பக்கங்கள்

திருக்குறள்

ஞாயிறு, ஏப்ரல் 29, 2012

குப்பைமேனி இலையின் பருத்துவ குணம் !!


சருமத்தைக் காக்கும் கற்ப மூலிகை..குப்பைமேனி.. ..

மூலிகைகள் என்றால் ஏதோ பெரிய மலைக்காடுகளில் காணப்படுவது என பலர் நினைக்கலாம். மலைக்காடுகளிலும் மூலிகைகள் வளர்கின்றன. அதேபோல் நம் வீட்டருகே, சாலை ஓரங்களிலும், வீதிகளிலும், தோட்டங்களிலும் வயல் வரப்புகளிலும் ஏராளமன மூலிகைகள் வளர்கின்றன. நாம் களைகள் என்று ஒதுக்கும் புல், பூண்டு, செடி, கொடிகள் அனைத்தும் மாபெரும் மருத்துவத் தன்மை கொண்டவை.

மூலிகைகள் ஒவ்வொன்றுக்கும் தனித் தன்மையான மருத்துவக் குணங்கள் உள்ளன. அவற்றில் கற்ப மூலிகைகள் என பல மூலிகைகள் உள்ளன. அதில் குப்பைமேனியும் ஒன்று.

குப்பைமேனி பூண்டு இனத்தைச் சார்ந்தது. இவை தோட்டங்களிலும், சாலை ஓரங்களிலும் வளர்ந்திருப்பதைக் காணலாம். இது இந்தியா முழுவதும் வளரும் செடியாகும்.

குப்பைமேனியை மார்ஜலமோகினி என வடமொழி நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் தமிழில் கூறப்பட்டது போல் குப்பைமேனியின் மருத்துவப் பயன்கள் குறிப்பிடப்படவில்லை.

மாற்றடுக்கில் அமைந்த பல அளவுகளில் உள்ள இலைகளையும், இலைக்காம்பு இடுக்கிலமைந்த பூக்களையும் கொண்டது. இதற்கு அரி மஞ்சரி, பூனைவணங்கி, மேனி என்ற பல பெயர்கள் உண்டு.

Tamil - Kuppaimeni
English - Indian acalypha
Telugu - Kuppi-Chettu
Malayalam - Kuppa-meni
Sanskrit - Arittamajarie
Botanical name - Acalypha indica

இதன் இலை, வேர், சமூலம், (முழுச் செடியும்) மருத்துவப் பயன்பாட்டில் உள்ளது.

தந்தமூ லப்பிணிதீத் தந்திருபுண் சர்வவிடம்
உந்துகுன்மம் வாதம் உதிரமூ - லந்தினவு
சூலஞ்சு வாசம் தொட்ர்பீ சங்கபம்போம்
ஞாலங்கொள் மேனியத னால்

தேரையர் குணபாடம்

பொருள் - குப்பைமேனி இலையால், பல்நோய், தீச்சுட்டப் புண், பயிர் வகையின் நஞ்சு, வயிற்றுவலி, வளிநோய், மூலம், நமைச்சல், குத்தல், இரைப்பு, மூக்குநீர் பாய்தல், கோழை போன்றவை தீரும்.

வயிற்றுப் புழுக்கள் நீங்க

குப்பைமேனியிலையை நிழலில் உலர்த்திப் பொடித்து 1/2 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் வயிற்றுப் புழுக்கள், மலப்புழுக்கள் வெளியேறும். நீரில் கலந்தும் கொடுக்கலாம். ஆறு மாதத்திற்கு ஒருமுறை குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது.

பெரியவர்கள் குப்பைமேனி இலையின் சாறு எடுத்து இலேசாக சூடாக்கி 15 மி.லி. கிராம் அளவு அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் வெளியேறும்.

சொறி, சிரங்கு நீங்க

குப்பைமேனி இலையுடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்து உடலெங்கும் பூசி 15 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் சொறி, சிரங்கு மாறி சருமம் பொலிவுபெறும்.

இலைமேனி யியறிவிளக் கெண்ணெயின்மெய்
யிலயட்டியிலை மேனியை யா

அகத்தியர் குணவாகடம்

பொருள் - குப்பைமேனி இலையை உணவு முறையாகச் சாப்பிட்டு வந்தால் திமிர்வாதமான நரம்பு பலவீனம், உடல் மதமதப்பு, கை, கால் மதமதப்பு போன்றவை நீங்கும்.

குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து புண், நச்சுக்கடி இவைகளுக்கு பற்று போடலாம். தீப்பட்ட புண்களுக்கு பூசினால் புண் விரைவில் குணமாகும்.

குப்பைமேனி இலையை ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி ஒருமண்டலம் கற்ப முறைப்படி உண்டு வந்தால் வாய்வுப்பிடிப்பு நீங்கும். சரும நோய்கள் அகலும். சுவாச நோய்கள் நீங்கும். குடல் புழுக்கள் வெளியேறும். மூல நோயின் தாக்கம் குறையும்.

குப்பைமேனி இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் படுக்கைப் புண் மீது கட்டி வந்தால் புண் விரைவாக ஆறிவிடும்.

குப்பைமேனி இலைச் சாற்றுடன் சுண்ணாம்பு சேர்த்து குழைத்து பூசினால் படர்தாமரை, சொறி, பூச்சிக்கடி, காணாக்கடி முதலியவை குணமாகும்.

மூலம், பவுத்திர நோய்களுக்கு குப்பைமேனி சிறந்த மருந்தாகும்.

குப்பைமேனி சமூலத்தை எடுத்து பொடியாக்கி நெய்யில் கிளறி லேகியமாக்கி வைத்துக்கொண்டு ஒரு மண்டலம் உண்டு வந்தால் 8 விதமான பவுத்திர நோய் தீரும் என தேரையர் காண்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

10 கிராம் குப்பைமேனி வேரை மென்மையாக அரைத்து நீரில் கரைத்து கஷாயம் செய்து குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற விஷநீர் வெளியேறும்.

குப்பைமேனி செடிகளை குப்பையென எறியாமல் தேவைக்கேற்ப பயன்படுத்தி நலம் பெறுவோம்.


உதட்டின் மேல் மீசை போல் ரோமம் முளைத்து அருவருப்பாக உள்ளதா? கவலை வேண்டாம்.

குப்பை மேனி இலை, வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள் ஆகியவற்றை சேகரித்து கொள்ளவும்.

இவற்றை மாவு போல் நன்றாக அரைத்து, படுக்கைக்கு போகும் முன் மேல் உதட்டில் பூசவும்.

தொடர்ந்து இரு வாரங்கள் பூசி வந்தால், ரோமம் அல்லது மீசை போல் அருவருப்பாக இருக்கும் முடி உதிர்ந்து உதடுகள் பளிச்சிடும.;

இது தோட்டங்கனிலும், சாலையோரங்களிலும்.எங்கும் காணப்படுகிறது.
இதன் இலை பச்சைபசேலென முக்கோண வடிவமாக ஓரங்கள் அரும்பு அரும்பாக இருக்கும். இலையில் ஒரு சில இடங்களில் மஞ்சள் நிறப் புள்ளிகள் இருக்கும். பூக்கள் வெண்மையாக, சிறியதாக இருக்கும். காய்கள் முக்கோண வடிவில் மிளகளவில் பச்சையாகக் காணப்படும். காய்களைச் சுற்றிப் பச்சை நிறத்தில் செதில்கள் இருக்கும். மாற்றடுக்கில் அமைந்த பல அளவுகளில் உள்ள இலைகளையும் இலைக்காம்பு இடுக்கிலமைந்த பூக்களைக் கொண்ட குறுஞ்செடி. இது சுமார் 50 செ.மீ. உயரம் வரை வளர வல்லது. குப்பை மேனியை மார் ஜாலமோகினி என்பர். வசீகரப்படுத்தும்இயலடையது. இது ஒரு வசிகர சாதனம். மாந்திரீக மூலிகையாகும். .

நெஞ்சுக்கோழையை நீக்கும். இருமலைக்கட்டுப் படுத்தும். விஷக்கடி, ரத்தமூலம், வாதநோய்,நமச்சல், ஆஸ்துமா, குடற்புழுக்கள், மூட்டுவலி மற்றும் தலைவலி போன்ற நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகிறது. இலை வாந்தி உண்டாக்கிக் கோழையகற்றியாகவும். வேர் மலமிளக்கியாகவும் பயன்படுகிறது.

இலைச் சூரணத்தைப் பொடி போல் மூக்கில் இட தலை வலி நீங்கும். இலை, சிறிது மஞ்சள், உப்பு அறைத்துப் உடலில் பூசி சற்றுநேரம் கழித்துக்குளிக்கத் தோல் நோய் அனைத்தும்தீரும்.

வயற்றில் இருக்கும் குடற் பூச்சிகளை போக்கவல்லது . இதன் வேர் கிராம்200 மி.லி. நீரில் காய்ச்சி குடிநீராக அருந்த, பூச்சிகள்அனைத்தும் வெளியேறும்.

தோல் நோய் நீக்கும் குப்பைமேனி!

மருத்துவ குணங்கள்: குப்பைமேனி இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளம் சூட்டில் கட்டிவர படுக்கைப் புண்கள் ஆறும்.

குப்பைமேனி இலையை கைப்பிடியளவு எடுத்துச் சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்துப் பூசி சிறிது நேரம் கழித்துக் குளிக்க, தோல் நோய் குணமாகும்.

குப்பை மேனியின் வேரை நிழலில் உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியளவாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க நாடாப்புழு, நாக்குப்பூச்சி வெளியேறும்.

குப்பைமேனி இலையை அரைத்து சாறு எடுத்து 2 தேக்கரண்டியளவு 12 வயது வரை உள்ள சிறியவர்களுக்குக் கொடுக்க வயிற்றைக் கழியச் செய்து கோழையை அகற்றும். வயிற்றுப் புழுவைக் கொல்லும்.

குப்பைமேனி இலையை எடுத்துச் சாறு பிழிந்து 200 மில்லியளவு எடுத்து அதேயளவு நல்லெண்ணெயுடன் கலந்து தைலப் பதமாகக் காய்ச்சி இறக்கி வடிகட்டி வலியுள்ள இடத்தில் தேய்த்து வர குணமாகும்.

குப்பைமேனி இலையைச் சாறு எடுத்து அத்துடன் சிறிது வேப்பெண்ணெய் கலந்து சிறு குழந்தைகளுக்குத் தொண்டையில் அல்லது உள்நாக்கில் தடவ வயிற்றில் தங்கியிருக்கும் கோழைக்கட்டு, வாந்தியினால் வெளியேறும். குப்பைமேனி இலையை அரைத்து மேகப் புண்களுக்கு வைத்துக் கட்டிவர குணமாகும்.

குப்பைமேனி இலையைக் கீரையாக ஆமணக்கு எண்ணெயில் தாளித்து 48 நாள்கள் தொடர்ந்து உண்டுவர வாய்வுடனே சேர்ந்த பொல்லாத சேத்துமப்பிணிகள் எல்லாவற்றையும் போக்கி, உடல் நலம் பெறும்.

ஆரோக்கியத்தில் பெரும் பங்கு வகிப்பவை. குணமாக்கும் பண்பையுடைய மிளகின் மற்ற குணநலன்களையும் அறிந்துகொள்வோமா......

* ஒரு தேக்கரண்டி மிளகை லேசாக வறுத்து ஒன்றிரண்டாய் தட்டி நீர் விட்டு காய்ச்சி வடிகட்டி, அதில் சிறிது தேன் கலந்து சாப்பிட பசியின்மை தீரும்.

* தலைவலி அதிகமாக இருப்பின் உப்பையும், மிளகையும் நன்கு அரைத்து தலையில் பற்றிட குணமாகும்.

* ஒன்பது குப்பை மேனி இலையுடன் 6 மிளகை அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு பின் பசும்பாலைக் குடிக்கவும். இதனை மூன்று நாட்கள் செய்து உப்பில்லா பத்தியம் இருக்க யானைக்கால் சுரம் குணமாகும்.

* பத்து மிளகினை பொடி செய்து அதனுடன் பாகல் இலைச்சாறும், கரிசலாங்கண்ணி இலைச்சாறும் கலந்து 40 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டு வர பெண்களின் மலட்டுத் தன்மை நீங்கும்.

* சந்தனம், மிளகு, கற்பூரம் மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்துப் பூசி வர சொறி, சிரங்கு எளிதில் குணமாகும்.

குப்பை மேனி இலையை மைய அரைத்து கடிவாயில் பத்து போட எலிக் கடியின் விஷம் குறையும்

ஒன்பது குப்பை மேனி இலையுடன் 6 மிளகை அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு பின் பசும்பாலைக் குடிக்கவும். இதனை மூன்று நாட்கள் செய்து உப்பில்லா பத்தியம் இருக்க யானைக்கால் சுரம் குணமாகும்.

கும்பைமேனி இலைச் சாற்றை காய்ச்சிய பாலில் கலந்து குடித்து வர சுவாசக் கோளாறுகள் குணமாகும். இதன் இலையுடன் மஞ்சள் சேர்த்து சிரங்குகள் மீது தடவி வர விரைவில் சிரங்கு அகன்றுவிடும். தேள், பூரான், வண்டுக்கடி வீக்கத்தின் மீது இலையை அரைத்துப் பூசிவர விஷம் முறியும்.

இலையை கஷாயம் செய்து குடித்தால் மலச் சிக்கல் அகலும். வேருடன் குப்பை மேனிச் செடியைப் பிடிங்கி நன்கு கழுவி சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டி சுக்கு, வெள்ளைப் பூண்டு, சீரகம் சேர்த்துக் கஷாயம் செய்து பருகிவர குடலிலுள்ள தீமை தரும் பூச்சிகள் அழியும். குப்பை மேனி இலையுடன் மஞ்சள், வெள்ளைப் பூண்டு சேர்த்து விழுதாக அரைத்து முகப்பரு, கரும் புள்ளிகள் மீது தடவி வர சருமம் முன்பு இருந்த இயல்பானதாக இயல்பு நிலைக்கு வந்துவிடும்.

குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி வந்தால் பெண்களுக்கு முகத்தில் வளரும் முடிகள் காணாமல் போகும். குப்பைமேனி இலையை அரைத்து முகத்தில் பூசி facial செய்தால் முகம் அழகு கொடுக்கும்.

( பின் குறிப்பு: எப்போதும் எந்த மூலிகைகளையும் தகுந்த மருத்துவரை ஆலோசித்து பின் உள்ளுக்கு சாப்பிடுவது நல்லது .இது அணைத்து மூலிகைகளுக்கும் பொருந்தும். )

சனி, ஏப்ரல் 28, 2012

டெசோ கூட்டத்தில் கலைஞர் பேசியது என்ன ??


பிப்ரவரி 2009


‘டெசோ’ கூட்டங்களில் கலைஞர் பேசியது என்ன?
ஈழத்தில் - சிங்கள ராணுவம்தான் இந்தியாவின் பேருதவியோடு போரை நடத்துகிறது. விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்துக்குthத் தயார் என்று அறிவித்து விட்டார்கள். போரை நிறுத்த மாட்டோம் என்கிறது சிங்களம். புலிகள் ராணுவத்தைக் கலைத்துவிட வேண்டும் என்று சிங்களர் விதிக்கும் நிபந்தனையை தமிழ்நாட்டில் ஆட்சியிலுள்ள தி.மு.க.வும் ஏற்று ‘இருதரப்பு போர் நிறுத்தம்’ என்ற கருத்தை முன் வைத்து மனித சங்கிலியை நடத்தியுள்ளது. மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளதாலும் காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதாலும் ஈழத் தமிழின உரிமைப் போராட்டத்தை நசுக்கிடும் இந்திய அரசை எதிர்க்காமல் சமரசம் செய்து கொள்ளத் துடிக்கிறது. ஈழப் பிரச்சினையை முன் வைத்து தமிழக ஆட்சியைக் கவிழ்க்கப் பார்க்கிறார்கள் என்று முதல்வர் அறிக்கைகளை விடுகிறார்.


இதே கலைஞர் 1985 ஆம் ஆண்டுகளில், ‘ஈழத் தமிழர் விடுதலை அமைப்பு’ (டெசோ) ஒன்றை உருவாக்கி நாடு முழுதும் தமிழ் ஈழ விடுதலைக்கு ஆதரவான பிரச்சார இயக்கத்தை நடத்தியவர்தான். அப்போது ஆட்சியில் இருந்த முதல்வர் எம்.ஜி.ஆர். மீது ஈழத் தமிழர்களுக்காக மத்திய அரசை வலியுறுத்த வில்லை என்று கலைஞர் குற்றம் சாட்டினார். தாங்கள், இப்பிரச்சினையை வைத்து அரசியல் நடத்தவில்லை என்றார். தமிழனுக்கு என்று நாடு வேண்டும் என்றார். தமிழக இளைஞர்களும் ஆயுதம் ஏந்திப் போராடும் காலம் வரும் என்றார். அதே கருத்தினை இப்போது சீமான் பேசினால், மற்றவர்கள் பேசினால், ஒருமைபாட்டுக்கு எதிராக பேசியதாக வழக்குப் போட்டு அதே கலைஞர் சிறையில் தள்ளுகிறார். ஆனால், அன்று எம்.ஜி.ஆர். ஆட்சியோ, இத்தகைய நடவடிக்கைகளை கலைஞர் மேல் எடுத்ததில்லை என்பதே உண்மை. கடந்த காலங்களில் கலைஞர் எதிர்கட்சியாக இருந்தபோது மக்களிடம் பேசிய கருத்துகளையே இப்போது தமிழின உணர்வாளர்கள் பேசினால் - கலைஞர் ஆட்சியில் சட்டம் பாய்கிறது. இப்போது மூன்றாவது முறையாக இயக்குனர் சீமான் கைது செய்யப்பட்டு, புதுவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அன்று கலைஞர் பேசிய “வீர முழக்கத்தில்” கால்பங்கைக் கூட பேசிடாத சீமான் - இப்போது சிறையில்!


இளம் தலைமுறையினருக்கு கலைஞரின் அந்த உரைகளை நாம் நினைவுபடுத்த விரும்புகிறோம். ஈழத் தமிழர்களுக்காக தமது கடந்தகால தியாகங்களை கலைஞர் பட்டியலிடும்போது நாம் அவரது கடந்த கால உரைகளையும் இளம் தலைமுறையினருக்கு நினைவூட்ட விரும்புகிறோம்.


1985 அக்டோபர் 3, 4, 5, 6, 7 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் கலைஞர் ஆற்றிய உரையைத் தொகுத்து தி.மு.க. தலைமையகமே ஒரு நூலை 1985 ஆம் ஆண்டில் வெளியிட்டது. ‘தமிழனுக்கு ஒரு நாடு தமிழ் ஈழ நாடு’ எனும் தலைப்பில் தி.மு.க. வெளியீட்டுச் செயலாளர் மறைந்த சி.டி.தண்டபாணி முன்னுரையோடு வெளியிடப்பட்ட அந்த சிறு வெளியீட்டிலிருந்து கலைஞர் உரையின் சில பகுதிகளை இங்கு வெளியிடுகிறோம்:


தமிழனாகப் பிறந்ததைத் தவிர வேறு குற்றமென்ன?


மொராக்கோ நாட்டில் நடைபெறும் கொரில்லாப் போராட்டத்திற்கு இந்திய அரசு அங்கீகாரம் அளித்திருக்கிறது. இதனால் மொராக்கோ கோபம் கொண்டு இந்திய அரசுடன் தனது உறவுகளை துண்டித்துக் கொண்டது. அதேபோல பாலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கும் இந்திய அரசு அங்கீகாரம் அளித்திருக்கிறது. பாலஸ்தீன இயக்கத்தின் விடுதலை முகாமை இஸ்ரேல் விமானங்கள் டுனீஷியா நாட்டில் தாக்கின; அராபத்தைக் கொல்ல முயன்றது - நல்லவேளை அராபத் காப்பாற்றப்பட்டு விட்டார் - அந்த விடுதலை முகாம் அழிக்கப்பட்டது.


உடனடியாக இந்திய அரசு “இது மனித நாகரிக வளர்ச்சிக்கு விடப்பட்ட சவால். இதை இந்தியா கண்டிக்கிறது” என்று அழுத்தம் திருத்தமாக - ஆவேசமாக தன்னுடைய மனப்பாதிப்பை வெளியிடுகிறது.


நான் கேட்பதெல்லாம், மொராக்கோவில் போராடுகின்ற கொரில்லாக்களுக்கு தரப்படுகின்ற அங்கீகாரத்தை - பாலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கு தரப்படுகின்ற அங்கீகாரத்தை - இலங்கையிலே போராடுகின்ற தமிழர்களுக்கு ஏன் தரவில்லை? நாங்கள் தமிழனாகப் பிறந்ததைத் தவிர வேறு என்ன குற்றம் செய்தோம்? தமிழனாகப் பிறந்தது குற்றமா? கேவலமா? அப்படியென்றால் தமிழ்நாட்டை இணைத்து ஆள்வது உங்களுக்குக் கேவலமல்லவா? அனுப்பி விடுங்களேன் வெளியே எங்களை என்று கேட்க மாட்டோமா? இப்படிக் கேட்பதால் கருணாநிதி பிரிவினைவாதம் பேசுகிறார் என்று காங்கிரஸ் நண்பர்கள் சொல்வார்களேயானால் நான் அவர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்.


இன்றைக்கு பிரிவினைக் கொடியை - பிரிவினை கீதத்தை காஷ்மீரில் பாடிக் கொண்டிருக்கிறார்கள். காஷ்மீர் ஆளுநர் ஜக்மோகன் மத்தியிலே உள்ள உள்துறை அமைச்சகத் திற்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் “காஷ்மீரில் நடைபெறுகின்ற ஷா அரசு (காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் துணையோடு நடைபெறுகின்ற அரசு) பிரிவினைவாதத்திற்கு துணை போகிறது; உதாரணம் தேவை என்றால், ஆகஸ்டு 14 ஆம் நாள் பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்த நாள்!


ஆகஸ்டு 14 ஆம் நாள் காஷ்மீர் மாநிலத்தில் 50 இடங்களில் பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்டது. பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்ததை காஷ்மீரில் உள்ளவர்கள் கொண்டாடினார்கள். இது மாநிலத்தில் உள்ள ஷா அரசுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று எழுதியுள்ளார். அப்படிப்பட்ட அரசை அங்கே முட்டுக் கொடுத்து தூக்கி நிறுத்தி பரூக் அப்துல்லாவுக்கு எதிராக அதை உருவாக்கியவர்கள் யார்?”


காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் மத்தியிலே உள்ள இந்திரா காங்கிரஸ் தலைமையும்தான். இவர்களுக்கு பிரிவினையைப் பற்றிப் பேச என்ன தகுதியிருக்கிறது? என்ன யோக்கியதை இருக்கிறது? காஷ்மீரில் பாகிஸ்தான் கொடி ஏற்றுவதைத் தடுக்க வகையில்லை, வக்கு இல்லை; தெம்பில்லை; திராணியில்லை. முன்கூட்டி தெரிந்திருந்தும் யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை.


அதுபற்றி கவர்னர் மத்திய அரசுக்கு எழுதியிருந்தும் இன்னும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்கிக் கொண்டிருக்கிறது. எனவேதான் இவர்களுடைய தேசியம், வேறு யார் எதிர்த்தாலும் அங்கெல்லாம் விசுவரூபம் எடுக்காது. இந்தப் பாவப்பட்ட தமிழன் இருக்கிறானே - தமிழன் என்று சொன்னால் - தமிழ் இனம் என்று சொன்னால் - தமிழனுடைய உரிமை என்று சொன்னால் - அங்கே தான் அந்த தேசியம் வேகமாக வந்து பாய்ந்து குதறும். தமிழனுடைய உரிமையை நிலைநாட்ட பக்கத்து நாட்டிலே அழிந்து கொண்டிருக்கின்ற தமிழினத்தை காப்பாற்று என்று சொல்வது தேசியத்திற்கு விரோதம் என்று காங்கிரஸ் நண்பர்கள் சொல்வார்களேயானால், இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற நானோ பேராசிரியரோ, வீரமணியோ, நெடுமாறனோ, அய்யணன் அம்பலமோ ஆதீனகர்த்தரோ மற்றவர்களோ, பாடுபடுவது ராஜ துரோகம் என்று சொன்னால், நாங்கள் அந்தக் குற்றத்தை செய்து கொண்டேயிருக்கத் தயாராக இருக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றேன்.


நாங்கள் மாத்திரம் அல்ல - தமிழ்ச் சமுதாயமே தயாராயிருக்கிறது என்பதை தெரிவிக்கத்தான் நாம் உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.


- இப்படி அன்று ஒருமைப் பாட்டுக்கு தேசியத்துக்கு சவால்விட்ட கலைஞர், அதே உணர்வை இப்போது வெளிப்படுத்தும் சீமான்களை சிறையில் அடைப்பது ஏன்?

மார்ச் 2009


‘டெசோ’ கூட்டங்களில் கலைஞர் பேசியது என்ன? (2)
ஆயுதம் ஏந்தும் காலம் வரும்

நாம் கீழே வெளியிட்டிருப்பது கலைஞரின் உரை. தமிழின உணர்வோடு இந்திய ஒருமைப்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கும் போர் முழக்கம். 1985 ஆம் ஆண்டு எதிர்கட்சியில் இருந்த கலைஞர் காங்கிரஸ் ஆட்சியை நோக்கி வைத்த கேள்விகள். தி.மு.க. தலைமைக் கழகமே, “தமிழனுக்கு ஒரு நாடு; தமிழ் ஈழ நாடு” என்ற தலைப்பில் இந்த உரையை நூலாக வெளியிட்டுள்ளது. ஒருமைப்பாட்டுக்கு எதிராக, கலைஞர் பேசியதில் கால்பங்கு கூட பேசாத சீமானை, கொளத்தூர் மணியை அதே கலைஞர் சிறைப்படுத்தியிருக்கிறார். அப்போது ஆட்சியில் இருந்த எம்.ஜி.ஆர். - கலைஞர் மீது இந்த உரைகளுக்காக எந்த வழக்கையும் போடவில்லை.

“நான் உறுதியாகச் சொல்கிறேன். அரசியல் லாபத்திற்காகத் தான் இலங்கைப் பிரச்சினையை எடுக்கிறோம் என்று யாராவது சொன்னால், நாங்கள் நடந்து முடிந்த பொது தேர்தலிலேயே இலங்கைப் பிரச்சினையை முன் வைத்திருப்போம்.


நாங்கள் இலங்கைப் பிரச்சினையை அரசியல் ஆதாயத்திற்காக வலியுறுத்த விரும்பவில்லை. இங்கே இருக்கின்ற எல்லாக் கட்சியினருக்கும், கட்சி சார்பற்ற முறையில் உடலிலே ஓடுகின்ற இரத்தம், தமிழ் இரத்தமானால், இதயத்தில் துடிக்கின்ற துடிப்பு ஒவ்வொன்றும் தமிழ்!! தமிழ்! என்று துடிப்பது உண்மையானால் அந்தத் தமிழன் சிந்திக்கட்டும். இலங்கையில் செத்துக் கொண்டிருக்கும் தமிழனை காப்பாற்ற வேண்டுமா? வேண்டாமா? அவனுடைய உரிமைக் குரலுக்கு ஆதரவு தர வேண்டுமா வேண்டாமா என்பதை! பழங்கதை பேசிப் பயனில்லை; வீரம் பேசிப் பயனில்லை. கனக விஜயர் தலையில் கல்லேற்றிக் கொண்டு வந்தான் செங்குட்டுவன். காவிரிக்கு கரை கட்ட பன்னீராயிரம் சிங்களவர்களை கைதிகளாகக் கொண்டு வந்தான் கரிகாலன்; ராஜேந்திர சோழன் கடாரம் சென்றான்; வென்றான்! இது சரித்திரம்!


ஆனால், அந்த சரித்திரத்தின் விழுதுகளாக நாம் இருக்கிறோமா? இனிப் பழங்கதைப் பேசிப் பயனில்லை. செயலில் இறங்க வேண்டும். என்ன செயலில்? எப்படிப்பட்ட செயலில்? ஆளுக்கு ஓர் ஆயுதத்தைத் தூக்குவதா என்று கேட்பீர்கள். அப்படி ஒரு காலம் வந்தால் தட்டிக் கழிக்க முடியாது. ஆனால், அந்தக் காலம் இப்போது வந்துவிடும் என்றும் என்னால் சொல்ல முடியவில்லை.


இந்தத் தலைமுறையில் இல்லாவிட்டாலும் அடுத்த தலைமுறையில் அது வரலாம்.
ஏனென்றால் தமிழினத்தை அழித்துத்தான் தீருவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருப்பதும், அதைத் தடுக்காமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நம்மை ஆளுகின்ற அரசு இங்கே இருப்பதும், அதைப் பார்த்தும் பார்க்காததைப் போல நாம் பாமரர்களாய், பஞ்சைகளாய், பரிதாபத்திற்குரியவர்களாய் உலவுவதும் நியாயமில்லை.


