பக்கங்கள்

திருக்குறள்

வியாழன், அக்டோபர் 04, 2012

புதிய தலைமுறை--ஆடுபுலி ஆட்டம்-பலியான அஜிதா!





                                                  அஜிதா

புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒரு நடுநிலை "முகமூடி"யுடன் செயல்பட்டு வருகிறது.நாம் அதை ஏற்கனவே சொல்லியுள்ளோம்.நுட்பமாக அதனைக் கவனிப்பவர்களுக்கு இது நன்கு புரியும்.

ஆனால் இப்பொழுது நமது பதிவு அது பற்றியது அல்ல.ஆனால் அது தொடர்புடையது இல்லை என்றும் சொல்லிவிட முடியாது.

அத் தொலைக்காட்சியில் நடக்கும் ஒரு அதிகாரப் போட்டியில் வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட  செய்திப்பிரிவு ஆசிரியர் அஜிதா என்பவர் பற்றியது.

அஜிதா என்பவர் டைம்ஸ் ஆப் இந்தியாவில் ஸ்பெஷல் கரஸ்பாண்டெண்ட் ஆகப் பணியாற்றியவர்.நல்ல சம்பளம் கிடைத்ததும் டைம்ஸ் ஆப் இந்தியாவில் இருந்து விலகி புதிய தலைமுறை தொலைக்காட்சியில் அசைண்மெண்ட் ஹெட் ஆக இணைந்தார்.

இவரது பணி என்னவென்றால் புதிய தலைமுறையின் அனைத்து செய்தியாளர்களையும் ஒருங்கிணைப்பதும் அவர்களை செய்தி சேகரிக்க எங்கு செல்ல வேண்டும் என்று உத்தரவிடுவதும் ஆகும்.செய்தி தொலைக்காட்சியில் இது மிக மிக முக்கியமான பதவி ஆகும்.

ஆனால் அவர் பணியாற்றிய சில மாதங்களில் இவரால் இந்தப் பதவியில் நீடிக்க முடியாத சூழ்நிலை உருவானது.இவரிடமிருந்த பதவி பிடுங்கப்பட்டு பிரேம் சங்கர் என்பவருக்கு அளிக்கப்பட்டது.

அஜிதாவுக்கு அரசியல் செய்திப்பிரிவு தலைவர்(பொலிடிக்கல் எடிட்டர்) என்னும் புதிய பதவி அளிக்கப் பட்டது. அதன் பிறகுதான் அஜிதாவுக்கும் பிரேம் சங்கருக்கும் முட்டல் மோதல் தொடங்குகிறது.

                                                  பிரேம்சங்கர்

மலையாளியான பிரேம் சங்கர் திறமையானவரா இல்லையா என்பதையெல்லாம் தாண்டி அவர் உச்சகட்ட மலையாள இன வெறியுடன் நடந்து கொள்பவர் என்பது மட்டும் இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று ஆகும்.

அதற்கு உதாரணமாக நிறைய சம்பவங்களைச் சொல்லலாம்.நாம் நான்கு சம்பவங்களை மட்டும் சொல்கிறோம்.

முதலாவது முல்லை பெரியாறு பிரச்சனைக்காக தேனியில் தேமுதிக தொண்டர் ஒருவர் உயிரிழந்தார்.இது முல்லை பெரியாறு பிரச்சனையில் முதல் உயிர்பலி ஆகும்.இது நாடு முழுவதும் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இது தொடர்பாக தேனி புதிய தலைமுறை நிருபர் செய்தி சேகரிப்பது தொடர்பாக பிரேம் சங்கரிடம் கேட்கிறார்.அவரோ இதுவெல்லாம் ஒரு செய்தியா?என்று மறுத்து விடுகிறார்.மலையாள வெறியுடன் பிரேம் நடந்து கொண்டார் எனது அப்பொழுது அலுவலகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

ரண்டாவது முல்லை பெரியாறு பிரச்சனையில் இடுக்கி மாவட்டத்தில் தமிழர்கள் மலையாளிகளால் மூன்று வார காலம் தொடர்ந்து தாக்கப்பட்டது தொடர்பாக புதிய தலைமுறையில் செய்தி எதுவும் உரிய முக்கியத்துவத்தில் பதிவாக வில்லை.

ஆனால் ‘அதற்கு பதிலாக தமிழர்கள் நல்ல பாதுகாப்புடன் இருக்கிறார்கள்!’ என்று இடுக்கி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் வெளியிட்ட அறிக்கையும் ஊடகவியலாளர் சந்திப்பும் மிக அதிக முக்கியத்துவத்துடன் தொடர்ந்து இரண்டு நாட்கள் வெளியானது.

தமிழர்கள் மீதான திட்டமிட்ட தாக்குதலைச் செய்திக்குத் தகுதியானது என்று கருதாத பிரேம் சங்கர், தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்பதை மிக அதிக முக்கியத்துவத்துடன் செய்தி வெளியிட்டது எதற்கு? என்று அப்பொழுதே புதிய தலைமுறை செய்தியாளர்கள் அலுவலகத்தில் முனங்கினர். இதனைத் தொடர்ந்து கவனித்து வந்தவர்களும் விமர்சனம் செய்தனர்.

மூன்றாவது முல்லை பெரியாறு பிரச்சனையில் மலையாள இயக்குனர் சோஹன் ராய் எடுத்த ”டேம் 999” படத்தை தமிழ்நாட்டில் திரையிடக்கூடாது அது 20 லட்சம் தென்மாவட்ட விவசாயிகளின் வாழ்வோடு சம்பந்தப்பட்ட விஷயம்,மேலும் தமிழ்நாட்டின் உரிமைப்பிரச்சனை என்று அனைவரும் எதிர்ப்புத் தெரிவிக்க புதிய தலைமுறை தொலைக்காட்சியோ அதனை கருத்துச் சுதந்திரம் பற்றிய பிரச்சனையாக திசை மாற்றியது.தமிழ்நாட்டில் கருத்துச் சுதந்திரம் இல்லை என்று ஒப்பாரி வைத்தது. இதுவும் அனைவரையும் முகம் சுழிக்க வைத்தது. விவாதம் என்ற பெயரில் இதற்கு ஆதரவாக நிறைய நிகழ்ச்சிகளை நடத்தியது.

நான்காவது டிசம்பர் 24 பெரியார் நினைவு நாள் ஆகும்.அதே நாள் தான் எம்.ஜி.ஆர் நினைவு நாளும் ஆகும்.இது தொடர்பாக அனைத்துக் கட்சிகளும் நிகழ்ச்சிகள் நடத்தின.ஆனால் பிரேம் சங்கரோ பெரியார் நினைவு நாள் நிகழ்ச்சிகளை மருந்துக்கும் பதிவு செய்யவில்லை.எம்.ஜி.ஆர்.மலையாளியாம்.அதனால் ”தனிப்பாசத்துடன்” நடந்து கொண்டார்.

மேற்கண்ட அனைத்தும் பிரேம்சங்கர் என்பவர் தன்னை ஊடகவியலாளராகக் கருதாமல் மலையாள இனவெறியராக புதிய தலைமுறையில் பணியில் நடந்து கொண்டார் என்பதற்கு சொல்லப்பட்டது ஆகும்.ஆனால் உயரிய பொறுப்பில் இருப்பதால் யாராலும் அவரைக் கேள்வி கேட்க முடியவில்லை.(இவர் மனைவி சந்தியா.இவரும் புதிய தலைமுறையில் பணிபுரிகிறார். இவர்  தான் இலங்கை சென்று வந்த பின்  உண்மையைத் தேடி என்ற பெயரில் இலங்கைக்கு ஆதரவாய் ஒரு சார்பான ஆவணத் தொகுப்பு வீடியோ ஒன்றை புதிய தலைமுறை தொலைக்காட்சியில் வெளியிட்டார்.)

                                                                              சந்தியா

இவ்வாறு அந்த கால கட்டத்தில் பிரேம்சங்கரின் மலையாள வெறி தொலைக்காட்சி செய்திகளில்கொடி கட்டிப் பறந்தது.ஏற்கனவே இவரால் பாதிக்கப்பட்ட அஜிதா இதனைப் பயன்படுத்தி நிர்வாகத்தின் கவனத்திற்கு இதைக் கொண்டு சென்றார். நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் மேற்கண்ட அனைத்தையும் சொல்லிய அஜிதா இவர் சேனலை மலையாளிகளின் சேனலாக நடத்த முயற்சிக்கிறார் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

இதனைக் கேட்டுக்கொண்டு அதன் நிர்வாக இயக்குனர் சத்திய நாராயணன்(பச்சமுத்துவின் மகன்)சொன்னது தான் பஞ்ச்.

தம்பி எனக்கு மலையாளத்தில் சேனல் நடத்துற ஐடியா எதுவும் இல்லை,அங்க காலேஜ் நடத்துற ஐடியாவும் இப்போதைக்கு இல்லை.அதனால நீஙக கேரளாவுக்கு ஆதரவா செய்தி வெளியிட வேண்டாம்.பிரச்சனை வராம பாத்துக்கங்க’ என்று நாசூக்காக சொல்லி பிரச்னையை முடித்து வைத்தார்.

அப்பொழுதைக்கு அமைதியான மாதிரி காட்டிக் கொண்ட பிரேம் சங்கர் அதன்பிறகு அஜிதாவைக் காலி பண்ணுவதற்கு சமயம் பார்த்தார்.

அரசியல் செய்திப் பிரிவு எடிட்டர் (பொலிடிக்கல் எடிட்டர்)பதவியில் இருந்து அஜிதாவை காலி பண்ணுவதற்கு திட்டம் தீட்டினார்.

அஜிதா இப்பொழுது வாரம் ஒரு பிரபலத்தை நேர்காணல் செய்து கொண்டிருந்தார்.அது போக நேர்படப்பேசு என்னும் தினசரி விவாத நிகழ்ச்சிக்கு யாரை அழைப்பது என்றும் அதனை எப்படி நடத்துவது என்றும் ஆலோசனை அளிக்கும் முக்கிய பொறுப்பில் இருந்தார். இந்த நிகழ்ச்சி முழுவதும் அவரது கட்டுப்பாட்டில் இருந்தது. இதனைக் காலி பண்ணுவதற்கு திட்டம் தீட்டினார்.முதலில் வாரம் ஒருமுறை ஒளிபரப்பான நேர்காணல் நிகழ்ச்சிக்குச் சரியான வரவேற்பு இல்லை என்று உரிய இடத்தில் “பத்தவைத்து” அதனைக் காலி செய்தார்.வாரம் ஒருமுறை வெளியான நேர்காணல் பகுதி நிறுத்தப்பட்டது.

அடுத்ததாக டெக்கான் க்ரானிக்கலில் இருந்து சீனியர் ஸ்பெஷல் கரஸ்பாண்டெண்டாக இருக்கும் குணசேகரனை நிர்வாகத்தில் பேசி அழைத்து வந்தார். அஜிதாவுக்கு உயரிய பொறுப்பாக அவருக்கு சீனியர் பொலிடிக்கல் எடிட்டர் என்னும் பதவி அளிக்கப்பட்டது.பிரேம்சங்கர் குணசேகரனுடன் கூட்டணி அமைத்துக் கொண்டார்.அதன்பின் சீனிவாசனிடம் பேசி அஜிதாவின் ”நேர்படபேசு” நிகழ்ச்சி பொறுப்பு குணசேகரன் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.

                                                       குணசேகரன்

எத்தனையோ இடங்களில் வேலைபார்த்த அனுபவமிக்க குணசேகரனுக்கு இந்த ”சூட்சுமங்கள்” புரியாதா என்ன? பிரேம்சங்கர் கூட்டணியின் ஒத்துழைப்புடன் நிகழ்ச்சியைத் திறம்பட நடத்துகிறார். அப்புறம் என்ன?

அப்புறம் என்ன?அஜிதா டம்மியாக்கப் பட்டார்! இதை எதிர்த்து நிர்வாகத்திடம் போராடிப்பார்த்தார்.ஒன்றும் நடக்கவில்லை.

வேலையை ராஜினாமா செய்து விட்டுப் போய் விட்டார்.

டுபுலி ஆட்டத்தில் அஜீதாவைக் காலி செய்த பிரேம்சங்கர்-தலைமையிலான இந்தக் கூட்டணி(இதில் இப்பொழுது நிறையப்பேர் இணைந்திருக்கிறார்கள்...) இப்பொழுது நியூஸ் அவுட்புட் எடிட்டர் ராமைக் காலி செய்யத் திட்டம் தீட்டுகிறார்கள்.அவரும் இதை உணர்ந்தோ என்னவோ மிகவும் எச்சரிக்கையாய் இருக்கிறாராம்.

பொறுத்திருந்து பார்ப்போம்..!
நன்றி  கலகக்குரல் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக