பக்கங்கள்

திருக்குறள்

புதன், ஏப்ரல் 18, 2012

ருசிய அதிபர் மாளிகை (கிரெம்லின் மாளிகை)


தமிழில் பேச வெட்கம் ஆனால்.............
உருசிய அதிபர் மாளிகையின் பெயர் அழகு தமிழ் மொழியில்...!!


உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டையும், பல்வேறு மன்னர்கள் பல்வேறு காலகட்டங்களில் ஆண்டுவந்துள்ளன்ர். தங்களது நாட்டை ஆண்ட மன்னர்கள் அவர்களது வரலாற்றையும், ஆட்சியையும் உலகிற்கு எடுத்துக்கூறும் விதத்தில், நினைவு சின்னங்களாக பல்வேறு அரண்மனைகளையும், மாளிகைகளையும், கோட்டைகளையும், சிற்ப்பங்களையும், கல்வெட்டுகளையும், கோவில்களையும், தேவாலயங்ளையும், மசூதிகளையும் கட்டியுள்ளனர். அவ்வாறு கட்டிய பல வரலாற்று சின்னங்கள் இன்று அந்த நாட்டின் சிறப்பாக விளங்குகிறது.

அத்தகைய புகழ்வாய்ந்த பல வரலாற்று சின்னங்களில், இன்று நாம் பார்க்கவிருப்பது... உருசிய நாட்டின் புகழ்பெற்ற “ கிரெம்லின் மாளிகை “ ஆகும். உருசியாவை ஆண்ட “ ஜார் மன்னன் முதலாம் நிக்கோலஸால் “ ஏகாதியபத்திய மன்னராட்சி காலத்தின் பெருமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நோக்கத்தில் 19ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டதாகும். இந்த மாளிகை ஜார் மன்னர்களின் மாஸ்கோ வாழ்விடமாக இருந்துள்ளது.

கிரெம்லின் மாளிகை உருசிய நாட்டின் தலைநகரான மாஸ்கோ நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த பலப்படுத்தப்பட்ட கோட்டையாகும். தெற்கே மாஸ்க்வா ஆறும், கிழக்கே புனித பாசில் தேவாலயம் மற்றும் செஞ்சதுக்கமும், மேற்கே அலெக்சாண்டர் பூங்காவையும் எதிர்நோக்கியுள்ளது. கிரெம்லின் மாளிகை 125மீ நீளமும், 47மீ உயரமும், 25 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவையும் கொண்டு மிகப் பிரமாண்டத் தோற்றத்தில் காட்சியளிக்கிறது.

உருசியாவின் நன்கு அறியப்பட்ட கிரெம்லின்களில் (கோட்டைகளில்) ஒன்றான இதனுள் நான்கு அரண்மனைகளும், நான்கு தேவாலயங்களும் உள்ளன. கோட்டைச் சுவர்கள் சூழ்ந்துள்ள இக்கோட்டையில் உள்ள கோபுரங்கள் கிரெம்லின் கோபுரங்கள் என அழைக்கப்படுகின்றன. அரண்மனையின் சிறிய முன்கூடம் என்பதே நம்மால் நினைத்துக்கூட பார்க்கமுடியாத அழகில் மிகபிரம்மாண்டமாக உள்ளது. இந்த அரண்மனையில் சுமார் 700 அறைகள் உள்ளன.

கிரெம்லின் (Kremlin) என்ற உருசிய சொல் “ கோட்டை “ அல்லது “ கொத்தளத்தை “ குறிப்பதாகும். இந்த கிரெம்லின் மாளிகை ஜார் மன்னர்களின் வாரிசுகளுக்கு சொந்தமான பண்ணை நிலத்தில் அமைந்துள்ளது. கிரெம்லின் மாளிகை கி.பி 1837 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு கி.பி 1849 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. கிரெம்லின் மாளிகையை வடிவமைத்தவர் புகழ்வாய்ந்த செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரைச் சேர்ந்த தலைமை கலைஞர் “ கான்ஸ்டாண்டைன் தோன் “ ஆவார். இவருடைய தலைமையின்கீழ் பல்வேறு கலைஞர்கள் கிரெம்லின் மாளிகையை உருவாக்கினர். கான்ஸ்டாண்டைன் தோனின் கலைக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதத்தில் உருசியாவில் “ தோனால் “ கட்டப்பட்டவைகள் இராணுவ அருங்காட்சியகம், புனித செவியர் கேத்டரல் தேவாலயம்.

தோனால் கிரெம்லின் இராணுவ அருங்காட்சியகம் கி.பி 1844ல் துவக்கப்பட்டு கி.பி 1851 கட்டிமுடிக்கப்பட்ட்து. இந்த பழமை வாய்ந்த இராணுவ அருங்காட்சியகத்தில் மன்னர்கள் போரில் உபயோகபடுத்திய போர் கருவிகள், வாகனங்கள், உடைகள் மற்றும் அலங்கார பொருட்கள், ஆபரணங்கள் போன்றவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

தோனால் கட்டப்பட்ட மற்றொரு சிறப்பு பழமை வாய்ந்த தலைமைக் கிறித்துவ கோவிலான புனித சேவியர் தேவாலயம் ஆகும். இந்த தேவாலயத்தின் அழகை மாஸ்க்வா நதிகரையில் உள்ள பாலத்தில் இருந்து எடுத்த புகைப்படத்தைப் பாருங்கள் அதன் அழகை சொல்வது அவ்வளவு எளிதல்ல. இந்த தேவாலயத்தின் கோபுரத்தின் உயரம் மட்டும் 105மீ அதாவது 344 அடி உயரம். புனித செவியர் கேத்டரல் தேவாலயம்தான் உலகிலேயே மிக உயரமான பண்டைய கால மரபுகளை பிரதிபலிக்கும் வகையில் கட்டப்பட்ட ஒன்று.

செஞ்துக்கம் உருசியாவின் மத்தியில் அமைந்துள்ள மிகப்பரந்த வீதியாகும். இதன் அருகில்தான் உருசியாவின் அதிபர் மாளிகை (கிரெம்லின் மாளிகை). இது உருசியாவின் மிகமுக்கிய மத்திய பகுதியாக விளங்குகிறது. அகலமான இந்த வீதியின் நான்கு புறங்களிலும் அரண்மனைகளும், கிரெம்லின் கோபுரங்களும் சூழ்ந்து காணப்படுகிறது. இங்குள்ள க்ரெம்லின் கோட்டையின் ஒருபகுதியில் தான் உருசிய புரட்சிக்கு தலைமையேற்ற “ விளாடிமிர் லெனின் “ அவர்களது உடல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.


இத்தகைய புகழ்வாய்ந்த கிரெம்லின் மாளிகைதான் இன்று உருசியாவின் அதிபர் மாளிகையாக செயல்பட்டுவருகிறது. எவ்வாறு வெள்ளை மாளிகை என்பது அமெரிக்க அரசினை குறிப்பிட பயன்படுத்தப்படுகிறதோ அவ்வாறே கிரெம்லின் என்னும் சொல் சோவியத் ஒன்றியத்தின் அரசியலைக் குறிக்கும் சொல்லாக (1922–1991) விளங்கியது. உருசியாவின் அதிபர் மாளிகை கட்டிடக்கலைகளின் சிறப்பாக திகழ்கிறது. இதில் அரசின் மிக முக்கியத்துவம் வாய்ந்த இலாக்காக்கள் இயங்கி வருகின்றன. உருசியா செல்பவர்களின் பயணத்திட்டதில் வரலாற்று முக்கியதுவம் வாய்ந்த இந்த மாஸ்கோ நகர் மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது. புகைப்படபிரியர்களுக்கு மிக சிறப்பானப்பகுதியாக இந்த கிரெம்லின் மாளிகையும் அதனை சுற்றியுள்ள பிற அரண்மனைகளும் விளங்குகின்றன.

இவ்வளவு புகழ் வாய்ந்த உருசியநாட்டு அரண்மனைகளையும், அதிபர் மாளிகையையின் பெருமைகளையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டியதன் நோக்கம் என்ன(?) என்றால்... இந்த உலகபுகழ் வாய்ந்த “ கிரெம்லின் மாளிகை - உருசியநாட்டு அதிபர் மாளிகை “ யின் பெயரை அவர்கள் அழகு தமிழ் மொழியில் எழுதியுள்ளார்கள் என்பதை உங்களால் நம்பமுடிகிறதா(?). தமிழில் பேசுவதற்கும், தமிழில் பெயர் வைப்பதற்கும் நாம் தயங்கும் வேளையில், தமிழ் மொழிக்கே தொடர்பு இல்லாத உருசிய நாட்டு அரசு தனது அதிபர் மாளிகையின் பெயரை அழகு தமிழ் மொழியில் எழுதியுள்ளது.
கிரெம்லின் மாளிகையின் பெயர் பலகையில் முதலாவதாக அவர்களது தாய்மொழியான உருசிய மொழியிலும், இரண்டாவதாக அண்டை நாட்டு மொழியான சீனத்திலும், உலகப் பொதுமொழியான ஆங்கிலத்திலும், நான்காவதாக நமது தமிழ் மொழியிலும் எழுதியிருக்கிறார்கள். தமிழைவிட எத்தனையோ உலக மொழிகள் இன்று பல..., உலகில் பெரும்பாலான மக்களால் பேசப்படுகின்றன. ஆனால் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு தமிழ்மொழியில் அதிபர் மாளிகையின் பெயரை எழுதியதற்கு அவர்கள் கூறும் காரணம், தமிழர்களாகிய நம்மைச் சிந்திக்க வைப்பதாக உள்ளது.

உலகின் ஆறு மொழிகள்தான் மிகவும் பழமையானவை, தொன்மையானவை. கிரேக்கம், லத்தீன், எபிரேயம், சீனம், தமிழ், சமஸ்கிருதம். இந்த ஆறு மொழிகளில் நான்கு மொழிகள் இன்று வழக்கில் இல்லை. உலகில் உள்ள முக்கிய மொழிகளான 642 மொழிகளில், எங்களுக்கு இலக்கிய வரலாற்று செழுமையான மொழியாக தமிழ் மொழி தென்பட்டது. அந்த மொழியை சிறப்பிக்கவே கிரெம்லின் மாளிகை என தமிழில் எழுதினோம் என்று கூறுகிறார்கள். மேலும் அங்குள்ள நூலகத்தில் அரிய பல நூல்களுல் நமது உலக பொதுமறை நூலான திருக்குறளும் அங்கே வைக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு கூட நம் தமிழின் பெருமை தெரிந்துள்ளது. ஆனால் நாமோ, இங்கு நமது இல்லங்களுக்கும், அங்காடிகளுக்கும், நிறுவனங்களுக்கும் தமிழிலா பெயர் வைக்கின்றோம் என்று சற்று யோசித்துப்பாருங்கள்(!!!). அந்த அளவுக்கு தமிழ் பேச்சும், எழுத்தும், பெயரும் நம்மை அவமானப்படுத்துவதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். இனிவரும் காலங்களிலாவது அனைத்து இடங்களிலும் நாம் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து, தமிழுக்கு பெருமை சேர்ப்போம்...

குறிப்பு: இந்த கட்டுரையை படிக்கும் உருசியாவில் வாழும் தமிழ் நண்பர்கள் யாரேனும், தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்த புகழ்பெற்ற கிரெம்லின் மாளிகையின் தமிழ் பெயர் பலகையின் புகைப்படத்தை எனது மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். அந்த புகைப்படம் மேலும் இந்தக் கட்டுரைக்கு ஆதாரபூர்வாமக அமையும். நன்றி.
-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக