பக்கங்கள்

திருக்குறள்

ஞாயிறு, ஏப்ரல் 01, 2012

வெங்காயம் !!


 
வெங்காயம் கி.மு. 5000 வருடத்திலிருந்தே உணவாக உபயோகப்பட்டிருக்கலாம். ஆனால் இவை பயிரிடப்பட்ட வெங்காயம் என்பது சந்தேகம். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கி.மு. 3000 ஆண்டுகளில், பழைய கால எகிப்தில் வெங்காயம் பயிரிடப்பட்டு, பிரமிடுகளை கட்டிய வேலையாட்களுக்கு உணவாக வழங்கப்பட்டு வந்தது என்கிறார்கள். வெங்காயத்தில் வளையங்கள், அதன் கோளம் போன்ற வடிவம் நிரந்தரமான வாழ்க்கையை குறிப்பிடுவதாக நம்பிய எகிப்தியர்கள் வெங்காயத்தை வழிபட்டனர். வெங்காய சுவடுகள் ‘மம்மி’யாக பிரமிடில் வைக்கப்பட்ட மன்னன் ராமசஸ் கண்களில் காணப்பட்டன. இறந்தவர்களுடன் வெங்காயத்தை புதைத்தால் உயிர் திரும்ப வரும் என்று எகிப்தியர்கள் நம்பினர். கிரீஸ் தேசத்தில் விளையாட்டு வீரர்கள் அதிக வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொண்டனர். மத்திய காலங்களில் வைத்தியர்கள், தலைவலி, வழுக்கை, பாம்புக்கடி இவற்றுக்கு வெங்காயத்தை வைத்தியமாக பயன்படுத்தினர். கி.பி. 1500 வருடங்களில் பெண்களின் மலட்டுத்தன்மைக்கு வைத்தியர்கள் வெங்காயத்தை மருந்தாக பயன்படுத்தினர்.
வெங்காயத்தை பச்சையாக, வேக வைத்து, வறுத்து, சுட வைத்து ஆவியில் வேக வைத்து, வதக்கி பல வழிகளில் உண்ணலாம். இந்திய உணவின் அஸ்திவாரமும் அடிப்படையும் வெங்காயம் தான் (சிறு சமையல் மற்றும் வெங்காய வரலாறு !!!!!!!!!!!!!எங்கோ படித்து பிடித்தது )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக