பக்கங்கள்

திருக்குறள்

புதன், ஆகஸ்ட் 22, 2012

வெற்றிகொண்டான் நாகரிக பேச்சா?




திருநாவுக்கரசரின் குற்ற உணர்வு இன்னும் தீர்ந்து தெளிந்த பாடில்லை . தவிக்கிறார்...தத்தளிக்கிறார் ..தக்காளி விக்கிறார்... அவருடைய குலதெய்வம் எம்ஜியார் ஆதியில் இருந்த கட்சி காங்கிரஸ் என்று கண்டுபிடித்து,அதில் இணைந்ததில் மிகவும் சந்தோசப் படுவதாக,பெருமைப்படுவதாக சொல்லிவிட்டார்.

1940களில்எம்ஜியார் கதர் உடுத்தி காங்கிரஸ்காரராக, ருத்ராட்ச மாலை, நெற்றியில் திருமண் என்று இருந்தவர் தான் .
ஆனால் அவருக்கு பெரிதாய் அரசியல் ஆர்வம் ,ஈடுபாடு,நோக்கம் ஏதும் கிடையாது என எம் .ஆர் .ராதா சொல்வார் . அவருக்கு சினிமாவில் எப்படியாவது முன்னுக்கு வர ஆர்வம் இருந்தது .உடம்பை மிகவும் கவனமாக பேணுவதில் அக்கறை இருந்தது . மது,சிகரட் கிடையாது .அப்போது மராட்டிய சிவாஜியாக எம்ஜியாரை நாடகத்தில் நடிக்க வைக்க வேண்டி பெரியார் விரும்பி சொல்லி விட்டாராம் . எம்ஜியாருக்கு அரசியல் சாயம் பூசிக்கொள்ள விருப்பமில்லாததால் மறுத்து விட்டார் . பின்னர் ஈ.வி . கே சம்பத் தான் சிவாஜியாக நாடகத்தில் நடித்தாராம்.அதன் பின்னர் வி .சி .கணேசன் அந்த நாடகத்தில் சிவாஜியாக நடித்து பெரியார் வாயால் சிவாஜி கணேசன் என அழைக்கப்பட்டு பிரபலமாகி திரையுலகிலும் சிவாஜி கணேசன் ஆனார்.
எம்ஜியார் முதல் முறையாக முதல்வர் ஆனபோது நடந்த விஷயம் நினைவிற்கு வந்தது. எம்ஜியார் தன் அரசியல் பிரக்ஞை ரொம்ப பழைமையானது என வலியுறுத்த வேண்டி ' அன்றைய தினம் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது, மகாத்மா காந்தி அவர்கள் உண்ணாவிரதம் இருந்த போது, நானும் உண்ணாவிரதம் இருந்தேன் ' என என்னத்தையோ உளறினார். உடனே வெற்றிகொண்டான் இதை தன் பாணி தாக்குதலுக்கு பயன்படுத்திக்கொண்டது இப்படி !
" குல்லாக்காரப்பய வாயத்தொறந்தாலே புழுகித்தள்ளுறான்! காந்தியும் நானும் ஒண்ணா ஒரே மேடையிலே உண்ணாவிரதம் இருந்தேன்னு சொல்லுறாய்யா! இவன் பொய்யுக்கு அளவே இல்லாம போயிடிச்சே! நான் கூட நம்ம கோடம்பாக்கம் காந்தி கிட்டே " ஏலே ! நீயாடா? உன்னோட குல்லாக்காரன் சேர்ந்து ஏதும் உண்ணாவிரதம் இருந்தானாடா?"ன்னு கேட்கிறேன் .அவன் பதறிப் போய் " சத்தியமா நான் இல்லே அண்ணே ..." ன்னு புலம்புறான் . குல்லாக்காரப்பய மகாத்மா காந்தியாத்தான்யா சொல்றான் !"



(காந்தியார் உண்ணாவிரதம் இருக்கிறபோதெல்லாம் நாடெங்கும் பலரும் அப்போது உண்ணாவிரதம் இருப்பார்கள் தான்.)

குல்லாக்காரப்பய.... குல்லாக்காரப்பய என்று எம்ஜியாரை கோமாளியாக சித்தரித்து வெற்றி கொண்டான் அப்போது கூட்டத்தை சிரிக்கவைத்து பலருக்கு வயிறே புண்ணாகி விடும் .

எம்ஜியார் திடீரென்று " நான் மன்றாடியார் பரம்பரை " என்றார் .கருணாநிதி தன் பதிலாக " ஆம் . டெல்லியில் மன்றாடிய பரம்பரை !"என்றார் .
அப்போது திமுக மேடைகளில் வெற்றி கொண்டான் செய்த கலாட்டா -" நான் பக்தவத்சலத்தை பார்க்கப் போயிருந்தேன். அவர் அழுது கொண்டே சொன்னார் .
" இந்த குல்லாக்காரப்பய என்ன நிம்மதியா சாக விடமாட்டான் போல இருக்குப்பா.''
" ஏன்யா இப்படி கவலைப்படுகிறீர்கள் ?" என்று நான் கேட்டேன் .
பெரியவர் பக்தவத்சலம் விம்மிக்கொண்டே சொன்னார் " திடீர்னு குல்லாக்காரன் 'நான் முதலியார் . பக்தவத்சலம் தான் எங்க அப்பா' ன்னு சொல்லிட்டா என்ன செய்யறது ?"
தமிழக முதல்வர் ஆக இருந்த காலத்தில் பத்திரிகைகளில் கார்ட்டூனில் பக்தவத்சலத்தை குரங்கு போலவே வரைவார்கள் .ஜெயந்தி நடராஜனின் தாத்தா.


மோகன் குமாரமங்கலம் விமான விபத்தில் மறைந்த மறு நாள் மதுரை ஆரப்பாளயத்தில் நடந்த திமுக கூட்டத்தில் வெற்றி கொண்டான் பேசியது :
கடவுள் மோகன் குமாரமங்கலத்திடம் கேட்டார் " மோகன்! நீ கலைஞரை ரொம்ப திட்டுற .
மோகன் குமாரமங்கலம் பதில் : ஆமா கடவுளே . அது தான என் வேலை . திமுக வை எம்ஜியாரை வைத்து உடைத்ததே என் வேலை தான் . இந்திராகாந்தி இந்த மாதிரி வேலை செய்யறதுக்காகவே என்ன மத்திய மந்திரியாக்கி வச்சிருக்கு கடவுளே !
கடவுள் : மோகன் !நீ இந்த மாதிரி வேலையை நிறுத்து . கலைஞரை திட்டாதே .

மோகன் : முடியாது கடவுளே !

கடவுள் : அப்ப நீ கலைஞரை திட்டுவே ?

மோகன் : ஆமா கடவுளே !

கடவுள் : திட்டுவ நீ ?

மோகன் : ஆமா திட்டுவேன் .

கடவுள் : சரி நீ ஏறு ப்ளேன்னுலே !!



எம்ஜியார் ஆட்சியில் முதல் முறையாக கருணாநிதி கைது செய்யப்பட்ட நிகழ்வைப் பற்றி வெற்றி கொண்டான் : மாஜிஸ்ட்ரேட் சொன்னார் ' கருணாநிதியை கைது செய்ய உத்தரவிடுகிறேன் '. அப்படி சொன்னது தான் தாமதம் . அந்த கோர்ட்டுக்கு எதிரே ஒரு ஓட்டல் .நல்ல பெரிய ஓட்டல் . நீங்க ஓட்டல்காரன் கிட்டே இப்ப கேளுங்க . இன்னைக்குப் போயி கேளுங்களேன் . அவன் சொல்வான் ." இந்த இடத்திலே தான் என் ஓட்டல் இருந்துச்சி " ஓட்டல் இருந்த இடத்த கை நீட்டி காட்டி இன்னைக்கும் சொல்றான் ." இந்த இடத்திலே தான் என் ஓட்டல் இருந்துச்சி "

( கருணாநிதி கைது உத்தரவைக் கேட்டவுடன் கொதித்துப்போய் ஆவேசத்தில், உடனே ,உடனே உடன் பிறப்புகள் ஓட்டலை அடித்து நொறுக்கி விட்டார்களாம்..இப்போ வெறும் பொட்டல் தான்.ஓட்டல் கட்டிடம் தூள் தூளாகி விட்டது என்று அர்த்தம் !)




நாவலர் நெடுஞ்செழியன் பற்றி வெற்றி கொண்டான் : அது ஒன்னு இருந்துச்சுய்யா எங்க கிட்டே . நல்லா நெடு ,நெடுன்னு , கொழு ,கொழுன்னு .. அடிச்சி பிரியாணி பண்ணியிருந்தா அம்பது பேர் சாப்பிட்டிருக்கலாம் .


திருச்சி திமுக கூட்டமொன்றில் சில வருடங்களுக்கு முன் ஜெயலலிதாவின் வீடு பற்றி வெற்றி கொண்டான் : டே! உன் தலைவி ஜெயலலிதா வீட்டுக்கு வேதா நிலையம்னு பேர் எப்படி வந்துச்சி தெரியுமா. வேதாசலம் முதலியார்னு மதுராந்தகத்துலே ஒர்த்தன். அவன் தான் ஜெயலலிதா அம்மா சந்தியாவை கொஞ்ச நாள் அந்த காலத்திலே ஓட்டிக்கிட்டு இருந்தான். அவன் கிட்ட இருந்து புடுங்குன வீடு தான்  உன் தலைவியோட ' வேதா நிலையம் '!

ஈ.வி.கே.சம்பத் சிறுகுறிப்பு .


என்.சி.வசந்த கோகிலம் நல்ல இளமையில் இறந்து போகாமல் இருந்திருந்தால் எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அந்தஸ்து என்ன?
 அண்ணாத்துரையை  விட்டு ஈ.வி.கே.சம்பத் 
பிரியாமல் இருந்திருந்தால் மு.கருணாநிதியின்  அரசியல் வாழ்வு எப்படியிருந்திருக்கும்?அண்ணா மறைந்த போது சம்பத் தானே  தமிழக முதலமைச்சர் ஆக வந்திருப்பார்.அங்கனமாயின்  எம்ஜியாரின் சரித்திரம் எப்படி மாறிப்போயிருக்கும்?!
 சொல்லப்போனால் சம்பத்அல்லவா
அண்ணாத்துரையை விட மிகச்சிறந்த பேச்சாளர் !
"பறக்கின்ற வவ்வால்களே
பறந்து போங்கள்.
நீங்கள் பறந்து போவதற்கு முன்னாலே  என்னுடைய பணிவான விண்ணப்பம். துருப் பிடித்த உங்கள் மூளைக்கு இரண்டு சொட்டு
எண்ணெய் விட்டுப் பாருங்கள்."

 1957ல் காஞ்சியில் அண்ணாத்துரையும்
 குளித்தலையில் கருணாநிதியும் வெற்றி 
பெற்ற போது சம்பத் நாமக்கல் நாடாளுமன்றத்தில்
பெருவாரியான வாக்குகள் பெற்று  மிகப் பெரிய  வெற்றி பெற்றார், ஒரு அதிசயம்.
நாமக்கல் நாடாளுமன்றத்திற்குள் உட்பட்ட ஐந்து சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக   தோற்றுப் போனது .ஆனால் சம்பத்
 பாராளுமன்றம் சென்றார் !

சொல்லின் செல்வர் சம்பத்!
"அவர் பொய் சொன்னார் என்று சொல்ல மாட்டேன்.
உண்மைக்கு புறம்பாக பேசியிருக்கிறார் !"
தன்னைப் பேசவிடாமல் அநாகரீகமாக கூச்சலிட்ட மாணவர்களைப் பார்த்து சிரித்துக்கொண்டே சொன்னார்
 "காட்டுமிராண்டித்தனத்தின் மிச்ச சொச்சங்கள் !"

கண்ணதாசன் சொல்வார் 
"ஜவகர்லால் நேருவின் சிரிப்புக்குப் பின் நான் கண்ட
அழகான சிரிப்பு  என் தலைவன் சம்பத் சிரிப்பு தான். "
"யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் புரியலே.இங்கே அண்டங்காக்கைக்கும்  குயில்களுக்கும் பேதம் புரியலே " சம்பத்தை மனதில் வைத்து எழுதிய சினிமாப் பாடல்.
சிவாஜி கணேசன் " சந்திரமோகன் " நாடகத்தில்  சிவாஜியாக நடிக்கும் முன்
வீர சிவாஜியாக சம்பத் தான் நடித்துக் கொண்டிருந்தார்!

பின்னாளில் "அண்ணன் காட்டிய வழி யம்மா " பாடலில்   சிவாஜி, சம்பத் போலவே உடை உடுத்தி சால்வை போர்த்தி  நடித்திருப்பார் !

1951 ல்  திமுக முதல் மாநில மாநாட்டின் நான்காவது நாள் அண்ணாத்துரை பேசுகிற வேளையில் ஸ்டன்ட் நடிகர்கள் புடை சூழ
எம்ஜியார் திட்டமிட்டு மேடையேறி கூட்டத்தில்
நடிகரை கண்ட பரவசத்தில் அமளி துமளி  ஏற்பட்டு  அப்போதே திமுக தலைவர் அலட்சியப் படுத்தப் பட்ட போது சம்பத் தான் எம்ஜியாரின்
பகட்டு அரசியல் பாணிக்கு எதிராக அண்ணாத்துரையை
உடனேயே எச்சரித்துள்ளார்!

சம்பத்தை மீறிய,நெடுஞ்செழியனை தாண்டிய  கருணாநிதியின் வளர்ச்சி பற்றி.... கருணாநிதியின் வார்த்தைகளில் "குளவிக்கூட்டின்
புழுப் போல கொட்டப்பட்டு
கொட்டப்பட்டுத்தயாரிக்கப்பட்டவன் நான்!"

அண்ணாத்துரையின் கணிப்பு "வெட்டி வா என்றால்
கட்டி வரும் தம்பி கருணாநிதி! "

இன்னொன்று சொல்வார்கள்
" அண்ணாவின் கை போகுமிடமெல்லாம்
கருணாநிதியின் கண் போகும் !"

  1972ல்  அண்ணாத்துரை உயிரோடு இருந்திருந்தாலும் எம்ஜியார் கணக்கு கேட்டு  வெளியேறி "உண்மை திமுக" என்ற பெயரில் ஒரு கட்சி ஆரம்பித்து
சக்கை போடு போட்டிருப்பார் என்பது சர்வ நிச்சயம். ,,,நன்றி ராசனாயகம்

திங்கள், ஆகஸ்ட் 20, 2012

பழைய கணக்கு


அப்போது காமராஜர்தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் .ராஜாஜி "காமராஜர் ஆட்சி ஊழல் ஆட்சி" என்றார் .காமராஜர் அப்போது சொன்னார் " இவர் என்ன பெரிய பரசுராமரா?"
"காமராஜர் திட்டம்" பக்தவத்சலத்தை பின் தமிழக முதல்வராக்கியது .
....
1967 ல் காங்கிரசை எதிர்த்து ராஜாஜியின் சுதந்திரா கட்சி தி.மு.கவுடன் கூட்டு .
ராஜாஜி சொன்னார் : "பிராமணர்கள் ஒரு கையால் பூணூலை பிடித்து கொண்டு மறுகையால் தி.மு.க வுக்கு ஓட்டு போடுங்கள் "
தேர்தல் முடிந்து திமுக ஆட்சிக்கு வந்தது. (ஹிந்தி எதிர்ப்பு ,காங்கிரஸ் வெறுப்பு என்று காரணம் யாரும் இங்கே தயவு செய்து சுட்டி காட்ட கிளம்பி விட வேண்டாம்.)
கொஞ்ச நாளில் ராஜாஜி சொன்னார்
" திமுக வுடன் தேனிலவு முடிந்து விட்டது ."
அண்ணாதுரை விடவில்லை " ஆம் தேனிலவு முடிந்து குடும்ப வாழ்க்கை ஆரம்பமாகியுள்ளது "
1971ல் அண்ணா இல்லாத திமுகவை எதிர்த்து பெருந்தலைவர் காமராஜரும் மூதறிஞர் ராஜாஜியும் இணைந்து கருணாநிதியை எதிர்த்து மிக மோசமான படு தோல்வியை தழுவினர் .( பங்களா தேஷ் வெற்றி என்று காரணங்களை அடுக்குவது இரண்டாவது பட்சம் .)
எம்ஜியாரின் எழுச்சியில் ஸ்தாபன காங்கிரசும் சுதந்திரா கட்சியும் காணாமல் போனது .
எம்ஜியார் இருக்கும் வரை கருணாநிதி பருப்பு வேகவில்லை . எம்ஜியாரின் மரணம் மீண்டும் கருணாநிதிக்கு ஆட்சி கிடைத்து கொஞ்ச நாளில் மீண்டும் இழப்பு .
மூதறிஞர் ராஜாஜி , காலா காந்திகாமராஜர் இருவரையும் தோற்கடித்த கருணாநிதி க்கு 20 வருடத்தில் ஜெயலலிதா 1991ல் மிக மோசமான தோல்வி ஏற்பட்டது .(ராஜீவ் கொலை தான் என்ற காரணம் இங்கு முக்கியப்படுத்த வேண்டியதில்லை.அது உள்ளங்கை நெல்லிக்கனி .)
கருணாநிதியிடம் மூதறிஞர் ,காலா காந்தி தோல்வி மகத்தான சோகம் . ஜெயலலிதாவிடம் கருணாநிதி தோற்றது கேலி கூத்து .
வரலாற்றின் குரங்குத்தனம் !
“Hegal remarks somewhere that history tends to repeat itself. He forgot to add: the first time as tragedy, the second time as farce”
-Karl Marx.................ராசநாயகம்

கண்கள் பனித்தன . நெஞ்சம் இனித்தது .


மாறன் பிள்ளைகள் மீண்டும் இணைந்தது பற்றி.....

அழகிரியும் தயாநிதி மாறனும் பின்னி படர்ந்து விட்டார்கள். இடுப்புக்கு கீழே இருபத்தெட்டு சுத்து.

இனி அழகிரி தும்பிக்கையை தரையில் ஊனி நாலு காலையும் மேலே தூக்கி சங்கு சக்கரமா சுத்தினா,தயாநிதி மாறனும் கலாநிதி மாறனும் மரத்திலே வாலை தொங்க போட்டு ஊஞ்சல் ஆடுவாங்கய்யா!

ஜெயலலிதா கட்சியில் மன்னார்குடி அட்டகாசம் என்றால் கருணாநிதி கட்சி குடும்ப படம் . குடும்பம் ஒன்னு சேர்ந்தவுடன் சினிமாலே 'சுபம் 'போட்டுடுவான். Blood is thicker than Water! பாவம் கனிமொழி ! ஓஹோ ! செல்வி இருக்கிற இடம் .கனிமொழி அங்க வரக்கூடாது . பெரிசு சும்மா இல்ல . பிள்ளைங்க ஸ்டாலின் , அழகிரி , பேரன் எல்லோரும் போய் ராஜாத்தியம்மா கிட்ட ஆசிர்வாதம் வாங்கனும் நு கறாரா சொல்லிட்டாரு . முக முத்து?...


இந்த உட்குடும்ப சண்டையும் சமாதானமும் சுயநல வெறியின் வெளிப்பாடு !

"கண்கள் பனித்தன. நெஞ்சம் இனித்தது "

தமிழக முதல்வரின் புதிய Quotation! பேஷ் ! பேஷ் !!

கடந்த முப்பதுக்கு மேற்பட்ட வருடங்களில் இப்படி பலQuotations அடிக்கடி உதிர்த்திருக்கிறார் .
அண்ணா மறைந்த போது ' கடலில் உள்ள முத்தெல்லாம் முத்தல்ல . நான் தானடா முத்து என்று கடற்கரையில் உறங்குதியோ அண்ணா "



" பாவம் அவன் ஒரு இளம் தளிர் " - முக முத்து பற்றி (எம்ஜியார் காரணமாக திமுக உடைந்த போது )

"பார்த்தேன் ,படித்தேன் ,ரசித்தேன் " சர்க்காரியா கமிசன் முன் எம்ஜியார் ,கல்யாணசுந்தரம் கொடுத்த புகார் பற்றி

"தாக்குகின்ற கணை எத்தனை நீ தொடுத்த போதும் அத்தனையும்
தாங்கும் என் நெஞ்சே உன் அன்னை " கண்ணதாசன் மறைந்த போது.

இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட போது கருணாநிதி - " இந்திய தீபகற்பம் இன்று கடலில் அல்ல , கண்ணீரில் மிதக்கிறது "

"போய் விட்டாயா மதி ?" தன் உட்கட்சி எதிரி மேதை மதியழகன் மறைந்த போது

எம்ஜியார் இறந்தபோது " செல்வாக்கும் சொல்வாக்கும் மிக்க முதல் அமைச்சர் . என் நாற்பதாண்டு கால நண்பர்... "

"நெஞ்செல்லாம் தமிழ் மணக்க , நாவெல்லாம் தமிழ் மணக்க ..." நாவலர் நெடுஞ்செழியன் மறைந்த போது

இன்று பேரன்களின் மீது உள்ள பரிவு " கண்கள் பனித்தன . நெஞ்சம் இனித்தது "

ஒரு சுவாரசியமான முதல் அமைச்சர் பலமுறை தமிழ்நாடு பெற்றதற்கு நாம் சந்தோசப்படலாம் . இப்படி ஒரு சுவாரசியமான முதல்வர் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திற்குமே கிடைத்ததில்லையே !இந்த முதல் அமைச்சர் இல்லாவிடில் தமிழக வரலாறு வறண்டு உலர்ந்து போயிருக்கும் என்பதில் இரு கருத்து இருக்கவே முடியாது .

மதுரை தினகரன் பத்திரிகை அலுவலக தாக்குதலில்கொல்லப்பட்டவர்களுக்கும் கூட ஒரு இரங்கல் கவிதை இப்போதாவது எழுதமாட்டாரா என்று அதனால் ஒரு ஏக்கம் உண்டாகிறது.ராச நாயகம்

கட்சி தலைமை



அண்ணாத்துரை இறந்தபோது யார் தலைவர் என்ற பிரச்னை எழுந்த போது நெடுஞ்செழியன் தான் என காங்கிரஸ் காரர்கள் நினைத்தார்கள். தமிழகத்தில் திமுகவுக்கு எதிர்கட்சி என்பதைவிட எதிரான கட்சி காங்கிரஸ். நெடுஞ்செழியன் திமுக தலைவராக வருவதை காங்கிரஸ் கட்சி விரும்பியது. அப்போதைய நெடுஞ்செழிய பிம்பம் - படித்த நாகரீகமான அரசியல்வாதி.அண்ணாத்துரைக்கு இரண்டாமிடத்தில் கட்சியிலும்,மந்திரிசபையிலும் இருந்தவர். நெடுஞ்செழியனே கூட தான் அடுத்த தமிழக முதல்வராவதில்,திமுகவில்முதலிடம்பெறுவதில் எந்த சிரமமுமே இல்லை என்றே நம்பினார். அதனால் தான் ராம அரங்கண்ணல் “ அண்ணியாருக்கு மந்திரி சபையில் நீங்கள் இடம் தரவேண்டும்.” என நெடுஞ்செழியனிடம் கேட்டபோது” யாருக்கு?ராணிக்கா? சேச்சே..அது நல்லாருக்காதுப்பா” என்று அலட்சியமாக பதில் சொன்னார்.  அண்ணாத்துரையின் மனைவியார் ராணி. திடீரென்று அவரை எதிர்த்து மேதை மதியழகன் தான் போட்டியிடுவதாக அறிவிப்பதற்கு முன்னாலேயே கருணாநிதி அர்ங்கண்ணலிடம் “ நெடுஞ்செழியன் வேண்டாம் என்று கட்சி முடிவு செய்தால். கருணாநிதி தான் அடுத்தமுதல்வர் என முடிவு செய்யப்பட்டால்.” என்ற அஸ்திரத்தை எறிந்த போது அரங்கண்ணல்அதிர்ச்சியில் பதறிப் போய், வேண்டாம் கட்சி சிதறிப் போய் விடவேண்டாம்.கழகத்தில் கலகம் வேண்டாமே என்றே கருணாநிதியிடம் கெஞ்சியிருக்கிறார்.
நெடுஞ்செழியனை எதிர்த்துத்தான் அரசியல் செய்யப்போகிறோம் என்ற நம்பிக்கையில்( நம்பிக்கை என்பதை விட ’எதிரி’க்கட்சியின் விருப்பம் என்றே சொல்லவேண்டும்) காங்கிரஸ் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. நிலவரம் நேர் எதிராக கருணாநிதியை எம்.ஜி.ஆர்,திமுகவின் இரும்பு மனிதர் மதுரை முத்து உள்ளிட்ட பெரும்பாலானோர் ஆதரித்து முன்னிறுத்திய போது அரங்கண்ணல் மூலமாக கேள்விப்பட்ட நெடுஞ்செழியன் வாய் விட்டு அழுதிருக்கிறார். அந்த நிலையிலும் மதியழகன் போட்டியில் இருந்து விலக மறுத்து விட்டார். பேராசிரியர் அன்பழகன் ”அண்ணாவை தலைவராக கொண்டிருந்த நான்என்னைவிட வயதில் குறைந்த கருணாநிதியை எப்படி தலைவனாக ஏற்றுக்கொள்ளமுடியும்”என்று மிரண்டது தான் Irony!கருணாநிதிக்கு அப்போது வயது 45 தான்.கருணாநிதி தான் திமுகவைக்கைப்பற்றுகிறார் என்பதை அறிய நேர்ந்த காங்கிரஸ் வட்டாரத்திற்கு பேரதிர்ச்சி. அண்ணாத்துரையின் இடத்தில் கருணாநிதியா?காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமல்ல,காங்கிரஸ் தொண்டர்களாலும் இதனை ஜீரணிக்கவே முடியவில்லை!படித்த நடுநிலையாளர்களும் நெளியவே செய்தார்கள்.
கருணாநிதிக்கு இருந்த இமேஜ் அப்படி!
அதோடு கண்ணதாசனின் “வனவாசம்” பலரும் படித்திருந்தார்கள்.
ஆனால் கட்சித்தொண்டர்கள் மகிழ்ச்சிப்பெருங்கடலில் மூழ்கினார்கள். கருணாநிதியின் வரவுக்கு சிவப்புக் கம்பளம் விரித்தார்கள்.

எம்.ஜி.ஆர் இறந்த போது ’எதிரி’கட்சி திமுகவும் சரி, திமுக தலைவர் கருணாநிதியும் காங்கிரஸ் தலைவர் மூப்பனார், சிதம்பரம் போன்றவர்களும் கூட  ஜெயலலிதா அதிமுகவை கைப்பற்ற முயல்வதை ரசிக்கவில்லை.( எம்.ஜி.ஆர் உயிரோடு இருக்கும்போதேஇவர்கள் அதிமுகவில் ஜெயலலிதாவின் Entry யை ஏளனமாகவே பார்த்தார்கள்.)ஜானகியோ,வீரப்பனோ தலைவராக வேண்டும் என முழுமனதோடு விரும்பினர், இவ்வளவுஏன் திருநாவுக்கரசு,கேகேஎஸ் எஸ் ஆர் தவிர  அதிமுகவின் பெரும்பாலான தலைவர்கள் பலரே கூட விரும்பவில்லை. படித்த நடுநிலையாளர்களும் ஜெயலலிதாவுக்கு எதிரான மனநிலையில்.முதல்வரான ஜானகியம்மாள் “தமிழாகவே வாழ்கிற கலைஞர்!’ என்றார். களேபரத்தில்ஆட்சி கவிழ்ந்தது.எம்.ஜி.ஆரின் தொழில் எதிரி சிவாஜியுடன் கூட்டணி அமைத்து ஜானகி இடைதேர்தலில் போட்டியிட்டார்.
கருணாநிதி மீண்டும் கொஞ்ச வருடம் முதல்வரான போது ஜெயலலிதாவின் சேவல் கணிசமான இடங்களில் கூவியது.

