பக்கங்கள்

திருக்குறள்

திங்கள், ஏப்ரல் 16, 2012

"தமிழ்ப் புத்தாண்டு" ங்கிற ஒன்னே கிடையாது!



1. தமிழ்ப் புத்தாண்டு நாள் = பண்டை இலக்கியங்களில் கிடையாது! Itz a latter day practice!

2. சித்திரை / ருத்ரோத்காரி வருஷம் etc = மதம் மூலமாகத் "தமிழ்ப்" புத்தாண்டு எனப் பரவியது!

3. தமிழறிஞர்கள் சொல்வது என்ன-ன்னா: தமிழின் அடையாளம் தமிழ் மூலமா இருக்கட்டும், மதம் மூலமா வேணாம்! - (தமிழ் = அனைத்து சமயங்களுக்கும் பொதுவானது!)


Tamizh aRignars devised a Notation for Tamizh, in this context...
* Year = Use 'வள்ளுவர் ஆண்டு' as Tamizh Numbering Sequence!
* Month = Use 'தை', which is the most famous month in tamizh literature!
This is only for tamizh related standards; For General life = Common Era (CE) applies for all, world over!

You can still celebrate ருத்ரோத்காரி வருஷம் etc & do poojas at home!
But pl DONT brand it as a "Tamizh" Year!
You are free to call it Hindu Year, Nandana or whatever! Dot!

.....Now, the full post, with literary evidences & logical reasoning


பந்தல் வாசகர்களுக்கு இனிய (தமிழ்???) புத்தாண்டு வாழ்த்துக்கள்:)

இன்னிக்கி, தமிழின் அடிப்படைக்கே சென்று பாக்கப் போறோம் = எது புத்தாண்டு-ன்னு?
போய்ப் பார்த்தா........."தமிழ்ப் புத்தாண்டு"-ங்கிற ஒன்னே கிடையாது போல இருக்கே!:) அடி ஆத்தீ....மேல வாசிங்க:)))
------------------------------------

எது தமிழ்ப் புத்தாண்டு = தையா? சித்திரையா? ன்னு பல விவாதங்கள்/ சண்டைகள் எழுந்து.....ஓரளவு ஓய்ந்தும் விட்டன!
தமிழக அரசியலில் அரசாணைகளும் மாறி விட்டன!:)

ஆனா, இப்போது மீண்டும் ஜெ - கலைஞர் போர்:)
"சித்திரையில் முத்திரை" -ன்னு ஒரு கட்சி! "சித்திரையில் நித்திரை" -ன்னு இன்னொரு கட்சி!
முத்திரையோ, நித்திரையோ....அளப்பறை மட்டும் இருக்கு:))
2007 இல் கலைஞரே..."பரவாயில்லை, தமிழனுக்கு இரண்டு புத்தாண்டுகள் இருக்கணும் ன்னா இருந்துட்டுப் போகட்டுமே - அதுவும் சிறப்பே" ன்னு சொன்னவரு தான்!:)
கழகத் தொலைக்காட்சிகளின் சிறப்பு நிகழ்ச்சி வரும்படியை நிறுத்தி விடுவாங்களா என்ன?:)
தமிழ்....பாவம்! = இவங்க போதைக்கு, ஊறுகாயாகப் போய்விட்டது:(

(updated...Apr-14-2012): இது ஏதோ கருணாநிதி ஆரம்பித்து வைத்தது-ன்னு சிலர் நினைத்துக் கொண்டு அதற்காகவே எதிர்க்கிறார்கள்!:)
ஆனால், கலைஞருக்கும் முன்னமேயே, ஈழத்தில்.....அப்போது புலிகள் கோலோச்சிய யாழ்ப்பாணத்தில், இது நடைமுறைக்கு வந்தது தான்!

ஒரு வேளை, அண்ணா முதலமைச்சராய் இருந்த போதே, மதறாஸ்->தமிழ்நாடு பெயர் மாற்றம் போல், இச்சட்டமும் வந்திருந்தால், இன்னிக்கி இம்புட்டு பேச்சு இருந்திருக்காதோ? என்னமோ?:)))
எது எப்படியோ.....இது karunanidhi formula அல்ல! இது tamizh aRignar formula!
(end of update)

1. இதெல்லாம் அரசாங்கச் சட்டம் போட்டு, மக்களைக் "கொண்டாட" வைக்க முடியாது! இது என்ன ஹர்ஷவர்த்தனர் காலமா?:)
2. மக்களிடம் - விழிப்புணர்வு மட்டுமே ஏற்படுத்த முடியும்!! - இதை நல்ல தலைவர்களால் / தொடர்ந்த முயற்சிகளால் மட்டுமே ஏற்படுத்த இயலும்.

பின்பு எதற்கு இந்தக் கட்டுரை? ன்னு பாக்குறீங்களா?
உண்மை அறியும் ஆவல் உள்ளோர்...அரசியலை ஒதுக்கி விட்டு....சற்று, உன்னிப்பா நோக்குங்க:

* தை என்பவர்கள் = பெரும்பாலும் தனித் தமிழ்க் கொள்கை உடையவர்கள் (அ) பகுத்தறிவு இயக்க வழி வந்தவர்கள்!
* சித்திரை என்பவர்கள் = பெரும்பாலும் வடமொழியோடு ’அனுசரித்து’ போகிறவர்கள் (அ) மதம் சார்ந்த மடாதிபதிகள் - சமய வழி வந்தவர்கள்!

ஆக, இரண்டு கட்சிகள்!
இதில் எந்தக் கட்சி சரி? ன்னு புகுந்தால், புலி வாலைப் பிடித்த கதை தான்! முடிவே இல்லை!:)
தங்களுக்குச் சாதகம் இல்லாதவற்றை மறைத்தும், சாதகமானதை "ஆதாரம் போல்" காட்டியும்...அவர் சொன்னார்/ இவர் சொன்னார் என்று பல பேச்சுக்கள்!

ஆனால்....
தமிழ் இலக்கியம் = காலத்தின் கண்ணாடி!
அது "புத்தாண்டு" பற்றி என்ன சொல்கிறது?
"அடிப்படைக்கே" சென்று பார்த்தால் என்ன? = அதுவே இந்தக் கட்டுரை!


குறிஞ்சிப்பூ

முல்லைப்பூ

எந்தச் சார்பு நிலையிலும் நிற்காது, தமிழைத் தமிழாக அணுகும் முயற்சியே மனத்துக்குப் பிடித்தமானது!

அதுக்காக...விருப்பு வெறுப்பே கூடாது-ன்னு சொல்லலை!
கொள்கை விருப்பு-வெறுப்பு உள்ளவன் தான் மனிதன்! ஆனால் அதை நம் சொந்த வாழ்வில் வச்சிக்கணும்! பொதுவான இலக்கியத்தில் அல்ல!
(*** இலக்கியத்தில் மட்டுமே கொள்கை, என் சொந்த வாழ்வில் bye bye-ங்கிற "koLgai kundrus" கதை தனி:))

நமக்கு "விருப்பமான உண்மைகள்" என்பது வேறு!
"உண்மையான உண்மைகள்" என்பது வேறு!

சில நேரம் இரண்டு உண்மைகளும் ஒன்றுபடலாம்! சில நேரம் மாறுபடலாம்!
ஆனால்.....நம் விருப்பத்துக்கு மாறாகவே இருப்பினும்....
* தமிழ் = தொன்மம்!
* தமிழின் தொன்மத்தில், நம் சுய விருப்பு வெறுப்புகளை ஏற்றி விடக் கூடாது!
(முன்பு - "யார் தமிழ்க் கடவுள்?" என்று வந்த பதிவுகளும், இதையொட்டியே!)

* இன்று இன்றாக இருக்கட்டும்! 
* தொன்மம் தொன்மமாக இருக்கட்டும்!

இந்த முன்னோட்டம் - கண்ணோட்டத்தோடு, கட்டுரையைத் துவங்கலாமா?
எது தமிழ்ப் புத்தாண்டு = தையா? சித்திரையா?


முன்குறிப்பு (அ) முன்னெச்சரிக்கை:

1) தமிழறிஞர்கள் பலர் 1921 (அ) 1935 இல், பச்சையப்பன் கல்லூரியில் (அ) திருச்சியில் ஒருங்கே கூடி......தமிழ் ஆண்டு பற்றி, ஆய்ந்து அறிவித்தார்கள்!
யார் யார்? = மறைமலை அடிகள், தமிழ்த் தென்றல் திரு.வி. க,
நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோம. சுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் மற்றும் பலர்!

ஆனால், அவர்கள் என்னென்ன விவாதித்தார்கள், அந்த ஆய்வுக் குறிப்புக்கள் என்னென்ன? என்பது இன்று வாசிக்கக் கிடைக்கவில்லை!
இறுதி அறிக்கை மட்டுமே கிடைக்கிறது! அது என்ன சொல்கிறது?

* இப்போது சொல்லப்படும் பிரபவ-விபவ என்னும் அறுபதாண்டுகள், தமிழ் அல்ல!
* திருவள்ளுவர் பெயரில், நாம் ஒரு தொடர் ஆண்டினைப் பின்பற்றல் நலம்! - அதையே தமிழ் ஆண்டு என இனிக் கொள்ள வேண்டும்!
* திருவள்ளுவர் காலம் கி.மு. 31= எனவே ஆங்கில ஆண்டுடன் 31-ஐக் கூட்டினால் திருவள்ளுவர் ஆண்டு!

நல்லாக் கவனிங்க: வள்ளுவர் ஆண்டு முறை தான் பேச்சே ஒழிய, சித்திரையா? தையா?ன்னு பேசினாங்களா? = இல்லை (அ) குறிப்பு கிடைப்பதில்லை!

முது பெரும் தமிழ் அறிஞர்கள் = அவர்களை மதித்து, அவர்கள் வழியிலேயே சென்று, இலக்கிய ஆய்வு செய்வது நல்லது தானே? அதைத் தான் இக்கட்டுரையில் காணப் போகிறோம்!
---------------

2) பிரபவ-விபவ என்னும் 60 ஆண்டுகள், தமிழ் ஆண்டுகளே அல்ல! அத்தனையும் சம்ஸ்கிருதப் பெயர்கள்!
வராஹமிஹிரர் பயன்படுத்திய சுழற்சி முறை = 60 சம்வத்ஸரங்கள்

அவற்றுக்கு ஆபாசக் கதைகளை, ’புராணம்’ என்ற பெயரில் கோர்த்துச் சொல்வாரும் உண்டு!
அபிதான சிந்தாமணி என்னும் பின்னாள் ’கலைக்களஞ்சியமும்’ அதையே சொல்கிறது!

ருத்ரோத்காரி, ரக்தாக்ஷி ன்னுல்லாம் பேரு வரும்!
= டேய், அது தமிழா???:))

(ஆமாம்....தமிழ் தான்! ஜ, ஷ, ஸ, ஹ எல்லாம் எப்பவோ தமிழ் ஆயிருச்சி-ன்னு பேசும் இணையக் கொத்தனார்-நாத்தனார்கள் நம்மிடையே உண்டு!:))) அது பற்றி இங்கு பேச்சில்லை!:)

நினைவில் வையுங்கள்:  ஜ-ஷ புகுந்து பரவலாகி விட்டாலும், அவை உயிர்-மெய் எழுத்துக்கள் அல்ல! they are just "add-ons"
** அவற்றைத் "தமிழ் எழுத்துக்கள்" ன்னு யாரும் சொல்வதில்லை! = அவை "கிரந்த எழுத்துக்கள்"
** அதே போல்: ருத்ரோத்காரி, ரக்தாக்ஷி = தமிழ் ஆண்டுகள் அல்ல! = அவை இந்து ஆண்டுகள்!

Hindu Calendar! or Salivahana Sagam or Vikarama Sagam...whatever!
= But Dont call them "Tamil Years"
http://en.wikipedia.org/wiki/Hindu_calendar
Tamizh is not only Hindu; It is Much More!

மதம் மதமாக இருக்கட்டும்! அதை மொழி அமைப்பில் புகுத்தித் திணிக்க வேண்டாமே!
= இதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது என்றே கருதுகிறேன்!



3) சரிப்பா, பிரபவாதி ஆண்டுப் பெயர்கள் வேணாம்;
ஆனால் "சித்திரை" தானே புத்தாண்டுப் பிறப்பு? அதை எதுக்கு தை மாசத்தில் கொண்டு போய் மாத்தி வைக்கணும்? ன்னு சிலர் "வேறு ரூபத்தில்" கேட்கத் தலைப்பட்டு இருக்கிறார்கள்!:))

இவர்களின் வாதம் வானியல்/ சோதிடம் அடிப்படையில் அமைந்துள்ளது;
மேஷம் (Aries) தான் முதல் ராசி!
சூரியன் மேஷத்தில் புகுவது = சித்திரை = எனவே அதுவே புத்தாண்டு-ன்னு இவர்கள் வாதம்!

Okay, Agreed! சித்திரை = மேஷம் புகும் மாதம் தான்!
ஆனால் மேஷம் புகுவதே = "ஆண்டின் துவக்கம்" என்பதற்கு என்ன ஆதாரம்? ன்னு கேட்டா....பதில் இல்லை!:)
ஒரு பண்பாட்டின் ஆண்டுப்பிறப்பு = சோதிட அடிப்படையில் தான் இருக்கணும் -ங்கிறதுக்கு என்ன விதி? Any Proof of Evidence?

பொதுவா, சித்திரை = வசந்த காலம் (இளவேனில்)!
ஒரு ஆண்டு "வசந்தத்தில்" துவங்குதல் தானே ’மரபு’?-ன்னு இவங்களாச் சொல்ல ஆரம்பிச்சிருவாங்க!:))
ஆனா அந்த "மரபு"க்கு தரவு? ஆதாரம்??


சரி, இதெல்லாம் வேண்டாம்! அடிப்படையிலேயே கையை வைப்போம், வாங்க! :))
"புத்தாண்டு" ங்கிற ஒன்னு தமிழ் இலக்கியத்தில் இருக்கிறதா?-ன்னு பார்ப்போமா?

1. தொல்காப்பியம்:

தொல்காப்பியம் - அதானே முதல் நூல் - அங்கிருந்தே துவங்குவோம்!
புத்தாண்டு = தொல்காப்பியத்தில் இல்லை!
ஆனால், எதை முதல் பருவமாகத் தொல்காப்பியம் சொல்கிறது?

மாயோன் மேய காடு உறை உலகமும்,
சேயோன் மேய மை வரை உலகமும்,
....
காரும் மாலையும் = முல்லை   
குறிஞ்சி = கூதிர், யாமம் என்மனார் புலவர்!

ஆக, கார் காலம் தான், திணைகளுள் முதல் காலமாகக் குறிக்கிறது தொல்காப்பியம்!
* முதல் திணை = முல்லை!
* முதற் காலம் = மழைக் காலம்!
பண்டைத் தமிழகத்தில் "மழை வருதலே", முதன்மையாக/ மங்களகரமாகக் கருதப்பட்டதோ என்னவோ?

இது திணை வரிசை மட்டுமே! இதான் புத்தாண்டுத் துவக்கம்-ன்னு வெளிப்படையாக் குறிக்கவில்லை!

ஆனால் இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் - உச்சிமேல் புலவர்கொள் நச்சினார்க்கினியர் - கார்காலம் ஆண்டுத் துவக்கம்-ன்னு வெளிப்படையாக் காட்டிச் செல்வார்!
(உரை: கால உரிமை எய்திய ஞாயிற்றுக்கு உரிய சிங்க ஓரை முதலாக, தண்மதிக்கு உரிய
கற்கடக ஓரை ஈறாக வந்து முடியுந்துணை ஓர் யாண்டாம்)
-----------------------

2. சங்க காலம் - எட்டுத் தொகை/ பத்துப் பாட்டு

பல பாடல்கள், "தைஇத் திங்கள்" பற்றிப் பேசுகின்றன!
தைந்நீராடல் = முது பெரும் தமிழ் மரபு!
ஆனால் அதான் ஆண்டின் துவக்கம் ன்னு சொல்கின்றனவா? = இல்லை!

நற்றிணை =தைஇத் திங்கள் தண்கயம் படியும்
பெருந்தோள் குறுமகள்

குறுந்தொகை = தைஇத் திங்கள் தண்ணிய தரினும்

புறநானூறு = தைஇத் திங்கள் தண்கயம் போல்
கொளக் கொளக் குறையாக் கூழுடை வியனகர்

ஐங்குறுநூறு = நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும்
தைஇத் திங்கள் தண்கயம் போல

கலித்தொகை = தையில் நீராடித் தவம் தலைப்படுவாயோ?

ஒரு மாசத்தோட பேரு, இவ்வளவு அதிகமாக இலக்கியங்களில் வருவது
= தை மாதம் மட்டுமே!
ஆனால், தை = ஆண்டின் துவக்கம், என்று எங்கும் நேரடியாகச் சொல்லப்படவில்லை!

தையொரு திங்களும் தரை விளக்கித்
தண்மண்டலம் இட்டு மாசி முன்னாள்
ஐயநுண் மணற் கொண்டு தெருவணிந்து -ன்னு, அதே சங்கத் தமிழ் மரபில், பின்னால் வந்த ஆண்டாளும் பாடுகிறாள்!

தையொரு திங்கள் = சிறப்பான விழா! தமிழில் சிறப்பான மாதம்!
-----------------------

3. அடுத்து......ஜெ-வுக்கு அறிக்கை எழுதிக் குடுக்கும் சில "அறிஞர்" முதற்கொண்டு....வேறு சிலரும் காட்டுவது:
"ஆடு தலை" = நக்கீரர் எழுதிய நெடுநல்வாடை!

ஆடு தலை-ன்னா, ஏதோ ஆட்டுக் கறியில் உறிஞ்சும் மூளைப் பகுதி-ன்னு நினைச்சிக்காதீக:))) தலை = முதல்! (தலையாய = முதன்மையான)
திண் நிலை மருப்பின் "ஆடு தலை" யாக
விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து
.....
உரோகிணி நினைவனள் நோக்கி நெடிது உயிரா

ஆடு தலை = மேஷம் தான் முதல்!
நக்கீரரே சொல்லிப்புட்டாரு! எல்லாரும் ஜோராக் கைத்தட்டுங்க!:))
Wait....Wait.....

மேஷம் தான் முதல்-ன்னு சொல்றாரு! ஆனா எதுக்கு "முதல்"?
* ஆண்டுக்கு முதல்??? = இல்லை!
* ராசி மண்டலத்துக்கு முதல்! = "வீங்கு செலல் மண்டிலத்து"

அடங்கொப்புரானே! இது எனக்கே தெரியுமே! எல்லாப் பத்திரிகையிலும், ராசி பலன்-ல ஆடு தானே மொதல்ல போடுவாய்ங்க!!

இதைப் போயி, நக்கீரர் சொன்னதா ஏத்தி வுட்டு........ :) பாவம் அவரு!
கயிலை பாதி-காளஹஸ்தி பாதி, திருவிளையாடற் புராணம்-புருடாணம் ன்னு ஒரு சங்கத் தமிழ்ப் புலவனின் மேல் எத்தினி தான் ஏத்தி வுடறது? விவ'ஸ்'தையே இல்லீயா? :))

சித்திரை = இதர "ஆதார"ங்களாகச் சொல்லப்படுபவை:

* சிலப்பதிகாரம் - இந்திர விழா
இது இளவேனில் காலத்தில் நடந்தது; உண்மை தான்; சிலப்பதிகாரமே சொல்லுது!
ஆனா காமவேள் விழா/ காதல் விழா என்று தான் பேசுகிறதே தவிர....
அதைப் "புத்தாண்டு"-ன்னும் சொல்லலை! ஆண்டின் முதல் மாதம்-ன்னும் சொல்லலை!

நடுக்கு இன்றி நிலைஇய நாளங்காடியில்
சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென,

ஏதோ, ரெண்டு சிலப்பதிகார வரியைச் சொல்லிட்டா, அப்பாவிப் பொதுமக்கள் பயந்துருவாங்க -ங்கிறத்துக்கு, சிலம்பின் வரிகள் ஒன்னும் சகஸ்ரநாம வரிகள் அல்ல:)

* பிரபவ-விபவ = 60 ஆண்டுகளின் sanskrit names, பிற்காலச் சோழர் கல்வெட்டில் பொறிக்கப்பட்டு இருக்கு!
இப்பல்லாம் கல்வெட்டை வச்சி நடக்கும் காமெடிகளுக்குப் பஞ்சமே இல்ல:) 23ஆம் புலிகேசி வெட்டிய கல்வெட்டு கணக்கா...ஆளாளுக்கு கல்வெட்டு-ங்கிறாங்க!:)
நல்ல தொல்லியல் அறிஞர்கள், ஆய்ந்து சொல்வதே கல்வெட்டு முடிவுகள்! அதுவும் விவாதத்துக்கு உட்பட்டு!

கல்வெட்டில் இருந்தாலும்.....அவை = "பிற்காலம்" தான்!
சோழர் கல்வெட்டுகள் பலவும், கிரந்தத்தில் தான் வெட்டப்பட்டு இருக்கு!
உடனே......"பாத்தீங்களா? கிரந்தம் = உயிர்-மெய் எழுத்தில் ஒன்னு;அப்பவே எல்லாரும் கிரந்த alphabet இல் தான் எழுதினாங்க!
பொதுமக்கள்,அம்மா வை = சdம்மா" -ன்னு எழுதினாங்க ன்னு முடிவு கட்டீருவோமா?:)) அதே போலத் தான் இதுவும்! (அ = சd in grantha; almost that shape)

பிற்காலச் சோழர் காலத்தில், கலப்புகள் பல நிகழ்ந்து விட்டன!
அரசுமுறையில், அவர்களின் பண்டிதர்கள் கடைப்பிடித்த "வருஷ-சம்வத்ஸரங்களின்" பேரை, அவர்களே பொறித்து வைத்தார்கள்! அவ்வளவே!

* புட்ப விதி என்னும் நூலில், சித்திரை முதல் மாதம் என்று இருக்கிறது
பேருலயே தெரியலையா? = பு"ஷ்"ப விதி! :))
இதெல்லாம் தரவாகாது!

இதை எழுதியது = கமலை ஞானப் பிரகாச ஸ்வாமிகள்! அதுவும் சுமார் 500 yrs முன்னாடித் தான்!
பல பேருக்கு, இவரு பேரு கூடத் தெரியாது! = சைவ சித்தாந்த சந்தானாச்சாரியார், தருமபுர ஆதீனத்தின் குரு இவரு!

அவர் சமயம் சார்ந்து சொல்வதே, ஒட்டுமொத்த தமிழினத்தின் "ஆண்டு" ஆகி விடாது!
ஆழ்வார்கள் = கலியுகத்துக்கும் முன்னால்- ன்னு கூடத் தான் சில வைணவ மடங்கள் எழுதி வச்சிருக்காய்ங்க!
அப்போ ஆண்டாளுக்கு அப்பறம் தான் வள்ளுவரே வருவாரு! நான் ஆண்டாளின் ரசிகன், ஆனா எனக்குப் பிடிச்சதே உண்மையாகி விடுமா என்ன? :)))


முடிப்புரை - Final Inference:

1. தமிழ் இலக்கியங்களில் = இது தான் "புத்தாண்டு"-ன்னு நேரடியாக எதுவும் இல்லை!

* சித்திரை = "மதம்" சார்ந்த ஒன்றாகி விட்டதால்...பரப்பப்பட்டு ஊன்றுகிறது!
* ஆனால் மழை துவங்கும் மாதம் (அ) பனி முடங்கலான மாதம் (தை)
= முதன்மைக் காலமாகக் கொள்ளும் மரபு = தொல் தமிழ் இலக்கியத்தில் உள்ளது!

2. பண்டைத் தமிழர்கள் - ஒரு ஆண்டுக்கென்று எந்தப் பெயரோ/ எண்ணோ வைக்கவில்லை! 
= கண்டிப்பாக பிரபவ-விபவ-ருத்ரோத்காரி ன்னு வைக்கல:))

ஒவ்வொரு ஆண்டுக்கும், தொடர்ச்சியா, எண்ணை வைத்துக் குறிக்கும் வழக்கமும் இருந்ததாத் தெரியலை!
ஒரு பெரிய தலைவரின் பிறப்பை ஒட்டி, எண்ணால் குறிக்கும் வழக்கம் பின்பு எழுந்ததே!
அதுக்காக, தமிழர்களுக்குக் கால அளவே இல்லை-ன்னு ஆயீறாது...

* Tamil Season Measurements = பெரும்பொழுது
= கார்காலம், கூதிர்காலம், முன்பனிக் காலம், பின்பனிக் காலம், இளவேனில், முதுவேனில் = 2 months*6 = 12 months!
* Tamil Daily Measurements = சிறுபொழுது
= மாலை, யாமம், வைகறை, காலை, பகல், எற்பாடு = 4 hrs*6 = 24 hours!
*ஆண்டுப் பெயர் தான் இல்லை!

3. தமிழ் மரபில் & இலக்கியங்களில்.....மிகச் சிறப்பாக/ அதிகமாகப் பேசப்படும் மாதம் = தை! = "தைஇத் திங்கள்"

4. ஒரு ஆண்டு, ஜோதிட அடிப்படையில் தான் துவங்கணும்....மேஷம் புகும் போது மட்டுமே துவங்கணும் - என்பதற்கு தமிழ் மரபிலே, ஆதாரங்கள் ஏதும் இல்லை!
எனவே சித்திரையே = தமிழ் ஆண்டின் முதல் நாள் என்பதற்கும் கிஞ்சித்தும் தொல் தரவுகள் இல்லை!
-----------------------


5. சரி, பிரபவ-விபவ ன்னு சம்ஸ்கிருதப் பேரு வேணாம்பா; ஆனா சித்திரையிலேயே இருந்துட்டுப் போகட்டுமே....என்பவருக்கு....

சித்திரை ன்னாலே....இந்த 60 சம்ஸ்கிருதப் பெயர்கள் வந்து ஒட்டிக் கொள்கின்றன! ஒட்டிக் கொள்ளும்!
வரும் "வருஷம்" பேரு = நந்தன!:) நந்தன வாழ்த்துக்கள்:))
*  This is Hindu Calendar! = நந்தன, ரக்தாக்ஷி, ருத்ரோத்காரி

* இதே போல் Islamic Calendar உம் உண்டு! = ஜமாதில்-அவ்வல்!
ஆனா, தமிழ்-இஸ்லாமிய சமூகத்தினர் யாரும், ஹிஜ்ரி கணக்குப் படி, தமிழ்ப் புத்தாண்டின் முதல் நாளா.....எங்க நாளை வைங்கோ -ன்னு சொல்லுறாங்களா என்ன?:)) இல்லையே!

* இதே போல் சமண சமய Calendar உம் உண்டு = சமண சம்வத்சரி!
அவர்களும், தங்கள் நாளைத் தமிழில் புகுத்தவில்லை!
நாம மட்டும் ஏன் இப்படி......மொழியில் மதத்தைப் புகுத்தி, அடாவடி அடிக்கிறோம்?? :))

இன்று நேற்றல்ல! பல காலங்களாக!
இல்லீன்னா.....சமயம் சாராத சங்கப் பாடல்களுக்கு, கடவுள் வாழ்த்து-ன்னு ஒன்னு பின்னாளில் எழுதி, அதைக் கோர்த்துக் கோர்த்து வைப்போமா?:)
டேய் செல்லம்...முருகா, இதெல்லாம் நீ கண்டுக்கவே மாட்டீயாடா?:))

** மொழியில், சமய இலக்கியங்கள் வரட்டும்! ஆனா சமய இலக்கியமே = மொழி இலக்கியம்-ன்னு "வகுத்து" விடக் கூடாது!
** அதே போல் தான் புத்தாண்டும்! சமய ஆண்டே = மொழி ஆண்டு ன்னு "வகுத்து" விடக் கூடாது!

மதம், மதமாக இருக்கட்டுமே! அதை மொழி அமைப்பில் திணிக்க வேண்டாமே!
= இதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது என்றே கருதுகிறேன்!
-----------------------

6. தமிழறிஞர்கள், மறைமலை அடிகள் தலைமையில் கூடிச் சொன்னது = Tamil Year Standardization மட்டுமே; புத்தாண்டு துவங்கும் மாதத்தை அல்ல!

இதில் தையா? சித்திரையா? என்பது பற்றிய முடிவுகள் இல்லை! ஆனால்,
* இந்த 60 ஆண்டு அசிங்கத்தில் இருந்து ஒழியவும்
* தொடர்ச்சியான எண் முறை (Continuous Numbering Scheme) க்கும் இது வித்திட்டது;

நிச்சயமாக.....இது புதிய முறை தான்!
= ஆனால் நம் தமிழினத் தலைமகன் வள்ளுவரை அடிப்படையாக வைத்து....ஒரு புதிய கணக்கிடும் முறை!

Like BC & AD based on Christ, Saka Era based on Hindu King.....
Those are based on Religion; This is based on Language!
Anyways, this is only a notation for Tamizh; But Common Era (CE) applies for all of us!

7. ஒரே கேள்வி தான் மிச்சம் இருக்கு= வெட்டு 1, துண்டு 2 -ன்னு சொல்லுங்க = தையா? சித்திரையா?:)

தை'யே'-ன்னு சொல்லவும் தரவு இல்லை; சித்திரை'யே'-ன்னு சொல்லவும் தரவு இல்லை! ஆனா....

* சித்திரை = வேண்டாம்! (என்னைப் பொறுத்த வரை)
* சித்திரை-ன்னாலே...மதம் வந்து ஒட்டிக் கொள்ளும்! சம்ஸ்கிருதப் பெயர்கள் வந்து ஒட்டிக் கொள்ளும்!

* தை = தமிழ் இலக்கியங்களில் அதிகமாகப் பேசப்படும்/ போற்றப்படும் சிறப்பு மாதம்!
* தை-ன்னாலே....மதம் கலவாமல்....தமிழ் மட்டும் தனித்து தெரியும்!

