பக்கங்கள்

திருக்குறள்

செவ்வாய், அக்டோபர் 02, 2018

திவாரி ,திரிபாதி ,திரிவேதி

மார்வாரி,இந்தி,கார்ஹ்வாலி மொழியை தாய்மொழியாக கொண்ட திவாரி(TIWARI)என்ற  குடும்ப பெயரைக்கொண்ட  இந்து பிராமணர்கள் வட இந்தியாவின் உ.பி ,பீகார்,டெல்லி,ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில்,நேபாளில்  சிறிய,சிறிய அளவில் வாழ்கின்றனர்.ஒரிசா,குஜராத்,ஆந்திரா,மகாராஷ்ட்ராவில் திரிபாதி (TRIPATHI) என்ற குடும்ப பெயரிலும் ,குஜராத்,டெல்லி,மகாராஷ்டிரா ,டாமன்,டையூ போன்ற பகுதிகளில் திரிவேதி (TRIVEDI) என்ற குடும்ப பெயரிலும்  வசிக்கின்றனர்8.





01.என்.டி.திவாரி
இந்த திவாரி எப்படிப்பட்ட மனிதர் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.1975ல் நெருக்கடி நிலை அமலில் இருந்த போது, சஞ்சய் காந்தி உத்திரப் பிரதேசத்துக்கு வருகை தந்தார். அப்போது உத்திரப்பிரதேசத்தின் முதல்வராக இருந்தவர் என்.டி.திவாரி.
விமானத்திலிருந்து சஞ்சய் காந்தி இறங்கிய போது திடீரென்று ஓடிச் சென்ற திவாரி, சஞ்சய் காந்தியின் ஷு லேஸ் அவிழ்ந்திருந்ததால் உடனடியாக விமானப் படிக்கட்டிலேயே அந்த லேஸை கட்டி விட்டார். அதிமுகவினரின் காலில் விழும் கலாச்சாரத்திற்கெல்லாம் திவாரி முன்னோடி.
இந்த சர்ச்சைக்குரிய வீடியோவில் திவாரியோடு காட்சியளித்ததாகக் கூறப்படும் மூன்று இளம் பெண்களும், உத்தராகாண்ட் மாநிலத்திலிருந்து திவாரிக்காகவே வரவழைக்கப் பட்டுள்ளனர். உத்தராகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராதிகா என்ற பெண் ஆந்திர ஆளுனர் ஆவதற்கு முன்பே, திவாரிக்கு நெருக்கம் என்று கூறப்படுகிறது.
ஆளுநர் மாளிகையில் சிறப்பு அதிகாரியாகப் பணியாற்றும் அரவிந்த் சர்மா என்ற அதிகாரி ராதிகா என்ற பெண்ணுடன் மிகுந்த நெருக்கம் என்று கூறப்படுகிறது. இந்த அரவிந்த் சர்மாதான் ராதிகா மூலமாக திவாரிக்கு பெண்களை அழைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த ஆனந்த் சர்மாவும் ராதிகா அனுப்பி வைத்த பெண்களோடு தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.மேலும் வாசிக்க சவுக்கு சுட்டி திவாரி லேகியம்  :) https://www.savukkuonline.com/7140/  திரிபாதி  செயா ஆட்சியில் ஆளுமையாக இருந்ததை பற்றி சவுக்கில் பல கட்டுரை உள்ளது  பதிவு நீளம் கருதி விட்டுவிடுகிறேன்..

1.கேசரிநாத் திரிபாதி;;
ஆளுநர்(கேசரிநாத் திரிபாதி)  என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டி வருகிறார். அவரது செயல் பா.ஜ.க.வினர் பேசுவது போல் உள்ளது. இது என்னை வருத்தமடைய செய்கிறது. இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்பதை அவருக்கு சொல்லிக் கொள்கிறேன்.
அவர் பா.ஜ.க. வட்டச் செயலாளர் போல் செயல்பட்டு வருகிறார். அவரது பதவிக்கு இது ஏற்புடையதா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். மத்திய அரசால் நியமிக்கப்பட்டவர் ஆளுநர். ஆனால், நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர். ஆளுநரின் கருணையால் முதல்வர் பதவியை நான் வகிக்கவில்லை.என பகிரங்கமாக குற்றம் சாட்டினார் மமதா பானர்ஜி (ஜூலை 5, 2017) (மம்தாவும் வங்காள  பிராமணர்  என்பது குறிப்பிடத்தக்கது தமிழகத்தில்  திமுகவும் அதிமுகவும் அடித்துக்கொள்ளும்  தமிழர்கள் வாய்பிளந்து பார்த்தது  போல ? :) )
இவர் தான்  பீகாருக்கும் கவர்னர்(கூடுதல் பொறுப்பு) பிராந்திய(மாநில) கட்சிகளை  ஊழல் என்ற போர்வையில்  சிதைத்து பிராமணர்கள்  நடத்திய நாடகம் பீகாரிலும் நடந்தது   நிதிஷ்குமார் ராசினாமா செய்ததும்,பாசக ஆதரவு என்ற பெயரில் உடனடியாக பதவி ஏற்று நடந்த நாடகமெல்லாம் .

1.லீனா திவாரி..
யுஎஸ்வி இந்தியா நிறுவனத்தின் தலைவர் ,இந்திய பணக்கார பட்டியலில்  71வது இடத்தையும் ,உலகளவில் 1020 வது இடத்தையும்  பிடித்துள்ளார். இவரது நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.14 ஆயிரம் கோடி(2.19 மில்லியன் டாலர்).

2.மாலா திவாரி  வாஜ்பாய் குடும்ப உறுப்பினர் .
3.விஸ்வநாத் பிரசாத் திவாரி, சாகித்ய அகாடமியின் தலைவர் 
4.தேவி பிரசாத் திவாரி-கொல்கத்தா கோளரங்கத்தின் இயக்குனர்.
5.மனோஜ் திவாரி தில்லி பாசக தலைவர் 
6.மணீஷ் திவாரி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் 
7.அமித் ஆனந்த் திவாரி  தமிழ்நாட்டு கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பான வழக்கில் திமுக சக்கரபாணி சார்பில் வாதாடிய  வழக்குரைஞர் .
8.அமர்தீப் திவாரி டெல்லி சட்ட அமைச்சரின் ஆலோசகர்..தாற்போது கேஜ்ரிவாலால் நீக்கப்பட்டு சட்ட சிக்கலில் ..
சுவாரசிய செய்திகள் :)
மும்பையை சேர்ந்த திவாரி, கடந்த 2002-ஆம் ஆண்டு புனேவை சேர்ந்த 3 பேரை முதுநிலை கல்வியில் சேர்த்துவிடுவதாக உறுதிஅளித்துவிட்டு கோடிக்கணக்கான பணத்தை பெற்று கொண்டு ஏமாற்றிவிட்டார். இவர் மீது புனேவில் ஏராளமான மோசடி வழக்குகள் உள்ளன.கைது நடவடிக்கைக்கு பயந்து கொண்டு 14 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வாஷிங் மெஷினில் மறைந்திருந்த போது போலீஸிடம் பிடிபட்டார்.
சுதா திவாரி-ம.பி 
ஒரு ஆண் குழந்தையை தத்தெடுத்துள்ளார் அந்த குழந்தை கருப்பாக இருந்ததால் 5 வயதாகும் அந்த குழந்தையின் உடலை கருங்கல்லில் வைத்து தேய்த்துள்ளார் குழந்தை படுகாயம் அடைந்து புகாரின் பெஸ்ரில் ஆசிரியை சுதா திவாரி  கைதாம் :)

பிரதேஷ் குமார் திவாரி(சென்னை வேப்பேரி) பாண் குட்கா வியாபாரி வீட்டின் சோதனையில் ஐம்பது லட்சம் பணமும்,250 கிலோ மாவாவும் கைப்பற்றப்பட்டது..கைது செய்யப்படவில்லை ஓடிவிட்டானாம்,,


9.தீபிகாசபர்வால் திவாரி டாடா குழுமத்தின் அங்கமான தனிஷ்க் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு துணைத் தலைவர்-திண்டுக்கல் 

௧௦.மனோஜ் திவாரி கிரிக்கெட் வீரர் 

10.சௌரப் திவாரி (ரூ. 80 லட்சத்திற்கு  ஏலத்தில் எடுக்கப்பட்டார். மும்பை இந்தியன்ஸ் அணியில்.
சத்யேந்திர திரிபாதி மேகாலயாவின் பாஜக அமைப்பு செயலாளர் 
11;சந்தீப் திரிபாதி ஒடிசா விண்வெளி மையத்தின் தலைமை நிர்வாகி 
12;ஸ்ரீகாந்த் திரிபாதி மத்திய காசநோய் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர்
13.ராகேஷ் திரிபாதி உத்தர பிரதேச பாரதீய ஜனதாவின் செய்தி தொடர்பு அதிகாரி
14.ராகுல் திரிபாதி (ஐபிஎல் ரூ. 3.4 கோடிக்கு  ஏலம் எடுக்கப்பட்டார்(ராஜஸ்தான் ராயல்ஸ்)
15.பங்கஜ் திரிபாதி நியுட்டன் என்ற படத்திற்காக தேசியவிருது பெற்றுக்கொண்டவர்(ஸ்மிருதி ராணியிடம் இருந்து) =பரட்டையின் காலா படத்தில் நடித்துள்ளார்.
16.மனோஜ் திவாரி (ஐபிஎல் ரூ 1 கோடிக்கு  ஏலம் எடுக்கப்பட்டார்)
17.பாலோமி திரிபாதி ஐநா சபையில் இந்தியாவின் பிரதிநிதியாக பங்கேற்றவர் 2017
 18.எஸ்.பி. திரிபாதி கொல்கத்தா பிஎஸ்என்எல் தலைவர், பொது மேலாளர் 
19.கிருஷ்ண மோகன் திரிபாதி கல்வித்துறை முன்னாள் இயக்குனர் 
கேள்வித்தாள் கசிந்ததை தொடர்ந்து, சிபிஎஸ்இ தேர்வு முறைகளை ஆராய்வதற்காக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்பட்டுள்ள  கல்வித்துறை  நிபுணர்களில்? இவரும் ஒருவர் .
20.கே.டி.திரிபாதி எண்ணெய் அமைச்சகத்துறை செயலாளர்

21.ஷாஷா த்ரிபாதி.
`கர்வம் கொண்டால் கல்லாய் உறைவான்... உறைவான்...பாடலுக்கு தேசிய விருது.`ஓகே கண்மணி', `மரியான்', `லிங்கா', `அச்சம் என்பது மடமையடா', `காற்று வெளியிடை', `எந்திரன்',  `2.0' ஆகிய படங்கள்ல ஏ.ஆர்.ரஹ்மான்  இசையில் பாடியிருக்கார் 

22.லாவண்யா திரிபாதி( நடிகை)
பிறந்தது உத்திரபிரதேசம்  அயோத்யாவை சேர்ந்தவர் என்றாலும்  வளர்ந்தது உத்திரகான்ட். 2006    இல்  மிஸ் உத்தரகாண்ட் பட்டம் கிடைத்தது..ஆறு ஆண்டு இடைவெளிக்கு  பிறகு உடன் ஆந்திர  சினிமாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டு பல படங்கள் நடித்தாலும்  தமிழிலும் பிரம்மன்,மாயவன்  என்ற இரண்டு படங்கள் நடித்து தமிழினத்திற்கு சேவை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது..இந்த புத்தாண்டுக்கு  தோழி,தோழர்களுடன்  இவரும் கோவா கடற்கரை,மும்பை வீதிகளில் சுற்றி திரிந்தனர் என்று எழுது இருக்கின்றனர்  ஆண்டி-இந்திய பத்திரிக்கையாளர்கள்..
 
 23.பிரியங்கா திரிவேதி 
ராஜ்ஜியம், ராஜா, காதல் சடுகுடு, ஐஸ், ஜனனம் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை,,கணவர் உபேந்திரா ராவ்  கன்னட நடிகர் தமிழிலும் நடித்துள்ளார்..கணவன் மனைவிஇருவரும் அரசியல் கட்சி துவங்கி  நடத்தி வருகின்றனர்..(தற்போது இவரது கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் உள்ளார்)


24.ராகினி திரிவேதி
இவர் பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்டவர் இவரது தந்தை  இராணுவ ஜெனரல் ..கன்னட படங்களிலும்,தமிழ்ப்படம் ஆரியனிலும் நடித்துள்ளார்.


25.இரா.திரிவேதி 
32 வயதான இரா திரிவேதி, எழுத்தாளர் மற்றும் சமூக செயல்பாட்டாளர்.






26.நடிகை கனிகா திவாரி. 
இந்தியில் அக்னிபத் படத்தில் நடித்தவர் தமிழில் ஆவிக்குமார் என்ற படத்தில் நடித்தார் .

27.முகேஷ் திவாரி 
இவர்  தமிழில் கந்தசாமி,போக்கிரி,தலைமகன் ,அநேகன்,பூஜை போன்ற படங்கள் உட்பட  பல்வேறு மொழிகளில் 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் .


28.அசீம் திரிவேதி (கார்டூனிஸ்ட்)
கேலிச்சித்திரம் வரைபவரான இவர்  காங்கிரசு ஆட்சிக்காலத்தில்  பாராளுமன்றத்தை  கழிவறை போல.தேசிய சின்னத்தை அவமதித்து ? படம் வரைந்ததால் காங்.அரசினால் கைது செய்யப்பட்டதனால் பிரபலம் ஆனார்..மோடி ஆட்சிக்கு வந்த பின் இந்தியாவெங்கும்  பாலாரும்,தேனாறும் ஓடுவதால் சௌதி,கத்தார் போன்ற வளைகுடா நாடுகளில் அரசர்களின் ஆட்சியின் ஊழலைக் களைந்து  அரபி மக்களுக்கு நல்லது செய்யும் பணியை மோடி ஆட்சிக்கு வந்தது முதல் செய்கிறார்.அட இவர் கைதுக்கு பத்ரியே கடும் கண்டனம் தெரிவித்தார்னா பார்த்துகிங்க (சாதிப்பாசம் இல்லை தேசப்பற்று) ..










திங்கள், செப்டம்பர் 17, 2018

நாயக்கர்மார்கள் நாமஞ்சாத்தப்பட்டார்கள் - ஈ,வே,இராமசாமி நாயுடு

நாயக்கர்மார்கள் நாமஞ்சாத்தப்பட்
டார்கள் -  ஈ,வே,இராமசாமி
கோயமுத்தூர் ஜில்லாவில் கொங்கு வேளாளர்களுக்கு அடுத்த சமூகம் ஜனப்
பெருக்கத்திலும் விவசாயத்திலும் இரண்டாவதாக விளங்கக்கூடியவர்கள் ஆந்திர
நாயக்கர்மார் அதாவது கம்மநாயக்கர்மார் சமூகமாகும். இவர்கள் செல்வத்திலும்
வியாபாரத்திலும் வேளாளர்களைவிட சிறிது குறைந்தவர்கள் அல்ல என்றே
சொல்லலாம். பொள்ளாச்சி, உடுமல்பேட்டை, திருப்பூர், அவனாசி ஆகிய
தாலூக்காக்களில் இவர்கள் குறிப்பிடத்தகுந்த ஜன சமூகமுள்ளவர்கள்.
இவ்வளவோடு மாத்திரமல்லாமல் காங்கிரஸ் கூப்பாட்டிலும் கதர் வேஷத்திலும்
ஜெயிலுக்கு போனதிலும் அடிபட்டதிலும் பிழைப்பு இருப்பு முதலியவைகளை
லக்ஷியம் செய்யாமல் காங்கிரஸ் காங்கிரஸ் என்று அலைந்ததிலும் இவர்கள் மற்ற
எந்த சமூகத்தாரையும் விட குறைந்தவர்கள் அல்ல என்பது மாத்திரமல்லாமல் வேறு
பல சமூகங்களை யெல்லாம் விட மேம்பட்டவர்கள் என்றும் சொல்லலாம்.
அப்படிப்பட்ட சமூகத்தார் இன்று காங்கிரஸ் பார்லிமெண்டரி கமிட்டியாரால்
நாமம் சாத்தப்பட்டு விட்டார்கள். கோயமுத்தூர் ஜில்லாவில் அசம்பளிக்கு
உள்ள 8 ஸ்தானங்களிலும் ஒன்றுக்குக்கூட நாயக்கர்களில் யாரையும்
நியமிக்காமல் காங்கிரஸ்காரர்கள் பட்டை நாமம் சாத்திவிட்டார்கள்.
இன்று பெரிய நூல் மில் வைத்து நடத்துபவர்களில் சுமார் 10 மில்லுகள் வரை
நாயக்கர்மார்கள் நடத்துகிறார்கள். தோழர் க.கு.எ. கங்கா நாயக்கர் முதலிய
மில் முதலாளிகள் பலர் காங்கிரசில் வெகு காலமாய் இருந்து கொண்டு
காங்கிரசுக்கு தாராளமாய் மற்றவர்களுக்கு அதாவது தோழர்கள் ராமலிங்கம்
செட்டியார், வெள்ளியங்கிரி கவுண்டர், அவனாசிலிங்கம் செட்டியார்
ஆகியவர்களுக்குச் சிறிதும் குறையாமலும் பின் வாங்காமலும் பணம், ஆள்
முதலிய உதவி செய்து வந்தவர்கள். தோழர் வேலப்ப நாயக்கர் முதலியவர்கள்
தங்கள் தொழிலை (மணியத்தை) பண்ணையத்தை விட்டு வந்து ஜெயிலுக்கு பல தடவை
சென்றவர்கள். நாயக்கர்மார் சமூகத்தில் காங்கிரசை ஆதரிப்பவர்கள் அத்தனை
பேரும் பெரிதும் இவர்களுக்காகவே காங்கிரசை ஆதரிப்பவர்களாவார்கள். இப்படி
இருக்க, கோவை ஜில்லாவில் தோழர் அவனாசிலிங்கம் செட்டியாருக்கு ஒரு இந்திய
M.L.A., தோழர் ராமலிங்கம் செட்டியாருக்கு ஒரு மாகாண M.L.A., தோழர்
வெள்ளியங்கிரி கவுண்டருக்கு ஒரு அப்பர் சேம்பர் M.L.C., அவர் தம்பி தோழர்
பழனிச்சாமி கவுண்டருக்கு ஒரு ஜில்லா போர்டு பிரசிடெண்டு, மற்றும்
அவருக்கே ஒரு மாகாண M.L.A., என்று இப்படி இரண்டு குடும்பமே
உள்ளதையெல்லாம் பங்கிட்டுக் கொள்வதென்றால் இவர்கள் தேசாபிமானமும்,
தியாகமும் சமதர்ம தீவிரமும் இந்த ஜில்லாவில் அவ்வளவு பெரியதா என்று
கேட்கின்றோம். போன தடவை ஜில்லாபோர்டு பிரசிடெண்டு அண்ணன் என்றால் இந்தத்
தடவை தம்பிதான் பிரசிடெண்டாக இருக்கவேண்டுமா? ஜில்லா போர்டு மெம்பர்
வேலைக்கும் அண்ணனுக்கு ஒன்று தம்பிக்கு ஒன்று மாப்பிள்ளைக்கு ஒன்று
மருமகனுக்கு ஒன்று என்று நான்கைந்தும் ஒரு வீட்டுக்கே போகவேண்டுமா? மற்ற
வேளாளர்கள் அல்லது மற்ற ஜாதிக்காரர்கள் இருந்தால் போர்டு பாப்பராய்ப்
போய்விடுமா? என்று கேட்கின்றோம்.
கொங்கு வேளாளர் ஜில்லா ஆனதால் இந்த ஜில்லாவில் கிடைக்கக் கூடிய ஸ்தானம்
எல்லாம் வேளாளருக்கே வரவேண்டும் என்றாலும் அந்த ஒரு குடும்பம் தான்
வேளாளக் குடும்பமா? மற்ற குடும்பங்கள் ஏதாவது குற்றம்பட்ட வேளாள
குடும்பமா என்று கேட்கின்றோம்.
வகுப்பு உணர்ச்சி உண்டாக வேண்டும் என்பது தான் நமது அபிப்பிராயம்.
அப்படிப்பட்ட வகுப்பு உணர்ச்சியில்தான் ஒவ்வொரு வகுப்பும் முன்னுக்கு
வரமுடியும் என்பது தான் நமது அபிப்பிராயம்.
ஆனால் வகுப்பு உணர்ச்சி கூடாது என்று காங்கிரசில் பார்ப்பனர்களுக்
கு ஆயுதங்களாய் இருந்து கூப்பாடு போட்டுக் கொண்டு இரகசியத்தில்
வகுப்புவாதம் பேசி கிடைப்பதையெல்லாம் தங்கள் இரு குடும்பத்துக்கே பங்கு
போட்டுக்கொள்வது என்றால் இது என்ன தேசீயம்? இது என்ன காங்கிரசு என்று
தான் கேட்கின்றோம். இவர்கள் இருவரும் அதாவது தோழர்கள் வெள்ளியங்கிரி
கவுண்டரும் ராமலிங்கம் செட்டியாரும் மற்றவர்களை எப்படி வகுப்பு வாதம்
கூடாது என்று சொல்லலாம் என்று கேட்கின்றோம்.
இந்த ஜில்லாவில் வேளாளர்கள் பெருந்தொகையாளர்கள் என்றும் அவர்கள் இந்த
ஸ்தானங்களைப் பெற வேண்டும் என்றும் முதல் முதல் கிளர்ச்சி செய்து சிறிது
கூட நினைத்தே இராத கனம் சங்கராண்டாம்பாளையம் பட்டக்காரர் அவர்களை சட்டசபை
மெம்பராக ஆகச்செய்வதில் முக்கிய பங்கு எடுத்துக்கொண்டவர்களில் நாம்
முதன்மையாக நின்றது யாரும் அறியாததல்ல. அதற்குப் பிறகே சட்டசபை
ஸ்தானங்களை வேளாள கவுண்டர்மார்கள் மற்றவர்களுக்கு தானம் கொடுக்கக்கூடிய
நிலையை அடைந்தார்கள் என்றுசொல்லலாம். அதாவது அந்தஉணர்ச்சி ஏற்பட அவ்வளவு
பாடுபட்டோம். ஆனால் அதற்குப் பலன் இதுதானா? எல்லாம் ஒரே குடும்பம்,
அதுவும் அண்ணனுக்கும் தம்பிக்கும் மாப்பிள்ளைக்கும் மருமகனுக்கும்
மாத்திரம் தானா? மற்ற வேளாளர்களுக்குப் பங்கு இல்லையா? என்று கேட்க
வேண்டியிருக்கிறது.
பங்கு இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அது மற்ற வேளாளர்கள்
பார்த்துக் கொள்ளட்டும்.
ஆனால் நாயக்கர்மார்கள் "தலைஎழுத்து" இவ்வளவுதானா என்று கேட்கின்றோம்.
அவனாசி கோயமுத்தூர் தாலூக்காக்களின் ஸ்தானத்தை ஏன் நாயக்கர்மார்களுக்கு
விட்டுவிடக்கூடாது என்று கேட்கின்றோம்.
தோழர் வி.சி. பழனிச்சாமிக் கவுண்டர் அவர்களுக்கு ஜில்லாபோர்டு
பிரசிடெண்டு ஒன்றுபோதாதா? அவர் தமையனார் கனம் வெள்ளியங்கிரிக் கவுண்டர்
அவர்கள் அப்பர் சேம்பர் பார்ப்பதுகொண்டே தோழர் பழனிச் சாமிக் கவுண்டர்
திருப்தி அடையக்கூடாதா என்று மறுபடியும் கேட்கின்றோம்.
காங்கிரஸ் பார்லிமெண்டரி போர்டுதான் இந்த விஷயத்தில் என்ன யோக்கியமாக
நடந்துவிட்டது என்று கேட்கின்றோம்.
வகுப்பு உரிமை கூச்சல் இவ்வளவு பலமாகக் கூப்பாடு போடுகின்ற காலத்திலேயே
இப்படி ஏமாந்தவன் தொடையில் கயிறு திரித்துக்கொண்டு அதுவும் ஜனத்தொகையும்
பிரபலமும் செல்வமும் அரசியல் ஞானமும் ஊக்கமும் கொண்ட நாயக்கர்மார்களு
க்கே பட்டை நாமம் சாத்திவிட்டுப் போவதென்றால் மற்றபடி இந்தப்
பார்ப்பனர்களுக்கு பயந்தோ அவர் வலையில் சிக்கியோ நாம் இந்த வகுப்பு
உணர்ச்சியை மறக்க விட்டுவிட்டால் பின்னால் என்ன கதி ஆவது என்பதைப் பொது
ஜனங்களே நினைத்துப் பார்க்கட்டும்.
ஆனால் நாயக்கர்மார்களுக்கு இந்தக் கதி வேண்டியதுதான். காங்கிரஸ் என்று
மனதறிந்து பொய் வேஷம் போட்டுக் கொண்ட தோழர் வரதராஜுலு, நாயக்கருக்கு
மோசம் செய்து விட்டு ஒரு செட்டியார் அதுவும் நேற்று வந்து காங்கிரஸ்வேஷம்
போட்ட அரசியலில் பல்லுமுளைக்காத தவரத் தெரியாத ஒரு குழந்தைக்கு ஓட்டுப்
போட்டு அவமானப்படுத்தி வேடிக்கை பார்த்த கூட்டம், தங்கள் சமூகம் பூராவுமே
அவமானமேற்படும்படி செய்து கொண்டதில் அதிசயமொன்றுமில்
லை.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்றாலும் இனியாவது புத்தி
வந்துஉடனே ஒரு மகாநாடு கூட்டி காங்கிரஸ் கொடுமையை கண்டித்து கிளர்ச்சி
செய்து தாங்கள் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்வார்கள் என்று
நினைக்கின்றோம்.
குடி அரசு துணைத் தலையங்கம் 15.11.1936

திங்கள், மே 14, 2018

பியூஷ் சேத்தியா என்ற கார்ப்ரேட் முதலாளி


பணம், பணம் அல்லது மூங்கில் -அதுதான் பியூஸ்! ஆதாரங்களுடன் ஒரு பதிவு



சந்திரமோகன்
சந்திர மோகன்
சந்திர மோகன்
மனித உரிமைகள் /மாண்புகளை மதிக்கிறேன். சிறைக்குள் பியூஸ் மீது தாக்குதல் நடைபெற்றதாக அறிந்த பின்னர், “கண்டிக்கிறேன் ” எனப் பதிவு செய்திருந்தேன். அதை மறு உறுதி செய்கிறேன்.
விரிவான விமர்சனம் தேவை என பியூஸ் ஆதரவாளர்கள், ஊடக நண்பர்கள் சிலர் கேட்டுக் கொண்டதற்கு ஏற்ப இக் குறிப்புரைகளை பதிவு செய்கிறேன். அவர் ஜாமீனில் வெளிவந்த பிறகுதான் எழுதுகிறேன்.
“நிறைய வியாபாரம், கொஞ்சம் சண்டை -இதுதான் பியூஸ்” எனவும், “மூங்கில், நிலம், நீர் சார்ந்த சாமர்த்தியமான வியாபாரி (Shrewed Businessman) பியூஸ்” எனவும், கடந்த சில ஆண்டுகளாக பியூஸின் நண்பர்கள், ரசிகர்கள், தோழர்கள் ஆகியோரிடம் சொல்லி வந்ததை விரிவாக முன்வைக்கிறேன்.
பாதிக்கப்பட்ட மக்கள், நண்பர்கள், அவரது முகநூல் Facebook குறிப்புகள், கள ஆய்வுகள் போன்ற ஆதாரங்களிலிருந்தே எழுதியுள்ளேன்.
பியூஸ்‬ செயல்பாடுகள் மீதான கொள்கை வேறுபாடுகள் தவிர, அவரிடம் தனிப்பட்ட பகை, மோதல், நலன்களோ எதுவும் இல்லை.
Chapter 1- தருமபுரி
(2010 க்கு பிந்தைய அவரது செயல்பாடுகளில் தருமபுரி பற்றிய பகுதியை விரிவாகவும், சேலம் பற்றிய சில முக்கியமான குறிப்புகளை மட்டும் பதிவு செய்கிறேன்)
பாக்கு மட்டையிலிருந்து மூங்கிலுக்கு மாறுதல் :-
தமிழகத்தில் உள்ள வட இந்திய மார்வாரி பான் புரோக்கர் வட்டிக்கடை முதலாளிகள், ரியல் எஸ்டேட் /நில வியாபாரத்தில் ஏராளமான முதலீடுகளை குவித்துள்ளனர். அவர்களோடு பங்குதாரர் ஆகவும், அவர்களின் நலன்களைப் பாதுகாப்பவராகவும் பியூஸ் சேத்தியா உள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான் ! துவக்கத்தில் பாக்கு மட்டை பொருட்கள், இயந்திரங்கள் தயாரிப்பு தொழிலில் இருந்த பியூஸ் நிலம் மற்றும் மூங்கில் வியாபாரத்திற்கு மாறிய பின்னர்தான் மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்தார்.
சேலம் மாவட்ட கல்ராயன் மலைப்பகுதியில், கருமந்துறையில் மார்வாரி சேட்டுகள் பழங்குடியினர் நிலங்கள் உட்பட 70 ஏக்கர் நிலங்களை வாங்கி சுமார் 35,000 மூங்கில் செடிகளை வளர்த்தனர். பியூஸ் ஒரு பங்குதாரர் மட்டுமல்ல, நிர்வாகியும் கூட. ஒரு ஏக்கர் ரூ.3 இலட்சம் எனவும், நல்ல லாபம் கிடைக்கும் எனவும் தொடர்ந்து விளம்பரம் செய்தார். (பார்க்க : 23.4.2013 தேதிய அவரது முகநூல் பதிவு)
வெற்று வாக்குறுதிகள் !அந்த மூங்கில் பண்ணையில் பல பிரச்சினைகள். மூங்கில் வெட்டி வெளியே கொண்டு வருவதில் வனத்துறையுடன் பிரச்சினை. ஒரு பகுதி நிலங்களை விட்டுவிட்டு தருமபுரியில் கவனம் செலுத்தினார்.
ஜருகு மூங்கில் பண்ணை :-
8 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இப் பண்ணையானது, ரியல் எஸ்டேட் வியாபாரி திலீப் பேட் மற்றும் பியூஸ் சேத்தியாவிற்கு சொந்தமானதாகும். பெரிதும் மூங்கில் வளர்க்கப்படும் இப் பண்ணையில், மூங்கில் பொருட்கள் தயாரிக்கும் பட்டறையும் (Workshop) உண்டு. (படம் இணைக்கப்பட்டுள்ளது) வடகிழக்கு மாநில கைவினைஞர்களை
குறைந்த கூலிக்கு சுரண்ட முயற்சிக்க அவர்கள் பணியாற்ற முடியாது எனச் சென்றுவிட்டனர். உள்ளூர் தலித் தொழிலாளர்கள் பண்ணை வேலை மற்றும் மூங்கில் பொருட்கள் தயாரிப்பு வேலைகளில் பணியாற்றி வருகின்றனர்.
ஆண்களுக்கு மாதக் கூலி ரூ.6,000, பெண்களுக்கு ரூ.4,500 ஆகும். மூன்று மின் இணைப்புகள் உள்ளன. இயந்திரம், மின் மோட்டார்கள் உள்ள இப் பண்ணையின் மின் கட்டணம் ரூ.881(749+132) மட்டுமே ஆகும். திலீப் பேட் பெயரில் உள்ள இணைப்பு எண் 019-011-1263 க்கு நீண்ட காலமாக மின்கட்டணம் செலுத்தப்படவில்லை. மின்சாரம் திருடப்படுவதைப் பற்றி த.நா.மின் வாரியம் தான் கவலைப் பட வேண்டும்.
நமது கவலை என்னவெனில், இந்தப் பண்ணையை முன்மாதிரியாக சுட்டிக் காட்டி, ஜருகுவிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ள நாகாவதி அணைப் பகுதியின் அருகில் ஏழை விவசாயிகளின் நிலங்கள் அற்ப விலைக்கு வாங்கப்பட்டு அமைந்துள்ள ” கூட்டுறவு வனம்” எனப்படுகிற Coop Forest பற்றியதே ! (படங்கள் இணக்கப்பட்டுள்ளது)
pima
கூப் பாரஸ்ட் (Coop forest) :-
பியூஸின் சாதனைகளில் ஒன்றாக புகழப்படுவது இந்த கூட்டுறவு வனம் எனப்படுகிற Coop forest ஆகும். பெண்ணாகரம் வட்டத்தில், நாகாவதி அணை அருகிலுள்ள எர்ரப்பட்டியில் துவங்கி பெண்ணாகரம் நோக்கி சுமார் 600 ஏக்கருக்கு விரிந்து பரந்துள்ளது. மூங்கில் கோம்பை கிராமம் எனப் பெயர்பலகை வைக்கப்பட்டுள்ளது. சட்டப்பூர்மாக 150 ஏக்கர் நிலங்களையும், 40 பங்குதாரர்களையும் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பங்குதாரர்கள் உள்ளூர் மக்கள் அல்ல ; சேலம் போன்ற வெளியூர் பணக்காரர்கள். அவர்களிடம் ஏக்கருக்கு ரூ.2.25 இலட்சம் வாங்கிக் கொண்டு,நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 மட்டுமே பியூஸ் வழங்கினார்.வளர்ச்சி நிதி ரூ.2 இலட்சம் என அறிவித்து விட்டு, 5 ஆண்டுகள் கழித்து இலாபத்தில் பங்கு என்றும் அறிவித்தார். எதுவும் நடக்கவில்லை. பலருக்கு பட்டா கூட கிடைக்கவில்லை. நாம் இந்த பணக்காரர்கள், சமூக ஆர்வலர்கள் பற்றி கவலைப்படவில்லை.
இதே காலகட்டத்தில், தருமபுரியில் வரவிருந்த சிப்காட் தொழில்வளாகத்திற்கு எதிரானப் போராட்டத்தில் பியூஸ் ஏன் ஈடுபட்டார் என்பது நமது கவலையாக உள்ளது.
அடுத்த கவலையானது, இப் பகுதியில் பியூஸ் முதன் முதலாக வங்கி மரங்களை நட்டப் பயிரிட்ட நீரோடை பாய்கிற “வெள்ள மலைக்காடு” பகுதியில் நடப்பட்டு உள்ள மூங்கில்களை, மரங்களை படங்கள் எடுத்து “பாலைவனம் சோலைவனம் ஆகிவிட்டது ” எனப் பிரச்சாரம் கட்டமைத்ததுப் பற்றி தான். இன்றும் கூட நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கரடுகளாகத் தான் உள்ளன.
காரப்பரேட் விவசாயம் :-
ஏழை விவசாயிகள் நிலங்கள் இழந்தார்கள்; புறம்போக்கு நிலங்களையும் இழந்தார்கள்; பியூஸ் தடுப்பணைகளை அமைத்ததால் நீராதாரங்களை இழந்தார்கள்; வெளியேறினார்கள் அல்லது அங்கேயே கூலி வேலைக்கும் சென்றார்கள் என்பதைப் பற்றி தான் நமது கவலையுள்ளது.
