடனே அடையாளம் கண்டுகொள்ள உதவும்.

092123 57123 என்ற எண்ணுக்கு vahan>space<பதிவு எண்- வாகனத்தின் பதிவு எண்ணை இடைவெளியின்றி டைப் செய்து அனுப்பினால், அடுத்த விநாடியே வாகன உரிமையாளரின் பெயர், வாகனத்தின் வகை, வரி செலுத்திய விபரம், தகுதிச் சான்று முடிவடையும் தேதி ஆகிய விபரங்கள் தாங்கிய எஸ்.எம்.எஸ். வந்துவிடும்.

இந்த வசதி 2003-ம் ஆண்டுக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். அல்லது, 2003-ம் ஆண்டுக்குப் பிறகு ஏதாவது ஒரு காரணத்துக்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வாகனம் சென்றிருக்க வேண்டும்.

மோட்டார் விகடன்

வியாழன், அக்டோபர் 04, 2012

புதிய தலைமுறை--ஆடுபுலி ஆட்டம்-பலியான அஜிதா!





                                                  அஜிதா

புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒரு நடுநிலை "முகமூடி"யுடன் செயல்பட்டு வருகிறது.நாம் அதை ஏற்கனவே சொல்லியுள்ளோம்.நுட்பமாக அதனைக் கவனிப்பவர்களுக்கு இது நன்கு புரியும்.

ஆனால் இப்பொழுது நமது பதிவு அது பற்றியது அல்ல.ஆனால் அது தொடர்புடையது இல்லை என்றும் சொல்லிவிட முடியாது.

அத் தொலைக்காட்சியில் நடக்கும் ஒரு அதிகாரப் போட்டியில் வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட  செய்திப்பிரிவு ஆசிரியர் அஜிதா என்பவர் பற்றியது.

அஜிதா என்பவர் டைம்ஸ் ஆப் இந்தியாவில் ஸ்பெஷல் கரஸ்பாண்டெண்ட் ஆகப் பணியாற்றியவர்.நல்ல சம்பளம் கிடைத்ததும் டைம்ஸ் ஆப் இந்தியாவில் இருந்து விலகி புதிய தலைமுறை தொலைக்காட்சியில் அசைண்மெண்ட் ஹெட் ஆக இணைந்தார்.

இவரது பணி என்னவென்றால் புதிய தலைமுறையின் அனைத்து செய்தியாளர்களையும் ஒருங்கிணைப்பதும் அவர்களை செய்தி சேகரிக்க எங்கு செல்ல வேண்டும் என்று உத்தரவிடுவதும் ஆகும்.செய்தி தொலைக்காட்சியில் இது மிக மிக முக்கியமான பதவி ஆகும்.

ஆனால் அவர் பணியாற்றிய சில மாதங்களில் இவரால் இந்தப் பதவியில் நீடிக்க முடியாத சூழ்நிலை உருவானது.இவரிடமிருந்த பதவி பிடுங்கப்பட்டு பிரேம் சங்கர் என்பவருக்கு அளிக்கப்பட்டது.

அஜிதாவுக்கு அரசியல் செய்திப்பிரிவு தலைவர்(பொலிடிக்கல் எடிட்டர்) என்னும் புதிய பதவி அளிக்கப் பட்டது. அதன் பிறகுதான் அஜிதாவுக்கும் பிரேம் சங்கருக்கும் முட்டல் மோதல் தொடங்குகிறது.

                                                  பிரேம்சங்கர்

மலையாளியான பிரேம் சங்கர் திறமையானவரா இல்லையா என்பதையெல்லாம் தாண்டி அவர் உச்சகட்ட மலையாள இன வெறியுடன் நடந்து கொள்பவர் என்பது மட்டும் இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று ஆகும்.

அதற்கு உதாரணமாக நிறைய சம்பவங்களைச் சொல்லலாம்.நாம் நான்கு சம்பவங்களை மட்டும் சொல்கிறோம்.

முதலாவது முல்லை பெரியாறு பிரச்சனைக்காக தேனியில் தேமுதிக தொண்டர் ஒருவர் உயிரிழந்தார்.இது முல்லை பெரியாறு பிரச்சனையில் முதல் உயிர்பலி ஆகும்.இது நாடு முழுவதும் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இது தொடர்பாக தேனி புதிய தலைமுறை நிருபர் செய்தி சேகரிப்பது தொடர்பாக பிரேம் சங்கரிடம் கேட்கிறார்.அவரோ இதுவெல்லாம் ஒரு செய்தியா?என்று மறுத்து விடுகிறார்.மலையாள வெறியுடன் பிரேம் நடந்து கொண்டார் எனது அப்பொழுது அலுவலகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

ரண்டாவது முல்லை பெரியாறு பிரச்சனையில் இடுக்கி மாவட்டத்தில் தமிழர்கள் மலையாளிகளால் மூன்று வார காலம் தொடர்ந்து தாக்கப்பட்டது தொடர்பாக புதிய தலைமுறையில் செய்தி எதுவும் உரிய முக்கியத்துவத்தில் பதிவாக வில்லை.

ஆனால் ‘அதற்கு பதிலாக தமிழர்கள் நல்ல பாதுகாப்புடன் இருக்கிறார்கள்!’ என்று இடுக்கி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் வெளியிட்ட அறிக்கையும் ஊடகவியலாளர் சந்திப்பும் மிக அதிக முக்கியத்துவத்துடன் தொடர்ந்து இரண்டு நாட்கள் வெளியானது.

தமிழர்கள் மீதான திட்டமிட்ட தாக்குதலைச் செய்திக்குத் தகுதியானது என்று கருதாத பிரேம் சங்கர், தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்பதை மிக அதிக முக்கியத்துவத்துடன் செய்தி வெளியிட்டது எதற்கு? என்று அப்பொழுதே புதிய தலைமுறை செய்தியாளர்கள் அலுவலகத்தில் முனங்கினர். இதனைத் தொடர்ந்து கவனித்து வந்தவர்களும் விமர்சனம் செய்தனர்.

மூன்றாவது முல்லை பெரியாறு பிரச்சனையில் மலையாள இயக்குனர் சோஹன் ராய் எடுத்த ”டேம் 999” படத்தை தமிழ்நாட்டில் திரையிடக்கூடாது அது 20 லட்சம் தென்மாவட்ட விவசாயிகளின் வாழ்வோடு சம்பந்தப்பட்ட விஷயம்,மேலும் தமிழ்நாட்டின் உரிமைப்பிரச்சனை என்று அனைவரும் எதிர்ப்புத் தெரிவிக்க புதிய தலைமுறை தொலைக்காட்சியோ அதனை கருத்துச் சுதந்திரம் பற்றிய பிரச்சனையாக திசை மாற்றியது.தமிழ்நாட்டில் கருத்துச் சுதந்திரம் இல்லை என்று ஒப்பாரி வைத்தது. இதுவும் அனைவரையும் முகம் சுழிக்க வைத்தது. விவாதம் என்ற பெயரில் இதற்கு ஆதரவாக நிறைய நிகழ்ச்சிகளை நடத்தியது.

நான்காவது டிசம்பர் 24 பெரியார் நினைவு நாள் ஆகும்.அதே நாள் தான் எம்.ஜி.ஆர் நினைவு நாளும் ஆகும்.இது தொடர்பாக அனைத்துக் கட்சிகளும் நிகழ்ச்சிகள் நடத்தின.ஆனால் பிரேம் சங்கரோ பெரியார் நினைவு நாள் நிகழ்ச்சிகளை மருந்துக்கும் பதிவு செய்யவில்லை.எம்.ஜி.ஆர்.மலையாளியாம்.அதனால் ”தனிப்பாசத்துடன்” நடந்து கொண்டார்.

மேற்கண்ட அனைத்தும் பிரேம்சங்கர் என்பவர் தன்னை ஊடகவியலாளராகக் கருதாமல் மலையாள இனவெறியராக புதிய தலைமுறையில் பணியில் நடந்து கொண்டார் என்பதற்கு சொல்லப்பட்டது ஆகும்.ஆனால் உயரிய பொறுப்பில் இருப்பதால் யாராலும் அவரைக் கேள்வி கேட்க முடியவில்லை.(இவர் மனைவி சந்தியா.இவரும் புதிய தலைமுறையில் பணிபுரிகிறார். இவர்  தான் இலங்கை சென்று வந்த பின்  உண்மையைத் தேடி என்ற பெயரில் இலங்கைக்கு ஆதரவாய் ஒரு சார்பான ஆவணத் தொகுப்பு வீடியோ ஒன்றை புதிய தலைமுறை தொலைக்காட்சியில் வெளியிட்டார்.)

                                                                              சந்தியா

இவ்வாறு அந்த கால கட்டத்தில் பிரேம்சங்கரின் மலையாள வெறி தொலைக்காட்சி செய்திகளில்கொடி கட்டிப் பறந்தது.ஏற்கனவே இவரால் பாதிக்கப்பட்ட அஜிதா இதனைப் பயன்படுத்தி நிர்வாகத்தின் கவனத்திற்கு இதைக் கொண்டு சென்றார். நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் மேற்கண்ட அனைத்தையும் சொல்லிய அஜிதா இவர் சேனலை மலையாளிகளின் சேனலாக நடத்த முயற்சிக்கிறார் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

இதனைக் கேட்டுக்கொண்டு அதன் நிர்வாக இயக்குனர் சத்திய நாராயணன்(பச்சமுத்துவின் மகன்)சொன்னது தான் பஞ்ச்.

தம்பி எனக்கு மலையாளத்தில் சேனல் நடத்துற ஐடியா எதுவும் இல்லை,அங்க காலேஜ் நடத்துற ஐடியாவும் இப்போதைக்கு இல்லை.அதனால நீஙக கேரளாவுக்கு ஆதரவா செய்தி வெளியிட வேண்டாம்.பிரச்சனை வராம பாத்துக்கங்க’ என்று நாசூக்காக சொல்லி பிரச்னையை முடித்து வைத்தார்.

அப்பொழுதைக்கு அமைதியான மாதிரி காட்டிக் கொண்ட பிரேம் சங்கர் அதன்பிறகு அஜிதாவைக் காலி பண்ணுவதற்கு சமயம் பார்த்தார்.

அரசியல் செய்திப் பிரிவு எடிட்டர் (பொலிடிக்கல் எடிட்டர்)பதவியில் இருந்து அஜிதாவை காலி பண்ணுவதற்கு திட்டம் தீட்டினார்.

அஜிதா இப்பொழுது வாரம் ஒரு பிரபலத்தை நேர்காணல் செய்து கொண்டிருந்தார்.அது போக நேர்படப்பேசு என்னும் தினசரி விவாத நிகழ்ச்சிக்கு யாரை அழைப்பது என்றும் அதனை எப்படி நடத்துவது என்றும் ஆலோசனை அளிக்கும் முக்கிய பொறுப்பில் இருந்தார். இந்த நிகழ்ச்சி முழுவதும் அவரது கட்டுப்பாட்டில் இருந்தது. இதனைக் காலி பண்ணுவதற்கு திட்டம் தீட்டினார்.முதலில் வாரம் ஒருமுறை ஒளிபரப்பான நேர்காணல் நிகழ்ச்சிக்குச் சரியான வரவேற்பு இல்லை என்று உரிய இடத்தில் “பத்தவைத்து” அதனைக் காலி செய்தார்.வாரம் ஒருமுறை வெளியான நேர்காணல் பகுதி நிறுத்தப்பட்டது.

அடுத்ததாக டெக்கான் க்ரானிக்கலில் இருந்து சீனியர் ஸ்பெஷல் கரஸ்பாண்டெண்டாக இருக்கும் குணசேகரனை நிர்வாகத்தில் பேசி அழைத்து வந்தார். அஜிதாவுக்கு உயரிய பொறுப்பாக அவருக்கு சீனியர் பொலிடிக்கல் எடிட்டர் என்னும் பதவி அளிக்கப்பட்டது.பிரேம்சங்கர் குணசேகரனுடன் கூட்டணி அமைத்துக் கொண்டார்.அதன்பின் சீனிவாசனிடம் பேசி அஜிதாவின் ”நேர்படபேசு” நிகழ்ச்சி பொறுப்பு குணசேகரன் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.

                                                       குணசேகரன்

எத்தனையோ இடங்களில் வேலைபார்த்த அனுபவமிக்க குணசேகரனுக்கு இந்த ”சூட்சுமங்கள்” புரியாதா என்ன? பிரேம்சங்கர் கூட்டணியின் ஒத்துழைப்புடன் நிகழ்ச்சியைத் திறம்பட நடத்துகிறார். அப்புறம் என்ன?

அப்புறம் என்ன?அஜிதா டம்மியாக்கப் பட்டார்! இதை எதிர்த்து நிர்வாகத்திடம் போராடிப்பார்த்தார்.ஒன்றும் நடக்கவில்லை.

வேலையை ராஜினாமா செய்து விட்டுப் போய் விட்டார்.

டுபுலி ஆட்டத்தில் அஜீதாவைக் காலி செய்த பிரேம்சங்கர்-தலைமையிலான இந்தக் கூட்டணி(இதில் இப்பொழுது நிறையப்பேர் இணைந்திருக்கிறார்கள்...) இப்பொழுது நியூஸ் அவுட்புட் எடிட்டர் ராமைக் காலி செய்யத் திட்டம் தீட்டுகிறார்கள்.அவரும் இதை உணர்ந்தோ என்னவோ மிகவும் எச்சரிக்கையாய் இருக்கிறாராம்.

பொறுத்திருந்து பார்ப்போம்..!
நன்றி  கலகக்குரல் .