எனவேதான் சொல்லுகிறேன், இன்றில்லாவிட்டாலும் நாளை, நாளை தவறினால் மறுநாள் உலகத்திலே இருக்கின்ற தமிழனுக்கு ஒரு நாடு கிடைத்தாக வேண்டும். அப்படிக் கிடைக்கின்ற நாடு எளிதாய்க் கிடைக்கக் கூடிய ஒன்றாக - அதற்குத் தயாராகிவிட்ட நிலையிலே உள்ளதாக இருப்பது தனித் தமிழ் ஈழ நாடாகும். அந்தத் தனித் தமிழ் ஈழ நாட்டைப் பெறுவதற்காக நம்மாலான அனைத்துத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருப்போம்.


தமிழகத்திலுள்ள எல்லாக் கட்சிகளுமே கட்சிகளுக்கு அப்பாற்பட்டு இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக ஓரணியில் நிற்க வேண்டும்.


பிரதமர் ராஜீவின் பொல்லாத பேச்சு


பத்திரிகைச் செய்தியின் குறிப்புப்படி அக்டோபர் முதல் நாள் பயங்கரமான எரிகுண்டுகள் தமிழர்கள் பெரும்பாலும் வாழுகின்ற திரிகோணமலைப் பகுதியிலே வீசி எறியப்பட்டு, பத்தாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தி கிடைத்திருக்கிறது.


250 பேர் தப்பித்துப் பிழைத்து அகதிகளாக வந்திருப்பதாகச் செய்தி கிடைத்திருக்கிறது. இரண்டு விடுதலைப் போராளிகள் முகமெல்லாம் கருகிப் போய் தமிழகத்திற்கு வந்து சேர்ந்தார்கள் என்ற தகவலும் கிடைத்திருக்கிறது. இப்படி நடைபெறுகின்ற அக்கிரமங்களை நாம் கண்டிக்கத்தான் இந்த பேரணிகளையும் பொதுக் கூட்டங்களையும் நடத்துகிறோம்.


இந்த அக்கிரமத்தை கேட்க வேறு ஆளே இல்லையா? நாம் கேட்க வேண்டிய முறைப்படியெல்லாம் கேட்டாகி விட்டது - 1983 ஆம் ஆண்டில் இந்த அநியாய இனப் படுகொலை இலங்கையில் தொடங்கியவுடன் தமிழகம் கொந்தளித்தது - கிளர்ச்சி வடிவெடுத்தது.


ஜனநாயக ரீதியில் அணுகிப் பார்த்தோம். போராட்ட ரீதியில் அணுகிப் பார்த்தோம். பல முறையீடுகளை எடுத்துச் சென்று அன்றைக்கு பிரதமராக இருந்த இந்திராகாந்தி அவர்களை சந்தித்துப் பார்த்தோம். எதுவும் நடைபெறவில்லை. இப்போது நடைபெறுகின்ற அக்கிரமங்களை மாநிலங்களவையில் வை.கோபால்சாமி, எல். கணேசன் போன்றவர்கள் எடுத்துச் சொன்ன போதும், நாடாளுமன்றத்திலே என்.வி.என். சோமுவும், கலாநிதியும் எடுத்துச் சொன்ன போதும் கிடைத்த பதிலென்ன?


வெளிநாட்டிலிருந்து வரும் ஒரு விமானத்தில் சிங்களவர் ஆயுதங்களை ஏற்றி வந்தார்கள். அப்படி ஆயுதங்களை ஏற்றி வந்த அந்த விமானம் எண்ணெய் இல்லாத காரணத்தால் திருவனந்தபுரத்திலே இறங்கியது. அந்த விமானத்தில் ஆயுதங்கள் இருக்கின்றன. அதை இலங்கைக்கு அனுப்புவீர்களேயானால், அது இலங்கைத் தமிழர்களைக் கொல்லப் பயன்படுத்தப்படும். எனவே அங்கே அனுப்பாதீர்கள் என்று தமிழ்நாடு ஒருமித்த குரல் கொடுத்து கேட்டுக் கொண்டது. அப்படியிருந்தும் பிரதமர் ராஜீவ்காந்தி அவர்கள் தமிழ்நாட்டு மக்களுடைய கோரிக்கையை காலில் போட்டு மிதித்து விட்டு, தமிழர்களைக் கொல்லுகின்ற ஆயுதங்களைத் தாங்கியிருந்த அந்த விமானத்தை இலங்கைக்கு அனுப்பியது நியாயம் தானா? என்று கோபால்சாமி கேட்டபோது பிரதமர் எழுந்து, “அந்த ஆயுதங்களில் - ‘இது தமிழர்களைக் கொல்ல’ என்று எழுதப்படவில்லை” என்று சொன்னார்.


உலகத்தில் எந்த யுத்தத்திலாவது - எந்த துப்பாக்கிக் குண்டிலாவது - அல்லது எந்த துப்பாக்கியிலாவது இது இன்னின்னாரைக் கொல்ல என்று எழுதப்பட்டிருக்குமா? நான் வேதனையோடு ராஜீவ்காந்தி அவர்களைpப் பார்த்து கேட்கிறேன். அன்னை இந்திராகாந்தியின் உடலைப் பல குண்டுகள் துளைத்தனவே - அதிலே எந்தக் ‘குண்டிலாவது இது இந்திரா காந்தியைக் கொல்ல’ என்று எழுதப்பட்டிருந்ததா? ஆனால், கொஞ்சமும் ஈவிரக்கம் இல்லாமல், உணர்வு இல்லாமல், விமானத்தை அனுப்பி - அதிலே வந்த ஆயுதங்கள் தமிழர்களைக் கொல்ல பயன்படுத்தப்பட்டன. இது நியாயம்தானா என்று கேட்டோம்.


இப்படிக் கேட்ட கோபால்சாமிக்கு கிடைத்த பதில் அந்த ஆயுதத்தில் தமிர்களைக் கொல்ல என்று எழுதப்படவில்லை என்கின்ற ஹாசியமான - நகைச்சுவை வாய்ந்த ஒரு பதிலைத்தான் பிரதமர் ராஜீவ்காந்தி தருகிறார். எனவேதான் இலங்கையில் இருக்கிற தமிழர்களைக் காப்பாற்ற நாம்தான் முன்வரவேண்டும். நாம் தான் குரலெழுப்ப வேண்டும் என்கின்ற இறுதி முடிவுக்கு இன்றைக்கு நாம் வந்திருக்கின்றோம்.

‘டெசோ’ கூட்டங்களில் கலைஞர் பேசியது என்ன? (3)



நாம் கீழே வெளியிட்டிருப்பது கலைஞரின் உரை. தமிழின உணர்வோடு இந்திய ஒருமைப்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கும் போர் முழக்கம். 1985 ஆம் ஆண்டு எதிர்கட்சியில் இருந்த கலைஞர் காங்கிரஸ் ஆட்சியை நோக்கி வைத்த கேள்விகள். தி.மு.க. தலைமைக் கழகமே, “தமிழனுக்கு ஒரு நாடு; தமிழ் ஈழ நாடு” என்ற தலைப்பில் இந்த உரையை நூலாக வெளியிட்டுள்ளது. ஒருமைப்பாட்டுக்கு எதிராக, கலைஞர் பேசியதில் கால்பங்கு கூட பேசாத சீமானை, கொளத்தூர் மணியை அதே கலைஞர் சிறைப்படுத்தியிருக்கிறார். அப்போது ஆட்சியில் இருந்த எம்.ஜி.ஆர். - கலைஞர் மீது இந்த உரைகளுக்காக எந்த வழக்கையும் போடவில்லை.


என்னிடத்திலே ஒரு துண்டு அறிக்கை தரப்பட்டது. தூத்துக்குடி தெர்மல் நகர் விடுதலைப் புலிகள் தோழமைக் கழகத்தின் சார்பிலே வெளியிடப்பட்ட அறிக்கை. அதில் சில விவரங்கள்:


இலங்கையில் தமிழன் எத்தனை ஆண்டுக்காலம் பூர்வீகமாக வாழ்ந்தான் - ஆண்டான் என்பதும், அதற்குப் பிறகு கி.மு.543-ல் வட இந்தியாவிலிருந்து விஜயன் தலைமையிலே சிங்களவன் வந்து - குடியேறி னான் என்பதும், கொஞ்சம் கொஞ்சமாக தமிழனுடைய ஆட்சி வீழ்த்தப்பட்டது என்பதும், ஆண்டுக் கணக்கு விவரத்தோடு அதிலே வெளியிடப்பட்டிருக்கிறது. அப்படி வெளியிடப்பட்ட அதில், அங்கே சிங்கள ஆட்சி, உதயமான பிறகு - தமிழனுடைய ஆட்சி தோற் கடிக்கப்பட்ட பிறகு - இலங்கையில் தமிழர்களுக்கு இன்னல்கள் விளைவிக்கப்பட்ட போதெல்லாம், தமிழகத்திலே உள்ள மன்னர்கள் படையெடுத்துச் சென்று தமிழர்களைக் காப்பாற்றினார்கள் என்ற விவரங்கள் அதில் வெளியிடப்பட்டிருக்கின்றன.


கி.பி. 100 முதல் 200 வரையுள்ள காலகட்டத்திலே இலங்கையிலே தமிழர்கள் பாதிக்கப்பட்ட போது கரிகாலன் என்கின்ற தமிழ் மன்னன் படையெடுத்துச் சென்று தமிழர்களைக் காப்பாற்றினான். கி.பி.590-600 இந்தக் காலகட்டத்தில் சிம்ம விஷ்ணு என்ற தமிழ் நாட்டை ஆண்ட மன்னன் இலங்கைக்குச் சென்று அங்கு பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு பாதுகாப்பு அளித்திருக்கின்றான். கி.பி.645-ல் நரசிம்மவர்மன் என்ற மன்னன் தமிழகத்திலே இருந்து படையை அனுப்பி அங்கே பாதிக்கப்பட்ட தமிழர்களைக் காப்பாற்றி இருக்கிறான்.


கி.பி. 835-ல் பாண்டியன் சிரீமாற சீவல்லபன் என்ற மன்னன் படையை அனுப்பி அங்கே பாதிக்கப்பட்ட தமிழர்களுக்குப் பாதுகாப்பு அளித்திருக்கின்றான்.


கி.பி. 907-947 இந்தக் காலகட்டத்தில் பாரந்தகச் சோழன் தன்னுடைய படையை அனுப்பி இலங்கையிலே பாதிக்கப்பட்ட தமிழினத்தைக் காப்பாற்றியிருக்கின்றான்.


கி.பி.960-ல் சுந்தரச் சோழன் படையை அனுப்பி இலங்கையிலே சிங்களவர்களால் பாதிக்கப்பட்ட தமிழினத்தைக் காப்பாற்றி மீட்டுக் கொடுத்திருக்கின்றான்.


கி.பி.993-ல் இராசராச சோழன் படையை அனுப்பி இலங்கையிலே பாதிக்கப்பட்ட தமிழனைக் காப்பாற்றியிருக்கிறான். மீண்டும் கி.பி.1017-ல் இராசேந்திர சோழன் படையை அனுப்பி இலங்கையிலே பாதிக்கப்பட்ட தமிழர்களைக் காப்பாற்றியிருக்கிறான்.


கி.பி. 1055-ல் இரண்டாம் இராசேந்திர சோழன் படையை அனுப்பி விஜயபாகுவின் கொட்டத்தை அடக்கி இலங்கையிலே உள்ள தமிழர்களைப் பாதுகாத்திருக்கிறான்.


இப்படி வரிசையாகப் பார்த்தால், இலங்கைத் தமிழனுக்கு ஆபத்து வந்தபோதெல்லாம் தமிழ்நாட்டுப் படைதான் இலங்கைக்குச் சென்று தமிழர்களைக் காப்பாற்றியிருக்கிறது. இப்போது நாம் பைத்தியக்காரத்தனமாக வடநாட்டுப் படையை எதிர்பார்த்தால் வருமா? எனவேதான் வரலாற்றினுடைய குறிப்பின்படி - சரித்திரத்தினுடைய தொடர்பின்படி பார்த்தால்கூட, இலங்கையிலே இன்றைக்குப் பாதிக்கப்படுகின்ற தமிழனைக் காப்பாற்றுகின்ற பெரும் பொறுப்பு இங்கே உள்ள ஐந்துகோடித் தமிழர்களுக்குத் தான் இருக்கும். ஐந்து கோடித் தமிழர்களில் சில பேருக்கு இல்லை. நான் ஒத்துக் கொள்கிறேன்.


தமிழீழத்தை ஒத்துக் கொள்ளாத - இலங்கையிலே தனித்தமிழ்நாட்டை ஒத்துக் கொள்ளாத சில சோற்றாலடித்த பிண்டங்களும் தமிழ்நாட்டிலே இருக்கிறார்கள்.----நன்றி கீற்று




வெள்ளி, ஏப்ரல் 27, 2012

முட்டை இல்லாமல் குஞ்சுவருமா ? கேட்ப்பவன் கேணையன் என்றால் ...

இலங்கையின் மலையகப் பகுதி ஒன்றைச் சேர்ந்த ரஞ்சித் ஏக்கநாயக்க என்பவரின் 6 கோழிகளில் ஒன்று முட்டை எதுவும் இடாமல் நேரடியாகவே குஞ்சை ஈன்றது என்று பல ஊடகங்கள் பொறுப்பற்ற வகையில் செய்திகளைப் பிரசுரித்துள்ளன. அதுவும் இச் செய்திக்கு மிக மிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் சிறுவயதில், முட்டையில் இருந்து கோழி வந்ததா இல்லை கோழியில் இருந்து முட்டை வந்ததா என்று பள்ளிக்கூடங்களில் விவாதம் நடுத்துவார்களே ! அதேபோல இதனையும் ஒரு பெரும்பொருட்டாக கருதி பல ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளது. முதலில் நாம் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும் ! பாலூட்டிகள், ஊர்வன, பறப்பவை என பலவிடையங்கள் விஞ்ஞானத்தில் உள்ளது.

முட்டை இல்லாமல் குஞ்சு வர சாத்தியமே இல்லை என்பதே உண்மையாகும். கடவுளே வந்தாலும் இதற்கு மாறுதல் கிடையாது. இங்கே நடந்திருக்கும் விடையம் என்னவென்றால், ரஞ்சித் ஏக்கநாயக்க என்பவரின் 6 கோழிகளில் ஒன்று 21 நாட்களாக முட்டைபோடவில்லை. அதாவது உண்டான முட்டை அப்படியே உடல் பகுதிக்குள் தங்கிவிட்டது. இதனால் மேற்கொண்டு அது வேறு முட்டையை போடவும் இல்லை. கோழி எவ்வாறு முட்டை இட்டு பின்னர் அடைகாக்குமோ, அதேபோல உடலில் தங்கியிருந்த முட்டை உடல் உஷ்ணம் காரணமாக பொரிக்க ஆரம்பித்தது. சரியாக 21 நாட்கள் கழித்து முட்டையை உடைத்துக்கொண்டு கோழிக்குஞ்சு வெளியே வந்துள்ளது.

அது கோழியின் முட்டையிடும் பகுதியூடாக வெளியே வந்துவிட்டது. முட்டையின் கோதுகள் தாய் கோழியின் உடலுக்குள்ளேயே தங்கிவிட்டது. இதனால் ஏற்பட்ட வலி மற்றும் ரத்தப்போக்கால் தாய் கோழி இறந்துவிட்டது. ஆனால் கோழிக்குஞ்சு நலமாக உள்ளது அவ்வளவுதான் மேட்டர் ! இதனைப் பெரிய பூதாகரமாக்கி , முட்டையில்லாமல் வந்தகோழி என்று ஊடகங்கள் எழுதித்தள்ளி தமிழர்களை மீண்டும் ஒரு முறை முட்டாள்கள் ஆக்கப் பார்க்கிறார்கள் ! லண்டனில் 1 லட்சம் பேர் கையெழுத்து வைத்தால், பிரித்தானிய பாராளுமன்றில் இலங்கை குறித்து விவாதம் நடைபெறும் என்று அறிவித்தார்கள். இதுவரை 7,000 கையெழுத்துக்களே போடப்பட்டுள்ளது. 3 லட்சம் தமிழர்க இருக்கும் பிரித்தானியாவில் 7,000 பேர் தான் கையெழுத்துப் போட்டு உள்ளார்கள். இச் செய்தியைப் போட்டு மக்களை ஊக்குவித்து கையெழுத்துப் போட ஊடகங்கள் தயார் இல்லை !

ஆனால் எங்கோ இருக்கும் சிங்கள ரஞ்சித் ஏக்கநாயக்கவின் கோழி முட்டையில்லாமல் குஞ்சுபோட்ட செய்தியை மட்டும் கொட்டை எழுத்தில் எழுதுகிறார்கள் ! என்ன கொடுமை சரவணா ! என்ன கொடுமை !

பின் குறிப்பு: -கோழிக்கு நடந்த சம்பவதை நாம் தன்னிச்சையாக எழுதவில்லை. அக்கோழியை ஆராய்ந்த மருத்துவரின் குறிப்பில் இருந்து இவை பெறப்பட்டது ஐயா !-நன்றி முத்துமணி இணையம்

திங்கள், ஏப்ரல் 23, 2012

கச்சத்தீவு !!



கச்சத்தீவு எங்குள்ளது?
பாக்- ஜலசந்தியில் (Palk Straight) மீன் வளம் வளம் மிகுதியாக உள்ள கடல்பரப்பு தீவின் பரப்பளவு 285 ஏக்கர் 1.15 சதுர கிலோ மீட்டராகும் (285 ஏக்கர்). இந்திய கடற்கரை எல்லையிலிருந்து பன்னிரண்டரை மைல் தூரத்திலும், இலங்கை கடற்கரை எல்லையிலிருந்து பத்தரை மைல் தூரத்திலும் உள்ளது.

1974 வரை இந்திய வசமும் பின்னர் இலங்கை வசமும் உள்ள இந்த தீவில் மனிதர்கள் யாரும் தற்போது வசிக்கவில்லை. புகழ்பெற்ற அந்தோணியார் கோவில் மட்டுமே இங்கு உள்ளது. இலங்கைக்கு அருகில் இருப்பதால் அது இலங்கைக்கு சொந்தமாகி விடாது. கச்சத்தீவு இந்தியாவின் பூர்வீக சொத்து.

கச்சத்தீவு இந்தியாவின் பூர்வீக சொத்து என்பதற்கு என்ன ஆதாரம்?
கி.பி.1605ஆம் ஆண்டில் மதுரை நாயக்க மன்னர்களால் சேதுபதி அரச மரபு தோற்றுவிக்கப்பட்டது. சேதுபதி அரசர்கட்கு அளிக்கப்பட்ட நிலப் பகுதியில் குத்துக்கால் தீவு, குருசடித் தீவு, இராமசாமித் தீவு, மண்ணாலித் தீவு, கச்சத் தீவு, நடுத் தீவு, பள்ளித் தீவு ஆகிய தீவுகளும், 69 கடற்கரைக் கிராமங்களும் சேதுபதி அரசர்க்கு உரிமையாக்கப்பட்டிருந்தன.

தளவாய் சேதுபதி காத்த தேவர் என்ற கூத்தன் சேதுபதி (1622-1635) காலத்துச் செப்பேடு ஒன்றில் தலைமன்னார் வரை சேதுபதி அதிகாரத்திற்கு உட்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆங்கிலேயரின் காலனி ஆட்சிக்கு உட்பட்டப் பிறகு, 1803ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் ஜமீன்தாரி முறை கொண்டுவரப்பட்டது. அப்போது சேதுபதி அரச வாரிசு (1795இல் முத்துராமலிங்க சேதுபதி மன்னர் பல்லாண்டுகள் சிறையில் இருந்த நிலையிலேயே மரணமுற்றதால்) இல்லாத நிலையில், அவருடைய தமக்கையான இராணி மங்களேசுவரி நாச்சியாரைக் கிழக்கிந்திய கம்பெனியார் ஜமீன்தாரிணியாக்கினர். அவர் 1803 முதல் 1812 வரை நிர்வாகம் செய்தார்.

கச்சத்தீவு இராமநாதபுரம் ஜமீனுக்கு உரியது என்பதை விக்டோரியா மகாராணி தனது பிரகடணத்தில் கூறியிருந்ததை இலங்கை அமைச்சரவைச் செயலராக இருந்த பி.பி. பியரீஸ் என்பவர் (1936-40ஆம் ஆண்டுகளில் நில அளவைத் துறையில் இருந்தவர்) கூறி பதிவு செய்துள்ளார்.

1972-ல் வெளியிடப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட விவரச் சுவடி, அதற்கு முன் ராஜா ராமராவ் வெளியிட்ட ராமநாதபுர மாவட்ட மானுவல், 1915, 1929 மற்றும் 1933-ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட ராமநாதபுர மாவட்டத்துப் புள்ளிவிவரங்கள் அடங்கிய பின்னிணைப்பு, 1899-ல் ஏ.ஜெ. ஸ்டூவர்ட்டு எழுதிய சென்னை ராசதானியிலுள்ள திருநெல்வேலி மாவட்ட மானுவல் போன்ற பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு வெளியிடப்பட்டது. அதில், ராமேசுவரத்திற்கு வட கிழக்கே, 10 மைல் தொலைவில் கச்சத்தீவு இருக்கிறது என்றும்; ஜமீன் ஒழிப்புக்கு முன்னர், ராமநாதபுரம் அரசர் இத்தீவை தனி நபர்களுக்கு குத்தகைக்கு விட்டுக் கொண்டிருந்தார் என்றும்; இந்தத் தீவின் சர்வே எண் 1250; பரப்பளவு 285.20 ஏக்கர் என்றும்; இந்தத் தீவு ராமேஸ்வரம் கர்ணத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் வட்டத்தில் உள்ள தீவு என்று கச்சத்தீவை அது குறிக்கிறது.

ஆதாரம் இருந்து விட்டு போகட்டும் ஆனால் இலங்கை பக்கத்தில் தானே இத்தீவு உள்ளது ?
இங்கு இரு சர்வேதேச வழக்கு விவரம் உங்கள் மேலான பார்வைக்கு தெரிவிக்க விரும்புகிறேன்
1) இங்லீஷ் கால்வாய் -இல் மிங்குயர்-என்ரோ என்ற தீவு உள்ளது, அது பிரிட்டிஸ் கடற்கரைக்கு அதிக தூரத்திலும், பிரென்ச் கடற்கரைக்கு பக்கத்திலும் உள்ளது.அதனால் பிரென்ச் அரசாங்கம் தீவு எங்கள் வசம் தான் இருக்க வெண்டும் என சர்வதேச நீதிமன்றத்தில் மோதியது. ஆனால் ப்ரிட்டன், தீவு எங்கள் பூர்வீக சொத்து என்பதற்கான 1953-ம் வருட ஆவணங்களை நீதிமன்றத்தி ல் சமர்பித்தது. முடிவில் அத்தீவு ப்ரிட்டன் வசம் கிடைத்தது.
2) கிளீப்போர்டன் என்ற தீவு மெக்சிகன் கடற்கரைக்கரைக்கு அருகில் உள்ளது. ஆனால் அது பிரான்ஸின் பூர்வீக சொத்து.மெக்சிகனும் சர்வதேச நீதிமன்றத்தில் மோதியது. வெற்றி பிரான்ஸுக்குத்தான்.

கச்சத்தீவு Strategic importance என்ன? அதனால் இந்திய மீனவர்களுக்கு என்ன ஆதாயம்?
ராமேஸ்வரத்திற்குக் கிழக்கே கடலில் ஒன்பது கிலோ மீட்டர் வரை பாறைகள் தான் அதிகமாக உள்ளது. அதன் பிறகு 18 கிலோ மீட்டர் தொலைவுக்கு இலங்கையின் கடல் எல்லை வந்து விடுகிறது. எனவே, அந்த பகுதியில் மீன் பிடிக்க முடியாத சூழல் உள்ளது . குறி்ப்பாக கச்சத்தீவை ஒட்டி உள்ள கடல் பகுதிகளில் "Tiger Prawn" (டைகர் ப்ரான்) எனப்படும் அரிய வகை இறால் அதிக அளவு கிடைக்கிறது. இதற்கு சர்வதேச சந்தையில் அதிக கிராக்கி உள்ளது. இதைக் கைப்பற்ற இலங்கை மீனவர்கள் மும்முரமாக உள்ளனர். மேலும், இந்தப் பகுதியை தமிழக மீனவர்கள் மூலம் இந்தியா சொந்தம் கொண்டாடி மீண்டும் வந்து விடக்கூடாது என்ற அச்சமும் இலங்கையிடம் உள்ளது.

திமுக @1974 தாரை வார்த்து விட்டது என்று குற்றம் சட்டப்படுகிறதே?
"கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்'' என்று ஆதாரங்களுடன் பிரதமர் இந்திரா காந்திக்கு தமிழக முதல்- அமைச்சர் கருணாநிதி கடிதம் எழுதினார். அந்த கடித சாரம் உங்கள் கனிவான பார்வைக்கு:

"கச்சத்தீவு பிரச்சினை குறித்து வெளிநாட்டு இலாகா காரியதரிசி கேவல்சிங் என்னுடன் பேச்சு நடத்தியதை தொடர்ந்து எனது இலாகா அதிகாரிகள் கச்சத்தீவு பற்றிய ஆதாரங்களை சேகரித்தார்கள். கச்சத்தீவு, இலங்கை அரசுக்கு உட்பட்ட தீவாக ஒருபோதும் இருந்ததில்லை என்று நிரூபிப்பதற்கு தேவையான ஏராளமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
நெதர்லாந்து நாட்டு மன்னருக்கும், கேன்டி அரசருக்கும் இடையே 14-2-1776 அன்று ஏற்பட்ட ஒப்பந்தம், டச்சு நாட்டிடம் இருந்த கடற்கரை பகுதிகள் இங்கிலாந்து அரசுக்கு மாற்றம் செய்யப்பட்ட ஒப்பந்தம், 17-3-1762 அன்று ஜான் சுரூடர் என்பவர் எழுதிய நினைவுக் குறிப்புகள், டச்சு, போர்த்துகீசிய மன்னர் காலத்து வரை படங்கள் ஆகிய எல்லா குறிப்புகளும் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதை காட்டவில்லை.
1954-ம் ஆண்டு வெளியான இலங்கையின் வரைபடத்திலும் ("மேப்'') கச்சத்தீவு இலங்கையின் ஒரு பகுதியாக குறிக்கப்படவில்லை.நீண்ட நெடுங்காலமாக தமிழ்நாட்டு கடற்கரை பகுதியில் முத்துக் குளித்தல், சங்கு எடுப்பு ஆகிய உரிமைகள் ராமநாதபுரம் ராஜா உள்பட தென் இந்திய மன்னர்களுக்கே உரித்தானது என்பதை வரலாற்று ஆதாரங்கள் காட்டுகின்றன.
கச்சத்தீவு செல்லும் பாதையிலும் கச்சத்தீவின் மேற்கு பகுதி கரை ஓரத்திலும் சங்கு எடுக்கும் உரிமை ராமநாதபுரம் ராஜாவுக்கு இருந்தது என்பதை காட்ட ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. அங்கு சங்கு எடுத்ததற்காக அவர் எந்தக் காலத்திலும் இலங்கை அரசுக்கு கப்பம் கட்டியது இல்லை.இப்போது கிடைத்து இருக்கும் இந்த ஆதாரங்களைக் கொண்டு கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதிதான் என்பதை எந்த அகில உலக கோர்ட்டிலும் எடுத்துக்கூறி நிரூபிக்க முடியும் என்று சென்னை சட்டக்கல்லூரியின் ஆராய்ச்சி பிரிவு கருத்து தெரிவித்து இருக்கிறது. எனவே, இலங்கை பிரதமர் இந்தியாவுக்கு வரும் பொழுது, இந்த ஆதாரங்களை எடுத்துக்காட்டி, "கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமல்ல'' என்று நிரூபிக்க முடியும் என்று எண்ணுகிறேன்.''

இந்தக் கடிதத்துக்கு பதில் ஏதும் வரவில்லை.ஆனால் கச்சத்தீவு தானம் குறித்து, இந்திரா காந்தியும் திருமதி பண்டாரநாயகவும் இந்த கால கட்டத்தில் , ஜூன் 28ம் 1974 மற்றும் 1976ம் ஆண்டில் இந்திய அரசு தனக்கு சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்கு ஒப்பந்தம் மூலம் கொடுத்தது. இந்த ஒப்பந்தங்களில் மீனவர்கள் தீவுப்பகுதியில் மீன் பிடிக்கவும், வலைகளை காயவைக்கவும், வழிபாடு நடத்த தீவுக்கு சென்று வருவதற்கும் இலங்கை அரசிடம் அனுமதி பெறவேண்டியதில்லை என்பது விதியாகும்.

கச்சத்தீவு ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தை, மிக அவரசரமாக 1974 ஜுன் 29-ந்தேதி சென்னை கோட்டையில் முதல்-அமைச்சர் கருணாநிதி கூட்டினார். கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் வருமாறு:-1. பொன்னப்ப நாடார் (ப.காங்கிரஸ்)2. ஏ.ஆர்.மாரிமுத்து (இ.காங்கிரஸ்)3. திருப்பூர் மொய்தீன் (முஸ்லிம் லீக்)4. அரங்கநாயகம் (அ.தி.மு.க.)5. வெங்கடசாமி ,ஜி.சாமிநாதன் (சுதந்திரா)6. ஈ.எஸ்.தியாகராசன் (தமிழரசு கழகம்)7. ஏ.ஆர்.பெருமாள் (பார்வர்டு பிளாக்)8. மணலி கந்தசாமி (தமிழ்நாடு கம்ïனிஸ்டு)9. ம.பொ.சிவஞானம் (தமிழரசு)10. அப்துல் வகாப் (முஸ்லிம் லீக்)11. ஆறுமுகசாமி (இ.காங்கிரஸ்)12. சக்தி மோகன் (பா.பிளாக்)13. ஏ.ஆர்.தாமோதரன் (ஐக்கிய கட்சி)

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது: "இந்தியாவுக்குச் சொந்தமானது என்று நாம் கருதுவதும், தமிழ்நாட்டுக்கு நெருக்கமான உரிமை கொண்டதுமான கச்சத்தீவு பிரச்சினையில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவை இந்தக் கூட்டம் விவாதித்தது. தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு மத்திய அரசு இதனை மறு பரிசீலனை செய்து கச்சத்தீவின் மீது இந்தியாவுக்கு அரசு உரிமை இருக்கும் வகையில் ஒப்பந்தத்தை திருத்தி அமைத்து தமிழ்நாட்டு மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறது.''

எல்லா கட்சித் தலைவர்களும் தீர்மானத்தில் கையெழுத்துப் போட்டு ஒப்புதல் தெரிவித்து இருக்கிறார்கள். அ.தி.மு.க. பிரதிநிதி, தீர்மானத்தில் கையெழுத்து போட மறுத்துவிட்டு போய்விட்டார். காரணம் ?? கச்சத்தீவு பிரச்சினையில் தமிழ்நாடு அரசு ராஜினாமா செய்யவேண்டும் என்று தீர்மானம் போடும்படி சொன்னார். அது ஏற்றுக்கொள்ளப்படாததால், வெளியேறினார்.

சரி , ஒப்பந்தமாவது சரியாக காப்பற்றபடுகிறதா?
கச்சத்தீவு குறித்த கடல் எல்லை ஆதிக்க ஒப்பந்தத்தின் ஐந்தாவது விதியில், இந்தியாவில் இருந்து கச்சத்தீவுக்குத் மக்கள் தொடர்ந்து தங்கு தடையின்றிச் சென்று வரலாம் என்றும் கச்சத்தீவுக்குச் செல்ல பாஸ்போர்ட்டோ இலங்கையின் விசாவோ தேவையில்லை என்றும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

ஆறாவது விதியில், தமிழக மீனவர்கள் கச்சத்தீவை ஒட்டியுள்ள கடலில் மீன் பிடிக்கும் பாரம்பரிய உரிமையைத் தொடர்ந்து அனுபவித்து வரலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த விதிகளுக்கு உடன்பட்டுத் தான் கச்சத் தீவை இலங்கை தனது கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியாக ஏற்றுக் கொண்டது.

கச்சத்தீவு கடல் எல்லை ஒப்பந்தம் கையெழுத்தான சமயம் அப்போதைய வெளியுறவு அமைச்சர் ஸ்வரண் சிங், கச்சத்தீவை ஒட்டியுள்ள கடலில் மீன் பிடிக்கும் பாரம்பரிய உரிமையைத் தமிழக மீனவர்கள் தொடர்ந்து அனுபவித்து வருவதற்கு ஒப்பந்தம் உறுதி செய்கிறது என்று மக்களவையில் கூறியுள்ளார்.

1983 வரை தமிழக மீனவர்களுக்கு கச்சத்தீவு மீன் பிடிப்பில் பாதிப்பு இல்லை . இதற்கு பின்னர் இலங்கை தமிழர் இன கலவரம் மற்றும் போராளி குழுக்கள் எழுச்சி காரணமாக கச்சத்தீவை ஒட்டியுள்ள கடல் பகுதியில் மீன் பிடிக்கப் பாரம்பரிய உரிமையுடன் செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், படகுகளை சேதப்படுத்துவதும், பிடித்த மீன்களை தூக்கி எறிவதையும், மீன்பிடி வலைகளையும் அறுத்து எரிவதும், உச்சகட்டமாக மீனவர்களை படுகொலை செய்வதும் என தொடர்ந்து அராஜகங்கள் அரங்கேறி வருவது தான் வேதனையான உண்மை !!

திரு முகம்மது செரீப் , முன்னால் எம்.பி. (பெரியகுளம்) அவர்களால் நாடாளுமன்றத்தில் 1-4-1968 ஆம் ஆண்டு, கச்ச்த் தீவு ராமனாதபுர ராஜாவுக்கு சொந்தமானது தான் என போதுமான ரெக்கார்டுகள் சமர்ப்பிக்கப்பட்டன. அப்போதே இந்திய அரசு விரைந்து செயல்பட்டு , சர்வதேச நீதிமன்றத்திற்குச் சென்றிருந்தால் நமது பூர்வீகச்சொத்தான கச்சத் தீவு நம் வசம் இருந்து இருக்கும். ஆயிரக்கனக்கான உயிர் பலியும் தவிர்க்கப்பட்டிருக்கும்

சரி எப்படி தான் மீட்பது ?
சர்வதேச நீதிமன்றம் நாடுவதே சரியான தீர்வாக அமைய முடியும். நமக்கு பல ஆதரங்கள் இருக்கின்றன . எப்படி இந்த வழக்குகள் அந்த அந்த நாடுகள் வெற்றி கண்டனவோ அதனை போலவே நம்மாலும் வெற்றி கொள்ள முடியும் ....

கச்சத்தீவு நமது உரிமை மட்டுமில்லை, ஒரு தார்மிக கடமையும் கூட இதனை பெறுவதும் தான் ஆயிரகணக்கில் இறந்த இந்திய, நம் தமிழ் பேசும் மீனவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி !நன்றி ச.வெ.ரா

கச்சத்தீவு !!


இலங்கையின் இனப்பிரச்சினையும், இதன் விளைவாக பாக்கு நீரிணைக் கடற்பரப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளும் அக்கடற்பரப்பில் அமைந்துள்ள கச்சதீவு உரிமை தொடர்பான விவகாரத்தை மீண்டும் அரங்கிற்கு கொண்டுவரக் காரணமாகியுள்ளது. கடந்த சில வருடங்களாக கச்சதீவையும் அதனைச் சூழவுள்ள கடற்பரப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தொடர்பாகவும் இந்திய வெகுஜனத் தொடர்புசாதனங்கள் முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வெளியிட்டுவருகின்றன. சென்னைப் பல்கலைக்கழகத்தில் தெற்கு தென்கிழக்காசிய கல்வி நிலையம் பெப்ரவரி 1994இல் இத்தீவு விடயமாக கருத்தரங்கு ஒன்றினையும் நடாத்தியுள்ளது. இந்நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர். ஏ. சூரியநாராயன் என்பார் இவ்விடயம் தொடர்பாக நூல் ஒன்றிணையும் வெளியிட்டுள்ளார். இந்தியசார்பில் வெளியிட்டுள்ள கருத்துக்களை அவதானிக்கின்ற போது இலங்கை வடபகுதி வாழ் மீனவர்களின் நலன்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளமை தெளிவாகின்றது.

இந்தியாவுக்கு இத்தீவும், அதன் கடற்சூழலும் எவ்வளவு முக்கியமோ அதை விட இலங்கையின் வடபகுதி வாழ் தமிழ் மீனவர்களுக்கு கூடுதலான முக்கியத்துவத்தை கொண்டு விளங்குகின்றது. இப்பகுதிவாழ் மீனவர்களின் உயிர்நாடியே இக்கடற் பரப்புத்தான். எமது கடல்வளப் பொருளாதாரத்தில் இப்பகுதி கொண்டுள்ள முக்கியத்துவத்தையும். இந்திய மீனவர்களின் அத்துமீறலினால் உண்டாகும் ஆபத்துக்களையும் வெளிக் கொண்டுவரும் நோக்குடனும், இப்பகுதி தொடர்ந்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அவாவினாலும் கச்சதீவு: அன்றும் இன்றும் என்றும் இச்சிறிய கைநூலை வெளியிட விரும்பினேன்.

இவ்விடயத்தினை நூலுருவில் கொண்டுவதற்கு சகலவழிகளிலும் உதவிபுரிந்து எனக்கு உற்சாகமூட்டிய கிரு யே. யோ நியூற்றன் என்பவருக்கும் இக்கட்டான வேளையில் தேவையான நிதி உதவியை வழங்கி இந்நூல் முழுமையடைய உதவிய “நடமாடும் துவிச்சக்கரவண்டி மீன்வணிகர் மன்றத்தினரும்” எனது இதய பூர்வமான நன்றியைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்நூலிற்கு அணிந்துரை வழங்கியதுடன் கடல் எல்லைகள் அதன் முக்கியத்துவம் தொடர்பாக ஆலோசனை வழங்கி எனக்கு உற்சாகமூட்டிய எனது ஆசிரியரும், புவியற்றுறை தலைவருமான பேராசிரியர் எஸ்.பாலச்சந்திரன் அவர்களுக்கும், இந்நூலிற்கு வாழ்த்துரை வழங்கியதுடன் புதிய கருத்துக்களை ஆலோசனைகளாக வழங்கி இந்நூலிற்கு உரமூட்டிய கலைப்பீடநிதியும் பேராசிரியருமான பொ. பாலசுந்தரம் பி;ள்ளை அவர்களுக்கும் எனது நன்றிகள்.

கச்சதீவின் வரலாற்றுப் பின்னணி விடயங்கள் தொடர்பாக ஆலோசனைகள் வழங்கிய சிரேஸ்ட விரிவுரையாளர் திரு. ளு. சத்தியசீலன் அவர்களுக்கும், கையெழுத்துப் பிரதியை பார்வையிட்டு ஒழுங்கமைப்புச் செய்ய உதவிய சிரேஸ்டவிரிவுரையாளர் திரு. ஏ. P சிவநாதன் அவர்களுக்கும் எனது நன்றிகள்.

இவ்விடயம் தொடர்பாக முன்னர் வெளிவந்த கட்டுரைகள் பலவற்றிலிருந்து முக்கிய விடயங்களை மொழிபெயர்க்க உதவிய ஆசிரியர் திரு. நு.சு. திருச்செல்வம் அவர்களுக்கும், அட்டைப்படத்தினை சிறப்புற அலங்கரித்த நண்பரும் விரிவுரையாளருமான திரு. யு. அன்ரனிராஜ் அவர்களுக்கும், இதில் வரும் படத்தினை வரைய உதவிய படவரைஞர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்களுக்கும் எனது நன்றிகள்.

கச்சதீவு விடயம் தொடர்பாக பலரையும் செவ்விகாண உதவியதுடன் கடல்வளம் தொடர்பான கருத்துக்களை வழங்கிய யாழ் - கடற்றொழில் பயிற்சிநிலைய அதிபர் திரு. ஆ பிரான்சிஸ் அவருக்கும் எனது நன்றிகள்.

இந்நூலின் அட்டையை அழகுற செய்துதந்த தாசன் அச்சகத்தினருக்கும், நூலை சிறப்புற அச்சிட்டு ஒழுங்குபடுத்தி தந்த ஸ்ரீனா அச்சக உரிமையாளர் திரு நாவண்ணன் அவர்களுக்கும், அவரது ஊழியர்களுக்கும் எனது நன்றிகள்.

இந்நூலை வெளிக்கொண்டுவர எனக்கு ஆதரவளித்து உற்சவமூட்டிய விரிவுரையாளர் நண்பர்களுக்கும் எனது நன்றிகள்.

அணிந்துரை

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் புவியியற்றுறையில் விரிவுரையாளராகக் கடமை புரியும் திரு ஏ. எஸ். சூசை எனது மாணவராவர். மீன்பிடிப்புவியியலில் ஆர்வமுடைய இவர் அதில் முதுகலைமாணிப்பட்டம் பெற்றுள்ளார். இத்துறையில் தொடர்ந்தும் கலாநிதிப்பட்டத் திற்கான ஆய்வினை மேற்கொண்டுள்ளார்.

இலங்கை - இந்தியக் கடற்பரப்பில் பாக்குநீரிணையின் மத்தியில் அமைந்துள்ள சிறிய தீவான கச்சதீவு மனித சஞ்சாரமற்ற ஒரு தீவாக இருந்த போதிலும் அதனைச் சூழவுள்ள சமுத்திரச் சூழலானது வளமிக்க பகுதியாக விளங்குகின்றது. ஒரு சமயம் இங்குள்ள அந்தோனியாரைத் தரிசிக்க இந்திய, இலங்கை மக்கள் சென்று வந்துள்ளார்கள். இதனால் இலங்கையும் இந்தியாவும் நீண்டகாலமாக இத்தீவுக்கு உரிமை கோரி வந்துள்ளன. 1974 இல்செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தப் பிரகாரம் இத்தீவு இலங்கைக்குச் சொந்தமாகியது.

1983ஐத் தொடர்ந்து கடந்து 10 வருடங்களாக இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் ஏற்பட்டு வந்துள்ள அரசியல் நெருக்கடி காரணமாக கச்சதீவு ஒர் அமைதியற்ற பகுதியாக மாறியுள்ளது. இராணுவ நடவடிக்கைகள் காரணமாக இலங்கை வடபகுதி - மற்றும் தமிழ்நாட்டு மீனவர்கள் இக்கடற்பரப்பில் சந்தித்து வரும் உயிரிழப்புக்கள், மற்றும் உடமைகள் இழப்புக்கள் கச்சதீவுப் பகுதியினைக் குத்தகைக்குப் பெற்றுத்தர வேண்டுமென இலங்கை அரசை வற்புறுத்துமளவிற்கு வந்துள்ளது. கச்சதீவு தொடர்பான சச்சரவுகள் பற்றி அண்மைக்காலமாக இந்திய தரப்பிலிருந்து செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஒரு பக்கச் சார்பாக வெளிவந்துள்ள கருத்துக்கள் வடபகுதிவாழ் மீனவர்களின் எதிர்காலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இந்த விடயம் இந்நூல் மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது.

ஏழு அத்தியாயங்களைக் கொண்ட இந்நூலில் கச்சதீவின் அமைவிடம், அதன் புவியியற் பின்னனி, சமுத்திரச் சூழல், மீன் பிடிப் பொருளாதாரத்தில் இப்பகுதி கொண்டுள்ள முக்கியத்துவம் என்பன பற்றியும், இத்தீவின் வரலாற்றுப் பின்னனி, மற்றும் கடந்த 10 வருடங்களாக இப்பிரதேசத்தில் இலங்கை இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இராணுவ நடவடிக்கைகள் - இதனால் ஏற்பட்ட இழப்புக்கள் என்பன பற்றியும் இந்தியா இத்தீவு தொடர்பாக கொண்டுள்ள அக்கறை, இதனால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் ஆபத்துக்கள் என்பன பற்றியும், இதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் இந்நூலின் மூலம் வெளிக் கொண்டு வரப்பட்டுள்ளது.

இத்தீவு தொடர்பான முக்கியத்துவம் பற்றி தமிழில் இதுவரை எதுவித நூலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அக்குறைபாட்டை இந்நூல் நிச்சயம் தீர்க்கும் என நம்புகிறேன். காலத்தின் தேவைக் கேற்றவகையில் இந்நூல் வெளிவருவது மகிழ்ச்சி தரும் செயலாகும். இவரின் முயற்சிகள் மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள்.

பேராசிரியர். செ. பாலச்சந்திரன்
தலைவர் - புவியியற்றுறை
யாழ் - பல்கலைக்கழகம்.

அறிமுகம்

விஞ்ஞான - தொழில் நுட்பப் புரட்சியின் விளைவாக உலகக் கடல்களின் இயற்கைச் செல்வங்களைப் பயன்படுத்த பரவலான வாய்ப்புகள் தோன்றியுள்ளன. கடல்களின் மேற்பரப்பையும், குறுகிய கரையோரப் பகுதிகளையும் பயன்படுத்திய நிலை மாறி, கடலடியில், அடிப்பகுதியின் கீழ் எங்கும் உள்ள செல்வங்களை வெளிக்கொணர்ந்து பயன்படுத்தும் நிலை இன்று தோன்றியுள்ளது. தொழில்நுட்ப வாய்ப்புக்கள் அதிகமானதையடுத்து கடல்களிலிருந்து கிடைக்கும் பொருட்களின் தேவையும் பெருகியது. எனவே கடல்கள் மீது அரசுகளுக்குள்ள அக்கறைகள் பெருகின. கடல்களிலிருந்து கிடைக்கும் இயற்கைச் செல்வங்களைப் பயன்படுத்துவது, கடல்களின் போக்குவரத்து மார்க்கங்களைப் பயன்படுத்துவது ஆகியவற்றுடன் தொடர்புடைய பொருளாதார விஞ்ஞான - தொழில் நுட்ப மற்றும் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு விடயங்கள் இப்போது முனைப்பான இடத்தைப் பெற்றுள்ளன.

முன்னர் சர்வதேச கடல் பிரச்சினைகள் குறுகிய முக்கியத்துவமுடையனவாக இருந்தன. இன்றோ கடல்களில் அக்கறையுள்ள அரசுகளின் எண்ணிக்கை பெருகியுள்ளது. எனவே உலகக் கடல்களின் ஆராய்ச்சி மற்றும் இவற்றைப் பயன்படுத்துவதுடன் தொடர்புடைய முரண்பாடுகளின் சாரமும் தன்மையும் மாறியுள்ளன. கடல்களின் வளங்களைப் பயன்படுத்துவது அதிகமாகியதும், உலகக் கடல்கள் சம்மந்தமான சர்வதேச உறவுகளில் பங்கேற்கும் நாடுகளின் எண்ணிக்கை பெருகியதும் தேசிய நலன்கள் மோதும் வாய்ப்புகளை கணிசமாக அதிகப்படுத்தின. இதனால் பொதுவான எல்லோருக்கும் எட்டக்கூடிய கடல்கள் பல கரையோர அரசுகளின் முரண்பாடுகள், சச்சரவுகளுக்கான கங்களாகின. எனவே உலகம் தழுவிய அளவில் அரசுகளின் கடல் நடவடிக்கைகளை ஒழுங்கமைக்கும் அவசியம் ஏற்பட்டது. இதன் விளைவாகவே சர்வதேச சட்டத்தின் ஒரு பிரிவு என்றவகையில் சர்வதேச கடற் சட்டம் உருவாகியது.

சர்வதேச கடற்சட்டம் உலகக் கடல்களில் அரசுகளின் பல்வேறு நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தும் அடிப்படையாகத் திகழ்கிறது இச்சட்டத்தில் பல கோட்பாடுகளும் வரையளவுகளும் உள்ளன. இவை கடல் பரப்புக்கள் பற்றிய சட்ட நிலைகளை நிர்ணயிக்கின்றன. சமாதானத்தைப் பேணிப் பாதுகாப்பது, மக்களினங்களின் சுதந்திரத்தைப் பாதுகாப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட கருத்துக்களை இன்றைய கடற் சட்டங்கள் பிரதிபலிக்கின்றன. இது இச் சட்டத்தின் முக்கிய சிறப்பம்சமாகும்.

இரண்டாவது உலகமகா யுத்தத்தின் பின்னர் சர்வதேச கடற் சட்டத்தின் முக்கிய கருத்து நிலைகள் ஐ. நா. சபையின் மேற்பார்வையின் கீழ் மறுபரீசீலனை செய்யப்பட்டன. இந்த சர்வதேச ஸ்தாபனம் தான் தோற்றவித்த சர்வதேச அமைப்புக்களில் கடல்களுடன் தொடர்புடைய பல்வேறு சட்டப் பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றுக்குத் தீர்வு கண்டது. ஐக்கிய நாடுகள் சபையின் ஏற்பாட்டின் பேரில் 1982 இல் கூடிய மூன்றாவது அமர்வில் புதிய சட்ட உடன்படிக்கை ஏற்கப்பட்டுள்ளது. எல்லா அரசுகளும் உலகக் கடல்களின் பரப்பையும் இவற்றில் கிடைக்கும் இயற்கை வளங்களையும் எப்படி ஆராய்வது, பயன்படுத்துவது என்பன சம்பந்தமான விதிமுறைகள் இதில் அடங்கியுள்ளன. இந்த உடன்படிக்கை இன்றைய கடற் சட்டத்தின் ஆவண ரீதியான வெளிப்பாடாகும். பல்வேறு தேவைகள் நிமித்தம் உலக கடற் பரப்புக்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளன.

1. உள்நாட்டு நீர்ப்பரப்பு
2. அரச எல்லைக்குட்பட்ட நீர்ப்பரப்பு (0 - 12 மைல்)
3. ஒட்டியுள்ள மண்டலம் (0 - 24 மைல்)
4. திறந்த வெளிக் கடல்
5. கரையோர அரசின் கண்டத்திட்டு (200அ ஆழம்வரை)
6. கண்டத்திட்டிற்கு அப்பாலுள்ள கடலடிப் பகுதி
7. தனிப்பட்ட பொருளாதார மண்டலம் (200 மைல்)

இலங்கையைப் பொறுத்தவரையில் இதன் அமைப்பு, அதன் அமைவிடம் காரணமாக சூழவர சர்வதேச கடல் எல்லைகளுக்கு அமைவாகத் தமது எல்லைகளைக் கொண்டிருந்த போதிலும் வடக்கு, வடமேற்குப் பகுதிகளில் இந்தியாவுக்கு இடைப்பட்ட கடற்பரப்பில் எல்லைகள் வேறுபட்ட இயல்பு கொண்டனவாக காணப்படுகின்றன காரணம் இலங்கை - இந்தியாவுக்கு இடைப்பட்ட கடற்பரப்பு குறுகியதாக காணப்படுவதினாலாகும். ஆரம்பத்தில் ஆள்புல எல்லை 3 மைல்களாகவும் பின்னர் 6 மைல்களாகவும் இருந்தபோது இலங்கை - இந்திய கடலோர எல்லைகளில் சிக்கல்கள் எழவில்லை. ஆள்புல எல்லையை 12 மைல்களாக விஸ்தரித்தபோது குறுகிய பாக்கு நீரிணைப் பகுதியின் இடைவெளி 24 மைல்களுக்கு குறைவாக இருந்தமையினால் இவ் எல்லைக் கோடுகள் ஒன்றின் மேல் ஒன்று மேற்படியும் நிலை தோன்றியது. (ழுஎநசடயி) இதன் காரணமாக அகலாங்கு நெட்டாங்கு அடிப்படையில் இலங்கை - இந்திய கடலோர எல்லைகள் வகுக்கப்பட்டன. 1974 இல் ஆகாம்பாலத்திலிருந்து பாக்கு நீரிணை வரையும், 1976 இல் மன்னார் விரிகுடாக் கடற்பரப்பிலும், வங்காள விரிகுடா கடற்பரப்பிலும் எல்லைகள் வரைவதற்கான இரு ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன.

1974 இல் செய்து கொள்ளப்பட்ட இலங்கை - இந்திய கடலோர எல்லைகள் ஒப்பந்தத்தின் மூலம் அதுவரை காலமும் சர்ச்சைக்குரியதாக காணப்பட்ட கச்சதீவுப் பகுதி இலங்கையின் எல்லைக்குள் வீழ்ந்தது. இதனை எதிர்த்து தமிழ்நாட்டிலும், அகில இந்திய ரீதியிலும் ஆர்ப்பாட்டங்கள் நிகழ்த்தப்பட்டன. இருப்பினும் ஒப்பந்தத்தில் கூறப்பட்ட சில சரத்துகள் தமிழ்நாட்டு மீனவர்கள் பாரம்பரியமாக கச்சதீவுப் பகுதியில் அனுபவித்த உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்க உதவியமையால் காலப்போக்கில் கச்சதீவு தொடர்பான விவகாரம் தணியலாயிற்று.

1983 இல் இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் ஏற்பட்ட இனக்கலவரத்தைத் தொடர்ந்து இலங்கை அரசு பாதுகாப்புக் கருதி மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகள் மற்றும் கடல்வலயத் தடைச் சட்டம் காரணமாக கச்சதீவு கடற்பிராந்தியம் ஓர் அமைதியற்ற பிராந்தியமாக மாற வழி வகுத்தது. கச்சதீவுப் பகுதியில் கடல்வலயத் தடைச் சட்டத்தையும் பொருட்படுத்தாது அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட பல தமிழ் நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தனர். பலர் காயப்படுத்தப்பட்டும், கைது செய்யப்பட்டும் துன்புறுத்தப்பட்டனர் உடமைகள் பலவும் சேதமாக்கப்பட்டன. மீன்பிடித் தொழில் பாதிப்படைந்தமையினால் தமிழ்; நாட்டிலும் அகில இந்திய ரீதியிலும் ஒப்பந்த நிபந்தனைகளை இலங்கை மீறியதெனக் கூறி பரவலாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன. இதனால் இவ் விவகாரம் மீண்டும் அரங்கிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று இத்தீவினை மீளப் பெறவேண்டுமெனவும் அல்லது நிரந்தரக் குத்தகைக்குப் பெற்றுத்தர வேண்டுமெனவும், இந்தியத் தரப்பில் கோஷங்கள் வலுவடைந்து வருகின்றன.

இலங்கையின் வடபகுதி மீனவர்கள் இப் பிரதேசத்தில் மீன்பிடித்தலில் ஈடுபட பல வருடங்களாக தடைசெய்யப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தொழில் இன்றி முடங்கிக் கிடக்கின்றன. கச்சதீவுப் பகுதியில் நிறைந்துள்ள கடல்வளங்கள் இலங்கை பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டையும் மீறி இந்திய மீனவர்களால் தொடர்ந்தும் சுரண்டப்பட்டு வருகின்றன. கச்சதீவு தொடர்பாக இந்தியாவின் இன்றைய நிலைப்பாடும், அவைதொடர்பாக வெளியிடப்பட்டு வரும் கருத்துக்களும் வடபகுதி வாழ் மீனவர்களின் எதிர்காலத்திற்குப் பெரிதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளன.

இந்தப் பின்னணியில் கச்சதீவுப் பகுதிகடல்வளப் பொருளாதாரத்தில் கொண்டுள்ள முக்கியத்துவத்தினையும், இந்திய மீனவர்களின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பினால் வடபகுதிவாழ் மீனவர்களுக்கு ஏற்படப்போகும் பாதிப்புக்களையும் வெளிக் கொண்டுவரும் நோக்குடனும் இச் சிறிய நூல் எழுதப்பட்டுள்ளது.

அத்தியாயம் 1

கச்சதீவு - அதன் புவியியற் பின்னணி

பாரம்பரிய நீர்;ப்பரப்புக்கள்.

இலங்கை - இந்தியாவுக்கிடையில் அமைந்துள்ள கடற் பரப்புக்கள் பாரம்பரிய நீர்ப்பரப்புக்கள் எனப்படுகின்றன. இவை மூன்று நீர்ப்பரப்புக்களாகப் பிரிக்கப்படுகின்றன.

1. வங்களாவிரிகுடாப் பகுதி - இது பாக்கு நீரிணையை அடுத்து யாழ்ப்பாணக் குடா நாட்டின் வடகரையோரம் அமைந்துள்ளது.
2. பாக்குநீரிணைப் பகுதி - இது ஆதாம்பாலத்திலிருந்து வடகிழக்காக யாழ்ப்பாண வடமேற்கு கரையோரப் பகுதியில் அமைந்துள்ளது.
3. மன்னார் குடாப்பகுதி - இது ஆதாம் பாலத்திலிருந்து மன்னார்த் தீவின் தென்பகுதி சார்ந்து அமைந்துள்ளது.

மன்னார்த்தீவு, ஆதாம்பாலம், பாம்பன்தீவு என்பன இந்த பாரம்பரிய நீர்ப்பரப்புப் பகுதியினை இரு கூறாகப் பிரிக்கின்றன. இந்த நீர்ப்பரப்பில் பாக்கு நீரிணைப் பகுதியே மிக ஒடுங்கிய கடற்பரப்பாகும். இவ் ஒடுங்கிய அமைப்பானது தமிழ் நாட்டுக் கரையோரத்தினதும், இலங்கையின் வடபகுதி கரையோரத்தினதும் வரலாற்றையும், பொருளாதாரத்தையும். பண்பாட்டையும் ஆழமாகப் பாதித்துள்ளது. இலங்கை - இந்தியத் தமிழர்களை ஐக்கியப்படுத்துவதுடன் அவர்களைப் பிரித்தும் உள்ளது. இதன் விளைவாக இரு நாடுகளிடையேயும் நிர்வாக மற்றும் பாதுகாப்புத் தொடர்பான பிரச்சினைகளையும் தோற்றுவித்துள்ளது.

வரலாற்று ரீதியாகவே இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் விரிவடைவதற்கு இவ் ஒடுங்கிய நீர்ப்பரப்பு முக்கிய வழியாக பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக 19ஆம் 20ஆம் நூற்றாண்டுகளில் ஆங்கிலேயர் இலங்கையின் பெருந்தோட்டங்களில் வேலை செய்வதற்கென ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை இவ்வழியாகவே கொண்டு வந்தனர். இலங்கை சுதந்திரமடைந்தபின்னர் இது தவிர்க்கப்பட்டது. ஆயினும் தென்னிந்தியாவிலிருந்து பெரும் எண்ணிக்கையிலான தமிழர்கள் சட்டத்திற்குப் புறம்பாக இந்நீரிணை வழியாக, இலங்கை வந்தனர். இதே போன்று 1983 ஜுலை கலவரத்தின் பின்னர் ஏற்பட்ட நெருக்கடிகள் காரணமாக இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக இந்தியாவுக்குத் தப்பி ஓடியதும் இந் நீரிணை வழியாகவே.

“19ஆம் 20ஆம் நூற்றாண்டுகளில் ஆயிரக்கணக்கான தமிழ்த் தொழிலாளர்கள் பாக்குநீரிணை வழியாக இலங்கையின் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்ய கொண்டுவரப்பட்டனர். சுதந்திரம் கிடைத்த பின்னர் கொழும்;பு, குடிவரவுச் சட்டங்களை இறுக்கியதால் சட்டத்துக்கு மாறாக இந்தியத் தமிழர்கள் கள்ளத்தோணிகளில் இலங்கைக்கு வந்தனர். ஆனால் இந்த நிலை 1983 ஜுலையில் நிகழ்ந்த கலவரத்தினால் மாறிவிட்டது. அதாவது இலங்கைத் தமிழர்கள் கள்ளத்தோணிகளில் தமிழ் நாட்டுக்கு ஓடித்தப்பினர். இக் கள்ளத்தோணிகள் ஈழக்கப்பற் சேவை எனப் பொதுவாக அழைக்கப்பட்டது.” (ஏ. ளுரவஎயயெசயஎயn. 1994)

இலங்கையின் வடபகுதியில் இராணுவமுகாம்கள் பல நிரந்தரமாகவே நிலைப்பதற்கும் ஒடுங்கிய பாக்குநீரிணைப் பகுதியே காரணமாக அமைந்தது. கள்ளக் குடியேற்றம், கள்ளக்கடத்தல் சம்பவங்கள் இலங்கை - இந்தியாவுக்கிடையே இந்த நீரிணை வழியாக நடைபெற்றமையால் இதனைத் தடுப்பதற்காகவே தள்ளாடி, தலைமன்னார், ஊர்காவற்றுறை, பலாலி ஆகிய இடங்களில் இராணுவமுகாம்கள் அமைக்கப்பட்டன. காலப்போக்கில் தவிர்க்கமுடியாத காரணத்தால் உருவான தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக இராணுவ முகாம்கள் இப்பிரதேசங்களில் பல இடங்களிலும் விஸ்தரிக்கப்பட்டதுடன் அவை பலப்படுத்தப்பட்டும் வந்தன. தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமி;ழ் இளைஞர்களின் பிரதான தளம் தமிழ்நாடு எனவும், இதற்குப் பாக்குநீரிணையை தமது பாதையாகவும் பயன்படுத்துகின்றனர் என்ற சந்தேகத்தின் பேரில் இப் பிரதேசத்தை 1985 இல் தடைசெய்யப்பட்ட வலயமாக இலங்கை அரசு பிரகடனப்படுத்தியது.

இரண்டாவது ஈழப்போரின் பின்னர் வடபகுதியின் கரையோரப் பிரதேசங்கள் பல இராணுவ ஆக்கிரமிப்புக்குட்பட்டு அங்குள்ள பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். கடல்வலயச் சட்டமும் கடுமையாக அமுல்படுத்தப்படுகின்றது. இந்தக் கடற்பிராந்தியம் இன்று இருள் சூழ்ந்த பகுதியாகவே காணப்படுகின்றது. இலங்கை அரசின் இந்தக் கடல்வலய பாதுகாப்புச் சட்டமானது பாக்குநீரிணைப் பகுதியில் அமைந்துள்ள கச்சதீவுப் பகுதியில் இந்திய மீனவர்கள் மரபுரீதியாக அனுபவித்து வந்த மீன்பிடி உரிமைகளுக்கு தடையாக அமைந்துள்ளது என இந்தியா ஆட்சேபம் தெரிவித்து வருவதுடன் அதனை மீளப்பெறவேண்டுமென்ற கோசம் மேலும் தீவிரமடைந்துள்ளது. இதனால் கச்சதீவு தொடர்பான விவகாரம் அனைத்துத் தரப்பினருக்கும் மிக முக்கியமானதாகக் கொள்ளப்படுகின்றது.

கச்சதீவும் அதன் அமைவிடமும்

கச்சதீவு என்பதன் பொருள் இரண்டு சொற்களால் ஆனது சமஸ்கிருதத்தில் ‘கச்’ முயஉhஉh என்பது கடற்கரையையும் (ளுநய உழயளவ) தீவு என்பது (வுiஎர) நீர்சூழ் நிலத்தையும் (ஐளடயனெ) குறித்து நிற்கிறது. ஆகவே கச்சதீவு என்பது கடற்கரைத்தீவு (ளுநய உழயளவ ழக ஐளடயனெ) என வரையறை செய்யலாம்.
(ளுரசலய. P. ளூயசஅய 1971)

யாழ்ப்பாணக் குடாநாட்டின் மேற்கில் அமைந்துள்ள சப்த தீவுகள் எனப்படுகின்ற பிரதான ஏழு தீவுகளுடன் பாலைதீவு, (Pயடயi வiஎர) இரணை தீவு, (ஐசயயெi வiஎர) கக்கிர தீவு (முயமசைய வiஎர) என்பவற்றுடன் கச்சதீவையும் (முயஉhஉhயவiஎர) சேர்த்து பதினொரு தீவுகள் அமைந்துள்ளன. இவற்றுள் இரணைதீவு தவிர்ந்த கச்சதீவு, பாலைதீவு, கக்கிரதீவு ஆகிய மூன்றும் மக்கள் வாழிடமற்ற வெறும் தீவுகளாகவே காணப்படுகின்றன.

கச்சதீவானது அகலாங்கு, நெட்டாங்கு அடிப்படையில் வட அகலாங்கு 9.250 ஆகியன சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. நெடுந்தீவிற்கு தென்மேற்கே ஏறக்குறைய (9மைல்) 14.4 கி. மீ தொலைவிலும் பாம்பன் - இராமேஸ்வரத்திலிருந்து வடகிழக்கே (10மைல்) (16 கி. மீ) தொலைவிலும் இத்தீவு அமைந்துள்ளது. இலங்கையையும் இந்தியாவையும் ஊடறுத்துச் செல்லும் ஒடுங்கிய பாக்குநீரிணையின் மையப்பகுதியில் இத்தீவு அமைந்துள்ளது.
(படம் 1)

இத்தீவின் நீளம் சராசரி (1மைல்) 1.6 கி. மீ அகலம் சராசரியாக (300யார்) 275 மீற்றர். இதன் பரப்பளவு 82 ஹெக்டர்கள் ஆகும். இங்கு வரண்ட வலயத்திற்குரிய முட்புதர்கள் தவிர சிறிய புற்றரைகளும் கடற்கரையோரத் தாவரங்களும் படர்ந்துள்ளன. இதன் கிழக்கு அரைப்பகுதி முருகைக் கற்களால் ஆனது. மற்றைய பகுதி மணற்றிட்டுகளைக் கொண்டு காணப்படுகின்றது. நன்னீர் நிலைகள் எதுவுமற்ற இத்தீவில் எவ்வித மிருகங்களும் இல்லை. கடற்பாம்புகள் அவ்வப்போது தென்படுகின்றன. 1974 இல் கச்சதீவு இலங்கைக்கு சொந்தமாகிய பின்னர் தேர்தல் மாவட்டப் பிரிவைக் காட்டும் இலங்கைத் தேசப்படத்தில் இத்தீவானது யாழ்ப்பாண தேர்தல் மாவட்டம் இல: 10@ ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதி இல: 89 பிரிவினுள் காட்டப்பட்டுள்ளது. கி. சே. பிரிவு - நெடுந்தீவாகும். நீதி நிர்வாகப் பிரிவு யாழ்ப்பாண மாவட்டமாகும்.
(வுhந யேவழையெட யுவடயள ழக ளுசi டுயமெய 1988)

கச்சதீவுப் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவோர்கள் இத்தீவில் தற்காலகமாகத் தங்கி இளைப்பாறுவதுடன் மீன்களைக் கருவாடிடும் முயற்சிகளிலும் ஈடுவடுவதுண்டு. அத்துடன் சங்கு, அட்டை, முத்துக்குளித்தல் நடவடிக்கைகளும் இத்தீவு சார்ந்து மேற்கொள்ளப் படுவதுண்டு. மேலும் இந்திய கமக்காரர்கள் கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாகவும் இத்தீவினைப் பயன்படுத்தியுள்ளனர். மருத்துவத்திற்கான மூலிகைகளும் இங்கு பெறப்பட்டு ள்ளன. 2ம் உலக யுத்தத்தின் போது இத்தீவு துப்பாக்கி சுடுதல், குண்டு வீசுதல் ஆகியவற்றின் பயிற்சிக் களமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறாக இத்தீவு மக்கள் குடியேற்றம் அல்லாத பகுதியாக இருந்தபோதிலும் கலாசார, பொருளாதார, அரசியல், இராணுவ ரீதியில் முக்கியத்துவம் உடைய ஒரு இடமாக விளங்கி வந்துள்ளது. இக் கடற்பிராந்தியமானது கடல்வளப் பொருளாதாரத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் காணப்பட்டமை இத் தீவினை இருநாடுகளும் தமக்கு உரித்தானது என உரிமை கோரப் பிரதான காரணமாக அமைந்துள்ளது.

கச்சதீவு கடற்பகுதியின் பொருளாதார முக்கியத்துவம்

பாரம்பரிய நீர்ப்பரப்புப் பகுதியானது கடல்வளம் நிறைந்து காணப்படுவதற்கான சமுத்திரச் சூழலை சிறப்பாகக் கொண்டுள்ளது. ஆழம் குறைவான (6மீ - 18மீ) அகன்ற கண்டத்திட்டுக்களையும். சேறும், மணலும், கலந்த அடித்தளம், இடையிடையே முருகைக் கற்கள் என்பனவற்றைக் கொண்டு விளங்குகின்றது. இந் நீர்ப்பரப்பு இலங்கை -இந்திய நிலத்திணிவுகளுக்கு இடையில் அமைந்துள்ளமையால் பருவப் பெயர்ச்சிக் காற்றுகளினால்பெரிதும் பாதிப்படைவதில்லை. மன்னார் தீவு, பாம்பன் தீவு, மற்றும் யாழ்ப்பாணத் தீவுப்பகுதிகள் வருடம் முழுவதும் மீன்பிடித் தொழிலைச் செய்வதற்கான வாய்ப்பினைக் கொண்டிருக்கின்றன. இந்தியாவின் தென்முனையில் அமைந்துள்ள வோர்ஜ் மீன்பிடி மேடையையும், யாழ்ப்பாணத்தின் வடபகுதியில் அமைந்துள்ள பீட்று மேடையையும் இணைக்கின்ற நீர்ப்பரப்பாக இப் பாரம்பரிய நீர்ப்பரப்பு அமைந்துள்ளமை மேலும் இப்பகுதி சிறந்த வளம்மிக்க பகுதியாக இருப்பதற்குக் காரணமாக அமைகின்றது.

இத்தகைய சமுத்திரவியற் பின்னணி காரணமாக வரலாற்று ரீதியாக நீண்டகாலமாக முத்துக் குளித்தல், சங்கு சேகரித்தல், என்பவற்றுடன் மீன்பிடியும் நல்லமுறையில் வளர்ச்சியடைந்துள்ளது. இன்று அட்டை சேகரித்தல், இறால் உற்பத்தி மிகச் சிறப்பாக நடைபெறுகின்றது. “தமிழ் நாட்டின் மீன்பிடியில் 50மூ பாக்குவிரிகுடாவிலிருந்தும், மன்னார் வரிகுடாவிலிருந்தும் பெறப்படுகின்றது. முழு இறால் உற்பத்தியிலும் 50மூ இங்குதான் பெறப்படுகின்றது.” இலங்கையின் மொத்த மீன் உற்பத்தியில் சுமார் 20மூக்கும் அதிகமான பங்கு அப்பகுதியிலிருந்தே பெறப்படுகின்றது. யாழ்ப்பாண மாவட்டமும், மன்னார் மாவட்டமும் இதில் சிறப்பான இடத்தை வகிக்கின்றது. இதைவிட இறால், கடலட்டை, சங்கு உற்பத்திகளும் இப் பிரதேசத்திலிருந்தே கூடுதலாகப் பெறப்படுகின்றது. இப் பிரதேசம் இறாலுக்கு சிறப்பான இடம் ஆகையினால் இப் பகுதி “இறால் வங்கி” (Pசயறளெ டீயமெ) என அழைக்கப்படுகின்றது.

இரு நாடுகளின் கரையோரப் பிரதேசங்களிலிருந்தும் கணிசமான மக்கள் இந்த பாரம்பரிய நீர்ப்பரப்பு பகுதிகளிலேயே மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் நாட்டில் தஞ்சாவூர் புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 101 கிராமங்களிலிருந்து 62,540பேர் மீன்பிடியில் தங்கி வாழ்பவர்களாகவும் காணப்படுகின்றனர். 4.616 இந்திய மீன்பிடிப் படகுகள் இப் பிரதேசத்தில் மீன்பிடியில் ஈடுபடுகின்றன. (ஏ. ளுரசலயயெசயலயn. 1994)

இலங்கையின் வடபகுதியில் மன்னார், யாழ்ப்பாணம். கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலிருந்து 34809 பேர் நேரடியாக ஈடுபடுகின்றனர். மொத்த மீனவர் தொகை 143664 பேராகும். இது இலங்கையின் மொத்த மீனவர் தொகையில் 34.8மூஆகும். (குiளாநசநைள ளுரசஎநல ழக ளுசi டுயமெயஇ 1989) வடபகுதியைச் சேர்ந்த 9000க்கும் மேற்பட்ட படகுகள் இப் பிரதேசத்தில் மீன்பிடியில் ஈடுபடுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறாக இந்த நீர்ப்பரப்புப் பகுதி மீன்பிடிப் பொருளாதாரத்தில் மிக முக்கியமான பகுதியாக விளங்குகின்றது.

1985 இலும், 1993 இலும் இலங்கை அரசு மேற்கொண்ட கடல்வலயத் தடைச் சட்டம் காரணமாக இரு பகுதியையும் சேர்ந்த பெரும் தொகையான மக்கள் தமது தொழில் வாய்ப்பையும் இழந்துள்ளனர். இதனால் இரு நாடுகளும் இத்துறை சார்ந்த பொருளாதாரத்தில் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன.

கச்சதீவும் அதன் கடற்சூழலும் மீன்பிடியுடன் தொடர்புடைய பொருளாதாரத்தில் மட்டமல்ல, கடற் போக்குவரத்துத் துறையிலும் முக்கியத்துவமுடைய பகுதியாக மாறக் கூடிய வாய்ப்புக்களைக் கொண்டுள்ளது. இந்தியா ஆரம்பத்தில் முன்வைத்த சேது சமுத்திர அபிவிருத்தித் திட்டமானது இலங்கை இந்திய எல்லைப் பகுதியிலுள்ள கடற்பரப்பினை ஆழமாக்கி மன்னார் விரிகுடா, பாம்பன். பாக்குநீரிணை வழியாக சிறந்த கப்பற் போக்குவரத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்தியாவின் தெற்கு, குறிப்பாக தூத்துக்குடி துறைமுகம், மற்றும் கிழக்கு, மேற்கு கரையிலுள்ள துறைமுகங்களுக்கிடையே சிறந்த போக்குவரத்துத் தொடர்பை ஏற்படுத்துவதற்கு இக் குறுகிய ஆழம் குறைவான கடற்பரப்பு தடையாக அமைந்துள்ளன. இந்தியாவின் கிழக்கு மேற்கு கரைகளுக்கிடையிலான கப்பற் போக்குவரத்து இலங்கையின் தென்பகுதி கரையோரம் வழியாகவே நடைபெற்று வருகின்றன. சேது சமுத்திர அபிவிருத்தித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படின் மேற்கு - கிழக்கு கரைகளுக்கிடையிலான போக்குவரத்து நன்கு விருத்தியடையும், இத்திட்டம் எதிர்காலத்தில் வெற்றியளிக்கும் பட்சத்தில் கச்சதீவுப் பகுதியினது முக்கியத்துவம் மேலும் வலுவடையலாம்.

மேலும், இலங்கை - இந்தியாவுக்கு இடையிலான கடற் பரப்பில் எண்ணெய் வளப்படிவுகள் காணப்படுவதாக அறியக் கூடியதாகவுள்ளது. இக் கடற்பகுதியில் குறிப்பாக பேசாலையைச் சார்ந்துள்ள கடற்பரப்பில் எண்ணெய் வள ஆய்வுகள் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டன. மீண்டும் இப்பகுதி சார்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இவ் ஆய்வுகள் வெற்றியளிக்கும் பட்சத்தில் கச்சதீவு கடற் சூழலின் முக்கியத்துவம் மேலும் சிறப்படையலாம். இந்த வகையில் கச்சதீவும் அதன் கடற் சூழலும் மீன்பிடி, போக்குவரத்து வலுவான அடிப்படையில் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதியாக விளங்குகின்றது.

கச்சதீவின் பண்பாட்டு ரீதியிலான முக்கியத்துவம்.

கச்சதீவுக் கடற்பிராந்தியம் கடல்வளப் பொருளாதாரத்தில் மட்டுமல்ல, இத் தீவிற்கு சமீபமாவுள்ள கரையோர மக்களின் சமூக வாழ்வியலிலும் நெருங்கிய தொடர்புடையதாக விளங்குகின்றது. இத் தீவானது மக்களின் வாழ்விடமாக இல்லாத போதிலும் தொழில் மற்றும் சமய வழிபாடு கருதி மீனவர்கள் தற்காலிகமாக இங்கு தங்கி வருவதுண்டு. இத் தீவில் 1913 இல் றோ.க ஆலயம் ஒன்று கட்டப்பட்டுப் புனித அந்தோனியாருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று பாலைதீவிலும் 1895இல் புனித அந்தோனியர் ஆலயம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. ஆரம்ப காலங்களில் இக் கடற்பரப்பில் மீன் பிடித்தலுக்காகச் சென்ற கரையோர மீனவர்கள் கடலில் அடிக்கடி தாம் சந்திக்கும் ஆபத்துக்களில் இருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்ளவும், தொழில் முயற்சிகள் நல்லமுறையில் கைகூட வேண்டுமென்று கருதி “பாது காவலராக” புனித அந்தோனியார் சொரூபம் ஒன்றை வைத்து சிறிய ஆலயம் ஒன்றைக் கட்டியிருக்க வேண்டும் என சொல்லப்படுகின்றது. “இந்தக் கோவிலை நம்புதாளை என்ற சிற்றூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கட்டினார். அவர் சென்ற படகு புயலில் சிக்கியபோது அவர் அந்தோனியாரை வேண்டிக் கொண்டார். அதன் காரணமாக அவர் புயல் அபாயத்திலிருந்து தப்பியதாகவும் அதனால் அவர் அந்தக் கோயிலைக் கட்டினார்” (பி. நாராயணன் 1983) என்றும் கூறப்படுகின்றது. “இராமாயணபுரத்தின் 1972 வர்த்தமானிப்படி இத் திருவிழாவின்போது இராமேஸ்வரத்துக்கு அண்மையிலுள்ள கங்கச்சி மடத்திலிருந்து ஒரு கத்தோலிக்கக் குருவானவர் கச்சதீவுக்குப் போய் அங்கு கிருவிருந்து நடத்துவார். இந்தத் தேவாலயம் இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் ஒரு நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு மீனவரான சீனிக்குப்பன் படையாட்சியால் கட்டப்பட்டது” (ஏ. ளுரசலயயெசயஎயn. 1994) வடபகுதிக் கரையோரங்களில் பெரும்பாலும் கத்தோலிக்கரே கூடுதலாக வாழ்கின்றனர். இப்பகுதி மக்கள் தமது “ஆத்ம திருப்தி” கருதி இவ் ஆலயத்தில் ஆண்டு தோறும் திருவிழாக்கள் நடத்தி வருகின்றனர்.

கச்சதீவிலும், பாலைதீவிலும் கட்டப்பட்டுள்ள ஆலயங்களின் நிர்வாகம் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயரின் கீழ் உள்ளது. பலைதீவு ஆலயமானது வலைப்பாடு கோயிற் பங்கின் கீழும், கச்சதீவு ஆலயமானது நெடுந்தீவு கோயிற் பங்கின் கீழும் கண்காணிக்கப்படுகின்றன. இவ் ஆலயங்களில் வருடந்தோறும் வழிபாடுகளானது பாஸ்கு திருவிழாக் காலங்களிலேயே நடைபெற்று வருகின்றன. பங்குனி அல்லது சித்திரை மாதப் பகுதிகளில் கொண்டாடப்படுகின்ற பாஸ்கு திருவிழா 6 வாரங்களைக் கொண்டது. (40 தினங்கள்) இதன் மூன்றாவது வாரத்தில் கச்சதீவிலும், நான்காம் வாரத்தில் பாலைதீவிலும் வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. 3 தினங்கள் தொடர்ச்சியாக நடைபெறும் புனித அந்தோனியார் திருவிழாவில் பெருந்திரளான மக்கள் கலந்து கொள்ளுகின்றனர். குறிப்பிட்ட பங்கினைச் சேர்ந்த குருவானவரும் கோயில் நிர்வாக சபையினரும் இவ் விழாவினை ஒழுங்கு செய்கின்றனர். ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் சோளகம் தொடங்கிவிடுவதால் அக்காலத்தில் கடல் அலைகளின் தாக்கம் சற்று உயர்வாக இருக்கும். இதனால் படகுகளில் செல்வது கடினம். இதன் காரணமாகவே சோளகத்தின் முன்னர் அங்கு சென்று திரும்பிவிட வேண்டும்; என்பதற்காக இக்காலப்பகுதியைத் தெரிவு செய்துள்ளதாக வெளிக்கள ஆய்வின்மூலம் அறியப்பட்டுள்ளது.

1974 ஆம் ஆண்டு இலங்கை - இந்திய, கச்சதீவு தொடர்பான இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்படும்வரை தமிழக மற்றும் இலங்கையின் வடபகுதியைச் சேர்ந்த யாத்திரிகர்கள் கச்சதீவுக்குச் சுதந்திரமாகச் சென்றுவரலாயினர். 1974 இன் பின்னர் கச்சதீவு சட்டபூர்வமாக இலங்கையின் நிர்வாகத்தின் கீழ் வந்த பின்னர் அரசின் அனுமதி பெற்றே அங்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தியாவில் இருந்து வருகின்ற கள்ளக் குடியேற்றத்தைத் தடுக்கவும், கள்ளக் கடத்தலை முறியடிக்கவும், நோய்த்தடுப்பு, மற்றும் படகு விபத்துக்கள் என்பவற்றைக் தவிர்த்துக் கொள்ளவும், கிராம சேவையாளர், பொலிஸ் திணைக்களம், சுங்கத் திணைக்களம், கடற்படை என்ற மட்டத்தில் கச்சதீவிற்குச் செல்வதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன. முன்கூட்டியே விண்ணப்பம் செய்து அனுமதிப்பத்திரம் பெற்றவர்கள்; குறிப்பிட்ட துறைமுகங்களில் இருந்து செல்ல ஒழுங்குகள் செய்யப்பட்டன. இந்தியாவில் அம்மை நோய் வேகமாகப் பரவியிருந்தமையினால் அங்கு செல்பவர்களுக்கு தடுப்பு ஊசிகளும் போடப்பட்டன. குருநகர், ஊர்காவற்றுறை நெடுந்தீவு, குறிகட்டுவான், மைலிட்டி, தலைமன்னார், பேசாலை ஆகிய துறைகளிலிருந்து இயந்திர வள்ளங்களில் யாத்திரிகர்கள் சென்றனர். கிறிஸ்தவர்கள் மட்டுமன்றி இந்துக்களும் முஸ்லீம்களும் வழிபாடு கருதியும், வர்த்தக நோக்கம் கருதியும் அங்கு சென்றனர்.

விழாக் காலங்களில் சுற்றுச்சூழல், சுகாதாரம், மருத்துவம், குடிநீர் வசதிகள் போன்ற சேவை நல வசதிகள் மாநகர சபை, சுகாதாரத் திணைக்களம் என்பவற்றால் ஒழுங்கு செய்யப்பட்டன. பாதுகாப்பு மற்றும் சிறு குற்றச் செயல்களைக் கண்காணிப்பதற்கு பொலிஸ் நிலையமும், குற்றங்களை உடனுக்குடன் தீர்ப்பதற்கான நீதிமன்றமும் தற்காலிகமாகப் பணியாற்ற ஒழுங்குகள் செய்யப்பட்டன. குடிநீர் மிக முக்கிய பிரச்சினையாக இருந்தமையினால் குருநகர் மக்களாலும் தனிப்பட்ட ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன. கடற்பரப்பில் இந்திய எல்லையோரத்தில் இந்திய கடற்படையினரும், இலங்கை எல்லைப் பகுதியில் இலங்கைக் கடற்படையினரும் காவல் பணிகளிலும் சோதனைப் பணிகளிலும் ஈடுபட்டிருந்தனர்.

இலங்கையைச் சேர்ந்தவர்கள் மட்டுமன்றி தமிழகத்தைச் சேர்ந்த யாத்திரிகர்களும் இக்காலப் பகுதிகளில் இங்கு வருகை தருவது வழக்கம். இவர்கள் சமய நோக்கங்களுக்காக மட்டுமன்றி இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களாகவுள்ள தங்களது உறவினர்களைச் சந்தித்து மகிழ்ச்சி கொள்ளும்; நோக்கத்திற்காகவும் இங்கு வருகை தந்தனர். விழாக் காலங்களில் இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சமூகமும் பெருமளவில் இத் தீவிற்கு வந்து செல்வதுண்டு.

மேலும் இங்கு சிறிய அளவில் வர்த்தகப் பண்டமாற்று வியாபாரமும் நடைபெறுவதுண்டு. இலங்கையில் இருந்து மட்டு;ப்படுத்தப்பட்ட அளவில் தேங்காய், தேங்காய் எண்ணெய், சோப், வாசனைப் பொருட்கள் கொண்டு செல்ல மக்கள் அனுமதிக்கப்பட்டனர். தமிழகத்திலிருந்து சங்குப் பொருட்கள், வளையல்கள், அப்பிள், ஆடைகள் என்பன கொண்டுவரப்பட்டன இவை பண்டமாற்று அடிப்படையில் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இவ்வாறாக இத்தீவானது கடல்வள பொருளாதாரத்துடன் மட்டும் நில்லாது சமய மற்றும் வர்த்தகத் தளமாகவும் இரு நாட்டு மக்களாலும் பயன்படுத்தப்பட்டு வந்தது. வருடந்தோறும் தங்குதடையின்றி நடைபெற்ற மேற்குறித்த நடவடிக்கைகள் 1983 ஐத் தொடர்ந்து வடக்குக் கிழக்குப் பகுதியில் நிலவிய அரசியல் நெருக்கடிகளினால் முற்றாகத் தடைப்பட்டன. பத்து வருடங்களுக்கும் மேலாக கைவிடப்பட்டுள்ள இத்தீவில் மீண்டும் வழிபாடுகளை மேற்கொள்ள வடபகுதி மக்களும், தமிழக மக்களும் காத்திருக்கின்றனர்.

அத்தியாயம் 2

கச்சதீவு உரிமைப் பிரச்சினையும் வரலாற்றுப் பின்னணியும்

கச்சதீவு தொடர்பான 1921 ஆம் ஆண்டு கொழும்பு மகாநாடு:

கச்சதீவை உரிமை கோருவது தொடர்பான இலங்கை இந்திய நாடுகளுக்கு இடையிலான பிரச்சினை 1921 இலேயே முதன் முதலில் ஆரம்பமாகியது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பாக்குநீரிணைக்கும், மன்னார் குடாவுக்கும் இடையில் ஒர் எல்லையை வகுப்பதற்கான மகாநாடு ஒன்று கொழும்பில் இந்தியா மற்றும் இலங்கை குடியேற்ற நாட்டு அரசுகளிடையே 1921 ஒக்ரோபரில் நடைபெற்றது. இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் முரணான கோரிக்கைகளை முன்வைத்தனர். இலங்கை தூதுக் குழுவின் தலைவர் ஹோர்ஸ்பேர்க் (ர்ழசளடிரசபா) அப்போதைய வடமாகாண அரச அதிபர் “எல்லை நிர்ணயமானது நடுக்கோட்டைப் பின்பற்றி அமைதல் வேண்டும். கச்சதீவுக்கு மேற்கே 3 மைல் அவ் எல்லைக்கோடு அமைதல் வேண்டும்” எனக் கோரினார். இதற்கு இந்தியத் தரப்பு மறுத்து விட்டது. கச்சதீவு இராமநாதபுரம் ராஜாவின் கீழ் உள்ளது. என்றும் அவர் தமது விருப்பப்படியே குத்தகைக்கு கொடுத்து வருகின்றார் எனவும் காட்டப்பட்டது. இது கச்சதீவு உரிமை தொடர்பான பிரச்சினைகள் உள்ளன என்பதை வெளிக் கொணர்ந்தது. இதனால் இப்பிரச்சினைக்கு அழுத்தம் கொடுக்கப்படவில்லை. எனினும் கச்சதீவு உரிமை தொடர்பான பிரச்சினையைத் தவிர்த்துவிட்டு மீன்பிடி உரிமைகள் நிர்ணயிக்கப்பட்டன. ஆகவே முன்னர் கூறியபடி 3 மைல் மேற்கு எல்லை நிர்ணயிக்கப்பட்டது. இதனால் மீன் பிடிக்கும் உரிமையை இந்தியா இழந்தது. அதற்கு ஈடாக முக்கிய சங்குத்திட்டுப் பகுதிகள் இந்தியாவின் எல்லைக்குள் வீழ்ந்தன. ஆனால் பிரித்தானியா அரசு இந்த ஒப்பந்தத்தை உறுதிப்படுத்த மறுத்துவிட்டது. அதாவது இவ்வுடன்படிக்கை இந்திய இராஜாங்கச் செயலாளரின் அங்கீகாரம் பெறாமல் இருந்தது. (பின்னிணைப்பு து) இதன் காரணமாக 1921 ஆம் ஆண்டு ஒப்பந்தம் நிலையானதாகவும். உறுதிவாய்ந்ததாகவும் அமையவில்லை. இலங்கையும் இந்தியாவும் சுதந்திரமடைந்து 1974 ஆம் ஆண்டில் இன்னொரு உடன்படிக்கை செய்து கொள்ளும்வரை கச்சதீவு தொடர்பான விவகாரம் தொடர்ந்தது.

சுதந்திரத்தின் பின்னர் - கச்சதீவு

இரண்டாவது உலக மகா யுத்தத்தின்போது இலங்கையரசால் கச்சதீவு பகுதியானது குண்டு வீச்சுப் பயிற்சிக்காகப் பயன்படுத்தப்பட்டது. 1949இல் இந்தியாவானது கடற்படைப்பயிற்சியின்போது இலக்கைத் தாக்கும் துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சியை இத்தீவில் மேற்கொள்ளப் போவதாக அறிவித்தது. பதில் கடிதத்தில் “கச்சதீவானது இலங்கைக்குரிய பகுதியென்றும் பயிற்சியை மேற்கொள்வதற்கு இந்தியா முன்கூட்டியே இலங்கையிடம் அனுமதி பெறவேண்டுமெனவும்” இலங்கை வற்புறுத்தியது. 1955, 1956ம் ஆண்டுகளில் இத்தீவை விமானக் குண்டு வீச்சுப் பயிற்சிக்கும், துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சிக்கும் பயன்படுத்தப் போவதாக இலங்கை அறிவித்தது. திருகோணமலையில் கடற்படைத்தளத்தையும், ரத்மலானையில் விமானப் படைத்தளத்தையும் பிரித்தானியர் தொடர்ந்தும் வைத்திருந்தமையும் இவ்வாறான பயிற்சி மேற்கொள்வதற்கு காரணங்களாக அமைந்தன. இலங்கையின் இத்தகைய அறிவிப்பிற்கு இந்திய பிரமுகர்களும், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கினர். “கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கச்சதீவில் இலங்கை நுழைத்து பிடிக்கப் பார்க்கிறது” என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டினர். 1956 இல் இப்பிரச்சினை இந்திய பாராளுமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டது. அநாவசியமான ஒரு கெடுபிடியை நாட்டில் உண்டாக்கக்கூடாது என்ற எண்ணத்தில், இப்பிரச்சினை தொடர்பாக மத்திய அரசிற்கு போதிய தகவல்கள் கிடைக்கவில்லை என்ற நிலைப்பாட்டை இந்தியா எடுத்து “உரிமை தொடர்பான பிரச்சினைக்கு முடிவு கிட்டும் வரை” குண்டுவீச்சு மற்றும் துப்பாக்கிச் சூட்டு பயிற்சிகளை பின்போடும் படி இராஜதந்திர மட்டத்தில் ஆட்சேபம் தெரிவித்தது. குண்டு வீச்சு பயிற்சி தொடர்பாக இலங்கை தீர்க்கமான முடிவு எதையும் எடுக்கவில்லை என அறிவித்ததுடன் கச்சதீவு மீதான தனது இறைமையை வலியுறுத்தியது. (ளு. ரு. முழனமையசய 1965) இக் காலப் பகுதியில் பண்டாரநாயக்கா பதவிக்கு வந்தவுடன் பிரித்தானிய படைத் தளங்கள் யாவும் வாபஸ் பெறப்பட்டன. போர்ப் பயிற்சிக்கான முயற்சிகள் பின்னர் கைவிடப்பட்டன. தொடர்ந்தும் கோரிக்கைகளும், எதிர்க் கோரிக்கைகளும் பேச்சு வார்த்தைக்கு இட்டுச் சென்றனவாயினும் முடிவான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.

பின்னர் சிறிது கால இடைவெளியில் இத்தீவு தொடர்பான பிரச்சினைகள் சற்றுத் திணித்திருந்த போதிலும் 1968 இல் இலங்கைப் பத்திரிகை ஒன்றில் வெளிவந்த செய்தி ஒன்று அதாவது “இலங்கை அரசு கச்சதீவை சுவீகரித்தது” என்ற செய்தியானது இந்தியப் பாராளுமன்றத்தில் மீண்டும் பெரும் எதிர்ப்புக் கோசங்கள் எழக் காரணமாகியது. இலங்கை தன்னிச்சையாக கச்சதீவைப் பிடித்தமை, இந்தியாவின் இறைமைக்குச் சவாலாக அமைவதாகவும் கச்சதீவு இந்தியாவுக்கே சொந்தம் எனவும் குரல் எழுப்பினர். இச்செய்தி தவறானது என பின்னர் உணரப்பட்டது. ஆயினும் இத்தீவு மிதான சட்டபூர்வமான உரிமை குறித்து இரு தரப்பினருக்குமிடையில் பிரச்சினை முற்றியது. அது முதல் இரு அரசுகளும் தத்தமது உரிமை தொடர்பாக பாரிய முயற்சிகள் எடுத்து மதிப்பீடு செய்ததுடன் தீர்வை எட்டும் வகையில் சாட்சிகளையும் சேகரித்தன. இவ் விடயத்தில் இந்திய இலங்கை அரசுகள் தணிந்துபோய் ஒரு ஏற்புடைய தீர்வை நோக்கி கதவுகளைத் திறந்து விட்டிருந்தமை முக்கியமான சிறப்பம்சமாகும்.

1956 மார்ச்சில் இந்திய பாராளுமன்றத்தில் கச்சதீவு தொடர்பான பிரச்சினை எழுந்தபோது இந்தியப் பிரதமராக இருந்த பண்டிதர் ஜவகர்லால் நேரு இப்பிரச்சினை குறித்து போதிய தகவல்கள் தம் வசம் இல்லை என்றும் இது தொடர்பாக சென்னை அரசிடம் விபரம் கோரி இருப்பதாகவும் கூறினார். இந்த சின்னஞ்சிறிய தீவு குறித்து இரு அரசுகளும் தமக்கிடையில் மோதிக் கொள்ளப் போவதில்லை என்றும் குறிப்பாக எமது அண்டை நாடான இலங்கையுடன் இது குறித்து தேசிய கௌரவம் பிரச்சினை எதுவும் சம்பந்தப்படவில்லை எனவும் தெரிவித்தார். அதே ஆண்டில் கச்சதீவு தொடர்பான ஆவணங்கள் சென்னை அரசின் மூலம்பெறப்பட்டு பரிசீலனையில் இருப்பதாகவும் தெரிவித்தார். 1960 இல் ராஜ்ய சபையில் பிரதி வெளியுறவு அமைச்சர் திருமதி. லட்சமிமேனன் “எமது உரிமை தொடர்பாக இலங்கை அரசுடன் பேசுவது எம்மால் கவனிக்கப்படுகின்றது” எனவும் 1968 இல் திருமதி. இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது “கச்சதீவு உரிமை தொடர்பாக சென்னை அரசுடன் மீண்டும் தொடர்பு கொண்டிருப்பதுடன் கச்சதீவு மீதான இராமநாதபுர அரசனின் (சுயதய ழக சுயஅயென) உரிமை தொடர்பான ஆவணங்களைப் பெறுவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது” என்றும் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். (ளுரசலய P. ளூயசஅய. 1971)

அதேபோல் இலங்கை அரசும் எதிர்க்கட்சியினரும், பொது மக்களும், இவ்விடயம் குறித்து மிகவும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டனர். இலங்கையின் அப்போதைய பிரதமர் திரு. டட்லிசெனநாயக்கா கச்சதீவு மீதான இலங்கையின் இறைமையை வலியுறுத்தியதுடன் இவ்விடயம் தொடர்பாக இலங்கை - இந்தியாவுக்கிடையிலான வேறுபாடுகள் பேச்சுவார்த்தை மூலம் சமாதானமாகத் தீர்க்கப்படும் என்றார். இரு தரப்பினரும் அபிப்பிராய பேதங்களை தணியவைக்க முயற்சித்தமை பேச்சுவார்த்தைக்கு வழிகோலியது. இலங்கைப் பிரதமர் 1968 டிசம்பரில் இந்தியாவுக்குஅரசுமுறை பயணம் மேற்கொண்டபோது இப்பிரச்சினை குறித்து இந்தியப் பிரதமராகவிருந்த திருமதி இந்திராகாந்தியுடன் பேசினார். பேச்சுவார்த்தையின் முடிவில் இருவரும் கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். கூட்டறிக்கை வருமாறு:

“இருதரப்பினருக்கும் அக்கறையுள்ள பாக்குவிரிகுடா, மன்னார்க்குடா, கடற்பிராந்தியம், பொது எல்லைகள், மீன்பிடியுரிமை, கச்சதீவு மீதான இறைமை ஆகிய விடயங்கள் குறித்து பிரதமர்கள் இருவரும் கருத்துப் பரிமாறிக் கொண்;டார்கள். இருநாடுகளுக்கும் இடையிலான பயன்மிக்க கூட்டுமுயற்சியின் சாத்தியக்கூறுகள் பற்றி இருவரும் சாதாரணமாக ஆராய்ந்ததுடன் இவைதொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடரும் என்பதில் இணங்கிக் கொண்டனர்” (ளுரசலய. P. ளூயசஅய. 1971)

1969 ஜனவரியில் லண்டனில் நடந்த பொதுநலவாயநாடுகளின் பிரதமர்கள் மகாநாட்டில் இலங்கை இந்தியப் பிரதமர்கள் இந்தப் பிரச்சினையை அப்போதைக்கு விட்டுவிடுவதாக ஒப்புக் கொண்டனர். 1969 மார்ச்சில் இருநாடுகளும் இப்போதுள்ள நிலையில் கச்சதீவு விடயத்தில் எந்தமாற்றமும் கொண்டுவருவதில்லை எனவும் ஒப்புக் கொள்ளப்பட்டது. அதோடு கச்சதீவில்; நடக்கும் அந்தோனியார் விழாவில் சாதாரண உடையணிந்த காவல்த்துறையினரே காவலில் இருப்பார்கள் எனவும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

1970 இல் இலங்கையின் அரசியலில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் கச்சதீவு விடயத்தில் புதிய அணுகுமுறை ஒன்றை மேற் கொள்வதற்கு வழிகோலியது.

அத்தியாயம் 3

கச்சதீவு உரிமை தொடர்பான கோரிக்கைகளும் - எதிர்க் கோரிக்கைகளும்

கச்சதீவினை தமதாக்கிக் கொள்வதற்கு இரு நாடுகளும் வரலாற்று ரீதியான ஆதாரங்களைத் திரட்டி அவற்றின் அடிப்படையில் தமது கோரிக்கைகளை முன்வைத்து வாதிட்டன.

இந்தியா முன்வைத்த ஆதாரங்கள்:

இந்தியா பலமுள்ள வரலாற்றுக் காரணங்களின் அடிப்படையில், மற்றும் தரவுகளின் அடிப்படையில், கச்சதீவு மீதான படையில் இந்தியா நீண்ட காலமாக கச்சதீவு மீது அதிகாரத்தைக் கொண்டிருந்ததோடு நிர்வகித்தும் வந்ததாகக் கூறிக் கொண்டது.

இந்தியாவின் காத்திரமான வரலாற்றுச் சான்றுகள் இராமநாதபுரம் ராஜாவின் (சுயதயா ழக சுயஅயென) ஆவணங்களில் காணப்படுகின்றன. அதாவது சென்னை அரசின் கீழ் உள்ள மதுரை மாநிலத்தின் ஜமீந்தாராக இருந்தவர் ராஜா, 1947ம் ஆண்டு வரை கச்சதீவானது இவரது அதிகார எல்லைக்குட்பட்டிருந்தது. இவ்வாண்டின் ஜமிந்தார் ஒழிப்புச் சட்டம் (ணுயஅiனெயசi யுடிழடவைழைn யுஉவ) அமுல்படுத்தப்பட்டதும் கன்னியாகுமரியைச் சார்ந்த பத்துதீவுகள் (கச்சதீவு உள்ளிட்ட) இவரின் அதிகாரத்திலிருந்து எடுக்கப்பட்டு சென்னை அரசிற்கு உட்படுத்தப்பட்டது. கன்னியா குமரித் தீவுகளில் இவரது ஆதிக்கம் படிந்திருந்தமையால் ராஜாவைச் “சேதுபதி” (ளுநவரியவi) என்றும் “முனையின் பிரபு” (டுசழன ழக வாந ஊயிந) என்றும் அழைத்தனர்.

1822 முதல் ராஜா இத்தீவை முத்துக்குளிப்பவர் இறங்குதுறையாக பயன்படுத்தினார். கிழக்கிந்தியக் கொம்பனி இவ்வுரிமையை அவரிடமிருந்து பறித்துக்கொண்டது. ஆயினும் “ஈஸ்தி மீரர் சனாட்” (ஐளவாiஅசைநச ளுயயென) என்ற உடன்படிக்கையின்படி கச்சதீவு ராஜாவின் இறைமைக்கு உட்பட்ட பிரதேசமாக பிரித்தானிய அரசு அங்கீகரித்தது. இறமை உள்ளவர் என்ற வகையில் ராஜாவே பல நிர்வாகப் பணிகளை நிறைவேற்றி வந்தார்.

மீன்பிடித்தல், சங்கு குளிப்பு, முத்துக்குளிப்பு என்பவற்றுடன் மேய்ச்சல் தரையாகவும், கச்சதீவைப் பயன்படுத்தியவர்களிடமிருந்து ராஜா வரி வசூலித்துள்ளார். மிகப் பழைய காலம் தொட்டே இவ்வரிகள் வசூலிக்கப்பட்டன. சில சமயங்களில் குறிப்பிட்ட காலப்பகுதிக்கு இப்பிராந்தியத்தை அவர் குத்தகைக்கு விடும் உரிமை அவரது இறiமையை மேலும் உறுதிப்படுத்தியது.

கச்சதீவு உள்ளிட்ட 8 தீவுகளிலும் 62 கரையோரக் கிராமங்களிலும் மீன்பிடிப்பதற்கு முத்துசாமிப்பிள்ளையும், முகமட் அப்துல் காதிர் மரைக்காரும் ராமநாதபுர ராஜாவுடன் ஒரு குத்தகை ஒப்பந்தம் செய்துகொண்டனர். மதுரை விசேட பிரதிக் கலக்டர் முன்னிலையிலும் இந்த குத்தகைக்கான ஆவணம் பதிவாகியுள்ளது. அவரது பெயர் டிவாட்ரேணர் (னுநறயசன வுரசநெச) குத்தகை அனுமதி 1880 ஜுலை 21 முதல் செயற்பட்டது. ஒருவருடத்துக்கு 175 ரூபாவை பெற்றுக் கொண்டார்.

குத்தகை காலாவதியாகியதும் இன்னொரு குத்தகை 1895 இல் முத்துசாமிப்பிள்ளைக்கு எழுதப்பட்டது. வருடத்திற்கு 212 ரூபா வீதம் 1291 - 1299 ரூபா வரை இந்த உறுதி எழுதப்பட்டது. இவ் ஒப்பந்தம் ராஜாவுக்குப் பதில் ராமநாதபுர மேலாளர் டி. ராஜராமராயர் ஒப்பமிட்டுள்ளார்.

1913ல் ராமநாதபுரம் ராஜாவுக்கும் இந்திய ராஜாங்கச் செயலாளருக்கும் இடையில் 15 வருட கால தவணை ஒப்பந்தம் எழுதப்பட்டது. முற்பணமாக ரூபா. 60,000 ராஜாவுக்கு கட்டப்பட்டது. கச்சதீவுப் பகுதியில் சங்குசேகரித்தல், ஏற்றிச் செல்லல், தங்குதடையின்றி தேடுதலுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. பாக்குவிரிகுடா, மன்னார்க்குடா, தென்பகுதி கரையோரத் தீவுகளில் உள்ள சங்குப் படுக்கைகள் பகுதிகளில் உரிமை வழங்கப்பட்டது.

இந்தக்குத்தகை உறுதிகளில் ராஜா இலங்கை அரசின் ஜமீந்தாராக கடமையாற்றி கைச்சாத்திட்டாரா என்பதும் முக்கிய கேள்வியாக இருந்தது. ராஜா இலங்கை அரசின் ஜமீந்தார் என்பதை ஏற்றுக் கொள்ளுதல் இயலாது. இந்த குத்தகை ஒப்பந்தங்கள் எழுதப்பட்ட காலங்களில் இராமநாதபுர ராஜா இலங்கை அரசிற்கு வரி செலுத்தினார் என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை எனவும், அதேவேளை அவர் ஜமீந்தார் என்ற வகையில் சென்னை அரசிற்கு வரி செலுத்தினார் என்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம். இதன்படி இராமநாதபுரம் ராஜாவின் ஜமீந்தாரியில் ஒரு பகுதியான கச்சதீவு சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாகும் எனக் கூறப்பட்டது.

ராமநாதபுரம் ராஜாவின் இறைமைக்கு ஆதாரமாக மேலும் ஆவணங்கள் காட்டப்பட்டன. அந்தவகையில் விக்டோறியாராணி காலத்தின் பிரகடனம் ஒன்றைக் காட்டலாம். இந்தப் பிரகடனத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எல்லை வரையறை செய்யப்பட்ட போது கச்சதீவு இலங்கையின் பிரதேசத்திலிருந்து தவிர்க்கப்பட்டுள்ளது. காரணம் பிரகடனத்தில் கச்சதீவு இராமநாதபுரம் ராஜாவின் ஆளுமைக்குட்பட்ட பிரதேசத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாலாகும். இதனை இலங்கை அமைச்சரவையின் முன்னாள் செயலாளர் பி.பி. பீரிஸ் என்பாரும் உறுதி செய்துள்ளார். அவர் பின்வருமாறு கூறுகின்றார்.

“நான் உதவிச் சட்டவரைஞராக கடமையாற்றிய காலத்தில் இப்பிரச்சினை குறுக்கிட்டதாக ஞாபகம், வடக்கு மாவட்டத்தில் சில எல்லைகள் தொடர்பான விளக்கத்தைத் தேடும் ஒரு கோவையை நான் பார்க்க வேண்டியதாயிற்று. முன்வரைவு பிரகடனத்தை நான் மறுபார்வை செய்தபோது பல வருடங்களுக்கு மேலான எல்லைகளின் வரலாற்றைத் தேடவேண்டி ஏற்பட்டது. விக்டோறியா மகாராணி காலத்தைய பிரகடனம் என ஞாபகம், அப்பிரகடனத்தில் வடக்கு மாவட்டத்தில் இருந்து கச்சதீவு விலக்கப்பட்டிருந்தது. அது ராமநாதபுர ராஜாவுக்குச் சதீவு விலக்கப்பட்டிருந்தது. அது ராமநாதபுர ராஜாவுக்குச் சொந்தமாக இருந்தது இதற்கான காணரமாக இருக்கலாம்”
(ளுரசலய P. ளூயசஅய. 1971)

இந்தியா 1921 ஆம் ஆண்டின் பின்னரும் கச்சதீவின் மீதான தனது இறைமையை சமாதானமான சூழ்நிலையில் அமுல்படுத்தியது. ராமநாதபுர ராஜாவும். கச்சதீவு உரிமையாளருமான காலஞ்சென்ற சண்முகா ராஜேஸ்வரா சேதுபதி 1947 இல் வி. பானுசாமிபிள்ளைக்கும், ஜனாப் கே. எஸ். முகமட் மிஸ்ரா மரக்காயருக்கும் சங்குசேகரிக்கும் தொழிலுக்காக குத்தகைக்கு கொடுத்தார். குத்தகை 1356 - 1358 ரூபாவுக்கும் இடைப்பட்ட தொகையைக் கொண்டதாகும். இதன்படி 1947 வரை ஜமீந்தார் ஒழிப்புச் சட்டத்துக்கு அடுத்துவரும் ஆண்டுவரை சென்னை அரசின் ஒரு பகுதியாக கச்சதீவு கருதப்பட்டது. ராஜாவே அரசாங்க கடமைகளை ஆற்றி வந்தார்.

மேற்சொன்ன உதாரணங்கள் 1921க்கு முன்பிருந்த சட்ட பூர்வமான நிலைப்பாட்டையும். அதன் தொடர்ச்சியையும் உறுதி செய்கின்றன. அதாவது பிரச்சினைக்குரிய தீவு மீது ராமநாதபுர ராஜாவுக்குள்ள தொடர்ச்சியான உரிமையைக் குறிக்கின்றது.

இலங்கை முன்வைத்த சான்றுகள்

1. இலங்கை, 1554 முதல் கச்சதீவு யாழ்ப்பாண தீபகற்பத்தின் ஒரு பகுதி என்பதை வலியுறுத்த புவியியல் வரைபடங்களைக் காட்டி அதன்மீது அழுத்தம் கொடுத்தது போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தை நிர்வகித்ததாகவும் கச்சதீவு அதனுள் அடங்கிய பகுதி என்றும் கோரப்படுகின்றது. ஆர். எல். புரோகிர் (சு. டு. டீசழாசை) என்பவர் வரைந்த புவியியல் தேசப்படம். மற்றும்சில அளவைப்படம் ஒன்றை மேற்கோள் காட்டி இலங்கைக் கல்விமான் ஒருவர் பத்திரிகைக்கு எழுதிய ஆசிரியர் கடிதத்தில் ஆங்கிலப்படம் இல 52, திகதி 1800 - 1802 இன்படி கச்சதீவு நிர்வாகம் யாழ்ப்பாண பட்டின தளகர்த்தரின் ஆளுகைக்கு உட்பட்டது என்கிறார். இந்தப்படம் எம். யூகு. சேகம் (ஆ. ருநமரளநமயஅ.) என்பவரால் 28-9-1719 திகதியிட்ட இல 328 ஐக்கொண்ட டச்சுப்படத்தையும் மற்றும் 17-7-1753 திகதியிட்ட இல. 329 ஐக் கொண்டதுமான பல்த்சார் வான் லீயர் (டீயடவாயணயச ஏயn டுநைச) என்பாரின் படத்தை பிரதி பண்ணியதாகப் பெரும்பாலும் அமைகின்றது.
2. மற்றமொரு இலங்கை அறிஞரான விமலானந்த மேலும் இக்கருத்தை வலியுறுத்துகின்றார். 1796 - 1797 காலப் பகுதியில் யாழ்ப்பாணத்தையும் (துயககயெ Pயவயஅ) தீவுகளையும் ஆங்கிலேயர் டச்சுக்காரரிடமிருந்து கைப்பற்றினார்கள் என்கிறார். பின்பு சில காலங்களுக்குப் பின்னர் மாவட்டங்கள் அனைத்தும் சென்னையிலிருந்த ஆங்கில அரசினால் ஆயப்பட்டது. தேசாதிபதி பிரட்றிக் நோர்த்தின் நேரடி ஆதிக்கத்தின் கீழ் இலங்கை வந்தபோது சென்னை அரசு இத்தீவுகளின் மீது உரிமை பாராட்டவில்லை என்று கூறுகிறார்.

“நியாய ஆதிக்கத்துக்கான உண்மையான ஆதாரங்கள் இல்லாமல், அதுவும் எதிர்தரப்பு வலுவான நியாயங்களை முன்வைத்த பிறகு தேசப்படத்தை ஆதாரங்காட்டிப் பேசுவதை முடிவாக எடுக்க முடியாது” எனவும் இந்தியத்தரப்பினரால் நிராகரிக்கப்பட்டது. இலங்கையையப் பொறுத்தவரையில் மேலே காட்டப்பட்ட ஆதாரங்கள் அனைத்தும் வெறும் அனுமானங்களே என்றும், இரண்டாந்தர மூலகங்களிலிருந்து பெறப்படும். தேசப்படங்களுக்கும், நில அளவீட்டுப் படங்களுக்கும் நீதிமன்றமானது தீர்மானம் எடுப்பதற்கான பெறுமானம் இருப்பதாக கருதுவதில்லை எனவும்இந்தியத்தரப்பில் கூறப்பட்டது. அத்துடன் படங்கள், தேசப்படங்கள், நில அளவைப் படங்களின் அடிப்படையில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதற்கு முன்னர் அந்தப் படங்கள் சரியானவையா? நியாயமானவையா? என்பதை முடிவுகட்டும் நியாய ஆதிக்கச் செயற்பாடுகள் அற்ற நிலையில் படங்களை மாத்திரம் வைத்துக்கொண்டு நீதிமன்றம் தீர்ப்பை எட்டுவதில்லை எனவும் இந்திய தரப்பில் கூறப்பட்டது.

விமலானந்தாவின்; விவாகம் அறிவாற்றலுடைய நியாயம் என்றாலும் இரண்டாந்தர மூலகங்களிலிருந்து காட்டப்படுவதால் அதனை முடிவான முடிவென்று ஏற்கமுடியாது. ஆகவே தேசப்படங்களைக் கொண்டு இலங்கை நியாயப்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. தேசப்படங்களை வைத்துக் கொண்டு அனுமானிப்பது முதற்படியில் சரியென்று பட்டாலும் அது வெறும் எடுகோளாகும். நீண்ட காலமாக இராமநாதபுர ராஜா தனது அதிகாரத்தை கச்சதீவு மீது தொடர்ந்து செயற்படுத்தி வந்தமையும் 1947இல் ஜமீந்தார் ஒழிப்புச் சட்டத்தின் பிரகாரம் சென்னை அரசு ஜமீந்தாரின் பொறுப்பிலிருந்து மதுரை மாநிலத்தை பொறுப்பேற்றது தொடர்பான உறுதியில் இலங்கை எவ்வித எதிர்ப்பும் இன்றி ஒப்பமிட்டது. இது இலங்கையின் கோரிக்கைகளை வலுவிழக்கச் செய்தது.

இலங்கைக்கு கச்சதீவு உரிமை தொடர்பாக விபரிப்பதற்கு வேறு நல்ல தளம் ஒன்றும் உள்ளது. அதாவது பாக்கு நீரிணைக்கும் மன்னார் குடாக் கடலுக்கும் இடையில் இருநாடுகளுக்குமிடையிலான கடல் எல்லையைத் தீர்மானிக்க 1921இல் இரு தரப்பு அரச அதிகாரிகளும் ஒப்பமிட்ட உடன்படிக்கையில் கச்சதீவு இலங்கைக்குரியதாக காட்டப்பட்டுள்ளது என்பதாகும். இதனை இந்தியா அப்;படியே ஏற்றுக் கொள்கிறது என்று கூறுவது உண்மைக்குப் புறம்பானது எனவும், உண்மையில் இந்த ஒப்பந்தம் செயற்படுத்தப்படவில்லை எனவும் கச்சதீவு இலங்கைக்குச் சொந்தமானது என்ற நிலைப்பாட்டை இந்தியாவுக்கான ராஜாங்கச் செயலாளர் ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் கூறியது. சென்னை அரசைவிட ராஜாங்கச் செயலாளரின் அதிகாரம் மேலானது எனவும் 1921 முதல் கச்சதீவு இலங்கை வசம் இருந்ததென்றால் புனித அந்தோனியார் திருவிழாவுக்குச் செல்வோர் ஏன் அனுமதி பெற்றுச் செல்ல வேண்டும் ஒரு நாட்டின் அதே பகுதிக்குள் போவதற்கு அனுமதி எதற்கு? என்றவாறு எதிர்வாதம் புரிந்து இந்தியா இலங்கை கோரிக்கைகளை வலுக்குன்றச் செய்தது.

இலங்கை இன்னொரு நியாயத்தையும் எடுத்துக் காட்டியது கச்சதீவிலுள்ள புனித அந்தோனியார் ஆலயம் யாழ் - ஆயரின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதாகும். யாழ்ப்பாணத்திலுள்ள கத்தோலிக்க திருச்சபை ஆயரிடம் உள்ள ஆவணங்களின்படி சிலகாலம் கோயில் யாழ் மறை மாவட்டத்தின் ஆன்மீக ஆதிக்கத்தின்கீழ் இருந்தது. தனக்குள்ள இறைமையை நிரூபிப்பதற்கு இதனை ஒரு பொருட்டாக எப்பொழுதும் ஏற்றுக் கொள்ளவில்லை. கம்போடியா - தாய்லாந்து ஆகிய நாடுகளிடையே ஏற்பட்ட ‘பிரியாவிகார்’ கோயில் தகராற்றில் இருதரப்பினரும் முன்வைத்த ஆன்மீக நியாயாதிக்க கோரிக்கையை சர்வதேச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை உதாரணமாகக் காட்டி இந்தியா இக்கோரிக்கையையும் வலுவிழக்கச் செய்தது எனவும் கூறியது.

பின்னர் மேலதிகமான ஒரு காரணத்திற்காகவும் கச்சதீவு மீது இலங்கை உரிமை பாராட்டியது. மார்ச் - ஏப்பிரலில் புனித அந்தோனியார் உற்சவம் நடக்கும்போது சட்டவிரோதக் குடியேற்றம் நடப்பதைத் தடுக்கவும். கள்ளக்கடத்தலை நிறுத்தவும் இலங்கை தன் நாட்டு அதிகாரிகளை அனுப்பியது. இது ஒரு நிர்வாக நடவடிக்கையே தவிர இந்தியாவின் உரிமைக்குப் பங்கம் விளைவிக்காமல் இது நடைபெற்றது எனவும் இந்தியாவும் நல்லெண்ணத்துடன் இதனை அங்கீகரித்தது.

மேற்சொன்ன வகையில் இருநாடுகளும் எதிரும்புதிருமாக தமது கோரிக்கைகளை முன்வைத்து தமது இறமையை நிரூபிக்க வாதாடியபோதிலும் தீர்க்கமான முடிவை இருதரப்பினராலும் எட்டமுடியவில்லை. இந்நிலையில் 1970 இல் இலங்கையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி வெற்றி யீட்டி ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா பிரதமரானார். 1973இல் திருமதி இந்திரா காந்தியுடன் கச்சதீவு மற்றும் இந்தியவம்சாவளியினர் தொடர்பான விடயங்கள், தொடர்பான கருத்துக்கள் தொடர்ந்தும் பரிமாற்றப்பட்டன. 1973 ஏப்பிரலில் இந்திரகாந்தி அவர்களும், அதே யாண்டு ஒக்டோபரில் இந்திய உயர்மட்ட அதிகாரிகள் குழுவும் இலங்கைக்கு விஜயம் செய்து இவ் விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்தனர்.

1974 ஜனவரியில் ஸ்ரீமாவோ பண்டார நாயக்கா இந்தியாவுக்கு உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்ட போது பாக்குநீரிணை எல்லை தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதன் மூலம் 1971 முதல் 1974 வரை கிட்டத்தட்ட 50 வருடங்கள் போக இருநாடுகளுக்கும் இருந்துவந்த கச்சதீவு விவகாரம் தணிந்துபோயிற்று. எனினும் “இப்பேச்சு வார்த்தைகள் மிக அந்தரங்கமாகவே நடைபெற்றன. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ரண ஒப் கச் (“சுயnn ழக முயவஉh”) பிரதேசம் சம்பந்தமாக ஏற்பட்ட உடன் பாடும், பின்னர் கச்சதீவு பிரச்சினையும் இந்தியாவில் பெரும் கிளர்ச்சியை எற்படுத்தியிருந்தது” (ஈழநாடு - 1974)

அத்தியாயம் (4)

1974 ஆம் ஆண்டு உடன்படிக்கை

இலங்கை - இந்தியாவுக்கு இடையில் 1974ஆம் ஆண்டு யூன் மாதம் 26ஆந் திகதி செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் பாரம்பரிய நீர்ப்பரப்;பு பகுதிகளில் ஒன்றான ஆதாம் பாலத்திலிருந்து பாக்கு நீரிணை வரையிலுமான பகுதிக்கு கடல் எல்லை நிர்ணயிக்கப்பட்டது. அகலாங்கு நெட்டாங்கு அடிப்படையில் வகுக்கப்பட்ட கடல் எல்லைக்கோடானது நீண்டகாலமாக இவ்விரு நாடுகளுக்குமிடையில் கச்சதீவு தொடர்பாக இருந்து வந்த தகராற்றிற்கு ஒரு முற்றுப் புள்ளிவைக்க உதவியது. இதனால் இவ்வுடன்படிக்கை முக்கியம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகின்றது. இவ்வுடன்படிக்கையில் உள்ள 5வது, 6வது சரத்துகள் கச்சதீவு இலங்கைக்குரியதாக இருந்தபோதிலும் இந்தியமீனவர்கள் பாரம்பரியமாக அனுபவித்து வந்த உரிமைகளை அனுபவிக்க வழிசெய்கின்றது. அச்சரத்துகள் பின்வருமாறு. (பின்னிணைப்பு - (ஐஐ) )

சரத்து - 5

“மேற்குறிப்பிட்டவற்றுக்குட்பட்டு இந்தியமீனவர்களும் யாத்திரிகர்களும் இதுவரை அனுபவித்தது போல கச்சதீவுக்குச் செல்லும் உரிமையைப் பெறுவர். தொடர்ந்தும் அவ்வுரிமையை அனுபவிப்பர். இந்த நோக்கங்களுக்காக பிரயாண ஆவணங்களோ விசாக்களோ இலங்கையிலிருந்து பெறவேண்டுமென தேவைப்படுத்தமுடியாது. இதற்கு அவசியமும் இல்லை. இலங்கை இதற்கு நிபந்தனை விதிக்கவும் முடியாது”

சரத்து - 6

“இலங்கையினதும் இந்தியாவினதும் படகுகள் மற்றவரின் நீர்ப்பரப்பினதும் ஒவ்வொருவரினதும் நீர்ப்பரப்பினுள்ளும் பாரம் பரியமாக அனுபவித்து வந்த உரிமைகளைத் தொடர்ந்தும் அனுபவிப்பர்”

1974ம் ஆண்டு உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டபோது கச்சதீவானது இலங்கையின் எல்லைப்பகுதியினுள் வந்தமையினால் இலங்கைத்தரப்பில் மகிழ்ச்சியையும் வரவேற்பையும்பெற்றது. அதேவேளை தமிழ்நாட்டிலும், அகில இந்திய ரீதியிலும் கண்டனங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடாத்தப்பட்டன. இவ் ஒப்பந்தம் குறித்து பின்வருமாறு கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

முதலாவது. இவ் ஒப்பந்தமானது தென் ஆசியப் பிராந்தியம் சம்பந்தமாக ஓர் விரிவான சிக்கலைக் கொண்டுள்ளது. அத்தோடு இந்தியா தனது மிக அண்டை நாடுகளுடனான கொள்கையில் புதிய ஒரு பரிமானத்தினை பிரதிபலிப்பதாகவுள்ளது. சுதந்திரத்தின் பின் இந்திய தலைமைத்துவமானது சமாதானத்தைப் பெறுவதில், உலகில் தன்னை ஸ்திரப்படுத்துவதில் பாகிஸ்தானைத் தவிர அண்டைநாடுகளுடன் ஒத்துப் போவதில் மிக அக்கறையாக இருந்துள்ளது. தொடர்ந்துவந்த காலப் பகுதியில் இந்தியாவானது சீனாவுடனும், பாகிஸ்தானுடனும் முன் அனுபவத்தைப் பெற்றுக் கொண்டது.

இரண்டாவதாக இவ் ஒப்பந்தமானது பண்டாரநாயக்கா அரசின் பொருளாதார உறுதிப்பாட்டிற்கு, அரசியற்பலத்திற்கு உதவும் தன்மையைக்கொண்டுள்ளது.

மூன்றாவதாக, வெளிநாட்டு அலுவல்கள், பாதுகாப்பு அமைப்பிற்கு பொறுப்பாக இருந்த திருமதி சிறிமாவோ பண்டார நாயக்காவுக்கு கிடைத்த வெற்றியாகும்.

நான்காவதாக, இந்த ஒப்பந்தம் இந்திய எதிர்ப் பிரச்சாரவாதிகளுக்கு கொடுத்த ஒரு பலமான அடியாகும். அத்துடன் இந்தியாவுடனான ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்துவதில் ஈடுபட்டிருக்கும், தமிழரசு, தமிழ்க் காங்கிரஸ் கட்சிகளையும் வலுப்படுத்தியுள்ளது என்பதாகும். (ளு. ளு. டீடனெசய. 1989)

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செயலாளராக இருந்த திரு. எம். எஸ். செல்லச்சாமி, “இலங்கைமீது இந்தியா கண்வைத்திருக்கிறது என்று சிலர் பூச்சாண்டி காட்டியதற்கு நாடுபிடிக்கும் ஆசை இந்தியாவுக்கு இல்லை என்பதை இந்த உடன்படிக்கை மூலம் இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது” (ஈழநாடு. 1974) எனக் கூறினார்.

கொழும்பிலுள்ள வெளிநாட்டு அமைச்சரகம் வெளியிட்ட அறிக்கையில், “இலங்கை - இந்திய கடற்பிராந்திய எல்லை நிர்ணயிப்புமூலம்” குடியேற்ற ஆட்சிக் காலத்தின் பின் தீர்க்கப்படாமலிருந்த பெரும்பிரச்சினை ஒன்றுக்கு முடிவு காணப்பட்டுவிட்டது. இவ்வுடன் படிக்கையினால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் சரித்திரமுக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி ஒன்று நிகழ்ந்துள்ளது எனக் குறிப்பிட்டிருந்தது (ஈழநாடு, 1974)

1974 - 75க் காண இந்திய வெளிவிவகார அமைச்சு ஆண்டறிக்கை இவ் ஒப்பந்தம் குறித்து பின்வருமாறு அறிக்கை வெளியிட்டிருந்தது. “பாரம்பரியமான கடற்பகுதியான பாக்கு நீரிணைப் பகுதியில் எல்லை வகுத்தல், மற்றும் கச்சதீவுப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டமையானது, இந்தியா தனது அண்டை நாடுகளுடனான நட்புறவையும், பரஸ்பர ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதற்கான ஆர்வத்தின் அறிகுறியாகும்” (ஈழநாடு 1974)

இலங்கைக்கான இந்திய தூதுவராக இருந்த ஏinஉநவெ உழநடாழ என்பவர் “முக்கியத்துவமான பாராட்டத்தக்க நடவடிக்கை” என இவ் ஒப்பந்தம் குறித்து கருத்து வெளியிட்டிருந்தார்.

இலங்கைத் தரப்பில் இவ் ஒப்பந்தம் குறித்து வரவேற்பு பெற்றபோதிலும் இந்தியாவில் இதற்கு பலத்த கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இந்திய பாராளுமன்றத்தின் இருசபைகளிலும் கொம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் இவ் ஒப்பந்தத்தை எதிர்த்து வெளிநடப்புச் செய்தனர். லோக் சபாவில் துயn ளுiபொ கட்சி உறுப்பினரான ர்ரமழn உhயனெ மயஉhறயn அவர்கள் இவ்வுடன்படிக்கையின் நகலைக் கிழித்து வீசி தனது எதிர்ப்பைக் காட்டினார். திராவிட முன்நேற்றக் கழக உறுப்பினரான இரா. செழியன் அவர்கள் “இவ்வுடன்படிக்கை புனிதமற்ற ஒன்று” (றுiவா வாளை ரnhழடல யுபசநநஅநவெ) எனவும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினரான திரு. மனோகரன் அவர்கள் “தாய்நாட்டுப்பற்றற்ற நாகரீகமற்ற அரசின் செயல்” எனவும் (ருn Pயவசழவiஉஇ ருn ஊiஎடைளைநன புழஎநசnஅநவெ) கண்டித்தார். இராஜ்ய சபை உறுப்பினரான டீ து ளு கட்சி உறுப்பினர் டீhயசைழn ளுiபொ ளூநமாயறயவ அவர்கள் “இந்திய ஆதிக்கத்துக்குட்பட்ட கச்சதீவை அது எந்தப் பிரதேசத்திற்குச் சொந்தமோ அப்பிரதேசத்தைக் கலந்தாலோசிக்காமல் இலங்கையரசிற்கு கையளித்தமை சம்பந்தமான உடன்படிக்கை சட்ட முறையானது” என்று கூறினார். தி. மு. க. உறுப்பினர் ளு. ளு மனஸ்வாமி அவர்கள் “அரசானது தமிழ்நாட்டு மக்களின் மனவுணர்வுகளைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டனர். ஊ P ஆ உறுப்பினரான Nசையn புhழளா என்பவர். “இந்த ஒப்பந்தமானது மக்களின் மனவுணர்வுகளைச் சரியாக மதிப்பிடாத ஒர் பிழையான அணுகுமுறை” என விமர்சித்தார். அத்துடன் அரசின் இந் நடவடிக்கையானது முழுமையாகப் பொருத்தத் தகாதது எனவும் கூறினார். திரு. ம. பொ. சிவஞானம், “கச்சதீவு ஒப்பந்தம் அநியாயமானது” எனவும், திரு. மூக்கையாதேவர் இதனால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என்றும் கூறினார்.

தமிழ் நாட்டு சட்டசபையில் அரசானது இந்தியாவின் கச்சதீவு மீதான இறைமையை, மதிக்கத்தக்க வகையில் திருத்தியமைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் உறுப்பினர்களால் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந்த ஒப்பந்தம் இலங்கை - இந்தியா உறவுகளில் தமிழ் நாட்டு மக்களின் எரிச்சலை உண்டாக்கக் கூடியது. அவர்களின் மனோநிலையைப் பாதிக்கக் கூடியது இந்திய அரசின் இந் நல்லெண்ண சமிக்ஞையை இலங்கை அரசும் புரிந்து கொண்டு எரிச்சலை உண்டாக்கக் கூடிய ஏனைய நடவடிக்கைகளை நீக்கிக் கொள்ளுதல் வேண்டும். கச்சதீவு விவகாரம் சம்பந்தமாக இலங்கை அரசுடன் ஒர் புரிந்துணர்வை ஏற்படுத்துமுன் இந்திய அரசானது தமிழ் நாட்டு அரசினதும் ஏனைய எதிர்க்கட்சித் தலைவர்களினதும் நம்பிக்கையைப் பெற்றிருத்தல் வேண்டும்”
(ளு. ளு. டீநனெசயஇ 1989)

இந்தியா கச்சதீவு விடயத்தில் தமிழ்நாட்டு எதிர்ப்பினையும் மீறி ஒரு மென்மையானதும், விட்டுக்கொடுக்கும் போக்கினையும் கொண்டிருந்தமைக்கு பின்வரும் அம்சங்கள் பிரதான காரணியாக இருந்திருக்கலாம்.

சுதந்திரத்தின் பின்னர் இந்தியாவானது வடகிழக்கே சீனாவுனும், வடமேற்கே பாகிஸ்தானுடனும் எல்லைகள் தொடர்பாக பெரும் மோதல்களைச் சந்தித்தமையும் இதுபோன்ற ஒருநிலை தெற்கே சிறிய நாடான இலங்கையுடனும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற நிலைப்பாடு.

பாகிஸ்தான் போன்ற நாடுகள் இத்தீவு தொடர்பான பிரச்சினையை இந்தியாவுக் கெதிராக - இந்தியா ஒரு ஆக்கிரமிப்பாளன் என்ற நிலையை சர்வதேசமயப் படுத்துவதற்கு செய்துகொண்டிருந்த பிரச்சாரத்தை முறியடிப்பது.

நீண்டகாலமாக இவ்விரு நாடுகளிடையேயும் நிலவி வந்த உறவு இச்சிறிய விடயத்தில் முறிந்துவிடக் கூடாது என்ற நேரு, இந்திராகாந்தி போன்ற தலைவர்களால் விரும்பப்பட்டமை என்பனவாகும்.

இந்திய தரப்பிலிருந்து எதிர்ப்பு உணர்வலைகள் தென்பட்ட போதிலும் கச்சதீவு விடயத்தில் இந்தியா ராஜதந்திரமாகவே நடந்து கொண்டது என்பது 5வது, 6வது சரத்துக்களிலிருந்து அறிந்து கொள்ள முடியும். கச்சதீவு இலங்கைக்குரியதாக காட்டப்பட்டபோதிலும் இந்திய மீனவர்களும், யாத்திரிகர்களும் முன்பு அனுபவித்த சகல உரிமைகளையும் அனுபவிக்க ஒப்பந்தத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையானது அதனைத் தெளிவாகக் காட்டுகின்றது. இலங்கையில் இனப்பிரச்சினை உச்சக் கட்டத்தினை அடைந்து வடபகுதிக் கடற்பரப்பில் இராணுவ நடவடிக்கைகள் விஸ்தரிக்கப்படும் வரை இந்திய மீனவர்கள் எதுவித தடையுமின்றி கச்சதீவு பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டே வந்துள்ளனர். இதனால் கச்சதீவு விவகாரம் காலப்போக்கில் தணிந்து காணப்பட்டது. வடபகுதி கடற்பரப்பில் இலங்கை பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட அடாவடித் தனங்கள் காரணமாக வடபகுதி மீனவர்கள் மட்டுமல்லாது தமிழ்நாட்டு மீனவர்களும் பெரும் தாக்குதல்களுக் குள்ளாகினர். அவர்களது மீன்பிடி முயற்சிகள்பெரும் பதிப்படைந்ததுடன் பலர் உயிரிழக்கவும் நேரிட்டமையினால் கச்சதீவு பகுதியில் தமக்குள்ள உரிமையை தொடர்ந்தும் அனுபவிக்க மாநில ரீதியிலும் அகில இந்திய ரீதியிலும் பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 5வது. 6வது சரத்துக்கள் இலங்கையினால் மீறப்பட்டுவருவதாக இந்தியா தொடர்ந்தும் கண்டனம் வெளியிட்டு வருகின்றது.

1990களின் பின்னர் இக் கடற்பரப்பில் மிகமோசமான தாக்குதல்களை இலங்கை கடற்படையினர் மேற்கொண்டு வந்தமையினால் இந்திய பாராளுமன்றத்தில் கச்சதீவு விவகாரம் மீண்டும் சூடுபிடிக்கலாயிற்று. இந்திய கொம்யூனிஸ் கட்சியைச் சேர்ந்த திரு. ஆ. கல்யாணசுந்தரம் அவர்கள் லோகசபையில் 1974 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தினால் இந்திய மீனவர்களுக்கு கிடைக்கும் பலாபலன்கள் என்ன என்பதை தெளிவாகக் கூற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இதற்குப் பதில் அளித்த சுவரண்சிங் (ளுறயசயn ளுiபொ) 1921 ஆம் ஆண்டு உடன்படிக்கையில் கூறப்பட்டவற்றைப் பின்வருமாறு சுட்டிக் காட்டினார்.

“மீன்பிடி எல்லைக்கு மேற்குப்பக்கம் இந்திய மீனவர்களுக்கும், கிழக்குப்பக்கம். இலங்கை மீனவர்களுக்கும் உரிமையானதாகும். இந்தப் பிரிவு இருந்தாலும் மீனவர்கள் கச்சதீவைச் சுற்றிலும் மீன்பிடிப்பதுடன் கச்சதீவில் தம் வலைகளையும் உலரவைக்கலாம். ஆகவே கச்சதீவு இலங்கையின் சொத்தாக ஆக்கப்பட்டாலும் இந்திய மீனவர்களும். யாத்திரிகர்களும் பாரம்பரியமாக அனுபவித்து வந்த உரிமைகள் பாதிக்கப்படமாட்டாது” (ஏ. ளுரசலயயெசயலயn. 1994)

வேறுவிதமாகச் சொல்லப் போனால் சரத்து 5 ஐயும், சுவரண்சிங் அவர்களின் கூற்றையும் இணைத்துப் பார்க்கும் போது கச்சதீவைச் சுற்றிவர இந்திய மீனவர் மீன்பிடிக்கலாம் என பேராசிரியர் ஏ. சூரியநாராயணன் என்பவர் குறிப்பிடுகின்றார். ஆனால் இலங்கை இதனை ஒத்துக்கொள்ள மறுக்கிறது எனவும் கொழும்பிலுள்ள சிரேஷ்ட அதிகாரிகள் சரத்து 5இற்குத் தரும் விளக்கமானது “கச்சதீவில் வலைகளை உலரவைக்கும் உரிமையும், ஆலயத்துக்குப் போகும் உரிமையும் தவிர மீன்பிடிக்கும் உரிமை கிடையாது” என அமைகின்றது என்றும் கூறுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.

இலங்கையின் இந்த விவாதத்தில் தவறு உள்ளது என்றும் வலைகளை உலரவைப்பது என்பது அவ்வலைகள் ஈரமாயிருக்க வேண்டும். வலைகள் எவ்வாறு ஈரமாயிருக்க முடியும்? கச்சதீவைச் சுற்றி மீன்பிடிக்காவிட்டால் வலைகள் ஈரமாகியிருக்க முடியாது எனவும் இவர் கேள்வி எழுப்புகின்றார்.

ஆவணங்களைக் கவனமாகப் பரிசீலிக்கும் போது கச்சதீவின் எல்லையை நிர்ணயிக்கும் போது புதுடில்லி அரசு சமதூரத்தை வலியுறுத்தவில்லை என்பதைக் காணலாம். இந்த நிலையில் தமிழ் நாட்டின் நன்மைகள் பலியிடப்பட்டன எனவும் குறிப்பிடுகின்றார்.

சட்டஒப்பந்த இயக்குநர் யுளஇ ளு. P. துயபழவய என்பவர் “இந்தியாவுக்கும் - இலங்கைக்கும் இடையே உள்ள எல்லைக்கோடு நடுக்கோட்டையே தழுவியது ஆனால்; கச்சதீவு சம்பந்தப்பட்டவரை அதுசற்று மாற்றியமைக்கப்பட்டது” எனவும், சர்வதேச சட்டவல்லுநர் னு. P. ழு ஊழநெடட என்பவர் “இரு நாடுகளுக்கும் இடையே எல்லை வரையறுக்கப் பட்டபோது சமதூரக்கோட்பாடு கடைப்பிடிக்கப்பட்டது என்ற போதிலும் நடைமுறைக்காகச் சற்று மாற்றம் செய்யப்பட்டன” எனவும் கூறியுள்ளார்கள்.

இலங்கை கடல் எல்லை பற்றி அறிந்த ஒரு நிபுணரின் கருத்துப்படி “இந்த எல்லை வரையறை சமதூரக் கோட்பாட்டில் அல்லாது வெறும் ஒப்புதல் மூலமே நடைபெற்றது. இது கச்சதீவு பிணக்கைத் தீர்ப்பதற்காகவே செய்யப்பட்டது. ஆகவே எல்லைக் கோடு கச்சதீவுக்கு 1 மைல் மேற்காகவே வரையப்பட்டது. காரணம் கச்சதீவு இலங்கை எல்லைக்குள் வந்துவிடுவதன் நிமித்தமாகவே” எனவும் மேலும் இவர், இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது மிகவும் இரகசியமாகவே செய்யப்பட்டது என்றும் அறிந்து கொண்டார். அப்போது பதவியிலிருந்த வெளிவிவகாரச் செயலாளர் கேவல் சி;ங்கிற்கும் (முநறயட ளுiபொ) பிரதமரின் செயலாளர் P. N தாருக்கும் இடையில் நடந்த ஒரு சந்திப்பின் போது, வாய்ப்பேச்சால் இதற்கு ஒரு யாப்புத்திருத்தம் தேவையா? என்ற சட்ட ஆலோசனை கேட்கப்பட்டது. மேலும் இது ஒரு சச்சரவுக்குரிய நிலப்பகுதி பற்றி ஒரு விடயம் என வெளிவிவகார அமைச்சர் சொன்னார். ஆகவே இது வெளியே தெரியவரும் பட்சத்தில் ஜன்சிங்கிற் (துயளெயபொவைந) உறுப்பினர்கள் இது சம்பந்தமாக வழக்குத் தொடுத்துவிடலாம் என்றார். (ஏ. ளுரசலயயெசயலயn. 1994)

சர்வதேச சட்டப்பேராசிரியர் ரி. எஸ். ராமராவ் என்பார் ‘இலங்கையானது கச்சதீவை நிர்வாகம் செய்ததற்கான எந்த ஒரு கூற்றும் தாம் அறிந்தவரையில் இல்லையெனவும், 1947 ஆம் ஆண்டு ஜமீந்தார் ஒழிப்புச்சட்டத்தின்பின் கச்சதீவு தமிழ் நாட்டுக்குரியதாயிற்று எனவும். வெற்றி கொள்வதற்கான உறுதியான ஆதாரம் இந்தியாவுக்கு இருந்தும் வன்மம்பாராட்டாது 1974 இல் இலங்கைக்கு நட்புரீதியாக கையளித்தது எனவும், எல்லைகளை வரைந்தபோது டில்லி அரசு சம அளவு தூரத்தை கணிப்பில் எடுத்துக் கொள்ளவில்லை கச்சதீவு இலங்கையின் பக்கம் போகக் கூடியவாறு எல்லை வரையப்பட்டன” என்றும் கூறுகின்றார். (வு. ளு. ளுரடிசயஅயnலையஅ 1994)

இப்பிரச்சினை தொடர்பாக இன்னொரு கருத்துரைத்தொடரில் இலங்கைக்கான முன்னாள் தூதுவரான தோமஸ் ஆபிரகாம் என்பவர், “இலங்கைக்கு கச்சதீவை வழங்குவதில் இந்தியா ஆவலாக இருந்தமை தமக்கு ஆச்சரியம் ஊட்டுவதாகவும், ஒப்பந்தம் செய்தவேளை இத்தீவு தொடர்பான கடும் பேரம் பேசப்படவில்லை யெனவும் கச்சதீவு இந்தியாவின் ஒரு பகுதி என்பதில் மிக உறுதியாக இருந்தது என்பதில் ஒருமித்த கருத்துக் கொண்டிருந்தோம்” எனவும் குறிப்பிட்டார். (வு. ளு. ளுரடிசயஅnலையஅ 94)

மேற்குறிப்பிட்ட கருத்துக்களிலிருந்து நோக்குகின்ற போது கச்சதீவு இந்தியாவுக்கே உரித்தானது ஆயினும் மத்திய அரசு தமிழ் நாட்டு அரசின் நலனைக் கருத்திற் கொள்ளாது தேசிய நலனைக் கருத்திற் கொண்டு இலங்கையுடனான உறவில் ஒரு நெருக்கத்தினை வளர்த்தெடுக்கும் நோக்கில் விட்டுக்கொடுப்புடனும், நற்புடனும் நடந்து கொண்டமை புலனாகின்றது. அத்துடன் தமிழ் நாட்டு மீனவர்களின் நலனில் அக்கறை கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்க ஒரு அம்சமாக காணப்படுகின்றது.

அத்தியாயம் (5)

1976 ஆம் ஆண்டு உடன்படிக்கை

1976 மார்ச்சில் இலங்கைக்கும் - இந்தியாவுக்கும் இடையில் இரண்டாவது ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டது. பாரம்பரிய நீர்ப்பரப்பிலுள்ள மன்னார்க்குடா, பாக்குநீரிணைப் பகுதிக்கு அப்பாலுள்ள வங்களா வரிகுடா ஆகிய பகுதிகளுக்கு உரியதாக இவ் ஒப்பந்தம் அமைகின்றது. இதன்படி இவ்விரு கடற்பகுதிக்கும் எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டன. இவ் எல்லை வரையறை தொடர்பாக இந்திய அரசின் வெளிவிகார அமைச்சின் செயலாளர் கே கேவோல் சிங்கிற்கும் (முநறயட ளுiபொ) இலங்கை வெளிவிகார அமைச்சின் செயலாளர் ஜெயசிங்காவுக்கும் இடையில் 1976 மார்ச் 23ல் திகதியிட்ட கடிதப் பரிமாற்றம் நிகழ்ந்தது. இந்திய வெளிவிவகார அமைச்சர் சவான் “இக் கடிதமும் ஓர் ஒப்பந்தம் தான் எனக் கூறினார்” (பின்னிணைப்பு. ஐஐஐ)

இக் கடிதத்தின் பந்தி - 1 இல் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:-

“இந்தியாவின் அல்லது இலங்கையின் கண்டிப்பான அனுமதியில்லாது இந்திய மீன்பிடிக் கலங்களோ. மீனவர்களோ இலங்கையின் பாரம்பரியமான கடலிலோ அல்லது கரையோரக் கடலிலோ அல்லது பிரத்தியேகப் பொருளாதார வலயத்திலோ மீன்பிடித்தலில் ஈடுபடக் கூடாது. அதே போல் இலங்கை மீன்பிடிக் கலங்களோ, மீனவர்களோ இந்தியக் கடலிலோ, பிரத்தியேகப் பொருளாதார வலயத்திலோ மீன்பிடித்தல் கூடாது” மேலும் வோட்ஜ் மீன்பிடித் தளத்தில் மீன்பிடித்தல் பற்றியும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்திய வெளிவிகார அமைச்சர் திரு சவான் சபையில் இவ் உடன்படிக்கை பற்றி விளக்குகையில்,

“இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதுடன் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயுள்ள முழுக்கடல் எல்லையும் நிர்ணயித்து முடிக்கப்பட்டுவிட்டது. இரு நாடுகளும் தத்தமது பிரதேசங்களில் முழு இறைமையையும் இனிச் செலுத்தும் மேலும் ஒரு நாட்டின் மீன்பிடிக் கலங்களும், மீனவர்களும் அடுத்த நாட்டின்கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடாது எனவும் ஒப்புக் கொள்ளப்பட்டது” எனக் கூறியுள்ளார்.

மேற்குறிப்பிட்ட கூற்றுக்கள் குறித்து பேராசிரியர் சூரியநாராயணன் என்பவர் பின்வரும் கேள்விகளை எழுப்புகின்றார்.

“இப்படியாக இந்த திட்டவிட்டமான கூற்றுக்கள் இலங்கையின் எல்லையுடன் தொடர்புகொண்ட இந்தியக்கடலுக்கு பாக்குநீரிணை உட்பட பொருத்துமானால் 1974 ஒப்பந்தத்தின் சரத்து 5 இன் கதிதான் என்ன? அதில் கூறப்பட்டிருக்கும் மீனவர்களுக்குரிய உரிமைகள் என்னவாயின? 1974 இல் பெறப்பட்ட உரிமைகள் 1976 இன் ஒப்பந்தம் மூலம் திருப்பிக் கொடுக்கப்பட்டு விட்டனவா? அல்லது 1974 ஒப்பந்தத்தின்படி இந்திய மீனவர்களுக்கு வலைகளைக் காயப் போடுவதற்காகவேதான் கச்சதீவுக்குப் போகும் உரிமை இருந்ததா? அவர்களுக்கு மீன்பிடிக்கும் உரிமைகள் இல்லையா? இதனைப்பற்றி இந்திய அரசு தனது நிலைப்பாட்டை உடனடியாகவே தெளிவுபடுத்த வேண்டும்” என்பதாகும். வெளிவிகார அமைச்சர் திரு. சவான் அவர்கள் இவ் ஒப்பந்தம் பற்றி விளக்குகையில் லொட்ஜ் மீன்பிடித் தளம் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது “இலங்கை இவ்வுடன் படிக்கையாலே தனது மீன்பிடித் தொழிலை இழந்துவிடும் பட்சத்தில் பொருளாதார ரீதியில் இலங்கைக்கும் பாதிப்புக்கள் ஏற்படலாம். ஆகவே ஒரு நல்லெண்ண சமிக்ஞையாக வோட்ஜ் மீன்பிடித்தளத்தில் இலங்கையின் மீன்பிடித்தொழில் மூன்று ஆண்டுகாலத்துள் கட்டம் கட்டமாக நிறுத்தப்படும். இந்த மூன்று ஆண்டுகாலத்தில் இலங்கை இப்போது மீன்பிடிப்பதைப் போல தொடர்ந்தும் பிடிக்கலாம். இது இரு அயல் நாடுகளுக்கிடையே நல்லெண்ணத்தைக் காட்டும் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது” இத்தோடு நான் ஒப்பந்தங்களின் வாசகங்களை சபைக்கு முன் சமர்ப்பிக்கிறேன். (பின்னிணைப்பு ஐஏ) என்பதாகும்.

இவ்வுடன்படிக்கையின் பிரகாரம் மன்னார் விரிகுடாவில் குமரிமுறைக்குத் தெற்கில் உள்ள வோட்ஜி மீன்பிடித்தளத்தின் முழுப்பரப்பும், வங்காளவிரிகுடாவில் யாழ்ப்பாணத்திற்கு வடக்கில் இருந்த பேதுரு மீன்பிடித்தளத்தின் 1ஃ3 பகுதியும் இந்தியாவுக்குச் சொந்தமாயின. இதனால் இலங்கை முக்கிய மீன்பிடித்தளங்களை இழக்க நேரிட்டது. வோட்ஜ் மீன்பிடி மேடையில் இலங்கைக்கு மீன்பிடிக்க 1976 ஒப்பந்தத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளமையால் சுதந்திரமாக மீன்பிடித்தலில் ஈடுபட தடையாகவே அமைந்துள்ளது.

இந்தியாவின் மேற்பார்வையின் கீழும், கட்டணங்கள் செலுத்தியுமே மீன்பிடியில் ஈடுபட வேண்டும். அத்துடன் குறிப்பிட்ட இன மீன்களின் உச்ச உற்பத்தி வருடம் 2000 தொன்னாக மட்டுப்படுத்தப்பட்டதுடன், 5 வருடங்களுக்கு மட்டும் அதனை பிடிக்க முடியும். இத்தகைய கட்டுப்பாடுகள் இலங்கை மீனவர்களுக்கு திருப்திகரமாக இல்லை எனலாம்.

1974 ஆம், 1976ஆம் ஆண்டுகளுக்கான ஒப்பந்தங்கள் இரண்டும் இலங்கை இந்திய பாரம்பரிய நீர்ப்பரப்புகளினூடே எல்லைகளை வரையறை செய்கின்ற போதிலும் அடிப்படையில் வேறுபட்ட பண்புகளை இவ்விரு ஒப்பந்தங்களும் கொண்டுள்ளன. 1974 ஆம் ஆண்டு ஒப்பந்தமானது பாக்குநீரிணைப்பகுதியில் கடலோர எல்லைகளை வரையறுக்கின்ற போதிலும் ஒரு நாட்டின் எல்லைக்குள் இன்னொரு நாடு பாரம்பரியமாக அனுபவித்து வந்த உரிமைகளைத் தொடர்ந்து அனுபவிக்க வழிசெய்கின்றது. அதேவேளை 1976 ஆம் ஆண்டு ஒப்பந்தம் மன்னார் விரிகுடா வங்களா விரிகுடா எல்லைகளில் ஒருநாடு இன்னொரு நாட்டின் எல்லைக்குள் செல்வதை முற்றாகத் தடைசெய்கின்றது. இலங்கை அரசு பிறப்பித்துள்ள கடற்பாதுகாப்பு வலய பிரகடனம் 1974 ஒப்பந்தத்தை கேள்விக்குரியதாக்கியுள்ளது.

அத்தியாயம் (6)

1983 இன் பின்னர் வடபகுதி கடற்பரப்பில் ஏற்பட்ட நிகழ்வுகள்

1974இலும், 1976 இலும் செய்து கொள்ளப்பட்ட இலங்கை - இந்திய கடல் எல்லைகள் தொடர்பான ஒப்பந்தங்கள் வடபகுதி கடற்பரப்பில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த இலங்கை - இந்திய மீனவர்களின் வழமையான தொழில் நடவடிக்கைகளுக்கு எதுவித இடையூறுகளையும் விளைவிக்கவில்லை. பாக்கு நீரிணைப் பகுதியில் இருபகுதி மீனவர்களும் தத்தமது எல்லைக்குள் மட்டுமல்லாது மற்றைய நாட்டினது எல்லைகளுக்குள்ளும் சென்று மீன்பிடியில் ஈடுபட்டிருந்தனர். இருநாட்டு அரசுகளும் இதனைக் கண்டும் காணாததுபோலவே இருந்தன. கச்சதீவு புனித அந்தோனியார் உற்சவமும் எதுவித தடங்கலுமின்றி நடைபெற்று வந்தது. பலவருடங்களாக அமைதிப் பிராந்தியமாக விளங்கிய கச்சதீவு சார்ந்த வடபகுதி கடற்பரப்பானது 1983 இல் இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தினைத் தொடர்ந்து கலவரம் நிறைந்த பகுதியாகவும் இரத்தக்களரி நிறைந்த பகுதியாகவும் மாறியது.

இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரமும், வடக்கு கிழக்குப் பகுதிகளில் இலங்கை இராணுவம் மேற்கொண்ட சகிக்க முடியாத நடவடிக்கைகளும் இப்பகுதிவாழ் பெரும்பாலான தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு அகதிகளாக இடம்பெயர்ந்து ஒடுவதற்கு காரணமாகியது. பாக்குநீரிணையைக்கடந்து தமிழகத்திற்குத் தப்பியோடிய தமிழர்கள் பலர் இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களுக்குள்ளாகி மடிந்தனர். இக்கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த வடபகுதி மீனவர்கள் மட்டுமல்லாது தமிழக மீனவர்கள் பலரும் தாக்குதல்களுக்குள்ளாகி இறந்தனர். பலர் காணாமல் போயினர். இன்னும் பலர் காயப்படுத்தப்பட்டதுடன் கைதும் செய்யப்பட்டனர். மீனவர்களின் பெறுமதிமிக்க மீன்பிடி உபகரணங்கள் சேதமாக்கப்பட்டதுடன் பல பறிமுதலும் செய்யப்பட்டன.

1983 ஐத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் வடபகுதிக் கடற்பரப்பில் தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் இலங்கை அரசு கடல்வலய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் காவல்வலய எல்லை ஒன்றை பிரகடனம் செய்திருந்தது. அன்றைய ஜனாதிபதியாக இருந்த திரு து. சு. ஜெயவர்த்தனா அரசினால் இது பிரகடனப்படுத்தப்பட்டது. 18 - 11- 1985 அன்று பிரகடனப்படுத்தப்பட்ட காவல் வலய எல்லை பின்வருமாறு அமைந்தது.

“காவல் வலய எல்லையானது தலைமன்னாரிலிருந்து மேற்கே ஐந்து மைல் தூரத்திலுள்ள ஒரு புள்ளிக்கு நேராக நெடுந்தீவின் வடகிழக்கு, வடக்குக் கரையோரத்திற்கும், மேற்குக் கரையோரத்திற்கும் நேராக அளக்கப்படுவதும். ஐந்துமைல் தூரத்திற்கு கண்டிக்குளத்திலிருந்து தலைமன்னார் கரையில் நீடித்திருப்பதாகும்” (இல. சனநாயக சோசலிச குடியரசு வர்த்தகமானி 1985)

இதன்மூலம் வடபகுதி மீனவர்கள் கரையிலிருந்து 5 மைல்களுக்கு அப்பால் செல்வதும் இந்திய மீனவர்கள் தமது எல்லைக்கு அப்பால் இலங்கையின் எல்லைக்குள் வருவதும் தடுக்கப்பட்டது. காவல் வலய எல்லைக்குள் கச்சதீவும் அதன் கடற் பகுதியும் அமைந்தமையினால் இப்பகுதியில் தெரிந்தோ தெரியாமலோ மீன்பிடியில் ஈடுபட்ட பல இந்திய, இலங்கை வடபகுதி மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களுக்குள்ளாகினர். இந்தக் காலப்பகுதியில்தான் அதாவது 15 - 5 - 1985 இல் குமுதினி போக்கு வரத்து படகில் பயணம் செய்த வடபகுதி வாழ் அப்பாவித் தமிழர்கள் பலர் கொல்லப்பட்ட சம்பவமும், 10-6-1986 இல் குருநகர் மீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவமும் நிகழ்ந்தது. நெஞ்சை நெகிழவைக்கும் இத் துயரச் சம்பவங்கள் எவராலும் மறக்க முடியாதவையாகும். 1987 இல் இந்திய இராணுவம் அமைதிப்படை (ஐ P. மு. கு) என்ற போர்வையில் வடக்கு கிழக்குப் பகுதிகளில் நிலை கொண்டிருந்தபோது தமிழ் மக்கள் அடைந்த சொல்லொணா துன்பங்கள் எண்ணிலடங்காது. இவர்கள் புரிந்த அட்டூழியங்கள் இலகுவில் மறந்து விடக் கூடியவையுமல்ல.

1990 இல் இரண்டாவது கட்ட ஈழப்போர் ஆரம்பமாகியதும் இக்கடற்பரப்பில் முன் எப்போதும் இல்லாத அளவில் இலங்கை இராணுவத்தின் நடவடிக்கைகள் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டிருந்தன. இலங்கை இராணுவம் யாழ் குடா நாட்டைக் கைப்பற்றும் நோக்குடன் பாரிய இராணுவ நடவடிக்கைகள் சிலவற்றை மேற்கொண்டு கரையோரத்தின் சில பகுதிகளை ஆக்கிரமித்தது. யாழ்ப்பாணத் தீவுப்பகுதி, பூநகரி வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, வலிகாமம் வடக்குப்பகுதி, மன்னார்தீவு போன்ற பகுதிகளை இராணுவம் ஆக்கிரமித்தது. இதனால் அங்கிருந்த மக்கள் தமது உடமைகளை இழந்த நிலையில் பாதுகாப்பான இடம்நோக்கி இடம்பெயர்ந்தனர். மேலும் பிரதான நிலப்பகுதிக்கும் யாழ் குடா நாட்டிற்கும் இடையிலான பிராதான போக்குவரத்துப் பாதைகளான ஆனையிறவுப்பாதை, சங்கப்பிட்டி கேரதீவு பாதைகளையும் இராணுவம் தடைசெய்தது. மாற்று வழியின்றி யாழ் கடனீரேரி வழியாக மக்கள் பயணம் மேற்கொண்டபோது அதனையும் தடுக்கும் வண்ணம் அப்பாவி பயணிகள் மீது இராணுவம் கிளாலிக்கடலில் பலதடவை தாக்குதல்களை மேற்கொண்டது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் பலியாகினர். யாழ் குடா நாட்டிற்கும் - பிரதான நிலப்பகுதிக்கும் இடையிலான பிரதான போக்குவரத்துப்பாதை இன்று வரை துண்டிக்கப்பட்டே உள்ளது. மக்கள் ஏரியினூடாகவே இரவு வேளைகளில் சிறிய படகுகளில் காலநிலை மற்றும் இராணுவ அச்சுறுத்தல்களின் மத்தியில் உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்து கொண்டிருக்கின்றனர். இத்தகைய சம்பவங்கள் இக்கடற்பரப்பில் நிகழ்வதற்கு, குறிப்பாக இந்திய மீனவர்கள் பாதிப்படைவதற்கான காரணங்கள் பற்றி பேராசிரியர் ஏ. சூரியநாராயணன் என்பார் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

“இலங்கையின் இனப்பிரச்சினை தீவிரமடைந்தமை தமிழ் நாட்டின் கரையோரப்பகுதிகள் தமிழ்ப் போராளிகளின் புகலிடமாக மாறியமை, இலங்கைத் தமிழ்ப் போராளிகளுக்கும் தமிழ் நாட்டுக்கும் இருந்த நெருங்கிய ஐக்கியம் ஆகிய யாவும் பாக்கு விரிகுடாப் பிரதேசத்தின் தன்மையில் ஒரு மாற்றத்தையே கொண்டு வந்துவிட்டது. இலங்கைத் தமிழ்ப் போராளிகளுக்கு தமிழ்நாடு ஒரு புகலிடம் மட்டுமல்ல ஒரு பாதுகாப்பான சரணாலயமாகவும் அமைந்திருந்தது. இந்த இடத்திலிருந்து தான் ஈழத்துப் போருக்கு ஆத்மீக பலமும்பொருளாதார ஆதரவும்கிடைத்தது. இப்பாதைவழியாக வெடிமருந்துகள், கைக்குண்டுகள், உணவு, மருத்துவகைகள், எரிபொருட்கள் யாவும் தாராளமாக யாழ் குடா நாட்டைச் சென்றடைந்தன. தமிழ் நாட்டின் நீண்ட கரையோரத்தில் இருந்த மீன்பிடித் துறைகள் டு. வு. வு. நு யினரின் அதிவேகமான படகுகள் வந்து எளிதாகத் தங்கும் இடங்களாக இருந்தன. இதன் விளைவாக யாழ்ப்பாணத்தை தமிழ் நாட்டுக்கு ஊடாக வெளியுலகத்தோடு ஒரு சிறந்த தொலைத் தொடர்பு முறையையும் உருவாக்கிக் கொள்ளவும் ஏதுவாக இருந்தது. கொழும்பு இப்படியாக தமிழ் நாட்டிலிருந்து ஆயுதங்கள், போராளிகள் வருவதை தடுக்க முற்படுவது ஒரு இயல்பான நடவடிக்கையே. இதனால்தான் இலங்கை தனது கடற்படையை நவீன மயமாக்கி பலப்படுத்த முனைந்துவந்துள்ளது. அதோடு பாக்குநீரிணை வழியாக ஆயுதங்கள் கடத்தப்படுவதையும் தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு மாறாக டு. வு. வு. நு யும் கடற்புலிகள் என்ற ஒரு படையணியை உருவாக்கியுள்ளது. இதனால் கொழும்பு அரசு பல கடற்றடைச் சட்டங்களை உருவாக்கியுள்ளது போராளிகளுக்கும் மீனவர்களுக்கும் இடையே கடற்படையினால் வித்தியாசம் காண முடியாமையினால் கடற்படையினரின் நடவடிக்கைகள் இந்திய மீனவர்களைப் பெரிதும் பாதிப்படையச் செய்துள்ளன” (ஏ சூரியநாராயன் 1994) என்பதாகும்.

இவரின் கூற்றுப்படி இலங்கை அரச படைகள் தேசிய பாதுகாப்பு கருதியே இதனைச் செய்துள்ளனர் என நியாயப்படுத்த முற்பட்டுள்ளார். பாதிப்படைந்தவர்கள் இந்திய மீனவர்கள் மட்டுமல்ல, இலங்கை வடபகுதி மீனவர்களும், பயணம் மேற்கொண்ட பொதுமக்களும் அடங்குவர் என்பதும் குறிப்படத்தக்கது. கொல்லப்படுவோர் அப்பாவி மீனவர்களும், பயணிகளும் எனத் தெரிந்தும் வேண்டுமென்றே இவர்கள் கொல்லப்பட்டனர் என்பதே உண்மையாகும். கொல்லப்படுவோர் இந்திய மீனவர்களாயிருந்தாலென்ன, இலங்கை மீனவர்களாக இருந்தாலென்ன அனைவரும் தமிழர்களே, என்பதும் இங்கு நோக்கத்தக்கது. “இந்தியாவையும் இலங்கையையும் பிரித்துவைக்கும் நோக்குடன் டு. வு. வு. நு யினரே இந்திய மீனவர்களைச் சுடுவதாக இலங்கை குற்றம் சாட்டியுள்ளது. ஆகவே கிடைக்கும் சான்றுகளை இலங்கை அரசு தமக்கு அறிவிக்க வேண்டும் என இந்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது” எனவும் பேராசிரியர் ஏ. சூரியநாராயணன் குறிப்பிடுவதையும் நோக்குதல் வேண்டும். வடபகுதி தமிழ் மக்களையும் தமிழ்நாட்டையும் பிரித்துவைக்கும் இலங்கை அரசின் கையாலாகாத் தனமான தந்திரோபாய நடவடிக்கையே இதுவாகும். தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை அரசுக்கு எதிராகவே தமது எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனரே ஒழிய டு. வு. வு. நு யினர் தம்மைச் சுடுவதாகக்கூறி இதுவரை எதுவித ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியதாக தகவல்கள் இல்லை.

தமிழ்நாட்டு அரசு வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களின் பிரகாரம், “1983 தொடக்கம் 1991 ஆகஸ்ட் வரையிலும் 236 தடவைகள் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளனர். 303 படகுகள் தாக்கப்பட்டு 486 மீனவர்கள் பாதிப்படைந்துள்ளனர். 50 படகுகள் அழிக்கப்பட்டுள்ளன. 135 மீனவர்கள் கடும் காயங்களுக்குள்ளாகினர். 50 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டனர். 57 மீனவர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளனர். 65 இயந்திரங்கள் அபகரிக்கப்பட்டுள்ளதுடன் 205 மீனவர்கள் கைது செய்யப்பட்டும் உள்ளனர். 1991 இல்இச்சம்பவங்கள் மேலும் அதிகரித்துள்ளன” (ஏ. ளுரசலயயெசயலயn 1994) எனவும்,

இந்தியன் எக்ஸ்பிறஸ் “கடந்த மூன்று வருடத்திலும் 25 தமிழ்நாட்டு மீனவர்கள் கடற்படையினரின் சூட்டுக்கு இலக்காகி இறந்துள்ளனர். 104 பேர் காயமடைந்துள்ளனர். 136 படகுத் தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. 15 படகுகள் நீரில் மூழ்கடிக்கப்பட்டுள்ளன” எனவும்,

இந்தியா டுடே “1993 இல் மட்டும் 42 மீனவர்கள் கொல்லப்பட்டனர். 25 க்கும் மேற்பட்ட படகுகள் அழிக்கப்பட்டுள்ளன. 1994 இல் 8 மீனவர்கள் கொல்லப்பட்டார்கள்” எனவும் குறிப்பிடுகின்றது.

இலங்கையின் தரப்பில் 1990 - 1994 வரையிலும் வட பகுதியைச் சேர்ந்த 266 மீனவர்கள் கொல்லப்பட்டும், 14 பேர் கைது செய்யப்பட்டும். 81 பேர் காணாமல் போயும் உள்ளனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. (ஈழநாதம் 1994) இதனைவிட 15000க்கும் அதிகமான மீனவக் குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளனர் எனவும், 534 உள் இணை இயந்திரப் படகுகளும் 2391 வெளி இணை இயந்திரப் படகுகளும் 2500 வள்ளங்கள் 3000 கட்டுமரங்களும் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

வடபகுதிக் கடலில் பல வருடங்களாக நடைபெற்று வருகின்ற இக் கொடிய நிகழ்வுகளை குறிப்பாக வடபகுதி மீனவர்களின்படுகொலை, மற்றும் குண்டுவீச்சுக்கள். எறிகணை வீச்சுக்கள் கடல்வலயத்தடை, பொருளாதாரத்தடை என்பனவற்றைக் கண்டித்தும் வடபகுதியிலும், தமிழக மீனவர்கள் படு கொலையைக் கண்டித்தும் தமிழ் நாட்டிலும் வெகு ஜனப் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. ஆயினும் அப்போதைய ஆட்சியிலிருந்த ரு. N. P அரசு தனது நடவடிக்கைகளை அதிகரித்ததே ஒழிய ஜனநாயக மரபுகளுக்கு சிறிதளவிலேனும் மதிப்பளிக்க வில்லை. 1994இன் பிற்பகுதியில் இலங்கையில் நடைபெற்ற பொதுத் தேர்தல், மற்றும் ஜனாதிபதி தேர்தல்களும் அவற்றின் முடிவுகளும் வடபகுதிக் கடலில் சிறிதுகாலம் அமைதி ஏற்பட வழிசமைத்தது.

16-08-1994 இல்இலங்கையில் நடைபெற்ற பொதுத்தேர்தலிலும்;;, 09-11-1994 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுசன ஐக்கிய முன்னணிக்கட்சி வெற்றியீட்டி ஆட்சியை அமைத்தது. ஆட்சியில் ஏற்பட்ட மாற்றம் வட கிழக்குப் பகுதிகளில் புதிய மாற்றம் ஒன்றைக் கொண்டுவரும் என இப்பகுதி வாழ் மக்கள் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. எனினும் 05-01-1995 இல் டு. வு. வு. நு இனருக்கும் புதிய அரசிற்கும் இடையில் மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்று ஏற்படும் வரையிலும் இராணுவ நடவடிக்கைகளில் எதுவித மாற்றமும் நிகழவில்லை. வடபகுதிக் கடலில் மீனவர்களுக்கெதிரான தாக்குதல்கள் தொடர்ந்தன. இதற்குச் சான்றாக 1994 நவம்பரில், அரிப்பு என்ற இடத்தில் 9 தமிழ் மீனவர்கள் கோரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் குறிப்பிடலாம். இதனைவிட வடமராட்சிக் கடலிலும் பல மீனவர்கள் கடற்படையினரின் தாக்குதல்களுக்கு இலக்காகி உயிரிழந்தனர். பல மீனவர்கள் கைது செய்யப்பட்டும் உள்ளனர்.

11-05-1995 வரையில் டு. வு. வு. நு இனருக்கும் அரசிற்கும் நான்கு கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று முடிந்தன. இப்பேச்சு வார்த்தையின் விளைவாக கடல் வலயத் தடைச்சட்டம் சிறிது தளர்த்தப்பட்டது. கரையிலிருந்து 5 மைல்களுக்குட்பட்ட கடற்பரப்பில் எந்நேரத்திலும் மீன்பிடிக்கலாம் எனவும், படைகளின் முகாம்கள் இருக்கும் பகுதிகளில் தரையிலிருந்து 1 மைல் (1.6 கி.மீ) தொலைவுக்கு அப்பாலும், கடற் பக்கமாக 2 மைல் (3.2கி.மீ) தொலைவு வரையும் தவிர்க்கப்பட்டது. தலைமன்னார் தொடக்கம் யாழ்ப்பாணம் வரை குடாக்கடல் கரையோரப்பகுதிகளில் மீன்பிடிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. (ஈழநாதம், 1995)

துரதிஷ்டவசமாக டு. வு. வு. நு யினருக்கும் இலங்கை அரசிற்கும் இடையிலான மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் முறிவடைந்த 20-04-1995 அன்று மூன்றாவது கட்ட ஈழப்போர் தொடங்கியது. அன்றையதினமே இலங்கை அரசு வடக்கு கிழக்குப் பகுதி கடல் பிரதேசத்தை முற்றாக தடைசெய்யப்பட்ட பகுதியாக பிரகடனப் படுத்தியது. இதன் விளைவாக மீன்பிடி மீண்டும் முற்றாக பாதிப்படைந்தது. இக்காலப் பகுதியில் வயிற்றுப் பிழைப்பிற்காக மீன்பிடிக்கச் சென்ற பல மீனவர்கள் கடற்படையினரின் தாக்குதல்களுக்குள்ளாகி இறந்தனர். பெறுமதிமிக்க மீன்பிடி உபகரணங்கள் பலவும் சேதமாக்கப்பட்டன. பலர் கைது செய்யப்பட்டும் உள்ளனர். இன்றுவரையிலும் வடக்கு, கிழக்குப் பகுதியிலுள்ள தமிழ் மீனவர்கள் தொழில் வாய்ப்பின்றி மிக மோசமாக பாதுகாக்கப்பட்டுள்ளனர். வறுமையின் கோரப்பிடியினுள் சிக்கியுள்ள கரையோர மீனவர்கள் தொடர்ந்தும் இராணுவம் தாம் நிலை கொண்டுள்ள பிரதேசங்களிலிருந்து ஏவும் எறிகணை வீச்சுக்கு இலக்காகி வருகின்றனர்.

அத்தியாயம் (7)

சுமுகமான தீர்வை நோக்கி

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலுள்ள பாக்குநீரிணையில் குறிப்பாக கச்சதீவினைச் சூழவுள்ள பகுதிகளில் இலங்கைக் கடற்படையினர் நீண்டகாலமாக மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளும் இதனால் இந்திய மீனவர்களுக்கு எற்பட்டுள்ள பாதிப்புகளும் இலங்கை இந்திய உறவுகளில் ஓரளவு தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன. இப்பிரச்சினைகள் தொடர்பாக தமிழ்நாடும், மத்திய அரசும் சில நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும் தொடர்ந்தும் இக்கடற் பகுதியில் துயரச் சம்பவங்கள் நிகழ்ந்தவண்ணமே உள்ளன.

வடபகுதியில் இராணுவம் தமது பலத்தை மேலும் விஸ்தரிக்கும்;; நோக்குடன் 1-9-1993 இல் அவசரகாலச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு ஒன்றைப் பிரகடனம் செய்தது. இதன்படி “இலங்கைத் தீவின் வடமேற்குக்கரையிலுள்ள மன்னாரிலிருந்து கிழக்குக் கரையிலுள்ள திரிகோணமலைவரை படகுகள் பயன்படுத்தப்படுவது தடுக்கப்பட்டது. அப்படிப் பயன்படுத்த வேண்டுமானால் இலங்கைக் கடற்படைத் தளபதியின் அனுமதி பெறப்பட வேண்டும்” எனப்பட்டது. (ஏ.ளுரசலயயெசயலயn 1994) கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் இதற்கு ஆட்சேபம் தெரிவித்தார். இதனால் இலங்கை அரசு இப்பிரகடனத்தில் திருத்தம் செய்தது. ஏனெனில் 1974, 1976 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தப் பிரகாரம் கச்சதீவுப் பகுதியில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்கும் உரிமை உள்ளது என்பதாலாகும். எனினும் இலங்கை அரசு மேற்கொண்ட பிரகடனத்திருத்தம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுவதற்கு உதவ வில்லை. முன்னரும் இலங்கை ஜனாதிபதி ஆர். பிரேமதாசா 1992 செப்டம்பர் - ஒக்டோபரில் இந்தியாவுக்கு விஜயம் செய்த போது இந்தியப் பிரதமரைச் சந்தித்தவேளை இந்திய மீனவர்கள் தொடர்பான விடயமும் பிரஸ்தாபிக்கப்பட்டது. இந்தச் சந்திப்பின் பின்னர் இருவரும் விடுத்த அறிக்கையின் பிரகாரம்; இப்படியான சம்பவங்கள் தவறுதலாக நடக்கும் வாய்ப்புக்கள் உண்டு என்றாலும் இதனைக் குறித்து இருதரப்பினருமே சர்வதேச சட்டங்களுக்கமைய நடந்து கொள்வதே சாலவும் சிறந்தது என்று ஒப்புக் கொள்ளப்பட்டது.

1993 செப்டம்பர் 16 இல்இந்திய வெளிவிகார அமைச்சர் அவர்களுக்கும் இலங்கை வெளிவிகார அமைச்சர் யு. ஊ. ளு. ஹமீது அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு புதுடில்லியில் நடைபெற்றது. இச்சந்திப்பின்போது “இலங்கைக் கடற்பகுதியில் தவறுதலாக நுழையும் இந்திய மீனவர்களை கண்மூடித்தனமாக சுடுவதற்குப் பதில் சட்டரீதியாக விசாரிக்கலாமே” எனச் சுட்டிக்காட்டப்பட்டது. “உண்மையான மீனவர்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்படும்” என ஹமீது அவர்கள் இந்தியாவுக்கு உறுதியளித்திருந்தார். (பிரகர்ஷ் எம். ஸ்வாமி 1994) ஆயினும் இது நடைமுறையில் சாத்தியப்படவில்லை. தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணமே இருந்தன. பின்னர் 1993 ஒக்டோபர் 16இல் இந்திய வெளிவிகார அமைச்சுச் செயலாளர் து. N டிக்ஸிற் அவர்களுக்கும், இலங்கை வெளிவிவகார செயலாளர் பேர்ணாட் கிலதாத்தினா அவர்களுக்கும் இடையில் இவ் விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தபொழுது இவ்வாறான சச்சரவுகள் தவிர்த்துக் கொள்ளப்படல் வேண்டுமென ஏற்றுக்கொள்ளப்பட்டது.

1994 மார்ச் 8,9 ஆம் திகதிகளில் இரு தரப்பினரும் கொழும்பில் கூடி இவ்விடயம் பற்றி ஆராய்ந்த இடத்தும் எந்த இணக்கமும் ஏற்படுத்த முடியவில்லை. ஆயினும் இந்திய தரப்பினர் சர்வதேசக்கடல் எல்லைகளைக் கடக்கும் கலங்களை மூன்று வகையாகக் கருதவேண்டும் என இலங்கை அரசைக் கேட்டுக் கொண்டனர். அவை,

1. தற்செயலாக வழிதவறி (ளுவசயலiபெ ஏநளளநடள) இலங்கை கடற்பரப்பினுள் செல்லும் கலங்களைக் கடுமையாக அல்லாது மனிதாபிமான முறையில் நடத்த வேண்டும் அத்துடன் அவற்றை அதிசீக்கிரமாகவே திருப்தி அனுப்பிவிட வேண்டிய நடவடிக்கைகளும் எடுக்கப்படல் வேண்டும்.
2. துர் நோக்கங்களுடன் (நேகயசழைரள யஉவiஎவைநைள) இலங்கைக் கடற்பரப்பினுள் செல்லும் கலங்கள் மீது இலங்கைச் சட்டத்திற்கு அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3. மீன்பிடியில் ஈடுபடும் கலங்கள் பற்றி நடவடிக்கை எடுக்கும்போது மிகவும் அவதானமாக, முறைகேடற்ற விதத்தில் நடந்து கொள்ளுதல் வேண்டும்.

மேலும் இந்திய மத்திய அரசு இந்திய மீனவர்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாக இலங்கை அரசுடன் மீண்டும்பலதடவைகள் கூடி ஆராய்ந்த போதிலும் இந்திய மீனவர்கள் சந்திக்கும் ஆபத்துக்கள் நிறுத்தப்படவில்லை. இதற்குக் காரணம் வடபகுதிக் கடற்பரப்பில் கடற்புலிகள் வலிமை பெற்றிருந்தமையினாலும் அவர்களது தற்கொலைத் தாக்குதல்களிலிருந்து தப்புவதற்காக கண்ணில் படுகின்ற படகுகள் அனைத்தையும் தாக்கவேண்டிய அளவுக்கு இலங்கைக் கடற்படையினர் அச்சம் கொண்டிருந்தமையுமாகும். மேலும் தாக்குதல்களுக்குள்ளான இந்தியப் படகுகள் பொதுவாக இலங்கையின் கடல் எல்லைப் பகுதியினுள் குறிப்பாக இலங்கையின் கரையோரப்பகுதிகளுக்குள் வைத்தே தாக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை இந்தியத் தரப்பினர் பலரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

“இந்தியக்கடல் எல்லை எங்கே முடிகிறது என இந்திய மீனவர்களுக்குத் தெரியும், ஆனாலும் தலைமன்னார், நெடுந்தீவுக்கரை வரைக்கும் இந்திய மீனவர்கள் சென்று விடுகிறார்கள்” என்று இராமநாதபுரம் மாவட்ட கலக்டர் எல். கிருஷ்ணன் என்பவர் ஒப்புக் கொண்டார்.

“இலங்கையின் வடபகுதியில்அரசு விதித்துள்ள எரிபொருள் தடை, பொருளாதாரத் தடை காரணமாக தடைசெய்யப்பட்ட பொருட்களை இந்தியாவில் இருந்து கள்ளமாகக் கடத்தி வந்து விற்பதில் மீன்பிடிப்பதைவிட அதிக இலாபம் சம்பாதிக்க முடிகின்றது. கள்ளக்கடத்தலைத் தடுக்கமுடியவில்லை. மக்கள் ஒத்துழைப்புத் தந்தால் ஒழிய எரிபொருள் கள்ளமாகக் கடத்தப்படுவதை நிறுத்தமுடியாது” என தமிழகக் கரையோரக் காவற்படை கிழக்குப்பிரிவு கமாண்டர் கப்டன் N. ளு. யுஉhசநதய கூறியுள்ளார்.

“1 லீற்றர் டீசல் 1500 ரூபாவுக்கும், 1லீற்றர் பெற்றோல் 2400 ரூபாவிற்கும் யாழ்ப்பாணத்தில் விற்கப்படுகிறது” “ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 450 இயந்திரப் படகுகள் இராமேஸ்வரத்தின் கடற்பரப்பைக் கடப்பதாக மதிப்பிடப்படுகிறது. இதனைத் தடுக்க முயன்றும் அது செவிடன் காதில் ஊதிய சங்கு போல் ஆகியுள்ளது. ஆகவே இப்படியான மீனவர் ஊடுருவலைத் தடுக்காவிடில் பாரிய விளைவுகள் உருவாகலாம். அப்படிச் செய்யாது விட்டால் மிகவும் அதிகமான தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கையின் கடற்பகுதிக்குள் ஊடுருவும் வாய்ப்பு பெருமளவில் உண்டு என பேராசிரியர் வி. சூரியநாராயணன் என்பாரும் குறிப்பிடுகின்றார்.

1995 முற்பகுதியில் இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளில் மோதல் தவிர்ப்பு உடன்பாடு ஏற்பட்டுள்ளமையாலும் மீன்பிடிக்க இருந்த தடைச்சற்றுத் தளர்த்தப்பட் டுள்ளமையினாலும் இக்கடற் பரப்பில் தொழில் புரியும் மீன்பிடிப் படகுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழக மீனவர்கள் இலங்கையின் கடற்பரப்பினுள் பெருமளவில் ஊடுருவி வருகின்றனர். இயல்புநிலை திரும்பின் தொழில் விரிவடையும் வாய்ப்புண்டு. இதனால் வடபகுதிவாழ் மீனவர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும் இடையில் மீன்பிடி தொடர்பான பிரச்சினைகள் எழக்கூடிய சந்தர்ப்பம் உண்டாகும். இதற்கு முன்னோடியாக இந்திய ரோலர்களினால் வடபகுதி மீனவர்களின் படுப்பு வலைகள் பல வெட்டப்பட்ட சம்பவமும், பேசலைப் பகுதியில் 1994 டிசம்பரில் ஒரு மீனவர் இந்தி மீனவர்களால் குத்திக் கொலை செய்யப்பட்டதுடன் வேறு ஒருவர் காயப்படுத்தப்பட்டதையும் குறிப்பிடலாம். 1995 ஏப்ரல் முதல்வாரத்தில் வடமராட்சிக் கடற்பகுதியில் கற்கோவளம் என்ற இடத்தில் இந்திய மீனவர்கள் வடபகுதி மீனவர்களைத்தாக்கியதுடன் 1½ இலட்சம் ரூபா பெறுமதியான 40 வலைகளை பறித்தெடுத்ததாகவும் முல்லைத்தீவு வரையிலும் சென்று அப்பகுதி மீனவர்களை அச்சுறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. (ஈழநாதம் 1995) 19 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டு 12-4-95 அன்று கடற்படையினரால் இல இந்திய எல்லையில் வைத்து விடுவிக்கப்பட்டனர். (உதயன் 1995) எனவே இத்தகைய துயர நிகழ்வுகள் எதிர்காலத்தில் எழாவண்ணம் சுமூகமான தீர்வுகள் எட்டப்பட நடவடிக்கை எடுத்தல் அவசியம்.

இந்தியத் தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்ட சில தீர்வுகளுக்கான யோசனைகள் இங்கு பகுப்பாய்வுக்குட்படுத்தப்படுவது அவசியமாகும்.

தமிழக முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா அவர்கள் 1991 ஆகஸ்ட்; 15 இல் சென்னை சென்ஜோர்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தபோது “1974 இல் இலங்கையிடம்அடகு வைக்கப்பட்ட கச்சதீவை மீளப்பெற வேண்டுமென பகிரங்க வேண்டுகோள் விடுத்தார். தேவைப்படின் மத்திய அரசுடன் இது பற்றி விவாதிக்கவும் தயார் என்றும் கூறினார். (தினத்தந்தி 1994)

1993 ஏப்பிரலில் மீன்பிடித் திணைக்களத்தில் நடைபெற்ற விவாதத்தில் பேசியபோது மாநில அரசிற்கு நிலையான அதிகாரங்கள் இருந்திருப்பின் கச்சதீவை எப்போதோ கைப்பற்றியிருக்கும்” (தினத்தந்தி 1994) என்றும்; கூறியிருந்தார்.

ஜெயலலிதாவின் கூற்றுக்கு கருத்து வெளியிட்ட பேராசரிரியர் வி. சூரியநாராயன் “ஜெயலலிதா அவர்கள் கோரிக்கை அவருடைய ஆதரவாளர்களுக்கு உற்சாகம் அளிக்கும் என்ற போதிலும் அது நோய்க்குச் சஞ்சீவி மருந்தாகிவிடாது. அது நிலைமையை மேலும் மோசாமாக்கிவிடும் என்பதே யதார்த்தம் இப்படியான ஒரு கோரிக்கை இந்தியாவின் சமஷ்டிக் கொள்கைக்கே உலைவைத்துவிடலாம். முன்னர் இலங்கைக்கு கச்சதீவை தாரைவார்த்துக் கொடுத்தமை அநியாயமான பகுத்தறிவில்லாத ஒரு செயல் என்ற போதிலும் அது நடந்து விட்டது அதை இப்போது ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். மாநில அரசும் மக்களும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். சர்வதேச எல்லை உடன்படிக்கைகள் யாவற்றையும் தொடர்ந்துவரும் அரசுகள் எவையாயினும் அவற்றை மதிக்க வேண்டும். எனவே மத்திய அரசு 1974 ஒப்பந்தத்தை ஒருதலைப்பட்சமாக முறித்துவிட்டால் அது இந்தியாவின் கௌரவத்திற்கும், நம்பிக்கைக்கும் ஒரு இழுக்காவிடும். இதுபோன்ற ஒப்பந்தங்கள் இந்தியா, மாலைதீவு, மியான்மர், தாய்லாந்து, இந்தோனேசியா ஆகியவற்றுடனும் செய்துள்ளது. இதனால் ஜெயலலிதாவின் பேச்சுக்கு மத்திய அரசு செவிமடுக்க முடியாது” என்றும் கூறியுள்ளார்.

1991 நவம்பரில் இராஜ்ய சபையில் டிவெளிவிவகார இணை அமைச்சர் நுனரயசனழ குயடநசைழ என்பவர் “மிகவும் நிதானத்துடன் விவாதிக்கப்பட்ட பின்னர் 1974, 1976 ஆம் ஆண்டு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. இதுபற்றி ஆலோசிப்பதற்கு வேறு ஒன்றும் இல்லை” என்று கூறியுள்ளார். இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்ட கச்சதீவை மீண்டும் இந்தியா பெற்றுக்கொள்வது என்பது சாத்தியப் படாத ஒன்றாகவே மேற்குறிப்பிட்ட கருத்துக்களில்; இருந்து அறிய முடிகிறது. இதனால் கச்சதீவினையும் சூழவுள்ள பகுதியினையும் நிரந்தரக் குத்தகைக்குப் பெறுதல் போன்று தீர்வு யோசனைகளும் செல்வி ஜெயலலிதா, பேராசிரியர் சூரியநாராயன் என்போரால் முன்வைக்கப்பட்டது.

தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் “தமிழக மீனவர்களின் நலன்களைப் பாதுகாக்க இலங்கையிடமிருந்து கச்சதீவைக் காலவரையறையற்ற குத்தகைக்குப் பெற்றுத்தர வேண்டும். இதனைப் பெற்றுவிட்டால் அத்தீவைச் சுற்றியுள்ள கடல் நீரில் மீன்பிடிக்கும் உரிமை இயற்கையாக இந்திய மீனவர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும் கிடைத்துவிடும் என்பது உறுதி எனவும், இலங்கையிலுள்ள அரசியல் தலைமை மாற்றத்தைப் பயன்படுத்தி மத்திய அரசு மிக விரைவில் இப்பணியைச் செய்ய வேண்டும்” எனவும் கோரியுள்ளார். (தினத்தந்தி - 1994).

இதுபோன்ற ஒரு யோசனையை பேராசிரியர் சூரியநாராயன் என்பாரும் கூறியுள்ளார். “தமிழ்நாட்டு மீனவர்கள், யாத்திரிகர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது அவசியம். இதற்கு மிகவும் உத்தமமான வழி ஒன்றே உண்டு அதாவது கச்சதீவையும் அதனைச் சூழவுள்ள கடற் பகுதியையும் “நிரந்தரக் குத்தகைக்கு” (டுநயளந in Pநசிநவரவைல) எடுத்துக் கொள்வதேயாகும். இந்தக் குத்தகை ஒப்பந்தத்தில் மீன்பிடிக்கும் உரிமை, வலைகளை உலர்த்தும் உரிமை, யாத்திரை செல்லும் உரிமை குறிப்பிடல் வேண்டும். இதனால் பல நூற்றாண்டு காலமாக தமிழக மீனவர் அனுபவித்துவந்த உரிமைகள் பேணப்படலாம்” என்பதாகும். 1974 மே 16 இல் வுin டீiபாய என்ற கடற்பகுதியிலிருந்து இந்தியாவுக்கும் வங்காள தேசத்துக்கும் இடையில் ஒர் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதெனவும், இப்பகுதி இந்தியாவுக்குச் சொந்தமாயிருப்பினும் பங்களாதேசுக்கு நிரந்தர குத்தகை மூலம் மீன் பிடிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறுகின்றார். இதை ஒத்ததாக கச்சதீவு விடயம் அமைய வேண்டும் என்பது இவரது ஆலோசனையாக உள்ளது.

1978 முதல் 1982 வரை இலங்கையில் இந்தியத் தூதுவராக இருந்த தோமஸ் ஆபிரகாம் என்பவர் கச்சதீவுப் பகுதி தொடர்பாக கூறிய கருத்துக்களையும், பேராசிரியர் வி. சூரியநாராயன் இங்கு சுட்டிக்காட்டியுள்ளார். தோமஸ் ஆபிரகாம் இந்தியாவின் இலங்கை பற்றிய கொள்கையை பின்வருமாறு கூறுகின்றார் எனக் குறிப்பிடுகின்றார்.

“இலங்கையின் நட்பைச் சம்பாதிப்பதற்காகவே இந்தியாவின் கொள்கை அமைந்திருப்பதாகக் காணப்படுகிறது. ஆனால் இலங்கை அரசுதரப்பில் இது ஒரு எதிர்மாறான வழியிலே நோக்கப்படுகிறது. கச்சதீவை இந்தியா கொடுத்ததை இலங்கை ஒரு நன்கொடையாகவே கருதவில்லை. அது ஏதோ கச்சதீவு தமக்குச் சொந்தமாக இருந்ததாகவே கருதுகிறது” என்றும்

தமிழ்நாட்டு மீனவர்கள் குறித்து தமிழ்நாட்டு அரசு தமது முக்கியமான ஒரு மூலவளம் இழக்கப்பட்டுவிட்டது எனக் கருதினால் மத்திய அரசு ஏதோ ஒரு வகையில் அவற்றைத் திருப்பிப்பெற ஒர் உடன்படிக்கைக்கு வரவேண்டும். இது இந்தியா வங்காள தேசத்துடன் (வுin டீiபாய) சம்பந்தமான உடன்படிக்கை போல இருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

1976 இல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தப் பிரகாரம் முரரயட ளுரைளா-யனெ துநலயளiபொந (கோவல்சிங் - ஜெயசிங்கா) என்பவர்களிடையே இவ் ஒப்பந்தப் பிரகாரம் பரிமாறப்பட்ட கடிதத்தில் மன்னர் விரிகுடாவுக்கான எல்லை வகுக்கப்பட்டபோது வோட்ஜ் மீன்பிடித்தளம் முழுவதையும் இலங்கை இழக்க நேரிட்டது. ஆயினும் இலங்கை மீனவர்களுக்கு இந்திய அனுமதியுடன் 3 வருடங்களுக்கு மீன்பிடிக்க (லைசன்ஸ்) அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டது. எனவும் அதேபோன்று கச்சதீவு உள்ளிட்ட இலங்கையின் எல்லைப் பகுதிக்குள் 5 மைல் வரையிலான பகுதியில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க இலங்கை அனுமதி வழங்கவேண்டும். எனவும் இது பிழையான நோக்கத்திற்காகவும், சட்டத்திற்கு மாறாகவும் பயன்படுத்திக் கொள்ளப்படமாட்டாது என்ற கருத்தினையும் பேராசிரியர் வி. சூரியநாராயன் வெளியிட்டுள்ளார்.

மேலும், இவர் கருத்து வெளியிடுகையில் ஐ. நா. வெளியீடு ஒன்றில் “வங்காள விரிகுடாவின் தென்பகுதியில் கண்டத்திட்டு விளிம்புப் பகுதியானது இன்னமும் சரியாக எல்லை நிர்ணயிக்கப் படவில்லை. இதற்கான எல்லை வரையறுக்கப்பட்டதும் கச்சதீவுப் பகுதியை இலங்கை குத்தகைக்கு வழங்கும் பட்சத்தில் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் இலங்கை மீனவர்களுக்கு அனுமதி வழங்கமுடியும்” எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் “கச்சதீவுப் பகுதியை குத்தகைக்கு வழங்கும் பட்சத்தில் பதிலாக வோட்ஜ் மீன்பிடி மேடையிலும் இலங்கை மீனவர்களுக்கு மீன்பிடிக்க அனுமதி வழக்கலாம்” எனவும் யோசனைகள் தெரிவிக்கப்பட்டது.

கச்சதீவுப் பகுதியில் இந்தியா இவ்வளவு தூரம் அதிக அக்கறை கொள்வதற்கும், படுகொலைகளின் மத்தியில் உயிரைப் பணயம் வைத்து இந்திய மீனவர்கள் இப்பகுதியில் நுழைவதற்கும் இப்பகுதி கடல்வளப் பொருளாதாரத்தில் கொண்டுள்ள முக்கியத்துவம் பிரதான காரணியாகவுள்ளது. இந்தியதரப்பிற்கு இவ்வலயம் எவ்வளவு முக்கியமோ அதனைவிட அதிகமாக வடபகுதிவாழ் இலங்கைத்தமிழ் மீனவர்களுக்கு முக்கியம் வாய்ந்தது என்பதை வலியுறுத்தவிரும்பிகின்றோம். சுமார் 28742 குடும்பங்களைச் சேர்ந்த 130378 மீனவர்கள் இந்தப் பகுதியின் மீன்பிடியில் தங்கிவாழ்கின்றனர். இந்தியா கோருவது போல் இத்தீவுப் பகுதியினை நிரந்தரக் குத்தகைக்கோ, 5 மைல் பிரதேசத்தில் மீன்பிடிக்க அனுமதிப்பத்திரம் வழங்குவதையோ அனுமதிக்க முடியாது. அவ்வாறு அனுமதிக்கப்படுவது தற்கொலைக்கு ஒப்பான செயலாகும். இதற்கு மாற்றீடாக வோட்ஜ் மீன்பிடிமேடையையோ வங்காளவிரிகுடாவின் தென்பகுதி சார்ந்துள்ள கண்டத்திட்டு விளிம்புப் பகுதியையோ வடபகுதி மீனவர்கள் பயன்படுத்தலாம் என்பது யதார்த்தத்திற்குப் புறம்பானதாகும்.

ஏனெனில் வோட்ஜ் மீன்பிடித்தளத்தின் அமைவிடம் வடபகுதியிலிருந்து மிகத் தொலைவில் அமைந்துள்ளது. இப்பகுதி மீனவர் பயன்படுத்தும் கலங்கள் ஒரு நாட்கலங்களேயாகும். குறிரூட்டல் பாதுகாப்பு வசதியற்ற இக்கலங்களில் வோட்ஜ் மீன்பிடிக்களப்பகுதிக்கு செல்வது முடியாது. அத்துடன் இக்களமானது இந்தியப் பகுதியைச் சார்ந்ததாகவே அமைந்துள்ளது. வடபகுதி மீனவர்களுக்கு சிங்களப் பிரதேசம் சார்ந்து மீன்பிடிக்க இடம் பெயர்வதும் நடைமுறைச் சாத்தியமற்ற ஒன்றாகும். வளங்களுடன் ஒப்பிடுகையில் இறால், கடலட்டை, சங்கு போன்ற அந்நியச் செலவாணியை ஈட்டித்தருகின்ற கடலகப் பொருட்களும் வோட்ஜ் மீன்பிடித்தளத்தில்பெற முடியாது. ஆகவே கச்சதீவுப்பகுதிக்கு பதிலீடாக வோட்ஜ் மின்பிடி மேடையை வழங்குவது புவிவியல் ரீதியிலோ வடபகுதி மீனவர்களுக்குச் சாதகமற்றதாகவே உள்ளது. வங்காளவிரி குடாவின் தென்பகுதியில் கண்டமேடையின் விளிம்புப்பகுதிக்கும் சென்று மீன்பிடியில் ஈடுபடுவது யாழ் வடகரையோர மீனவர்களுக்கு ஓரளவு சாதகமாக இருப்பினும் மன்னார்த்தீவு, யாழ்குடாநாட்டு ஏரிப்பகுதி சார்ந்த மீனவர்களுக்கு பொருத்தமற்ற, சென்றடையமுடியாத பகுதியாக அது இருப்பதால், இத்தகைய தீர்வும் சாத்தியப்படாத ஒன்றாகவே இருக்கும்.

கச்சதீவுப் பகுதியை இந்திய மீனவர்களுக்கு குத்தகைக்கு வழங்கிவிட்டு வடபகுதிவாழ் இலங்கைத் தமிழ் மீனவர்களை வோட்ஜ் மேடைக்கும், வங்காளவிரிகுடாப் பகுதிக்கும் செல்லலாம் எனயோசனை தெரிவிக்கும் இந்தியத்தரப்பினர் கச்சதீவுப் பகுதியில் பாதிப்புற்றிருக்கும் இராமநாதபுரம், புதுக்கோட்டை தஞ்சாவூர் மீனவர்களை வோட்ஜ் மேடைக்குச் செல்லலாம் என ஏன்? ஆலோசனை வழங்கவில்லை.

கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இலங்கை இராணுவத்தினரின் கெடுபிடிகளுக்கு உள்ளாகி உயிர்களையும், குடியிருப்புக்களையும் இழந்து நலிவடைந்திருக்கும் வடபகுதி மீனவர்கள் இப்பகுதியில் உள்ள கடலக வளங்களை இப்போதுதான் சிறிதளவில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளார்கள். இந்நிலையில் கச்சதீவுப்பகுதியையும், சூழவுள்ள 5மைல் பகுதியையும் நிரந்தரக் குத்தகைக்கு கேட்பது என்பது பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாகவே முடியும்.

மோதல் தவிர்ப்பை பயன்படுத்தி இன்று தமிழக மீனவர்கள் பெரும் எண்ணிக்கையில் வடபகுதி கடற்பரப்பி;ல் நுழைந்து வளங்களை அள்ளிச் செல்வதுடன் மீனவர்களின் உடமைகளை, சேதப்படுத்தியும் கொள்ளையடித்தும் செல்கின்றனர். 1974 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் ஆறாவது சரத்தில் “இந்தியாவினது இலங்கையினதும் படகுகள் மற்றவரின் நீர்ப்பரப்பினுள் பாரம்பரியமாக அனுபவித்துவந்த உரிமைகளைத் தொடர்ந்து அனுபவிப்பர்” எனக் கூறப்பட்டுள்ளபடி எதுவரையிலும் மீன்பிடிக்கலாம் எனச் சரியாக வரையறுக்கப்படவில்லை. குறிப்பிட்ட பாக்கு நீரிணைப்பகுதியில் உள்ள இலங்கையின் எல்லைக்குள் வரும் முழு கடற் பரப்பினையும் இந்திய மீனவர்கள் பயன்படுத்தலாம் என்பதையே மேற்குறிப்பிட்ட வாசகம் விளங்குகிறது. மீன்பிடித்தொழில் நவீனத்துவமடைந்து தொழில்களின் எண்ணிக்கையும் பெருகியுள்ள நிலையில் 1974 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் உள்ள சில சரத்துக்கள் மீள ஒழுங்குபடுத்த வேண்டிய காலம் நெருங்கிவிட்டதை நினைவூட்டுகிறது.

இலங்கையின் வடபகுதி மீனவர்களதும், தமிழக மீனவர்களதும் நன்மைகருதி பின்வரும் ஆலோசனைகளை முன்வைக்க விரும்புகின்றோம்.

1. 1974 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் உள்ள 5வது சரத்து தொடர்ந்தும் பேணப்படுவதுடன் 6வது சரத்தில் திருத்தங்கள் அல்லது மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும். இம்மாற்றமானது ஒவ்வொரு நாடும்தத்தமது எல்லைப்பகுதியினுள் மட்டும் மீன்பிடித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், மற்றைய நாட்டு எல்லைக்குள் அந்த நாட்டின் அனுமதியின்றி பிரவேசிக்கக் கூடாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்
2. ஆக்கபூர்வமான முடிவுகளை எடுப்பதற்கு மேற்கொள்ளப்படும் கலந்துரையாடலில் இப்பகுதியில் மீன்பிடித்தொழிலில் ஈடுபடுபவர்களின் சார்பில் பிரதிநிதிகள் கலந்து கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்குதல் வேண்டும். இதன் மூலம் இப்பகுதி மீனவர்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் தெளிவாகும்.
3. இப்பகுதியில் ரோலர் மீன்பிடிமுறைகள் சட்டபூர்வமாக முற்றாகத் தடைசெய்யப்படுதல் வேண்டும்.
4. இந்திய அரசானது வடபகுதி வாழ் தமிழ்மீனவர்களையும் அவர்கள் வாழுகின்ற கரையோரப் பிரதேசத்தின் புவியியல் மற்றும் அரசியல் ரீதியான காரணிகளையும் கருத்திற்கொண்டு கச்சதீவினையும் அதனைச் சூழ்ந்துள்ள பகுதிகளையும் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுத்தல் வேண்டும்.
5. கச்சதீவையும் அதனைச் சார்ந்த 5மைல் கடற்பிரதேசத்தையும் நிரந்தரக் குத்தகைக்குப் பெறும் நோக்கத்தை இந்தியா தவிர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.
6. ஒவ்வொரு பகுதியினுள்ளும் அத்துமீறி நுழையும் மீனவர்களை கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்தி சட்டரீதியான நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.