இந்த கூப் பாரஸ்டுக்குள் எவ்வளவு ரெவின்யூ நிலம், வனநிலம் வளைத்துப் போடப்பட்டுள்ளது, நில உச்சவரம்பிற்கு மேலாக எவ்வளவு நிலங்கள், யார் யார் பெயரில் உள்ளது என்பது எல்லாம் தமிழக அரசாங்கம் கவலைப்பட வேண்டிய விசயங்களாகும். கூட்டுறவு தத்துவத்தின் சாரமே, பின்தங்கிய பிரிவினர் முன்னேற்றத்திற்கு உதவும் முறையே கூட்டுறவு ஆகும். பியூஸ் அமைத்துள்ளது முதலாளித்துவ பண்ணை ஆகும். (Corporate farming)
இயற்கை சுற்றுலா! (Eco Tourism) :-
அய்யப்பன் வனம் என்ற பெயரில், தங்கும் விடுதிகள் அமைக்க,2015 செப்.15 தேதியிலிருந்து ICICI வங்கி கணக்கில் பியூஸ் நிதி வசூலித்தார். (SEED- Socio Economic Environment Development) a/c number 611901077536 IFSC no. ICIC 006119). மேலும் 2015 அக். 2,3,4 தேதிகளில் நேரடியாகவும் நிதி வசூலித்தார். Summer Camp என்ற பெயரில், தலைக்கு ரூ.2250 என்றடிப்படையில் அறிவிப்புகள் வெளியாயின. (படம் இணைக்கப்பட்டுள்ளது )
pima 2
SEED முறையாக பதிவு செய்யப்பட்ட அமைப்பாகவோ, அதன் கணக்குகள் தணிக்கைக்கு உட்பட்டதாகவோ தெரியவில்லை.
மா, பலா, தேக்கு எனப் பலவகை மரங்கள் மூலம் பணம் வரும் என்றார், பியூஸ். மூங்கில் மட்டுமே பரவலாக நடப்பட்டுள்ளது. அடுத்தவர் முதலீட்டில் மூங்கில் பயிரிட்டு, தனக்கான தேவைகளை குறைந்த விலையில் கொள்முதல் செய்து கொள்ளும் சாமர்த்தியமான வியாபாரிகள் பியூஸ் சேத்தியா ஆவார்.
வேண்டுகோள்!
பினாயக் சென் போன்ற அறிவாளிகள், பல்வேறு காந்திவாதிகள் சத்தீஸ்கர் ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் வனப் பகுதிகளில் தங்கியிருந்து, அப்பகுதியில் உள்ள விவசாயத்தை, பழங்குடிகளின் வாழ்க்கையை முன்னேற்றுவதில் ஈடுபட்டுள்ளனர். பணக்காரர்களுக்கு நிலங்களை வாங்கி கொடுத்து விட்டு மக்களை நிலங்களில் இருந்து வெளியேற்றவில்லை. மக்களுக்காக அர்ப்பணித்துள்ள அவர்களோடு பியூஸ் சேத்தியாவை ஒப்பிட வேண்டாம்!
வனம் Forest என்பது பல்லுயிர்களைக் கொண்டதாகும். மூங்கில் போன்ற எதாவது ஒரு ஒற்றைப் பயிரை மட்டுமே அமைக்கும் நடவடிக்கை முதலாளித்துவ, ஏகாதிபத்திய சிந்தனைப் போக்காகும். கூப் பாரஸ்ட் என்ற கருத்துக் கோப்பே ஏகாதிபத்தியம் உருவாக்கியது தான்!
Chapter 2- சேலம் தெரியாத சேதிகள்
(தற்போது சுருக்கமாக சில குறிப்புகள் மட்டுமே)
தண்ணீரைத் தேடி……
சேலம் மாநகரத்திற்கு அருகில், ஏற்காடு மலை அடிவாரத்தில் கன்னங்குறிச்சி அருகில் அமைந்துள்ள மூக்கனேரி இயற்கையாகவே, நீர் நிறைந்த, அழகான, பறவைகள் வந்து செல்கிற ஏரியாகும். 2009 ல் ஒருமுறை நீர் குறைந்தது ; பிளாஸ்டிக் கழிவுகளும் குவிந்தது. இப் பிண்ணனியில் தான், 2010ல், அக்கறை மிக்க சுற்றுச் சூழலியலாளர்கள் கொண்ட சேலம் மக்கள் குழு Salem Citizens Forum என்ற அமைப்பானது உருவானது ; அரசாங்கத்திடமிருந்து ஏரிப் பராமரிப்பை பெற்றுக் கொண்டது. பியூஸ் அதில் இணைந்து கொணடார். படிப்படியாக அமைப்பே அவருடையதாக மாற்றிக் கொண்டார். அதிலிருந்த நல்லவர்கள் பலரும் வெளியேறிவிட்டனர்.
இதுவரையில் ரூ.52 இலட்சம் செலவு செய்துள்ளதாக பியூஸ் கூறுகிறார். சேலம் மக்கள் குழு பதிவு செய்யப்பட்ட அமைப்பும் அல்ல ! ஏரி பிரபலமானதால் ஆதாயம் அடைந்த பியூஸ் உறவினர் மதன்லால் சேட் சுமார் 40 ஏக்கரில் பிளாட்டுகள், வீட்டு மனைகளை அப்பகுதியில் அமைத்திருந்தார். அவரது நிலத்தின் மதிப்பு உயர்ந்தது. மதன்லால் சேட் ஒரு பிரபலமான மார்வாரி ரியல் எஸ்டேட் வியாபாரி. ரூ.1 இலட்சம் நன்கொடை வழங்கினார். மீதி பணம் எந்த வகையில் வந்தது ( SEED, ICICI கணக்கிலா அல்லது Piyush sethia, Bank of Maharashtra கணக்கிலா) என்பது தெரியாது. 2015 ல் தான், மாரி ஸ்தலம் Mari Sthalam என்ற டிரஸ்ட்டை பதிவு செய்துள்ளனர். (Axis Bank a/c no. 915020020105876). இதிலும் ஏராளமான வரவு செலவுகள் நடந்து வருகின்றன. முறையான தணிக்கை உள்ளதா எனத் தெரியவில்லை.
சென்னை வெள்ளத்தில்….
சிறப்பாக செயல்பட்டதாக பியூஸ் விருது பெற்ற சென்னை வெள்ளத்தின் போது, 2015 டிசம்பர் 5- ந் தேதி துவங்கி பல நாட்கள் பியூஸ் வெளிநாட்டு நிதி வசூல்களை மேற்கொண்டார். தனது கணக்கிற்கு (Piuush sethia, Bank of Maharashtra, S/B account no.20111114356) அனுப்பச் சொல்லி பெற்றார். உள்நாட்டு நிதிகளை மாரி ஸ்தலம் கணக்கிற்கு அனுப்பச் சொல்லிவிட்டார். நிதி வரவு செலவு இதுவரையில் வெளியாகவில்லை.
pima 3
பல்வேறு மட்ட ராஜதந்திர முயற்சிகள் மூலம், வனத்துறையின் 20 டன்கள் மூங்கில்களை கருங்காலி கிராமத்தில் இருந்து பெற முயற்சிப்பதாக அறிவிக்கப்பட்டது; பெற்றதாகவும் தெரிகிறது. ஆனால்…..தற்போது சேலம் மரக்கடை பஜாரில் தான் வாங்கியதாக கூறுகிறார். மற்றொரு புறம் தொழில்நுட்ப ரீதியாக தகுதியில்லாத மூங்கில் படகுகள் Rafts, மூங்கில் வீடுகள் என்ன ஆனது, எங்குள்ளது,கோல்டன் கேட்ஸ் பள்ளியில் குவிக்கப்பட்ட மீதியான நிவாரணப் பொருட்கள் நிலை ஏன்னவென்றெல்லாம் தெரியவில்லை.
பணம், பணம் அல்லது மூங்கில் -அதுதான் பியூஸ்
12.6.2016 ல், சேலம் மாநகர காவல்துறை ஆணையரை கடுமையாக விமர்சனம் செய்து முகநூலில் எழுதிய பியூஸ், ஆதரவு தெரிவிக்க மூக்கனேரியில் ஒரு மூங்கில் குருத்தை நடச் சொன்னார். அல்லது ரூ.500 நோட்டைக் கவரில் போட்டு அவரது முகவரிக்கு அனுப்பச் சொன்னார்.
இயற்கை ஆர்வலர், சுற்றுச் சூழலியலாளர் என்பதெல்லாம் முகமூடியே! 2000 களின் காலகட்டத்தில் அவர் செய்த கார்ப்பரேட் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக, சில நண்பர்கள் வழங்கியுள்ள புரட்சியாளர் முகமூடி பற்றியும், பல்வேறு NGO க்களுடனான அவரது உறவுகள் பற்றியும் தொடர்ந்து எழுதுவேன். பியூஸை போராளியாக்கி, உண்மையான மக்கள் ஊழியர்களை குப்பைத் தொட்டிக்குள் எறிந்துவிட வேண்டாம் என முகநூல், ஊடக நண்பர்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.
சந்திரமோகன், சமூக-அரசியல் செயற்பாட்டாளர். சேலத்தில் வசிக்கிறார்.

ஞாயிறு, மே 13, 2018

மலேசிய தேர்தலும் தமிழ் மரபு அறக்கட்டளையின் இனவெறியும்

தமிழ் மரபு அறக்கட்டளை என்ற பெயரில் தெலுங்கர் நரசையா,கன்னடர் மதிவாணன்,வடுக சில்லறைகள் போக,பிள்ளை சமூகம் என்று கூறப்படுகின்ற மாலன் நாராயணன்,வடுக பிராமின் ?நாராயணன் கண்ணன்,சுபாஷினி  போன்றோர்களை கொண்டு தமிழர் மரபை,தமிழரை அழிக்க கங்கணம் கட்டிகொண்டு உலகம் முழுவதும்  இயங்கிகொண்டு இருக்கிறது இந்த அறக்கட்டளை ..சமீபத்தில்  அடிமை எடிப்பாடியாரால் ,தமிழரின் தொல்லியலை அழிக்க பொறுப்பேற்றுள்ள காவி அடிமை மாபா.பாண்டியராசனால் கௌரவிக்கப்பட்டனர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்..
இவர்கள் உண்மையில் தமிழ் மரபை காக்க வந்த புனிதர்கள் என்றால் என்ன செய்யவேண்டும்..உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களையும்  இணைத்து இன ரீதியாக  இயங்கத்தானே வேண்டும்..

சுபாசினி  மலேசியாவில் தமிழர்கள் சாதிவெறியர்களாக இருக்கிறார்கள் அதில் முக்குலத்தோர் சாதிவெறியினர் என்பது போல் எழுதி தள்ளுகிறார்(தேர்தலில் வெற்றி தோல்வி இயல்பு )..இந்த நைஸ் தோழி கமெண்டு போடுரவனுகள சுனாமி தூக்கிடிச்சுன்னா  தமிழ் நாடு நல்லாயுடும்னு நினைக்கிறேன்..
முன்பு தமிழ்நாட்டில் சாதி வெறி அதிகம் உள்ளது என்று பரப்பிய சுபாஷினி இப்போ மலேசியா போயிட்டு ..இப்போ ஈழத்தில் நிற்கிறார்..ஸ்ரீ போகட்டும்  மலேசியாவில் மலையாளிகளும் மேனன்,நாயர்,எனவும்,தெலுங்கர்கள் நாயுடு ரெட்டி என இன்னும் வாழ்கிறார்கள் என்பது சுபாசினிக்கு தெரியாமல் இல்லை முதலாளிகளை பகைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்  சோறு முக்கியமாச்சே..
நாராயணன் கண்ணன் தமிழர்கள் அனைவரையும் மாலாய்க்காரர்களாக வாழுங்க(மாறுங்க) என்கிறார் இவர்களின்  நோக்கமே வடுகர்களை போல உருமறைப்பு செய்து வாழனும் வடுகர்கள் ஆளனும் ...சாதியை ஒழிக்கணும் மலேசியாவில் வன்னியர்கள்,பறையர்கள்,முக்குலத்தோர் என்றால் தமிழர் என்று கண்டுபிடுத்துவிட முடியுமே என்பதால் .

நிற்க..
இப்போது மலேசியாவில் தேர்தெடுக்கப்பட்டிருக்கும்  டாக்டர் மகாத்தீர் முகம்மது கேரளா முதல்வர்  பினராய் விசயன் சமூகம் . டாக்டர் மகாத்தீர் முகம்மதுவின் தந்தை மலையாளி இஸ்கந்தர் குட்டி
 //KUALA LUMPUR, July 31 — Datuk Seri Ahmad Zahid Hamidi said he was informed by the National Registration Department that Tun Dr Mahathir Mohamad’s original name was “Mahathir a/l Iskandar Kutty.”
 இப்படியிருக்க உரு மாறிய  வடுகம் தமிழர்களை அழிக்க  உலகெங்கும் இயங்குகிறதை சுபாசினி பேசவேண்டுமா இல்லையா?
 ஆக மலையாளி ,தெலுங்கன் ,கன்னடன் சாதி வெறியுடன்,இனவெறியுடன் இருப்பதை பற்றி பேச தடுப்பது எது முதலாளிக்கு விசுவாசம் என்றால் தமிழர் என்ற போர்வை எதற்கு உங்களுக்கு வெட்கமில்லையா உங்களுக்கு ...

டாக்டர் மகாத்தீர் முகம்மதுவின் தந்தை மலையாளி இஸ்கந்தர் குட்டி  சுட்டியில் சென்று மேலதிக விபரங்களை அறிந்து கொள்ளுங்கள்

1.https://cilisos.my/omg-the-new-chief-minister-of-kerala-looks-like-tun-mahathir/