Anyways, we ALL follow global notation for our daily lives = January 01!
But when it comes to "defining standards" & "notation" for Tamizh = Let Tamizh be the focal point & NOT religions!
For that......Thai wud be the best!
Starting Year = based on Valluvar (Great Tamizh Person) &
Starting Month = based on Thai (Great Tamizh Month) - gotcha?:)

தை முதலே தமிழ்ப் புத்தாண்டு = இதுவே தமிழுக்கு நலம்!!
ஆத்துல / வீட்டுல....பஞ்சாங்கம் வச்சி, வர்ஷ ஆரம்ப பூஜை பண்ணனும்-ன்னா, சித்திரையில் தாராளமாப் பண்ணிக்கோங்கோ!
ஆனா உங்க தனிப்பட்ட பூஜையை = "தமிழ்ப்" புத்தாண்டு ன்னு ஒட்டுமொத்தம் ஆக்காதீக!
-----------------------

8. இல்லவே இல்லை! ஆதாரம் இருக்கோ/ இல்லீயோ....சித்திரையே = தமிழ் "வருஷப்" பிறப்பு ன்னு பிடிவாதம் பிடிச்சீங்கன்னா.....
Okay, நானே இறங்கி வரேன்; சித்திரை-க்கே ஒத்துக்கறேன்....ஆனா two small conditions!

a) தமிழ் "வருஷப்" பிறப்பு -ன்னு சொல்லாதீங்க; தமிழ்ப் புத்தாண்டு ன்னு சொல்லுங்கோ please:))
b) அந்த அசிங்கம் புடிச்ச 60 பெயர்களை, அறவே நீக்கி விடுங்கள் - தினத்தாள், நாட்காட்டி, அழைப்பிதழ்கள்.....எல்லாக் குறிப்பில் இருந்தும்!
= செய்வார்களா?? = "ஆசாரம்" இடங் குடுக்குமோ???

அதையும் நீக்க மாட்டேன்; ஆனா அது தான் தமிழ் "வருஷப்" பிறப்பு-ன்னா = this is called போங்கு! போங்கு-அடா டோய்:))))

9. வரும் Apr-13, 2012 = நந்தன வருஷம்.....

அனைவருக்கும் "இந்துப்" புத்தாண்டு வாழ்த்துக்கள்!
(அ) இனிய நந்தன "வருஷ" வாழ்த்துக்கள்!
(அ) just....விழாக்கால வாழ்த்துக்கள் :))

உசாத் துணை: (References)

1. தமிழறிஞர், இராம. கி. ஐயா - தமிழர் திருநாள் = http://valavu.blogspot.com/2007/01/blog-post.html
2. சமூக ஆய்வாளர், திரு. எஸ். இராமச்சந்திரன் ஐயா - சித்திரையே புத்தாண்டு = http://www.sishri.org/puthandufull.html

3. சங்க இலக்கிய வரலாறு & தமிழர் மதம் = மொழிஞாயிறு, ஞா. தேவநேயப் பாவாணர்
4. பாட்டும் தொகையும் (பத்துப் பாட்டு - எட்டுத் தொகை உரை) = டாக்டர். உ.வே. சாமிநாத ஐயர்

5. Jayashree Saranathan (writer at tamilhindu.com) -  (She is a known person to me by way of blogs, but I was "SHOCKED" to see this line - //only those who continue to stick to Hinduism can be considered as Tamils//) 
http://jayasreesaranathan.blogspot.com/2011/08/big-thanks-to-ms-jayalalithaa-for.html-----------      /////////  நன்றி ரவிசங்கர்

1 கருத்து:

  1. நடுவு நிலையில் இருந்து ஆராய்ந்து இந்தக் கட்டுரை எழுதப் பட்டுள்ளது. தமிழர்களுக்கு ஒரு தொடர் ஆண்டு வேண்டும். மலையாளி போன்றவர்களுக்கு கொல்லம் ஆண்டு இருப்பது போல வள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு இருப்பதே நல்லது. தை முதல் நாளில் மதக் கலப்பில்லை. கிறித்தவர்களும் கொண்டாடலாம். மேலும் சித்திரையை புத்தாண்டாக கொண்டாடலாம். ஆனால் அது தமிழ்ப் புத்தாண்டு அல்ல. சித்திரைப் புத்தாண்டு எனக் கொண்டாடலாம். தமிழர்களை மதத்தின் பிடியில் இருந்து மீட்டெடுக்க தைப் புத்தாண்டு துணை புரியும்.

    பதிலளிநீக்கு