2.https://www.malaysiakini.com/letters/100785

3.https://forum.lowyat.net/topic/4373863/all




















செவ்வாய், ஜனவரி 23, 2018

இந்துத்துவ அரட்டல்-6,7

இந்துத்துவ அரட்டல்-6
அரட்டல் (Terrorist) கொள்கை
பதினெட்டாம் நூற்றாண்டில் பிராமண நடுத்தர வகுப்பிடம் ‘இந்து’ எனும் ஓர்மையும் ‘இந்திய’ ஓர்மையும் தலையெடுத்தது. முதலில் வங்கத்திலும் அடுத்துப் பஞ்சாபிலும் அது தீவிர அரட்டல் வன்முறை வடிவத்தை எடுத்தமையால், அதன் காற்றைப் பிடுங்குவதற்கென்றே 1885ஆம் ஆண்டில் "இந்தியத் தேசியப் பேராயத்தை" (Indian National Congress) ஆலன்ஆக்டேவியன் இயூம் (Allan Octavian Hume 1829-1912) தோற்றுவித்தார்; பீறிட்டு எழுந்துவந்த இந்து-இந்தி(ய)த் தேசிய ஓர்மையையும், வங்கத்து இளைஞர்களிடமும் மாணவர்களிடமும் தோன்றிய கமுக்கமான கரவு கழகங்களையும் அம் மிதவிய அமைப்பைக்கொண்டு குடுவைக்குள் அடக்கப் பார்த்தார். ஆனால், அம் மிதவிய அமைப்பிற்குள்ளேதான் 'பால கங்காதர திலகர்' (1886-1920) எனும் சித்பாவன பிராமணர் மகாராட்டிரத்தில் தலையெடுத்தார். ஆங்கிலேய அரசுடன் ஒத்துழைத்து நன்மை பெற விழைந்த இன்னொரு சித்பாவன பிராமணரும் பேராயக் கட்சித் தலைவருமான 'கோபால கிருட்டின கோக்கலே'வை (1866-1915) எதிர்த்து அவர் களமாடினார்.
அரட்டல் வன்முறையைக்கொண்டுதான் இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து ஆங்கிலேயர் ஆட்சியை அகற்ற முடியுமெனும் எண்ணம் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் துளிர்த்தது. அந்தக் காலத்தில் வங்காளத்தில் 'அக்ரா' (Akra) எனும் உடற்பயிற்சிக் களரிகள் பரவலாக விளங்கின. அக் களரிகளில் பயிற்சி பெற்றுவந்த இளைஞர்களையெல்லாம் திரட்டிக் கிழக்கு வங்கத்திலிருந்த டாக்கா நகரத்தை மையமாகக்கொண்டு 'டாக்கா அனுசீலன் சமிதி'யும் கொல்கொத்தா நகரை நடுவமாகக்கொண்டு 'யுகாந்தர் குழு'வும் தோற்றுவிக்கப்பட்டன. இவ்விரு அரட்டல் வன்முறை (பயங்கரவாத) அமைப்புகளும் 1902ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டன.
வெடிகுண்டு தாக்குதல்களையும், அரசியல் படுகொலைகளையும் அரங்கேற்றுவது முதலான அரட்டல் (பயங்கரவாத) அரசியல் வழிநின்ற தீவிர இந்து தேசிய இயக்கமான அனுசீலன் இயக்கத்திற்கு அரவிந்த கோசும் அவரது தம்பியான பரீந்திரநாத் கோசும் (1880 -1959) தலைமை தாங்கினர். அரவிந்தரின் அனுசீலன் இயக்கம், காளி (சத்தி) வழிபாட்டை அடியொற்றியது. பக்கிம் சந்திர சாட்டர்ச்சியின் (1838-94) எழுத்துகளும் விவேகானந்தரின் (1863-1902) எழுத்துகளும் அந்த அரட்டல் இயக்கத்தின் மெய்யியல் அடிதளமாயின. 1881ஆம் ஆண்டில் பக்கிம் சந்திர சாட்டர்ச்சி இயற்றிய “வந்தே மாதரம்” எனும் பாடலில் “இந்தியத் தாயை”த் ‘துர்கை’ என்றும் ‘இலக்குமி’ என்றும் குறிப்பிடுவதைக்கொண்டு காளி வழிபாட்டைத் தழுவியே வங்கத்து அரட்டல் வன்முறை வளர்ந்ததைப் புரிந்துகொள்ளலாம்.
வங்கத்தில் தோன்றிய அனுசீலன் சமிதியும் யுகாந்தர் குழுவும் மீமிகக் கமுக்கமாக இயங்கிவந்த கரவுக் கழகங்களாகும் (Secret Societies). இக் கரவுக் கழகங்களைச் சேர்ந்த பெரும்பாலோர் இங்கிலாந்து முதலான ஐரோப்பிய நாடுகள் உயர்கல்வி பெற்ற வங்காளப் பிராமணர்களாயிருந்தனர். இவர்கள் ஐரோப்பாவில் விளங்கிய ‘அரசுக் குலைப்பு’ (Anarchist) கொள்கையாலும், இத்தாலியத் தேசியராகிய 'மாசினி'யின் கொள்கையாலும் 'கக்குசோ ஒக்கக்கூரா' (Kakuzo Okakura) எனும் சப்பானியரின் 'அனைத்தாசிய' (Pan-Asianism) கொள்கையாலும் ஈர்க்கப்பட்டனர்.
1902ஆம் ஆண்டில் வங்கத்து அனுசீலன் சமிதியின்கீழ் மூன்று அமைப்புகள் இயங்கிவந்தன. 'சத்தீசு சந்திர பாசு', 'சரளாதேவி' ஆகியோரின்கீழ் இயங்கிவந்த இரு அமைப்புகள் போக, 'சதீந்திரநாத் பானர்ச்சி', 'அரவிந்த கோசு' ஆகியோரின் தலைமையில் மூன்றாவது அமைப்பு இருந்தது. 1905ஆம் ஆண்டில் பழைய வங்காளத்தை மேற்கு வங்கம் என்றும் கிழக்கு வங்கம் என்றும் ஆங்கிலேயர் அரசு இரண்டாகப் பிரித்தது. வங்காளப் பத்ரலோகுகளிடம் அது மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால், உடற்பயிற்சிக் களரிகளை ஏற்படுத்திய இந்து கரவுக் கழகங்கள், வங்க இளைஞர்களுக்குச் சிலம்பம், கத்தி முதலான கருவிகளை ஆளச் சொல்லிக்கொடுத்தன. கிழக்கு வங்காள அனுசீலன் சமிதியின் டாக்கா கிளை, 'புலின் பிகாரி தாசு'வின் (1877–1949) தலைமையின்கீழ் நல்லதோர் அரட்டல் வன்முறை இயக்கமாக வளர்ந்தது.
மாணிக்கதலா சதி வழக்குக்குப்பின் அனுசீலன் சமிதியின் தலைவராகிய 'பாகா சடின்' (Bhaga Jatin 1879-1915) வங்கம், பீகார், ஒடியா, உத்தர பைதிரம் ஆகிய இடங்களில் அதன் கிளைகளைத் தோற்றுவித்தார். கங்கை கழிமுகத்திலிருக்கும் சுந்தரவனத்தில் இந்து அரட்டலர்கள் ஒளிந்து வாழ்ந்தனர். இவர்களில் சிலர், அயல்நாடுகளிலிருந்து கமுக்கமாக இயங்கிவந்தனர். கொல்கொத்தாவின் வில்லியம் கோட்டையைப் பாசறையாகக் கொண்டிருந்த 'யாட்' படைப்பிரிவுடன் (Jat Regiment) பாகா சடின் கமுக்கமான தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டார். நரேந்திரநாத் எனும் அரட்டலரின் தலைமையில் அனுசீலன் சமிதி கொள்ளை, கொலை நடத்தித் தம் இயக்கத்திற்குப் பணம் திரட்டினார். பிரேன் தத்த குப்தா எனும் சடினின் கூட்டாளி, 'சம்சுல் ஆலம்' என்னும் வங்கக் காவல்துறை அதிகாரியைக் கொல்ல திட்டமிட்டதால், அவர்களின்மேல் 'ஔரா-சிவப்பூர் சதி வழக்கு' தொடுக்கப்பட்டது.
1907ஆம் ஆண்டுதொட்டுப் 'பரிந்திர குமார் கோசு' (Barindra Kumar Ghose 1880-1959) தலைமையிலமைந்த யுகாந்தர் குழு, உருசியப் புரட்சிக் குழுக்களின் பாங்கில் செயல்படத் தொடங்கியது. பிரிட்டிசாரின் ஆளுகைக்குட்பட்ட வங்கத்தில் இது போன்ற கரவுக் குழுக்கள் கமுக்கமாக இயங்கிவந்தன. இந்தக் குழுக்களெல்லாம் பெரும்பாலும் இந்துவிய அரட்டல் குழுக்களாகவே அமைந்தமையால், இசுலாமியர் அவற்றில் சேரவில்லை.
அனுசீலன் சமிதியின் உறுப்பினர்களில் பெரும்பாலோர் 'மேல்சாதி'யராக -- வங்கத்துப் பிராமணர்களாகவும் பத்ரலோகுகளாகவும் -- இருந்தனர். அவர்கள் பகவற்கீதையை உச்சிமேல் வைத்துப் போற்றினர். அத்துடன், அவர்கள் சத்தி (சக்தி) வழிபாட்டினராயிருந்தனர். காளியை ‘ஆதி சத்தி’யாக அவர்கள் வணங்கினர். இதனால், சுதேசி இயக்கத்தை “வணிகர்களின் இயக்கம்” என்று கூறி அவர்கள் நகையாடினர்.
அனுசீலன் சமிதி என்னும் இந்து அரட்டல் கரவுக் கழகத்தின் எண்ணவோட்டங்களை ஆற்றுப்படுத்தியவர் 'நிவேதிதா' எனும் பெயர் பூண்ட 'மார்கரெட் எலிசபெத் நோபில்' (1867-1911) எனும் அயர்லாந்து நாட்டவராவார். இவர் விவேகானந்தரின் மாணவியுமாவார்.
1911ஆம் ஆண்டில் அனுசீலன் சமிதியும் யுகாந்தர் குழுவும் கொலை, கொள்ளை, குண்டு வெடிப்பு முதலான செயல்களில் ஈடுபட்டுவந்ததால், டேராடூனில் இந்தியக் காட்டுவளக் கழகத்தின் அதிகாரியாயிருந்த சர் ராசு பிகாரி போசுதான் இந்தியத் துணைக்கண்டத்திலிருந்த ‘புரட்சிக்காரர்களிலேயே மிகவும் ஆபத்தானவர்்’ என்று ஆங்கிலேயரின் அரசு கருதியது.
1905க்கும் 1910க்கும் இடையில் இந்திய மாணவர்கள் தங்குவதற்கான ஒரு விடுதியாக வடஇலண்டனில் 'சியாம்ச்சி கிருட்டின வர்மா' (Shyamji Krishna Varma 1857- 1930) என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட 'இந்தியா இல்லம்' (India House), இந்து-இந்தி(ய)ப் புரட்சியாளர்களின் புகலிடமானது. வினாயக் தாமோதர் சாவர்க்கர், 'மேடம் பிக்காய்ச்சிக் காமா' (Madam Bhikaiji Cama 1861-1936) வீரேந்திரநாத் சட்டோபாத்தியா (Virendranath Chattopadhya 1880-1937), 'லாலா அர்தயால்' (Lala Hardayal 1884-1939), வரகனேரி வெங்கடேச சுப்பிரமணியம் ஐயர் (1881-1925), மண்டயம் பார்த்தசாரதி திருமால் ஆச்சாரியா (1887-1951), பாண்டுரங் மகாதேவ் பப்பட் (Pandurang Mahadev Bapat 1880- 1967) முதலானோர் இந்தியா இல்லத்திலிருந்து பணியாற்றினர்.
இந்திய அரட்டலர்களோடு கொண்டிருந்த மிக நெருக்கமான உறவால் சாவர்க்கர் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார். ஆங்கிலேயரை இந்தியாவிலிருந்து விரட்டுவதற்குக் கரந்தடி (கெரில்லா) போர் முறையில் ஈடுபட வேண்டுமெனச் சாவர்க்கர் கருதினார். வெடிகுண்டு செய்வதைப் பற்றியும் கரந்தடிப் போர்முறையைப் பற்றியும் எழுதிச் சாவர்க்கர் அவற்றைக் கமுக்கமாக அச்சிட்டு வெளியிட்டார்.
சாவர்க்கரின் நெருங்கிய கூட்டாளியான 'மதன்லால் திங்கிரா' (Madan Lal Dhingra 1883-1909), 'சர் வில்லியம் அட் கர்சன் வைல்லி' (Sir William Hutt Curzon Wyllie) எனும் ஆங்கிலேயரை 1909ஆம் ஆண்டில் கொலை செய்தார். திங்கிராவை மிகப் பெரிய ஈகியாகவும் புரட்சியாளருமாகச் சாவர்க்கர் உருவகப்படுத்தினார்.
ஐரோப்பியர் பெற்றெடுத்த ‘ஆரியம்’ என்னும் அரசியல் அரிதாரத்தைப் பூசிக்கொண்ட நாடுதான் செருமனி நாடு. 'நாசிசம்' எனும் இனவெறிக் கொள்கை, அதனால் பிராமணியம் ஈன்ற இந்து தேசியத்துடன் மணவுறவு பூண்டது. எங்கு பார்த்தாலும் அரட்டல் வன்முறையில் ஈடுபட்டுவந்த இந்துக் கரவுக் குழுக்கள் ஒரு தனிப்படையே கட்டும் அளவுக்கு அடுத்த நகர்வுக்குச் சென்றன.
ஆரிய சமாசத்தின் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட பஞ்சாபியரான அர் தயாள், சியாம் கிருட்டின வர்மா, சாவர்க்கர், பிக்காய்ச்சிக் காமா முதலானோரின் தொடர்பிலிருந்தார். இந்தியாவிலேயே “மிகப் பெரிய வன்முறைப் புரட்சிக்காரன்” என்றறியப்பட்ட ராசு பிகாரி போசுடனும் அவர் நெருங்கிய தொடர்பிலிருந்தார்.
பின்பு அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்த அர் தயாள் சிங், கலிஃபோர்னியாவிலிருந்த பஞ்சாபியரைத் திரட்டிக் ‘கத்தர்’ கட்சியின் பெருந்தலைகளில் ஒருவராகத் திகழ்ந்தார்.
1912ஆம் ஆண்டில் செருமானியின் பட்டத்து இளவரசர் கொல்கொத்தாவுக்கு வந்தபோது, நரேந்திர பட்டாச்சாரியாவும் பாகா சடினும் அவரைக் கண்டு பேசினர்; தங்களுக்கு வேண்டிய போர்க்கருவிகளையும் வெடிப்பொருள்களையும் பெறுவதற்குப் பேச்சுவார்த்தை நடத்தினர். 1914ஆம் ஆண்டில் ராசு பிகாரி போசுவும் மகாராட்டிரரான விஃழ்ணு கணேசு பிங்லேயும் (1888-1915) சீக்கியத் தீவிரர் சிலருடன் சேர்ந்து 1915ஆம் ஆண்டில் ஒரு படைக்கலகத்தைச் செய்விப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.
அதே நேரத்தில்,அனுசீலன் சமிதியும் யுகாந்தர் குழுவும் வங்கத்தில் அரட்டல் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டன. வெள்ளையர் அரசும் கடிகாவல் படையும் ஏறத்தாழ நிலைகுலைந்தன. அப்படியிருந்தும், இந்து அரட்டலரின்1915ஆம் ஆண்டுப் படைக்கலகத் திட்டம் பொய்த்துப் போனது. இந்து அரட்டலர் பலர் கொல்லப்பட்டனர்; பலர் தளைப்படுத்தப்பட்டனர். இந்த நிலையில்தான், 1915 'இந்தியப் பாதுகாப்புச் சட்டம்' வந்தது. கொல்கொத்தாவிலிருந்து இயங்கிவந்த அனுசீலன் சமிதி ஆங்கிலேயர் அரசால் நசுக்கப்பட்டது. இதையடுத்து 'ரௌலட் சட்டங்கள்' வந்தன. இதனால், இந்து அரட்டல் வன்முறையாளர் பலர் பர்மா முதலான நாடுகளுக்குத் தப்பிச்சென்றனர். ரௌலட் சட்டங்களை எதிர்த்து 1919க்கும் 1922க்கும் இடையில் காந்தி அறப்போராட்டங்களை நடத்தினார்.
அனுசீலன் சமிதி எனும் இந்து அரட்டல் வன்முறை அமைப்பு 1920களில் வன்முறை வழியிலிருந்து விலகிப் பேராயக் கட்சியின் அறவழிப் போராட்டங்களில் பங்குபெற்றது. ஆயினும், அந்த அமைப்பைச் சேர்ந்த 'சச்சிந்திரநாத் சன்யால்' (1893-1942) மட்டும் அறவழியில் செல்லாது 1929ஆம் ஆண்டில் 'இந்திய இத்துத்தான் குடியரசுக் கழகம்' எனும் அமைப்பைத் தொடங்கினார். சுபாசு சந்திர போசு போன்றோர் அந்த இயக்கத்துடன் தொடர்புகொண்டிருந்ததாக ஆங்கிலேயர் அரசு கருதியது.
இந் நிலையில், பேராயக் கட்சியின் தலைவராருந்த தேசபந்து சித்தரஞ்சன் தாசிடம் வன்முறை வழியைக் கைவிடுவதாகப் உறுதியளித்த அனுசீலன் சமிதியும் யுகாந்தர் குழுவும், 1920ஆம் ஆண்டிலும் 1922ஆம் ஆண்டிலும் மீண்டும் அதே அரட்டல் வன்முறைக்குத் திரும்பின. 'சூரியா சென்' (1894 -1934) என்பவரின் தலைமையில் இயங்கிய யுகாந்தர் குழு, அசாம்-வங்கத் தொடர் வண்டித் துறையின் சிட்டகாங் அலுவலகத்தைத் தாக்கிக் கொள்ளையிட்டது.
வங்கத்திலும் பஞ்சாபிலும் தோன்றிய அரட்டல் வன்முறையே இந்துத்துவத்தின் செயல்வடிவம்; அதுவே இந்துத்துவத்தின் பிறவிக்குணம் என்பதைத்தான் மேற்போந்த வரலாற்றுப் பாடங்கள் காட்டுகின்றன.
இந்துத்துவ அரட்டல்-7
‘இடதுசொறி’ இந்துத்துவம்
1920களில் வங்கத்தில் தோன்றிய 'இந்து அரட்டல் வன்முறை' அரசியலிலிருந்து முளைத்த கள்ளிகளே இந்தி(ய) ஒப்புரவு(சோசியலிச)க் கட்சிகளும்
இந்தி(ய)ப் பொதுவுடைமைக் கட்சிகளும் ஆகும். இந்தியத் துணைக்கண்டத்தில் வாழும் பல்வேறு தேசிய இனங்களை ‘இந்தியா’ எனும் பலபட்டறை அரசு அடக்கி ஒடுக்கி அழிக்க உதவும் ‘ஓர் இந்தியா’ எனும் இந்துத்துவக் கொள்கைக்கு இடங்கை கட்சிகளெல்லாம் கொடி பிடிப்பது அதை மெய்ப்பிக்கிறது.
1923ஆம் ஆண்டில் 'இந்துத்தான் குடியரசுக் கழகம்' (Hindustan Republican Association) வாரணாசியில் தோற்றுவிக்கப்பட்டது. இந்தக் கழகம் கொலை கொள்ளைகளை நிகழ்த்திப் பணம் திரட்டியது. இவ் வமைப்பு 1928ஆம் ஆண்டில் 'இந்துத்தான் ஒப்புரவுக் குடியரசுக் கழகம்' (Hindustan Socialist Republican Association) எனப் பெயரை மாற்றிக்கொண்டது. பகத்சிங் இந்த அமைப்பில் உறுப்பினராயிருந்தார்.
1927ஆம் ஆண்டில் பிரிட்டனிலிருந்து பிரிந்து இந்தியா தனிநாடாக வேண்டுமென இந்தியத் தேசியப் பேராயம் (காங்கிரசு) முழங்கத் தொடங்கியது.
1930களில் சிட்டகாங் படைக்கிடங்கின்மேல் இந்து அரட்டலர் தொடுத்த தாக்குதலுக்குப்பின், இந்து அரட்டல் வன்முறை மேலோங்கியது. ஆயினும், 1934ஆம் ஆண்டளவில் வன்முறைத் தாக்குதல்கள் மெல்ல ஓய்ந்தன.
1930களில் புத்துயிர் பெற்ற அனுசீலன் சமிதி, 'காக்கோரி சதி திட்டம்', 'சிட்டகாங் படைகலக் கொட்டில் தாக்குதல்' முதலான அரட்டல் வன்முறைத் தாக்குதல்களில் ஈடுபட்டது. முதலாம் உலகப்போரின் போது அனுசீலன் சமிதி மேற்கொண்ட அரட்டல் வன்முறை தாக்குதல்களும், பஞ்சாபில் எழுந்த 'கத்தர்' (Ghadar)) படைக்கலகமும் 1915ஆம் ஆண்டு இந்தியப் பாதுகாப்புச் சட்டம் வருவதற்கான காரணங்களாயின. ஆங்கிலேய அரசு கட்டவிழ்த்துவிட்ட ஒடுக்குமுறையால் அனுசீலன் சமிதியின் ஒரு பகுதியினர், காந்தியின் தலைமையிலமைந்த பேராயக் கட்சியிலும் அப் பேராயக் கட்சிக்குள்ளிருந்த சுபாசு சந்திர போசின் அணியிலும் சேரலாயினர். வேறு சிலர், பொதுவுடைமை இயக்கத்தில் சேர்ந்தனர்.
மற்றொரு கரவுக் கழகமும் அரட்டல் வன்முறை அமைப்புமான யுகாந்தர் குழு, 1938ஆம் ஆண்டில் கலைக்கப்பட்டது. அதன் உறுப்பினர்கள் மேற்கு வங்கத்தில் புரட்சிகர ஒப்புரவுக் கட்சியாகவும் (Revolutionarys Socialist Party) கிழக்கு வங்காளத்தில் 'தொழிலாளர் உழவர் ஒப்புரவுக் கட்சி'யாகவும் திரண்டனர்.
முந்தைய அனுசீலன் இயக்கத்தவர் பலர் 1930களில் இடதுசாரி அரசியலால் ஈர்க்கப்பட்டனர். அவர்களில் சிலர் பேராயக் கட்சிக்குள்ளேயே 'பேராய ஒப்புரவுக் கட்சி' (Congress Socialist Party)) எனும் பிரிவாகத் தனித்து இயங்கலாயினர். அவர்களில் சிலர் மார்க்சியத்தால் ஈர்க்கப்பட்டுப் 'புரட்சிகர ஒப்புரவுக் கட்சி' (RSP) என்னும் கட்சியைத் தோற்றுவித்தனர்.
அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அனுசீலன் சமிதியைச் சேர்ந்த 39 பேர்களால் 'பொதுவுடைமை ஒக்கல்' (Communist Consolidation) என்னும் அமைப்பு 1935ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது. இதுவே பின்னர் இந்தியப் பொதுவுடைமை கட்சியானது. அனுசீலன் சமிதி என்னும் இந்து அரட்டல் இயக்கத்திலிருந்து வந்து மார்க்சிய-இலெனினியத்தை ஏற்றுக்கொண்டவர்களில் பலர் பொதுவுடைமை உலகமைப்பு (Communist International) எனும் அமைப்பை ஐயத்தோடுதான் பார்த்தனர். பொதுவுடைமைக் கட்சியையும் உருசியாவை ஆண்ட இயோசிஃப் தாலினையும் (Joseph Stalin) குறைகூறிடினும், தாலின் எதிர்த்து நின்ற லியோன் டிராட்சுக்கியின் பக்கம் அவர்கள் சாயவே இல்லை.
ஆர். எசு. எசு இயக்கத்தைத் தோற்றுவித்த கேசவ பலிராம் எக்டேவர், கொல்கொத்தாவில் மருத்துவம் படிக்கையில் வங்கத்தில் இயங்கி வந்த அனுசீலன் சமிதியின் உறுப்பினராயிருந்தார்.
சுபாசு சந்திர போசும்கூட அனுசீலன் சமிதியில் உறுப்பினராயிருந்ததாகச் சொல்லப்படுகிறது. வங்கத்தில் மேலோங்கியிருந்த இந்து அரட்டல் வன்முறையாளர்களின் செயல்பாடுகளைக் காந்தி கடுமையாக எதிர்த்துவந்தார். 1931ஆம் ஆண்டு நடந்த வட்டமேசை மாநாட்டில் பங்கெடுத்த காந்தி, அரட்டல் வன்முறைக்கு எதிராகப் பேசினார். தம்மொடு இணைந்து செயல்பட மறுத்தால், பிரிட்டிசு அரசு அரட்டல் வன்முறையாளரோடுதான் பேச வேண்டி வருமென மிரட்டிய காந்தி, பேராயக் கட்சியுடன் சேர்ந்து பணியாற்றுவது ஒன்றே அரட்டல் வன்முறையை ஒழிக்க உதவுமென வெளிப்படையாகவே சொன்னார்.
ஆங்கிலேய அரசின் முன்னால் நிற்கையில் காந்திக்கு வாய்த்த தனி வலிமை எது தெரியுமா? அரட்டல் வன்முறையாளர்களை அவர் விட்டுக்கொடுக்காமல் எதிர்த்து நின்ற போக்கே அதுவாகும். இந்து அரட்டல் வன்முறைக்கும் இந்து மிதவியத்திற்கும் இடையிலான பங்காளிச் சண்டையின் வெளிப்பாடு அது.
பேராயக் கட்சியில் இருக்கும்போதே அனுசீலன் சமிதியின் கொள்கைகளைப் பரப்புவதில் அரவிந்தர் பெரும் முனைப்பு காட்டினார். (பிற்காலத்தில் யாதவ்பூர் பல்கலைக்கழகமாக வளர்ந்த) வங்க தேசியக் கல்லூரியின் முதல்வராக அரவிந்தர் பணியாற்றி வந்தபோது, அந்தக் கல்லூரியில் பயின்றவர்தாம் நரேந்திரநாத் பட்டாச்சாரியா என்னும் இயற்பெயர் கொண்ட எம். என். ராய் (1887 -1954) ஆவார். யுகாந்தர் குழு எனும் இந்து அரட்டல் குழுவிலிருந்த இவர்தாம் பொதுவுடைமை உலகமைப்பின் ( (Communist International)) உறுப்பினரானார்; பின்பு இந்தியப் பொதுவுடைமைக் கட்சியைத் தோற்றுநர்களில் ஒருவரானார்.
இந்து அரட்டலியக் குழுவாயிருந்த அனுசீலன் சமிதியின் உறுப்பினராயிருந்த வேறு சிலர் ‘புரட்சிகர ஒப்புரவுக் கட்சி’ (RSP) எனும் கட்சியைத் தோற்றுவித்ததைப்பற்றி ஏற்கெனவே கண்டோம்.
'இல்லுமினாட்டிகள்'
இவர்களில் சிலர் உலகாளும் 'ஃபீரீ மேசன்' (Free Mason) எனும் தீயக் கரவுக்கழகத்தின் (Secret Society) உறுப்பினர்களாயிருந்தனர்.
பிரம சமாசத்தின் உறுப்பினராகவும் இரவீந்திரநாம் தாகூரின் உறவினராகவும் இருந்த ககனேந்திர தாகூர் (1867-1938) 'ஃபிரீ மேசன்' கழகத்தின் உறுப்பினராயிருந்தார்.
நரேந்திரநாத் தத்தா என்னும் இயற்பெயரில் 1884ஆம் ஆண்டில் விவேகானந்தர் (1863 -1902) 'ஃபிரீ மேசன்' அமைப்பின் உறுப்பினராகத் தீக்கைப் பெற்றார்.
1912ஆம் ஆண்டில் இந்தியப் பகராளுநராயிருந்த ஆர்டிஞ்சு கோமகனைக் (Viceroy Lord Hardinge) கொல்ல முயன்ற சர் ராசு பீகாரி போசும்கூட (Rash Bihari Bose 1886-1945) 'ஃபிரீ மேசன்' உறுப்பினராயிருந்தார்.
சுபாசு சந்திரபோசு தமது ஆசானாகக் கொண்டிருந்த தேசபந்து சித்தரஞ்சன் தாசும் (1869-1925) 'ஃபிரீ மேசன்' இயக்கதின் உறுப்பினராயிருந்தார்.
1885ஆம் ஆண்டில் இந்தியத் தேசியப் பேராயத்தின் (காங்கிரசின்) முதலாவது மாநாட்டிற்குத் தலைமை தாங்கிய 'உமேசு சந்திர பானர்ச்சி' (Womesh Chunder Bonnerjee 1844-1906) 'ஃபிரீ மேசன்' உறுப்பினராயிருந்தார்.
பேராயக் கட்சித் தலைவரும், 1919-22 ஒத்துழையாமை இயக்கத்தில் பெரும் பங்கு வகித்தவரும், சுயராச்சியக் கட்சியைத் தோற்றுவித்தவருமான 'தேசபந்து சித்தரஞ்சன் தாசு'வும் (1869 –1925) கூடப் ஃபிரீ மேசன் உறுப்பினராவார்.
பிரம சமாசத்தின் உறுப்பினராயிருந்த கேசப் சந்திர சென்னும் (1838-84), 1899ஆம் ஆண்டில் பேராயக் கட்சிக்குத் தலைவராகவும் இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாகவுமிருந்த இரமேசு சந்திர தத்தும் (1848-1909) கூட 'ஃபிரீ மேசன்' உறுப்பினர்களாயிருந்தனர்.
1942ஆம் ஆண்டில் இந்தியத் தேசியப் படையையும் (Indian National Army),1913ஆம் ஆண்டில் 'கத்தர்' (Ghadar) புரட்சி இயக்கத்தையும் கட்டியமைத்தவர்களில் ஒருவரான சர் ராசு பிகாரி கோசும் (1845– 1921) 'ஃபிரீ மேசன்' உறுப்பினராவார்.
ஆர். எசு. எசு. எனும் அரட்டல் வன்முறை இயக்கம் நடத்திவரும் இன்றைய மறைமுகக் காவியாட்சி, உலகளாவிய கொற்றுப்புரை(கார்ப்பொரேட்)களுடன் நகமும் சதையும்போலமைந்து இந்தியத் துணைக் கண்டத்தின் இயற்கை வளங்கள் அத்தனையையும் விற்றுக் காசாக்கி அதில் ஒரு பங்கை இந்தி(ய)க் கொற்றுப்புரைகளுக்குக் கொடுத்துவருவது கண்கூடான உண்மை. உலகச் சந்தையையும் பொருளியலையும் தம் கைக்குள் வைத்திருக்கும் யூத இல்லுமினாட்டிகளுக்கும் இந்துத்துவப் பரிவாரங்களுக்கும் இடையில் பிரிக்கவொண்ணாக் கொப்பூழ் உறவு உள்ளதை நாட்டு நடப்புகள் தெளிவுறக் காட்டுகின்றன.
தரங்கெட்ட சூழ்ச்சிகளேயன்றி தலையில் சரக்கேதும் இல்லாத ஆர். எசு. எசு.வுக்கும் பார‘தீய’ சனதா கட்சிக்கும் சொந்தமான பொருளியல் கொள்கை ஏதேனும் உண்டா? இல்லையே! பேராயக் கட்சி கொணர்ந்த தரகு முதலாளியப் பொருளியல் கொள்கைகளின் ஈயடிச்சான் படியாகத்தான் அவற்றின் இன்றைய பொருளியல் கொள்கைகள் உள்ளன. ‘பேராயக் கட்சி + மாடு’ என்று எங்கள் கொள்கையெனக் காவிக்கட்சியின் நடுவண் பொருளமைச்சரே திருவாய்மலர்ந்தார்!
மேற்போந்தவைதான் இந்துத்துவத்தின் கதைச் சுருக்கம்!-ஐயா குணா