ஜெயலலிதாவோ கருணாநிதியை கடுமையாக சாடுவதை நிறுத்தவே இல்லை..
அப்புறம் என்ன? அதிமுகவின் தொண்டர்களுக்கும் ரெட்டை இலைக்கு எப்போதும் வாக்களிப்பவர்களுக்கும் அதிமுகவிற்கு தலைவி ஜெயலலிதா தான் என்பது புரிந்து விட்டது. கட்சி ஜெயலலிதாவின் கையில்! 43 வயதில் தமிழக முதல்வர்!

நெடுஞ்செழியனோ,வி.என்.ஜானகியோ இருவருமே கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் கால் தூசுக்கு சமமாக மாட்டார்கள் என்றே  இன்று காலம் நிரூபித்து விட்டது.


இப்போது அகில இந்தியக் கட்சி பாரதீய ஜனதாக் கட்சிக்கு அத்வானி முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கவேண்டும் என்பதையே ’எதிரி’காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. அடுத்த பிரதமர் வேட்பாளர் ஆக அத்வானி முன்னிறுத்தப்படவேண்டும் என்பது தான் காங்கிரஸின் நெஞ்சார்ந்த விருப்பம். ஆனால் பாருங்கள். பாரதீய ஜனதாக்கட்சியில் தொண்டர்கள் அனைவருமே நரேந்திர மோடியைப் பரவசமாக முன்னிறுத்தத்தொடங்கிவிட்டார்கள்.

சர்ச்சைக்குரியவர்களையே உள்கட்சி வட்டம் தீவிரமாக தலைமைக்கு முன் வைக்கும். அதிலும் ’எதிரி’ கட்சி யாரைப் பார்த்து அசூயைப் படுகிறதோ அவர் தான் எந்தக்கட்சிக்கும் எப்போதுமே தலைமைப்பதவிக்கு முன் வைக்கப்படுவார். முக்கியமாக அப்படி முன் வைக்கப்படுபவர் போர்க்குணம் மிகுந்தவராகவே இருப்பார்.

கருணாநிதி,ஜெயலலிதா,நரேந்திர மோடி மூவருமே போர்க்குணம் மிகுந்தவர்கள். நல்லவர்கள் என்று சொல்லவே முடியாது என்றாலும் வல்லவர்கள். திறமை சாலிகள்.

ஞாநி சொல்வது நினைவுக்கு வருகிறது. "திறமை வேறு.  நேர்மை வேறு.”


எம்.ஜி.ஆர்  திமுக விலிருந்து வெளியேறி ஒரு கட்சி ஆரம்பித்தது பற்றியும்
வைகோ வெளியேறியது பற்றியும் சொல்லவேண்டும்.

எம்.ஜி.ஆர் மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர். மேலும் நிறைய ரசிகர்கள் அவருக்காக.

வைகோ கணிசமான தொண்டர் செல்வாக்கு கொண்ட தலைவர். கொள்கை ஆர்வம் கொண்ட சிறு அளவிலான் தொண்டர்கள்.
தொண்டர் செல்வாக்கு வேறு. மக்கள் செல்வாக்கு வேறு.

எம்.ஜி.ஆருக்கு கொடுத்த அதே முக்கியத்துவத்தை பத்திரிக்கைகள் வைகோவுக்கும் கொடுத்த போதும் வைகோவின் மறுமலர்ச்சி திமுக பெரிதாய் சாதிக்கமுடியவில்லை......ராச நாயகம்

நாகரீகமற்ற பேச்சு ஜேப்பியார்



1982ம் ஆண்டு. மதுரை  A.A.ரோட்டில் தேம்பாவணி இல்லம் முன் நடந்த அ.தி.மு.க பொதுக்கூட்டம்.  எம்.ஜி.ஆர் அப்போது இரண்டாம் முறையாக முதல்வர். சிறப்பு பேச்சாளர் ‘மாவீரன் ஜேப்பியார்.’

முன்னதாக லோக்கல் பேச்சாளர் லோகநாதன்:” கருணாநிதி அன்னைக்கி நீ என்ன செஞ்சே? எமர்ஜென்சியில காமராஜரைத்தூக்கி உள்ள வைக்கச் சொன்னதுக்கு, நீ எங்க மாவீரன் ஜேப்பியார் சாராயம் காச்சுறார்னு சொல்லி தூக்கி உள்ள போட்ட. இன்னைக்கு உன்னால புடுங்கக்கூட முடியாது.
 டே தீப்பொறி ஆறுமுகம்! பாவம்டா நீ! ஐயோ பாவம்! நீ பாட்டுக்கு திமுக மீட்டிங்,மீட்டிங்னு ஊரு ஊரா போயிடுற. பக்கத்து வீட்டுக் கோனான் ஒன் பொண்டாட்டிய டொல்த்திக்கிட்டு இருக்கான்டா!”

அடுத்ததாக ஜேப்பியார் பேச எழுகிறார்.
கம்மாக்கரை அ.தி.மு.க செயலாளர் சின்னச்சாமி அவர்கள் மாவீரன் ஜேப்பியாருக்கு மாலை அணிவிக்கிறார்.ஆரப்பாளையம் ஆலமரத்தான் பொன்னாடை அணிவிக்கிறார்.மேலப்பொன்னகரம் வேல்சாமி நாயக்கர் மாலை அணிவிக்கிறார்.


ஜேப்பியார் சிறப்புரையின் முதல் பகுதி:
” டேய்! எனக்கு பெரிய கொள்கை,லட்சியம் என்றெல்லாம்  எதுவும் கிடையாது. நான் எம்.ஜி.ஆர் ரசிகன். எம்.ஜி.ஆர் என் தலைவன். என் தலைவன் மேல் விசுவாசம். இது தான். என் தலைவனுக்காக உயிரையே கொடுப்பேன். இன்னைக்கு நான் இந்த வசதி,அந்தஸ்தோட இருக்கேன்னா என் தலைவன் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் தான் காரணம்.சாதாரண போலீஸ் கான்ஸ்டபிள் ஜேப்பியார இப்படி உயர்த்தியது பொன்மனச்செம்மல் தான்."

- Gratitude is a sickness suffered by dogs. Gratitude is merely a secret hope for greater favours!

ஜேப்பியார் பேச்சின் தொடர்ச்சி:

”டே! உனக்குத்தெரியுமா.தமிழ் தமிழ்னு உன் தானைத்தலைவன் சேனக்கிழங்கு வீரன் ஊரை ஏமாத்துறான்.
சர்ச் பார்க் கான்வெண்ட்னு மெட்ராஸ்ல ஒரு ஸ்கூல். அதில நீங்கள்ளாம் உங்கப் பிள்ளைகளைச் சேர்க்கவே முடியாது. மாசம் ஃபீஸ் எவ்வளவு தெரியுமா? சொன்னா மிரண்டுடுவ. ரொம்பப் பெரிய பணக்காரங்க வீட்டுப் பிள்ளங்க மட்டும் தான் அங்க படிக்க முடியும். என் மகள் அங்க தான் படிக்கிறா.அந்த ஸ்கூல்ல தமிழ் பாடமே கிடையாது. லாங்க்வேஜ் சப்ஜெக்ட் கூட இந்தி,பிரஞ்சு இப்படித்தான். ஆமடா! தமிழ்னு பாடமே கிடையாது. என் மக அங்கத்தான் படிக்கிறா. எனக்கு தமிழ்ப் பற்று,பெரியகொள்கை எதுவும் கிடையாதுப்பா.எம்.ஜி.ஆர் ரசிகன் தான் நான். எம்.ஜி.ஆர் தான் என் தெய்வம். அதுக்கு மேல எனக்கு பெரிய கொள்கைன்னு எதுவுமே கிடையாது. என் பொண்ணு கூட சர்ச் பார்க் கான்வெண்ட்ல இன்னொரு பொண்ணு படிக்குது. அது யார் தெரியுமா? என் பொண்ணோட க்ளாஸ்மேட் யாரு தெரியுமா? உன் தானைத்தலைவன், சேனைக்கிழங்கு வீரன் கருணாநிதியோட மகள் கனிமொழி!”

......................

எம்.ஜி.ஆர் மறைந்த போது ஜானகி அணியில் இருந்தார் ஜேப்பியார்.”கவலையே படாதீங்க. அவளை வெரட்டிடலாம்” என்று ஆக்ரோஷமாக,உற்சாகமாக ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுத்தார்!

கலைஞர் பேட்டி





கேள்வி :- உங்கள் இளமைக் காலம் வறுமையானதா?

கலைஞர் :- "எனது இளமைக்காலம் வறுமை சூழ்ந்தது இல்லை. எனது பெற்றோர் வைதீகத்தில் தோய்ந்தவர்கள் என்பதால் எனக்குக் ‘காதணி விழா’வைச் சிறப்பாக நடத்துவதற்கும், ‘வித்யாரம்பம்’ என்ற பெயரில் ஆடம்பரமாக என்னைப் பள்ளிக் கூடத்திற்கு அனுப்புவதற்கும், பள்ளிக் கல்வி மட்டுமின்றி, எனக்கென இசைக் கல்விக்குத் தனியே ஏற்பாடு செய்வதற்கும், தனியாக எனக்கு ஆசிரியர் அமைத்துப் பாடம் போதிப்பதற்கும், தேவையான வசதி வாய்ப்புகளை பெற்றிருந்த குடும்பத்திலே நான் பிறந்தேன்."

"பள்ளிப் பருவத்திலேயே, பனகல் அரசர் குறித்த கட்டுரையைப் பாடம் செய்து சொல்வேன்!"

கேள்வி :- "உங்கள் தந்தை என்ன தொழில் செய்து வந்தார்?"

கலைஞர் :- "என் தந்தையார் சிறந்த நாதசுர வித்வானாகவும் திகழ்ந்தார். நல்ல விவசாயியாகவும் இருந்தார்."

கேள்வி :- "நீங்கள் எப்போதிலிருந்து புத்தகங்களை அதிகம் படிக்க ஆரம்பித்தீர்கள்?"

கலைஞர் :- "நான் ஐந்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது ‘பனகல் அரசர்’ என்ற தலைப்புள்ள புத்தகம் துணைப் பாடக் கட்டுரையாக வைக்கப் பட்டிருந்தது. ஏறத்தாழ 50 பக்கங்கள் கொண்ட அந்தச் சிறு நூல் முழுவதையும் வகுப்பிலேயே நான் ஒருவன் தான் அப்படியே மனப்பாடம் செய்து சொல்வேன்."

எனது அரசியல் பாதைக்கு வெள்ளோட்டம்!

கேள்வி :- "நீங்கள் சின்ன வயதிலேயே அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம்?"

கலைஞர் :- "பெரியார் பேச்சில் காணப்பட்ட அழுத்தம் திருத்தமான வாதமும், அழகிரி பேச்சில் காணப்பட்ட வீரம் கொப்பளிக்கும் வரிகளும், அண்ணா பேச்சில் நிறைந்திருந்த அழகு தமிழும் என்னை வெகுவாகக் கவர்ந்தன.

1938ல் நாள்தோறும் மாலை நேரத்தில் மாணவர்கள் பலரை அணிவகுத்திடச் செய்து, திருவாரூர் தெருக்களில் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போர்ப் பரணி பாடி ஊர்வலம் எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். இதுவே எனது அரசியல் பாதைக்கு வெள்ளோட்டமாக அமைந்தது."

எதையும் சரியாகத்தான் செய்வேன் எனும் திடநெஞ்சம் கொண்டோர், எனது குடும்பத்தினர்!

கேள்வி :- "உங்கள் தந்தை மறைவின்போது நீங்கள் ஒரு மாநாட்டில் உரையாற்றச் சென்றிருந்தீர்கள். உங்கள் முதல் மனைவி பத்மாவதி அம்மாள் மறைவின்போதும் கூட்டங்களில் கலந்து கொண்டிருந்தீர்கள். தயாளு அம்மாளை மணந்த தினத்தன்று போராட்டங்களில் கலந்து கொண்டீர்கள். குடும்பத்தினரின் பார்வையில் உங்களின் இந்தப் போக்கு எப்படி எடுத்துக் கொள்ளப்பட்டது?"

கலைஞர் :- "நான் எதைச் செய்தாலும் சரியாகத்தான் செய்வேன் என்ற திட நெஞ்சம் இருந்த காரணத்தினால், என்னுடைய முடிவுகள் மற்றும் நடவடிக்கைகளைக் கண்டு அவர்கள் யாரும் அலட்டிக் கொள்ளவில்லை."

கேள்வி :- "நீங்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் உங்கள் மூத்த மகன் மு.க. முத்துவை உங்களுடைய கலையுலக வாரிசாக வளர்த்தெடுக்க முடியவில்லை என்கிற வருத்தம் இருக்கிறதா?"

கலைஞர் :- "முத்து பல்வேறு திறமைகள் ஒருங்கே வாய்த்திடப் பெற்றவன். அத்திறமைகள் பட்டை தீட்டப்பட்டு மிளிர்வதற்கேற்ற வகையில், அவனுக்கென கிடைத்த பாதையிலே பயணம் செய்யாமல், திசைமாறிய பறவையாகிவிட்டானே என்ற வருத்தம் எனக்கு உண்டு."

அரசியல் - எனக்குப் பிராணவாயு! இலக்கியம் - தெம்பூட்டும் சரிவிகித உணவு!

கேள்வி :- "ஒரு நல்ல இலக்கியவாதியால், பெரிய அரசியல்வாதியாக இருக்க முடியாது என்பது பொதுவான கருத்து. உங்களால் எப்படி இருக்க முடிந்தது?"

கலைஞர் :- "இது பொதுவான கருத்து எனினும், அதற்கும் விதிவிலக்கான எடுத்துக்காட்டுகள் உண்டு. பண்டித நேரு அவர்கள் அடிப்படையில் இலக்கிய உள்ளமும், படைப்பாளிக்கான பண்பட்ட திறனும் கொண்டிருந்தவர். சிறையில் இருந்து கொண்டே தனது அருமை மகள் இந்திராவுக்கு அவர் எழுதிய கடிதங்கள் அனைத்தும் இலக்கியச் செறிவு கொண்டவை. மூதறிஞர் ராஜாஜி அவர்களின் எழுத்திலும், பேச்சிலும் இலக்கியத்தின் குணாதிசயங்கள் இயங்கிக் கொண்டிருப் பதைக் காணலாம். பேரறிஞர் அண்ணா அவர்கள் பெருமளவுக்கு இலக்கியங்களில் இதயம் பறிகொடுத்தவர். அவரே படைப்பிலக்கியப் பேராசான். அதனால்தான் அவரது எழுத்திலும், பேச்சிலும் புதுத் தேனின் சுவையும், அன்றலர்ந்த மலரின் மணமும் விரவிப் பரவி தனித்தன்மை பெற்று ஒளிர்கின்றன.

அப்படிப்பட்டவர்களோடு என்னை ஒப்பிட்டுக் கொள்வதற்காகச் சொல்லவில்லை. அரசியல் எனக்குப் பிராணவாயு எனில், இலக்கியம் எனக்குத் தெம்பூட்டும் சரிவிகித உணவு."

கேள்வி :- "உங்களது புத்தக வாசிப்புப் பழக்கம் எந்த வகை இலக்கியத்திலிருந்து தொடங்கியது?"

கலைஞர் :- "புராண - இதிகாசக் கதைகளில் இருந்தும், அவற்றிற்கு எதிரான ‘சுயமரியாதை’ நூல்களில் இருந்தும் தொடங்கியது."

தமிழ்மொழியின் நீள அகலத்தை முன்னிலைப்படுத்தும் பக்தி இலக்கியங்கள்!

கேள்வி :- "தொல்காப்பியம், சங்க இலக்கியம் குறித்தெல்லாம் நீங்கள் சிலாகித்துப் பேசுகிறீர்கள். ஆனால், பக்தி இலக்கியம் குறித்து சொல்வதே இல்லை. கடவுள் நம்பிக்கையை முன்னிறுத்துகிறது என்பதாலேயே அந்த இலக்கிய வகையைப் புறக்கணித்துவிட முடியுமா?"

கலைஞர் :- "தொல்காப்பியம், சங்க இலக்கியம் - பெரும்பாலும் சாதி, சமயம், பக்தி இவற்றிற்கு அப்பாற்பட்ட மிக உயர்வான இலக்கண, இலக்கியங்களாகும். அவற்றிற்குப் பிறகு வந்தவையே பக்தி இலக்கியங்கள். அவற்றை நான் புறக்கணித்ததும் இல்லை ; புறந்தள்ளியதும் இல்லை. அவ்வகை இலக்கியங்களில் நான் படித்துத் தோய்ந்திருக்கிறேன். அவை கடவுள் நம்பிக்கையை முன்னிறுத்துகின்றனவோ இல்லையோ, தமிழ்மொழியின் நீள அகலத்தை நிச்சயமாக முன்னிலைப்படுத்துகின்றன."

தலைசிறந்த பத்து புத்தகங்கள்!

கேள்வி :- "தலைசிறந்த 10 புத்தகங்களை வகைப்படுத்துங்களேன்?"

கலைஞர் :- "1. திருக்குறள், 2.தொல்காப்பியம், 3.புறநானூறு, 4.சிலப்பதிகாரம், 5.பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள், 6.அண்ணா எழுதிய ‘பணத்தோட்டம்’, 7.மாக்சிம் கார்க்கியின் ‘தாய்’, 8.பண்டித நேரு அவர்கள் எழுதிய ‘உலக வரலாறு’, 9.அண்ணல் காந்தி அடிகளின் ‘சத்திய சோதனை’, 10.ராகுல சாங்கிருத்தியாயாவின் ‘வோல்கா முதல் கங்கை வரை’."

நான் நாத்திகன்! ஏனெனில் மனிதனை நேசிக்கிறேன்!

கேள்வி :- "ஏதோ ஒரு சக்தியால் இந்த உலகத்தில் எல்லாம் நிகழ்கிறது என்று குறளோவியத்தில் எழுதி இருக்கிறீர்கள். அந்த சக்தி கடவுளில்லை என்பதை இப்போதும் அழுத்தமாகச் சொல்வீர்களா? அந்த சக்தியை கடவுள் என்று பெருவாரியானவர்கள் நம்பி வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பதை ஒற்றை வரியில் நிராகரித்துவிட முடியுமா?"

கலைஞர் :- "இல்லையென்பார்கள் சிலர்; உண்டென்று சிலர் சொல்வர்; எனக்கில்லை கடவுள் கவலை" என்ற பாவேந்தரின் பாடல் வரிகளையே பதிலாகத் தருகிறேன். "நான் நாத்திகன் ; ஏனெனில், மனிதனை நேசிக்கிறேன்" என்று நெஞ்சுயர்த்திச் சொல்லிக் கொள்ளும் எனக்கு, யாரையும் நிராகரித்திட வேண்டும் என்ற நினைப்பில்லை!"

மனிதநேயமும் மாநிலப் பாசமுமே மதத் தலைவர்களோடு அமர்ந்து பேசக் காரணம்!

கேள்வி :- "முன்பெல்லாம் கடவுள் மறுப்பு என்பதை தீவிரமாக முன்னிறுத்தினீர்கள். இப்போது மக்கள் நலன் சார்ந்த விஷயங்களுக்காக மதத் தலைவர்களுடன் அமர்ந்து பேசும் மனநிலைக்கு வந்திருக்கிறீர்கள். இந்த மாற்றம் பகுத்தறிவின் நெகிழ்ச்சியால் ஏற்பட்டதா? வயதின் முதிர்ச்சியால் ஏற்பட்டதா?"

கலைஞர் :- "தமிழ்மொழி வளர்ச்சிக்காக குன்றக்குடி அடிகளாரோடும், பேரூர் சாந்தலிங்க அடிகளாரோடும், திருவாவடுதுறை ஆதீனத்தோடும் ஆர்வத்தோடு அமர்ந்து பேசுவேன்; தெலுங்கு - கங்கைத் திட்டத்தால் சிந்தாமல் சிதறாமல் சென்னைக்குத் தண்ணீர் வரவேண்டும் என்பதற்காக சாய்பாபா அவர்களோடும் அன்போடு அளவளாவுவேன். இவை அனைத்தும் பகுத்தறிவின் நெகிழ்ச்சியாலோ, வயதின் முதிர்ச்சியாலோ ஏற்பட்டவை அல்ல; என்னுள் நிறைந்திருக்கும் இன்பத் தமிழ்ப்பற்று, மனிதநேயம், மாநிலப் பாசம் இவற்றால்தான். "ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!" என்று அறிஞர் அண்ணா அவர்கள் அறிவுறுத்தியதை அனைவர்க்கும் நினைவுறுத்து கிறேன்."

முதிர்ந்த பண்பாடு முரண்பாடாகி விடாது!

கேள்வி :- "தீவிரப் பகுத்தறிவாளர் நீங்கள். ஆனால் ஏதோ ஒருவகையில் கடவுள், கடவுள் நம்பிக்கை குறித்த கேள்விகள் உங்களைத் துரத்திக் கொண்டே இருக்கின்றன. இந்த முரண்பாட்டை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?"

கலைஞர் :- "நான் பகுத்தறிவாளன் என்ற நிலையில் எள்ளளவும் மாற்றமில்லை. மஞ்சள் துண்டு அணிவது கடவுள் நம்பிக்கையினால் அல்ல என்பதையும்; அதற்கான காரணத்தையும் பலமுறை விளக்கி இருக்கிறேன். ஒரு பகுத்தறிவாளனை அறிவியல் ரீதியான உண்மைகள் மட்டும் ஆட்கொள்ள முடியுமே தவிர, மூடநம்பிக்கைகள் எதுவும் துரத்திக் கொண்டிருக்க முடியாது. என்னைச் சேர்ந்த ஒரு சிலரின் கடவுள் நம்பிக்கை குறித்து நான் கவலைப்படுவது கிடையாது. அவர்கள் தேவையான தெளிவில்லாத நிலையில் குழப்பத்தில் இருப்பதாகவே கருதிக் கொள்வேன். முதிர்ந்த பண்பாடு முரண்பாடாகிவிடாது!"

கேள்வி :- "ஒரு படம் இயக்க வேண்டும் என்று ஏன் உங்களுக்குத் தோன்றவில்லை?"

கலைஞர் :- "தோன்றாமல் இல்லை. கட்சிப் பணிகளில் கவனம் செலுத்தவேண்டி இருந்ததால் நேரம் கிடைக்கவில்லை."

‘எனது சிலை உடைக்கப்பட்ட போது, எனது மனநிலை!’

கேள்வி :- "உங்களுக்கு உயிரோடு இருக்கும்போதே சிலை அமைக்கப்பட்டது. அதை விஷமிகள் உடைத்தபோது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?"

கலைஞர் :- "உயிரோடு இருக்கும்போது சிலை அமைக்கப்பட்டது எனக்கு மட்டும்தான் என்று சொல்வது தவறு. பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர் ஆகியோர் உயிரோடு இருந்தபோது சிலைகள் நிறுவப்பட்டன. எனது சிலையை உடைத்தபோது இருந்த மனநிலையை அப்போதே -

செயல்பட விட்டோர்

சிரித்து மகிழ்ந்து நின்றாலும்

அந்த சின்னத்தம்பி

என் முதுகிலே குத்தவில்லை!

நெஞ்சிலேதான் குத்துகிறான்;

அதனால் நிம்மதி எனக்கு!

வாழ்க! வாழ்க!!

என்று கவிதையாக்கி வெளியிட்டிருந்தேன்."

கட்சியின் முடிவிலிருந்து, மாறுபட்ட எண்ணம் எனக்குத் தோன்றியதில்லை

கேள்வி :- "எம்.ஜி.ஆரை கட்சியிலிருந்து வெளியே விட்டிருக்கக்கூடாது என்று எப்போதாவது நீங்கள் நினைத்ததுண்டா?"

கலைஞர் :- "எம்.ஜி.ஆரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்பது கழகம், செயற்குழு - பொதுக் குழுக்களின் மூலம் ஒருமனதாக எடுத்த முடிவு. கட்சியின் அந்த முடிவிலிருந்து மாறுபட்ட எண்ணம் தனிப்பட்ட முறையில் எனக்குத் தோன்றியதில்லை."

கேள்வி :- "தற்போது மத்தியில் கூட்டணி ஆட்சி நிலவும் சூழலில், மாநிலக் கட்சிகளின் கைகள் ஓங்கி இருப்பதைக் கண்டு டெல்லிக்காரர்கள் எரிச்சல் அடைகிறார்களே? இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?"

கலைஞர் :- "கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாகவே மத்தியில் கூட்டணி ஆட்சி என்பதும், மாநிலக் கட்சிகள் அதில் முக்கியப் பங்கு வகித்து வருகின்றன என்பதும் "டெல்லிக்காரர்களுக்கு" மட்டுமல்ல; அனைவருக்கும் பழக்கப்பட்டுவிட்ட - அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்ட அரசியல். இதில் யாரும் எரிச்சல் அடைய இடமில்லை."

அரசியல் கலாச்சாரம் நிகழ எடுக்கப்பட்ட முன்முயற்சிகள்!

கேள்வி :- "காமராஜர், ராஜாஜி, எம்.ஜி.ஆர். இவர்களை எல்லாம் எதிர்த்து அரசியல் செய்த நீங்கள், தமிழகத்தில் நல்ல அரசியல் கலாச்சாரம் நிகழ்வதற்கு ஏதேனும் முன்முயற்சி எடுத்தீர்களா?"

கலைஞர் :- "தமிழகத்தில் மனிதநேயம், பரஸ்பரம் மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் நல்ல அரசியல் கலாச்சாரம் தழைத்திட வேண்டும் என்பதிலே தணியாத ஆர்வம் உள்ளவன் நான். தலைநகரம் டெல்லியில் ஆளும் கட்சி - எதிர்க்கட்சி என்ற வேறுபாடின்றி முக்கிய தேசிய நிகழ்ச்சிகள் அனைத்திலும் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிப்பதும், ஒருவருக்கொருவர் அன்பையும், மரியாதையையும் பரிமாறிக் கொள்வதும் நாம் காணும் காட்சிகள். அதைப்போலத் தமிழகத்திலும் சட்டப்பேரவைக்கு உள்ளேயும், வெளியேயும் உருவாகிட வேண்டும் என்று தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். எனினும், எனது முயற்சிகள் இதுவரை முழுப்பலனைத் தரவில்லை என்பதுதான் உண்மை. அரசியல் கலாச்சாரத்தில் அனைவருக்கும் சமமான ஈடுபாடு வேண்டுமல்லவா? அது ஒரு கை ஓசையாகிவிடக் கூடாது."

கேள்வி :- "விடுதலைப்புலிகள் விவகாரத்தில் ஏற்ற - இறக்கங்களோடு செயல்பட்டிருக் கிறீர்கள்! என்ன காரணம்?"

கலைஞர் :- "நான் பலமுறை விளக்கி உரைத்ததைப் போல; விடுதலைப் புலிகள் விவகாரத்தில் - ராஜீவ் காந்தி படுகொலைக்கு முன்; படுகொலைக்குப்பின் - என்ற கண்ணோட்டம்தான் முக்கியமே தவிர, இதில் ஏற்றமும் இல்லை; இறக்கமும் இல்லை."

கேள்வி :- "தமிழக தேர்தலில் சாதியின் ஆதிக்கத்தை ஒழிக்கவே முடியாதா?"

கலைஞர் :- "தமிழகத் தேர்தலில் மட்டுமல்ல; இந்தியத் தேர்தலிலேயே - சாதியின் ஆதிக்கத்தை மட்டுமல்ல; மதத்தின் ஆதிக்கத்தையும் சேர்த்தே ஒழித்தாக வேண்டும். இதில் அனைத்து அரசியல் கட்சிகளும், சமுதாய இயக்கங்களும் அப்பழுக்கற்ற ஆர்வமும், செய்தே தீரவேண்டுமென்ற பிடிவாதமும் கொள்ள வேண்டும். அப்போதுதான் நிலைமை சீர்திருந்த வழி உண்டு."

கேள்வி :- "பொதுவாகவே அரசியல் ஊழல் மயப்பட்டு விட்டதாக மக்கள் உறுதியாக நம்புகிறார்களே?"

கலைஞர் :- "அரசியல் என்றாலே ஊழல் என்று மக்கள் நம்புவதாக நான் கருதவில்லை. ஒவ்வொரு அரசியல் கட்சியையும், ஒவ்வொரு அரசியல் கட்சியிலுள்ள ஒவ்வொருவரையும் ஊழல் என்னும் அளவுகோலால் அளந்து, மக்கள் தரம் பிரித்துப் பார்க்கிறார்கள் என்றே நான் எண்ணுகிறேன். அரசியலில் இருந்து ஊழலை அறவே ஒழிக்க வேண்டுமென்றால், வாக்காளர்கள் அனைவரும் உயர்ந்த கல்வியைப் பெற்றிருக்க வேண்டும். வாக்குகளை விற்பனைப் பொருளாக்காத மனோபாவம் வேண்டும். நல்லவர்கள், வல்லவர்கள் பெருமளவுக்கு அரசியலில் ஈடுபடவேண்டும்."
( நன்றி: ராணி வார இதழ் )

திமுகவினரின் அநாகரீக பேச்சு



கேள்வி: எது நாகரிகமான பேச்சு ?
பதில்: கடந்த 2003 திமுக மாநாட்டில் பேசிய சிலரின் பேச்சுக்கள் தான். அது கீழே...


சில சாம்பிள்கள்...

* வரவேற்றுப் பேசிய பொன்முடி, "திராவிட இயக்கத்தின் பரிணாம
வளர்ச்சி என்ற முகமூடியை மாட்டிக்கொண்டு, மீண்டும் சனாதனத்தை-உயர்
ஜாதி ஆதிக்கத்தை-நிலை நாட்டிட ஜெயலலிதா துடிக்கிறார்" என்று
குறிப்பிட்டதோடு, சங்கர மடத்தில் ஜெயலலிதாவுக்கு மட்டும் நாற்காலி
தந்ததையும் விமர்சித்தார். பொன்முடி பேச்சில் மட்டுமில்லாமல், வேறு
பலரின் பேச்சிலும் "வர்ணாசிரம எதிரிப்பு " என்கிற பெயரோடு பிராமண
எதிர்ப்பு கடுமையாகக் காணப்பட்டது.

* பைத்தியக்காரி, ஆணவக்காரி, இடி அமீன், ஹிட்லர், குடும்ப வாழ்க்கை
தெரியாதவர் என்றெல்லாம் அர்ச்சனைகள் நிகழ்த்தப்பட்டன.

* திருச்சி செல்வேந்திரன் கதறுந்த ஊசி, வார் அறுந்த செருப்பு, கறை
படிந்த பாவாடை என ஜெயலலிதாவைக் குறிப்பிட்டார். அவரே "தலைவரையும்
அவரது மகளையும் அவமானப்படுத்தி, ஜெயலலிதா தனது தொழில்புத்தியைக்
காட்டினார்" என்றும் குறிப்பிட்டார்.

* கோவை மணியன், " தமிழகத்தில் அரிசி பற்றாக்குறை ஏற்பட கேரளத்து
ஐயபப சாமிதான் காரணம். தமிழகத்திலிருந்து 5 லட்சம் ஐயப்ப பக்தர்கள்
தலா 4 கிலோ அரிசியோடு சபரிமலை போகிறார்கள். ஆக, வருடத்திற்கு
20 லட்சம் கிலோ அரிசி கேரளாவிற்குப் போய்விடுகிறது. அடுத்த முறை
முதல்வரானதும் தலைவர் இதைத் தடைசெய்யவேண்டும்" என்றார்.


* துரைமுருகன் ரேசன் கார்டு, அரசு ஊழியர் பிரச்சனைகளைக் குறிப்பிட்டு
"இது குரங்கு சேஷ்டை, பைத்தியக்கார அறிவிப்பு" என்று விமர்சித்தார். மேலும்
"சூத்திர ஜாதியில் பிறந்ததால் மாயாவதி வழக்கை 5 மாதத்தில் முடிக்க நீதிமன்றம்
உத்தரவிடுகிறது. ஆனால் இது "அவாளு"க்கு மட்டும் பொருந்தாது போலும்.
இமயம் முதல் குமரி வரைக்கும் இந்தப் பூணூல் தொடர்பு மிக அடர்த்தியாக
உள்ளது" என்றும் குறிப்பிட்டார்.

* வெற்றி கொண்டான், " இந்த அரசு ஊழியர்கள் இன்னும் இரண்டு வருடம்
பொறுத்திருக்கக் கூடாதா? நான் ஏற்கனவே சொன்னேன்... அம்மா அப்பா
உற்றார் உறவினர் இனத்தைச் சேர்ந்தவன் இப்படி யாரிடத்தில் வேண்டுமானாலும்
கையை நீட்டலாம். பத்துப் பேரிடம் படுத்தவளிடம் போய் கைநீட்டலாமா "
என்றவர், " அது கொழுப்பெடுத்த குதிரை. அதுக்காகத்தாண்டி மவளே..
பக்காவா ஒரு தலைவனைத் தயார் பண்ணி வெச்சிருக்கோம். அடுத்த
ஆட்சியில் கலைஞர் முதலமைச்சர்; ஸ்டாலின் போலீஸ் அமைச்சர்.
அப்பத்தான் அவ கொழுப்பை அடக்க முடியும்!" என்று குறிப்பிட்டார்.

* முக ஸ்டாலின் துவக்கத்தில் நீதிக்கட்சிக்கும் முந்தைய காலம் தொட்டு
கழக வரலாற்றை விவரித்து, தொண்டர்களைச் சலிப்படைய வைத்த
போதிலும், போகப் போக நடப்பு அரசியலின் விறுவிறுப்பைக் கூட்டிக்
கொண்டார். மிகக்கோர்வையாகவும் நேர்த்தியாகவும் அமைந்திருந்த
பேச்சின் இறுதியில், "நான் உங்களுக்குக் கட்டளையிடப் போவதில்லை;
உத்தரவிடப்போவதில்லை. உங்களோடு இணைந்து போராட்டக் களத்திற்கு
வருகிறேன்" என்று முடித்த போது, பெரும் ஆரவாரத்தோடு கைதட்டியது
தொண்டர் கூட்டம்.

* கருப்பசாமி பாண்டியன், "பாசிச வெறி பிடித்தவர். சாடிஸ்ட். மனநிலை
தவறியவர். முசோலினி என்றெல்லாம் ஜெயலலிதா மீது அர்ச்சனை
நடத்தினார். இறுதியாக, "அழகான ஆண்களைக் கண்டால், அவர்களை
வேண்டுமென்றே வம்புக்கு இழுத்து சண்டை போடுவது அந்தம்மாவின்
சுபாவம்" என்றபடி ஸ்டாலினைப் பார்த்தார்.

* ஆலடி அருணா "முந்நூறு எம்பிக்கள் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தும்,
வைகோவைக் காப்பாற்ற மத்திய அரசு முன்வரவில்லை. ஆனால், ஜெயலலிதா மீது
16 வழக்குகள் அமலாக்கப் பிரிவில் பதிவான நிலையிலேயே கிடக்கின்றன.
இதற்குக் காரணம் தான் ஆடாவிட்டாலும் தசை ஆடும் என்பதா,
பிரிட்டிஷ் இராஜ்யம் போய் பிராமின் இராஜ்யம் வந்துவிட்டது என்பதா?"
என்றார்.

* பரிதி இளம்வழுதி, " கி.மு., கி.பி. மாதிரி சட்டசபை வரலாறு பற்றிப்
பேசினால் கு.மு., கு.பி. என்று குறிப்பிடலாம். அதாவது குண்டம்மாவிற்கு
முன், குண்டம்மாவிற்குப் பின்!" என்று விளக்கம் அளித்தார்.

* அன்பழகன், "வயதில் என்னைவிட இளையவரான கலைஞர், தனது
வயதை விட முதுமையாகத் தோற்றமளித்தாலும், மனதளவில் அவர்
இன்னமும் ஸ்டாலினுடன் போட்டி போடத் தயாராயிருக்கிறார்.
பிராமணரிடத்தில் பகையிருக்கத் தேவையில்லை. அதற்காக
பிராமணீயத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. எந்த ஐயரும் அவரவர்
கொள்கையைப் பின்பற்ற உரிமையுண்டு. துக்ளக்காகவும்
இருக்கலாம். அது அவரவர் உரிமை " என்றார்.

* சரத்குமார், "இந்திராகாந்தியின் அடக்குமுறையையே சந்தித்தவர்
கலைஞர். இந்திரா காந்தியின் கால் செருப்பு வாரிலுள்ள தூசுக்குக்
கூட சமமாகாதவர் ஜெயலலிதா" என்று சாடினார்.

* நெப்போலியன், "சமத்துவபுரம் வேண்டுமா, சசிகலா வேண்டுமா;
உழவர் சந்தை வேண்டுமா, ஊழல் மந்தை வேண்டுமா" என்று
வரிசையாக ஜெயலலிதாவையும் கருணாநிதியையும் பட்டியலிட...
பலத்த கரகோஷம் கிடைத்தது.

* திமுக மாநாட்டில் முதல்நாள் பேரணியின் முடிவில் இரவு 10 மணிக்கு
"ஆண்டியும் போண்டியும்" என்ற பிரச்சார நாடகம் நடத்தப்பட்டது.
இந்நாடகத்தில் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் முக ஸ்டாலின்
புகழ்பாடும் வசனங்களோடு, காட்சிக்குக் காட்சி முதல்வர் ஜெயலலிதாவைச்
சாடும் வசனங்களும் இருந்தன. அவற்றுள் சில இரட்டை அர்த்தத்
தொனியுடனும் மலிவான இரசனையைக் காட்டும் வகையிலும் அமைந்திருந்தது.

உதாரணத்திற்குச் சில வசனங்கள்...

** "ஒவ்வொரு மந்திரியும் அந்தம்மா காலில் விழுந்து மேலே பார்க்கிறான்.
என்ன பார்க்கிறான் தெரியுமா? அம்மா தூக்குவாங்களா மாட்டாங்களான்னு!"

** மந்திரி பதவிக்கு ஆசைப்படும் ஆளும் கட்சி எம் எல் ஏவிடம், அவரது
மகன் (திமுக ஆதரவாளர்) கூறுவது: " அம்மா அஜால் குஜாலா இருந்தாங்கன்னா
அன்னைக்கு மந்திரி ஆக்குவாங்க. அஜால் குஜால் இறங்கிடுச்சுன்னா மந்திரி
பதவியை விட்டு எடுத்துடுவாங்க"

** "ஜெகத்குரு சங்கராச்சியார் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?"

"யாரு? அந்த...... குச்சியிலே கோவணம் கட்டியவனா?"

** "நீங்க மந்திரி ஆகணும்னா சின்னம்மாவைப் பிடிங்க. அவங்க
என்ன சொன்னாலும் நடக்கும்... அவங்களைத் தள்ளிக்கிட்டு
வர்றேன். முடிஞ்ச வரைக்கும் செய்யுங்க. இல்லேன்னா ஆளை
வெச்சுச் செய்யுங்க.."

(சுசி என்ற பெயருடைய அந்தச் 'சின்னம்மா' வருகிறார்)

சுசியைப் பார்த்து எம் எல் ஏ கூறுவது: "இந்த மாதிரி ஒரு
ஸ்ட்ரக்சரை நான் பார்த்ததே இல்லை."

சின்னம்மா (சுசி) கூறுவது:

"...கவலையே படாதீங்க. நான் இல்லேன்னா அந்த அம்மாவால எந்த
அவயங்களையும் அசைக்க முடியாது. நாந்தான் அவங்களுக்கு எல்லாமே"

** ஒருவர்; " என்ன 2 நாள் முன்னாடி அங்கே அம்மா லிங்கத்துக்கெல்லாம்
பூஜை செய்யச் சொல்லி அறிக்கை விட்டுருக்காங்க?"

மற்றொருவர்: " எங்க அம்மா எத்தனை லிங்கத்தைப் பார்த்திருப்பாங்க!"

** (போண்டி என்பவர் ஆண்டியிடம் கூறுவது)
"உங்க அம்மாவுக்கு ராத்திரியானால் உள்ளே வைக்கணும்"

ஆண்டி" உம்..

போண்டி: அதாவது அரசியல் தலைவர்களைப் பிடிச்சு உள்ளே
வைக்கணும்

** ஆண்டி : "லேடீஸ் ஹாஸ்டல்னு ஒரு படம் பார்த்தேன். ஒரு பொண்ணு
குள்ளிக்கிறதை இன்னொரு பொண்ணு எட்டிப் பார்க்குது... கும்பகோணம்
மகாமகத்துல பெரியம்மாவும் சின்னம்மாவும் கட்டிப்பிடிச்சுக் குளிச்ச
மாதிரி இருந்தது"

** (ஒரு எம் எல் ஏவிடம், மாரியம்மன் போல சாமியாடியவர் கூறியவை)

சாமியாடுபவர்: "எனக்கு வைக்குறேன், வைக்குறேன்னு சொன்னியே
வெச்சியாடா? "

எம் எல் ஏ: என்ன சொல்றீங்க ஆத்தா?

சாமியாடுபவர்: வேல் வைக்கிறேன்னு சொன்னியேடா... புடுங்குறேன்
புடுங்குறேன்னு சொன்னியேடா.. புடுங்கினியாடா?

எம் எல் ஏ: என்ன சொல்றீங்க ஆத்தா?

சாமியாடுபவர்: கோயிலைச்சுற்றி இருக்குற புல்லைப் புடுங்கினியாடா.....
.. ஊத்துறேன் ஊத்துறேன்னியே... ஊத்தினியாடா?

சாமியாடுபவர்: கூழ் ஊத்தினியாடா..

எம் எல் ஏவிடம் சாமியாடுபவர் கடைசியாகக் கூறுவது:

" எங்க அம்மா உங்களை 6 மாசம் வெச்சிருந்து அப்புறம்
கலைச்சிடுவாங்க"

( நன்றி: துக்ளக் 1.10.03 )

சனி, ஆகஸ்ட் 18, 2012

கலைஞரைப் பற்றிய மதிப்பீடு இங்கே

. .
திராவிட இயக்கத்துக்கும் காங்கிரசுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. காந்தி வரும் வரை காங்கிரஸ் மேட்டுக்குடிக்காரர்களின் கட்சி. அந்த மேட்டுக்குடி காங்கிரஸ்காரர்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் மனுப் போட்டுக்கொண்டிருந்தார்கள். பெரியார் வரும் வரை திராவிட இயக்கத்தினரும் அப்படித்தான். காந்தி காங்கிரசுக்கு எப்படி கடவுளோ அப்படித்தான் பெரியாரும் திராவிட இயக்கத்துக்கு. நேரு தனிப்பட்ட முறையில் மிஸ்டர் க்ளீன் ஆக இருந்தாலும் கட்சியின் பல கோளாறுகளை கண்டுகொள்ளவில்லை. அவருடைய கரிஷ்மா அனைவரையும் கவர்ந்தது. அண்ணாவும் அப்படித்தான். இந்திரா காந்தி காரியம் ஆனதும் பெரியவர்களை கழற்றி விடுவது (காமராஜ்), லஞ்சம், ஊழல், வாரிசு அரசியல் எல்லாவற்றையும் காங்கிரஸில் ஒரு தவிர்க்க முடியாத விஷயம் ஆக்கினார். கலைஞரும் அப்படித்தான். இந்திராவுக்கு மொரார்ஜி, கலைஞருக்கு நாவலர். இந்திராவுக்கு காமராஜ், கலைஞருக்கு ராஜாஜி. இந்திராவுக்கு சஞ்சய் காந்தி, கலைஞருக்கு அழகிரி. ராஜீவ் போல ஸ்டாலின்.
அவரது கொள்கைகளை அவர் கைவிட்டு வெகு நாட்களாகிவிட்டன. அவரது கூர்மையான மூளை இப்போது பதவி, குடும்பம் ஆகியவற்றை மட்டுமே முன் வைத்து செயல்படுகிறது. அவர் தலைவர் இல்லை, அரசியல்வாதி. இந்திராவை மறுபடி பார்ப்பது போல இருக்கிறது.
ஆனால் அவர் இந்திரா போல பணக்கார, அரசியல் பாரம்பரியம் உள்ள குடும்பத்தில் பிறந்தவர் அல்ல. கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர். சிறு வயதிலேயே பொது வாழ்வுக்கு வந்தவர். ஒரு காலத்தில் லட்சியவாதியாக இருந்திருக்க வேண்டும். சினிமா என்று ஒன்று இல்லாவிட்டால் ஏழையாகத்தான் இருந்திருப்பார். தி.மு.க. பதவிக்கு வருவதற்கு முன்பே சில பல தகிடுதத்தம் செய்தவர் என்று கண்ணதாசன் தன் மனவாசம், வனவாசம் போன்ற புத்தகங்களில் குறிப்பிடுகிறார். ஆனால் அண்ணா அவரது பணம் திரட்டும் திறமை, தேர்தலை சமாளிக்கும் திறமை ஆகியவற்றால் அவரை கட்சியின் இன்றியமையாத தலைவர் என்று கருதினாராம். காந்திக்கும் இதற்கெல்லாம் ஒரு படேல் தேவைப்பட்டார் என்று ஞாபகம் இருக்கட்டும்.
பதவிக்கு வருவதற்கு முன் அவர் அரசியல் பங்களிப்பை பற்றி எனக்கு ரொம்ப தெரியாது. தி.மு.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்திருக்கிறார். ஈ.வே.கி. சம்பத், கண்ணதாசன் போன்றவர்களுக்கு இவரோடு ஏற்பட்ட மனஸ்தாபம், அண்ணா இவருக்கு கொடுத்த முக்கியத்துவம், ஆகியவற்றால்தான் கட்சியை விட்டு போனார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். கட்சியில் அண்ணா, நாவலருக்கு அடுத்த மூன்றாவது இடத்தில் இருந்தார் போல தெரிகிறது.
1965இன் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம், அரிசி தட்டுப்பாடு, காமராஜ் மத்திய அரசியலில் மூழ்கியது, ராஜாஜி, ம.பொ.சி. போன்ற அப்பழுக்கற்ற உழைப்பாளர்களின் கூட்டணி, சுடப்பட்ட எம்ஜிஆர் மீது எழுந்த சிம்பதி, எம்ஜிஆரின் திரை உலக இமேஜ் போன்ற பல காரணங்கள் தி.மு.கவை ஆட்சியில் அமர்த்தின. அண்ணா இறந்தவுடன் எல்லாரும் நாவலர்தான் முதலமைச்சராக வருவார் என்று எதிர்பார்த்தார்கள். எம்ஜிஆர் ஆதரவுடன் அவரை கவிழ்த்துவிட்டு முதலமைச்சரானார். நாவலர் கட்சி பொது செயலாளர் பதவிக்கு போட்டி இட்ட போது அது வரை பெரியாருக்காக காலியாகவே வைக்கப்பட்டிருந்த தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்து நாவலரை மீண்டும் கவிழ்த்தார். 71இல் பங்களாதேஷ் போரினால் இந்திராவுக்கு ஏற்பட்டிருந்த ஆதரவு, எம்ஜியார், அண்ணாவின் மறைவு ஆகியவற்றின் மீது சவாரி செய்து காமராஜை தோற்கடித்தார்.
அது வரை அருமையாக கணக்கு போட்ட மூளை எம்ஜிஆர் விஷயத்தில் சொதப்பி விட்டது. அவருக்கு ஒரு மந்திரி பதவி கொடுத்திருக்கலாம். குறைந்த பட்சம் மு.க. முத்துவை வைத்து படம் எடுக்காமல் இருந்திருக்கலாம். எம்ஜிஆர் தன் பாணியிலே ஒரு இளைஞன் கிழவனாகிக்கொண்டிருக்கும் தனக்கு போட்டியாக உருவாவதை பார்த்தார். மந்திரி பதவியும் கிடையாது என்பது உறுதியாகிவிட்டது. நடிகனுக்கும் நாடாளத் தெரியும் என்று சவால் விட்டு கட்சியை விட்டு வெளியேறினார். கலைஞர் தனக்கு ஐந்து வருஷம் பதவி இருக்கிறது, அதற்குள் எம்ஜிஆரை அடக்கி விடலாம் என்று நினைத்திருக்க வேண்டும். பெரிய தப்பு கணக்கு. (சின்ன தப்பு கணக்கு சோவை அடக்கி விடலாம் என்று நினைத்தது)
மிசா சமயத்தில் ஜேபி, மொரார்ஜி போன்றவர்களே ஜெயிலுக்கு போக, அவர் ஜெயிலுக்கு போகாது ஆச்சரியம்தான். ஸ்டாலின் அடிபட்டார், சிட்டிபாபு செத்தே போனார். பலர் மன்னிப்பு கேட்டு தி.மு.கவை விட்டுப் போனார்கள். ஆனாலும் கட்சி இருந்தது. கலைஞரின் தமிழுக்கும் தலைமைக்கும் பின்னால் ஒரு கூட்டம் இருந்தது. என்ன, எம்ஜிஆருக்கு பின்னால் இருந்த கூட்டம் இதை விட பெரியதாக இருந்ததால் கலைஞர் 77இல் தோற்கடிக்கப்பட்டார்.
ஆனால் 77இல் நீங்கள் தமிழ் நாட்டில் இருந்திருந்தால் அதிர்ந்திருப்பீர்கள். மஸ்டர் ரோல் ஊழல், சர்க்கரை ஊழல், அந்த ஊழல், இந்த ஊழல் என்று வெளி வந்துகொண்டே இருந்தது. மஸ்டர் ரோல் ஊழலில் ஈடுபட்ட ஒரு சென்னை கார்ப்பரேஷன் குமாஸ்தா வாக்குறுதி என்று ஒரு சினிமா படமே தயாரித்தார். தினத்தந்தியில் பொழுது விடிந்து பொழுது போனால் இதே நியூஸ்தான். லஞ்சம் அதற்கு முன்பும் இருக்கத்தான் செய்தது. ஆனால் அதை மறைத்து, பயந்துகொண்டே வாங்கினார்கள். அதை சாதரண விஷயமாக்கியது கலைஞர்தான். அவர் வழியில் பின்னால் எம்ஜிஆரும் போனார். கலைஞர் எழுபதுகளில் எட்டடி பாய்ந்தால் எம்ஜிஆர் பின்னாளில் பதினாறடி பாய்ந்தார்; ஜெவும் சசிகலாவும் எண்பதடி பாய்ந்தார்கள். கலைஞர் நமக்கு தெரியாமல் போய்விட்டதே என்று அவரும் இப்போதெல்லாம் நூறடி பாய்கிறார்.
அவர் 80இல் தோற்றது ஒரு சோகக் கதை. பேசாமல் இருந்திருக்கலாம். இந்திராவிடம் கெஞ்சி எம்ஜிஆர் அரசை டிஸ்மிஸ் செய்ய வைத்தார். அனுதாப அலை அடித்து எம்ஜிஆர் திரும்ப வந்துவிட்டார். காங்கிரஸின் உள்குத்து வேலையால் ஹண்டே அவரை கிட்டத்தட்ட தோற்கடித்தே விட்டார் (ஆயிரமோ என்னவோதான் ஓட்டு வித்தியாசம்) மனம் குளிர்ந்து எம்ஜிஆர் ஹண்டேவுக்கு மந்திரி பதவி எல்லாம் கொடுத்தார். அப்போதுதான் எம்ஜிஆரும் கலைஞரும் சேர்ந்து அரசியலை சும்மா oneupmanship ஆக ஆக்கினார்கள். கலைஞருக்கு எம்ஜிஆரை embarass செய்ய வேண்டும், அது ஒன்றுதான் வாழ்க்கையின் லட்சியம் போல இருந்தது. எம்ஜிஆருக்கு கலைஞரை வார வேண்டும் அது ஒன்றுதான் லட்சியம். கலைஞரின் சட்ட சபை ஆயதங்கள் ரஹ்மான் கான், துரைமுருகன், சுப்பு. அவர்கள் மூவரும் எம்ஜிஆர் கண்ணில் விரலை விட்டு ஆட்டினார்கள். எம்ஜிஆரும் அவர்களை ரசித்துக்கொண்டே காளிமுத்து (கருவாடு மீனாகாது போன்ற தத்துவங்களை சொன்னவர்) போன்றவர்களை வைத்து ஏதோ சமாளித்துக்கொண்டிருந்தார். (துரைமுருகனை படிக்க வைத்தது எம்ஜிஆர்தான். துரைமுருகனிடம் அவர் எம்ஜிஆரை தீவிரமாக தாக்கிய காலத்தில் இதை பற்றி கேட்டார்களாம். அவர் எம்ஜிஆர் தெய்வம், கலைஞர்தான் தலைவன் என்று சொன்னாராம்.) எம்ஜிஆரை காக்கா பிடிக்க வேண்டும் என்றால் கலைஞரை மட்டம் தட்ட வேண்டும் அவ்வளவுதான் – கலைஞர் தெலுங்கர் என்று கூட சொல்லிப் பார்த்தார்கள். இந்த கலாட்டாவில் உழவர் போராட்டம் (உழவர் தலைவர் நாராயண சாமி நாயுடு கடனை திருப்பி கொடுக்கக் கூடாது என்ற உறுதியான கொள்கை உடையவர்), இட ஒதுக்கீடு கலாட்டா, திருந்செந்தூர் கொலை, பால் கமிஷன் அறிக்கை, என்று பல விஷயங்கள் நடந்தன.
84இலோ கேலிக்கூத்து. எம்ஜிஆர் படத்தை போட்டு ஓட்டு கேட்டுப் பார்த்தார். எம்ஜிஆரின் உடல் நிலைக்காக அடித்த அனுதாப அலையில் கலைஞர் ஏறக்குறைய காணாமலே போய்விட்டார். அவரும் உடனே ஏன் சூடு சுரணை இல்லாத தமிழனே, நீ என்னை தண்ணியிலே போட்டால் நான் உனக்கு தோணியாவேன், கரையில் போட்டால் ஏணியாவேன், வயலுக்கு போட்டால் சாணியாவேன் என்று தன் பாணியிலே அறிக்கை விட்டுக்கொண்டு ஓடு மீன் ஓட உறு மீன் வரும் வரை காத்துக்கொண்டு இருந்தார்.
எம்ஜிஆர் மறைந்து, ஜானகி-ஜெ சண்டையில் அவர் 89இல் ஆட்சிக்கு வந்தார். அவரது ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது அநியாயம்.
ஆனால் 89இல் மாறன் மத்திய அமைச்சர் ஆனது தி.மு.கவுக்கு ஒரு inflection point. ஒரு லோக் சபா எம்.பி. கூட இல்லாவிட்டாலும் வி.பி. சிங் தி.மு.க.விலிருந்து ஒரு அமைச்சர் வேண்டும் என்று சொன்னார். அன்றிலிருந்து கலைஞருக்கு மத்திய அரசு பற்றி ஒரு கணக்கு மனதில் ஓட ஆரம்பித்தது. திராவிட நாடு எல்லாம் அப்போதுதான் உண்மையிலேயே போயே போச்! அவர் அப்போதுதான் முழுமையான இந்தியர் ஆனார்.
91இல் ராஜீவ் சிம்பதி அலையில் ஜெ ஆட்சிக்கு வந்தார். எழுபதுகளில் கலைஞர் ஆட்சி எப்படி தமிழ் நாட்டின் valuesஐ மாற்றியதோ அப்படித்தான் இந்த ஆட்சியும். இப்படியும் பதவி துஷ்ப்ரயோகம் செய்ய முடியுமா என்று அசந்து போனோம்.
சசிகலா கண்ணில் கண்டதை எல்லாம் வாங்கித் தள்ளிக் கொண்டிருந்தார். ஜெ யாரோ முன் பின் தெரியாதவர்கள் எனக்கு பல லட்சம் டாலர் அன்பளிப்பு தந்தார் என்று வெளிப்படையாக ஒத்துக்கொண்டார். வளர்ப்பு மகன் திருமணம் மாதிரி ராமன்-சீதா கல்யாணம் கூட நடந்திருக்காது. ஜால்ராக்கள் கொழித்தனர். ஜெவுக்கு எதிராக ஒரு கடுமையான எதிர்ப்பு அலை வீசியது. சோ ராமசாமியே ஜெவுக்கு கலைஞர் பெட்டர் என்று சொன்னார். மூப்பனாருடன் கூட்டணி, மூப்பனாருக்கு பெருந்தன்மையாக அதிக அளவு எம்.பி. சீட்கள், சன் டிவி, ரஜினிகாந்த், சோ ஆகியோரின் வெளிப்படையான ஆதரவு – 96இல் அமோகமாக ஜெயித்தார்.
அவர் முயன்றிருந்தால் தேவே கவுடா, குஜ்ரால் ஆகியோர் இடத்தில் மூப்பனார் அமர்ந்திருக்க முடியும். பொறாமை, ஈகோ. வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவிக்காவிட்டாலும் உள்குத்து வேலை நடத்தினார். ஜென்டில்மன் மூப்பனாரும் பேசவில்லை.
96இல் நல்லபடியாக ஆட்சி நடத்தினார். அவரது ஆட்சிக் காலங்களிலேயே சிறந்தது அதுதான். க்ரிடிக் சோ கூட அதை ஒத்துக்கொண்டார். சோவே எல்லா விஷயங்களிலும் நல்ல ஆட்சிதான், ஆனால் புலிகள் மீது ஒரு சாஃப்ட் கார்னர் இருக்கிறது, அதனால் ஜெவுக்கு ஓட்டு போடுங்கள் என்று சொன்னார். ஆனால் கட்சி உளுத்துப்போய்விட்டது. சொந்த பலத்தில் ஆட்சிக்கு வர முடியாது. கூட்டணி சரியாக அமையவில்லை. மக்களும் ஆட்சியில் காந்தியே இருந்தாலும் தோற்கடிப்பது என்று ஒரு வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள்.
மீண்டும் ஜெ. நள்ளிரவில் கைது. (அதை எப்படிய்யா சரியாக விடியோ எடுத்தார்கள்?) மாறன் வேட்டி அவிழ ஜீப் பின்னால் ஓடியது மறக்க முடியாத காட்சி. ஒரு மத்திய அமைச்சருக்கே அவ்வளவுதான் மரியாதை என்றால் ஜெவின் திமிரை என்ன சொல்வது? நாற்பது எம்.பி. தொகுதியும் அவருக்கே. அன்றிலிருந்து அவர்தான் தமிழக காங்கிரஸ் தலைவர். தங்கபாலு, கிருஷ்ணசாமி எல்லாம் சும்மா லுலுலாயி.
2006 – அருமையான தேர்தல் வியூகம். காங்கிரஸ், பா.ம.கவுடன் கூட்டணி. இலவச டிவி அறிவிப்பு. மைனாரிட்டி அரசுதான், ஆனால் மெஜாரிட்டி அரசுக்கு இதற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. இலவசங்கள் சரியான விஷயம் இல்லைதான் – ஆனால் சொன்னதை செய்தார், சொன்னதைத்தான் செய்தார். இலவச டிவி கொடுத்தார், அரிசி சீப்பாக கிடைக்கிறது எல்லாம் சரிதான். ஆனால் குடும்பத் தகராறை கட்டுக்குள் வைக்க முடியவில்லை. அழகிரி பக்கம் சாய்ந்தார், தயாநிதி மாறன் வெளியேற்றப்பட்டார், கனிமொழி அரசியலுக்கு வந்தார், பிறகு கண்கள் பனித்தன, இதயம் இனித்தது, ஸ்பெக்ட்ரம் ஊழல் முடிந்தும் விட்டது. இதற்கு ஏனையா அவர்களை வெளியே அனுப்பினீர்கள்? அழகிரியால் கெட்ட பேர்தான். (தா. கிருஷ்ணன் கொலை செய்யப்பட்டதிலிருந்தே அப்படித்தான் – தா.கி. இறந்ததும் அதற்கும் சமீபத்தில் 19xxஇல் யாரோ கொல்லப்பட்டார் என்று காட்டியது மிக மோசமான விஷயம்)
இன்றைக்கு அவரை பார்த்தால் பதவிக்காக இளவரசர்கள் அடித்துக்கொள்ள, ஒன்றும் செய்ய முடியாமல் உட்கார்ந்திருந்த மொகலாய ராஜாக்கள், திருதராஷ்டிரன் போலத்தான் இருக்கிறது. எவ்வளவு சீக்கிரம் ரிடையர் ஆகிறாரோ, அவ்வளவுக்கவ்வளவு நல்லது.
கட்சி உளுத்துப்போய்விட்டது. தி.மு.கவில் இன்று யார் சேருவார்கள்? அப்பா தி.மு.க.வில் பிரமுகராக இருந்தால் பிள்ளை சேருகிறான், அவ்வளவுதான். கலைஞரும் குறுநில மன்னர்களின் வாரிசுகளை அங்கீகரிக்கிறார். அழகிரி, ஐ. பெரியசாமி, வீரபாண்டி ஆறுமுகம், பொங்கலூர் பழனிச்சாமி மாதிரி பலர் அவர்களது வாரிசுகளை முன் வைத்துவிட்டார்கள். ஆனால் எந்த இளைஞன் வந்து இந்த கட்சியில் சேருவான்? அவன் அப்பா பிரமுகராக இல்லாவிட்டால் அவனுக்கு அங்கீகாரம் கிடைப்பது கஷ்டம். (நாகப்பட்டினம் ரூசோ கட்சிக்காக உழைத்தார் – அவருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை, செத்தே போனார். அவர் மனைவி சுயேச்சையாக நின்று கணிசமான ஓட்டு வாங்கினார்)
கலைஞரின் தமிழுக்காக ஐம்பதுகளிலும், அறுபதுகளிலும், ஏன் எழுபதுகளிலும் கூட பலர் வந்து சேர்ந்தார்கள். இன்று ஸ்டாலினுக்காக யாரும் வரப் போவதில்லை. அவருக்கு பிறகு கட்சி இன்னும் மோசமாகத்தான் ஆகப்போகிறது. அவுரங்கசீப் ஞாபகம்தான் வருகிறது. அவுரங்கசீப்பின் சாம்ராஜ்யம் அளவில் மிகப் பெரியது. ஆனால் உள்ளே சிவாஜியை சமாளிக்க முடியவில்லை, அவருக்கு பிறகு சாம்ராஜ்யமும் உடைந்து சுக்கல் சுக்கலாக போய்விட்டது. தி.மு.கவும் அப்படித்தான் ஆகப்போகிறது. பெருங்காய டப்பா மாதிரி கொஞ்ச நாள் வாசனையை வைத்து ஓட்டுவார்கள்.
பல தகுதிகள் இருந்தாலும், கட்சியை கட்டி காப்பாற்றி இருந்தாலும், அவரை அரசியலில் வெற்றி அடைந்திருக்கிறார் என்று சொல்ல முடியவில்லை. தோல்வி என்றும் சொல்ல முடியவில்லை. ஆதங்கம்தான் மிஞ்சுகிறது. எவ்வளவோ செய்திருக்கலாம்.

நெடுஞ்செழியன் பற்றிய சுவாரசியம் !!


இளந்தாடி வேந்தர் என்று நெடுஞ்செழியனுக்கு பெரியாருடன் இருக்கும்போது பட்டப்பெயர். கறுப்பு புஷ்கோட்.வெள்ளை பேண்ட்.கறுப்பான இளம்தாடி.இது தான் அன்று 1940களில் நெடுஞ்செழியன்.
கருணாநிதி பள்ளி மாணவனாயிருக்கும்போது நெடுஞ்செழியன் மீட்டிங் நடத்த பணம் வேண்டியிருந்தபோது வீட்டில் வெள்ளி ஜாமான் ஒன்றை யாருக்கும் தெரியாமல் எடுத்து விற்கவேண்டியிருந்தது.
’நடமாடும் பல்கலைக்கழகம்’ என்று தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர்.
 நாவலர் நெடுஞ்செழியன்.
திமுகவின் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவர்.
கழகம் கண்ட முக்கிய பேச்சாளர்.

1952ல் முதல் பொதுத்தேர்தலில் திமுக போட்டியிடவில்லை என்றாலும் காங்கிரஸுக்கு எதிராக பிரச்சாரம் செய்தது. கண்ணதாசன் இரண்டாம் கல்யாணம் செய்து கொண்டார் என்ற சிக்கலை முன் வைத்து பிரச்சார திட்ட நகலில் கண்ணதாசன் பெயரை கருணாநிதி நிராகரித்தார். புறக்கணிப்பு.கண்ணதாசன்‘ இது நியாயமா? கருணாநிதி செய்வதை தட்டி கேட்கக்கூடாதா?’என்பதாக நெடுஞ்செழியனிடம் பிராது சொன்னார்.நெடுஞ்செழியன் மிரண்டு ‘கருணாநிதி பஞ்சாயத்து எதையும் தயவு செய்து என்னிடம் கொண்டு வராதே’ என்று ஒதுங்கிக்கொண்டார் அப்போதே.


அண்ணாத்துரையின் மந்திரிசபையில் இரண்டாவது இடம். கருணாநிதியின் மந்திரிசபையில் இரண்டாவது இடம்.
எம்.ஜி.ஆரை கட்சியில் இருந்து நீக்குவதில் கருணாநிதியிடம் கடுமையாக பிடிவாதம் செய்து அவசர,அவ்சரமாக பத்திரிக்கை நிருபர்களுக்கு எம்ஜிஆர் சஸ்பெண்ட் விஷயத்தை வெளியிட்டவர்.
’அன்றே நாங்கள் அண்ணாவிடம் போகாமல் காமராஜரிடம் போயிருந்தால் எங்களை வேண்டாமென்றா சொல்லியிருப்பார்? ( இந்த இடத்தில் அடக்க முடியாத சிரிப்புடன்) ஊமையன்,உளறுவாயனையெல்லாம் கூடவே சேர்த்து வைத்துக்கொண்டிருக்கிற காமராஜர் என்னையும் கருணாநிதியையும் வேண்டாம் என்றா சொல்லிவிடுவார்?”
மேடையில் பேசும்போது விரல்களை ஆட்டி எம்ஜிஆர் பற்றி “ வாழ வந்தாய். எங்கோ கண்டியில் பிறந்தாய். மலையாளி.வாழ வந்தாய். வாழ்ந்து விட்டுப் போ. எங்களை ஆள நினைக்கலாமா?” என ஆக்ரோஷமாக கேட்டவர் நெடுஞ்செழியன்.
“அடுத்தவன் மனைவியை அவன் மனம் பதற,பதற, அவன் கதற,கதற தூக்கிக்கொண்டு வந்த எம்.ஜி.ராமச்சந்திரனா எங்களை கணக்கு கேட்பது” -இப்படி கேட்டவர்.

இவ்வளவெல்லாம் பேசி விட்டு எம்.ஜி.ஆர் மந்திரிசபையிலும் இரண்டாமிடம் வகித்தவர்.
அதிமுகவில் நேரடியாக இணைந்து விடவில்லை. இவர் ஒரு மதிமுக ஆரம்பித்தார். மக்கள் திராவிட முன்னேற்றக்கழகம். இந்த சர்பத் ஸ்டாலை உடனே,உடனே அதிமுகவில் இணைத்து எம்ஜிஆரிடம் சரணாகதியடைந்தவர்.

கருணாநிதி ‘நெடுஞ்செழியன் பெண்டாட்டிக்கு பயப்படுபவர்’ என்று கிண்டல் செய்த போது நாவலர் பதில் “ உன்னை மாதிரி எனக்கு என்ன வப்பாட்டியா இருக்கு”

’பொண்டாட்டிக்கு  நான் பயப்படுவேன். நீ வப்பாட்டிக்கு பயப்படுபவன்’ என்று அர்த்தம். The other woman is always powerful!


’உதிர்ந்த மயிர்’ என்றுஅலட்சியப்படுத்தப்பட்ட பின்னரும் ஜெயலலிதாவின் அமைச்சரவையிலும இரண்டாம் இடம் பெற்றுக்கொண்டவர்.
ஜெயலலிதாவுடன் மனஸ்தாபமானபோது ஒரு சுவாரசியம். சுயேட்சையாக சட்டசபைக்கு போட்டியிட்டு நெடுஞ்செழியன் ஒரு ஐநூறு ஓட்டு வாங்கினார். அப்போது அதே தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட மற்றொரு வேட்பாளர் எஸ்.வி சேகர் இவரை விட அதிக ஓட்டு வாங்கினார்.

வெற்றிகொண்டான் மேடையில் நெடுஞ்செழியன் ஞாபகம் வந்து விட்டால் சொல்வது “ அது ஒன்னு இருந்துச்சுய்யா எங்க கிட்ட! நல்லா நெடு நெடுன்னு கொழு கொழுன்னு! அடிச்சி பிரியாணி பண்ணியிருந்தா அம்பது பேரு சாப்பிட்டிருக்கலாம். விட்டுப்புட்டோம்.”

அண்ணாத்துரை மந்திரி சபையிலும்,கருணாநிதி மந்திரி சபையிலும்,எம்.ஜி.ஆர் மந்திரிசபையிலும், ஜெயலலிதா மந்திரிசபையிலும் கூட இரண்டாமிடம்.
காலம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு காட்டிய கருணையை நெடுஞ்செழியனுக்கு காட்டவேயில்லை.

அவருடைய மனைவி பங்காரு பக்தர்.

நெடுஞ்செழியனுக்கு ஒரே ஒரு பெருமை உண்டு. இரா.செழியன் என்ற சிறந்த பார்லிமெண்டேரியன் இவருடைய தம்பி. திராவிட இயக்கத்தில் மதிக்கத்தகுந்த ஆளுமை இரா.செழியன்.

நெடுஞ்செழியன் மறைந்த போது தி.மு,க தலைவர் இரங்கல்:

“நாவெல்லாம் தமிழ் மணக்க
செவியெல்லாம் தமிழ் மணக்க
சிந்தையெல்லாம் தமிழ் மணக்க
அன்று மேடையேறிய நாவலர் என் நண்பர்
தன்மான இயக்கத்தின் தூண்
சாய்ந்துவிட்டதே என
தமிழகம் புலம்பிட மறைந்து விட்டார்
அவர் புகழ் வாழ்க!
அவர் பரப்பிய பகுத்தறிவு வெல்க.”

வலம்புரி ஜான் சொன்னது தான் முழு உண்மை!
“குட்டி ஆடுகளை ஒட்டகங்கள் என்று திராவிட இயக்கம் அறிமுகப் படுத்தியிருக்கிறது என்பதற்கு நெடுஞ்செழியன் தான் தலைசிறந்த உதாரணம்”-நன்றி ராசநாயகம்

கண்ணதாசனின் வனவாசம், மனவாசம்


100-00-0000-234-1_b
வனவாசம்
ஆசிரியர்:  கண்ணதாசன்,  வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம்,  பக்கம்:  424, விலை: ரூ 140/-
Dial For Books:  94459 01234, 9445 97 97 97

‘வனவாசம்’ புதிய முன்னுரை
காந்தி அடிகளின் சுயசரிதத்தைப் படித்தபின்பு, இதனை எழுதியதால், உண்மையை நிர்வாணமாகக் கூறுவதில் அதிக ஆசை எழுந்தது.
உலகம் என்ன குளிக்கும் அறையா, இஷ்டம்போல் ஆடையின்றிக் குளிக்க? ஆற்றில் குளிக்கும்போது ஒரு கோவணமாவது கட்டிக் கொள்ளத்தானே வேண்டியிருக்கிறது! அவமானத்துக்கு பயந்து வெட்கப்பட்டு, சில உண்மைகளை மறைத்தே தீரவேண்டியதாகிவிட்டது.
என்னோடு பழகியவர்கள் எனக்குப் பின்னால் அதனை வெளியிட்டால், அது எனக்குச் செய்யும் உதவியாகவே இருக்கும்.
எழுதுகிறவனைப் பொறுத்தல்ல, எழுதப்படும் செய்திகளைப் பொறுத்து இது ஒரு சுவையான நூல்தான். இது வெளிவந்த நேரத்தில் தொலைபேசி மூலமாக இதைத் தேடியவர்கள் பலர். வெளிநாடுகளில் இருந்து இதை அடைவதற்குப் பெரும் முயற்சிகளை மேற்கொண்டவர்கள் பலர். அவர்களில் சிலருக்கு நானே அனுப்பியிருக்கிறேன்.
ஒரு பெருமிதம் எனக்குண்டு. என் தலைமுறையில் வாழும் எந்த மனிதனுக்கும், தலைவனுக்கும், கவிஞனுக்கும் இத்தகைய சுயசரிதம் அமையாதென்பதே அது. இப்படி ஒன்று அமையவேண்டும் என்றால், யாரும் நீண்டகாலம் முட்டாளாக இருக்க வேண்டும். அது எல்லோருக்கும் கைவரக்கூடிய கலை அல்ல!
மீசை முறைக்காத பருவத்தில் பிறந்த கிராமத்தை விட்டுப் பறந்து, காற்றிலே அலைமோதி, கடைசியில் தனித்து விழுந்துவிட்ட காகிதம் ஒன்று அந்த நாள் ஞாபகத்தை அச்சிலேற்றிவிட்டது.
‘எப்படி வாழவேண்டும்?’ என்பதற்கு இது நூலல்ல; ‘எப்படி வாழக்கூடாது!’ என்பதற்கு இதுவே வழிகாட்டி.
- கண்ணதாசன்,  26.04.1981

‘வனவாசம்’ முதற் பதிப்பின் முன்னுரை
சுயசரிதம் எழுதுகிறவனுக்கு இரண்டு பெருமைகள் வேண்டும்.
ஒன்று, அதை எழுதும்போது அவன் புகழ் ஓங்கி நிற்க வேண்டும்.
இரண்டு, அவன் வாழ்வில் வியக்கத்தக்க சாதனைகள் நிகழ்த்தியிருக்க வேண்டும்.
இந்த இரண்டும் இருந்தால்தான் அவனது சரித்திரத்தைப் படிப்பதற்குச் சிலபேர் கிடைப்பார்கள்.
என்னைப் பொறுத்தவரை, என் புகழ் குன்றிலிட்ட விளக்காக ஒளி வீசுகின்றதென்று நான் பெருமைப்பட முடியாது.
என் வாழ்வில் வியக்கத்தக்க சாதனை என்று எதுவும் இல்லை.
ஆயினும் எந்தத் துணிச்சலில் நான் சுயசரிதம் எழுதத்துவங்கினேன்?
இது கேள்வி!
நான் நடந்த வந்த பாதை, தனி வாழ்வில் நான் பட்ட துயரங்கள், இவையெல்லாம் ஒரு கதைபோல இருப்பதாக நான் கருதினேன்.
அதுவே, வேறு கதாபாத்திரங்களை உற்பத்தி செய்து கதை எழுதுவதைவிட, என்னையே பாத்திரமாக்கி உண்மையைக் கதை வடிவில் சொல்ல நான் விரும்பினேன்.
அந்த முயற்சியே இந்த நூலாக எழுந்தது.
“நான்” என்ற எழுதுவதற்குத் தகுதி போதாது என்ற தன்னடக்கத்துடனேயே “அவன்” என்று என்னைக் குறிப்பிட்டேன்.
இதில், நான் பிறந்த கதை சொல்லவில்லை. அப்படியொன்றும் நான் அதிசயப்பிறவி அல்ல என்பதனால்.
நான் வளர்ந்த கதை சொல்லவில்லை, அப்படியொன்றும் நான் ராஜபோகத்திலோ, கொடிய ஏழ்மையிலோ வளர்க்கப்படவில்லை என்பதனால்.
நடுத்தரக் குடும்பத்தின் சாதாரண மகனுக்கு வயதும் மனதும் வளர்ந்ததிலிருந்தே கதை தொடங்குகிறது.
1943லிருந்து 1961 ஏப்ரல் வரை என் வாழ்க்கை நடந்த விதம் இதில் வருணிக்கப்பட்டுள்ளது.
சில உண்மைகளை நிர்வாணமாகக் காட்டியிருக்கிறேன்.
சில துயரங்களைத் தாழ்வு கருதாது கூறியிருக்கிறேன்.
எனது மேன்மைகள் என்று நான் கருதுபவனவற்றை பயத்துடனேயே குறிப்பிட்டிருக்கிறேன்.
ஒரு பெரிய அரசியல் தலைவனின் வரலாறுமல்ல இது; ஒரு மாபெரும் கவிஞனின் காவிய வாழ்க்கையுமல்ல இது.
வாழ்க்கை வழிப்போக்கன் ஒருவனின் உயர்வு, தாழ்வுகளே இந்நூல்.
இதனைப் படிக்கின்றவர்கள் என்னை ஓரளவு புரிந்து கொள்ள முடியும்.
சில ரசிகர்களுக்காக இந்தச் சரிதம் பலகாலம் காத்துக் கொண்டிருக்க நேர்ந்தாலும் நான் வருந்தமாட்டேன்.
ஏனென்றால், என் காலத்துக்குப் பிறகு இது ஓர் அதிசயமாக இருக்கும் என்பதில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கையுண்டு.
இதில் நான் “வனவாசம்” என்று குறிப்பிடுவது ஓர் அரசியல் கட்சியில் நான் வாழ்ந்த வாழ்க்கையையே ஆகும்.
அந்தக் கட்சியிலிருந்து வெளியேறியதோடு வனவாசம் முடிந்துவிடுகிறது.
அடுத்த பகுதியை “மனவாசம்” என்ற தலைப்பில் எழுத நினைத்துள்ளேன்.
இந்த வனவாசத்தின் ஒரு பகுதி முதலில் தென்றலிலும் பிறகு இனமுழக்கத்திலும் வெளிவந்தது.
அந்த ஏடுகளுக்கும், அவற்றின் நிர்வாகிகளுக்கும் இதனை நூலாக வெளியிட்டவர்களுக்கும் எனது நன்றி.
- கண்ணதாசன், 4.9.1965



100-00-0000-234-2_b
 மனவாசம்
ஆசிரியர்:  கண்ணதாசன்,  வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம்,  பக்கம்:  240, விலை: ரூ 80/-
Dial For Books:  94459 01234, 9445 97 97 97

மனவாசம்
வனவாசத்தில் எல்லா உண்மைகளையும் நான் பகிரங்கமாகச் சொல்லிவிட்டதுபோல் பல பேருக்கு ஒரு பிரமை.
உண்மையில் சில விஷயங்களை மறைத்திருக்கிறேன். மனிதன் மான வெட்கத்துக்கு அஞ்சி மறைத்தே தீரவேண்டிய சில விஷயங்களும் உள்ளன அல்லவா? ‘சுயசரிதம்’ எழுதும்போது அதில் நான் கற்பனைகளைக் கலப்பதில்லை. கூடுமானவரை சொல்ல வேண்டியவை அனைத்தையும் சொல்லிவிடுவேன்.
இந்த மனவாசம் 1961-ஏப்ரல் 10ம் தேதியிலிருந்து ஆரம்பமாகிறது. இதில் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்க வேண்டிய நேரம் வரும் போதெல்லாம் வனவாசத்தில் விட்டுப்போன விஷயங்களைச் சொல்வேன்.
நான் பட்ட துன்பங்களைச் சபை நடுவில் வைப்பது ஒன்றுதான் எனக்கு ஏற்படும் ஆறுதல். நான் யாருக்கு உதவி செய்தேனோ அவர்களை மறந்துவிட்டேன்.
என்னைப் பிறரும் கெடுத்து, நானும் கெடுத்துக்கொண்ட பிறகு, மிச்சமிருக்கும் கண்ணதாசனையே இப்போது சந்திக்கிறீர்கள்.
இந்த மிச்சமே இவ்வளவு பிரகாசமாக இருக்குமானால்… எல்லாம் சரியாக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்….?
- கண்ணதாசன்

கண்ணதாசனின் வைரவரிகள்!




கண்ணதாசன் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது
அவரது கவிதைகள் தான். ஈடியணையற்ற ஆயிரக்கணக்கான பாடல்களைத் தந்தவர் அவர். ஆனால் அவரது கவிதைகளைப் போல அவரது மற்ற எழுத்துக்களும் மிகச் சிறப்பு வாய்ந்தவையே. அவரது உரைநடைகளில் இருந்து எடுக்கப்பட்ட சில வைரவரிகளை இங்கே தொகுத்து தந்துள்ளேன். அரசியலில் இருந்து ஆன்மீகம் வரை நறுக்குத் தெறித்தாற் போல அவர் சொல்லும் கருத்துக்களை நீங்களும் ரசியுங்களேன்!
-என்.கணேசன்
  • கல்லிலே நார் உரிக்க முடியுமா என்று கேட்கிறார்கள். ஏன் முடியாது? ‘அரசியல்என்பது என்னவாம்?
  • அடிக்கடி தவறு செய்பவன் அப்பாவி. ஒரே தவறைத் திரும்பத் திரும்ப செய்கிறவன் மூடன். ஒரு தவறுமே செய்யாதவன் மரக்கட்டை. தன்னையறியாமல் தவறு செய்து, தன்னையறிந்து திருத்திக் கொள்கிறவனே மனிதன்.
  • ஆணவமும் அழிவும் இரட்டைக் குழந்தைகள். இரண்டாவது குழந்தை மெதுவாக வளரும். அவ்வளவு தான்.
  • நிலத்தில் வளரும் களைகள் பெரிய மரங்களாவதில்லை. அற்ப ஆசைகள் பெரிய வெற்றியைத் தேடித் தருவதில்லை.
  • தற்புகழ்ச்சி என்பது வேறொன்றுமில்லை. விற்பனையாகாத சரக்கிற்குச் செய்யப்படும் விளம்பரமே!
  • அதிகமான ஆரவாரம் செய்யும் அரசியல்வாதியே ஜனங்களின் முட்டாள்தனத்தைச் சரியாக எடை போட்டவன்.
  • சாப்பிடும் போது உங்கள் இஷ்டத்துக்குச் சாப்பிடுகிறீர்கள். ஆனால் வாந்தியோ அதனிஷ்டத்திற்கு வருகிறது. காரியத்தை உங்கள் விருப்பப்படி செய்கிறீர்கள், எதிரொலி இறைவன் விருப்பப்படி வருகிறது.
  • வீட்டுக்கொரு நாயை வளர்த்தும் மனிதன் விசுவாசத்தைக் கற்றுக் கொள்ளவில்லையே! இனி நாய்கள் மனிதனை வளர்த்து, அதைக் கற்றுக் கொடுக்குமா?
  • மலரைப் பார்; கொடியைப் பார்; வேர் எப்படி இருக்குமென்று பார்க்க முயற்சிக்காதே. அதைப் பார்க்க முயன்றால், நீ மலரையும் கொடியையும் பார்க்க முடியாது.
  • ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை முட்டாள்கள் கையிலே விட்டு விட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டவனைக் குறை சொல்வது தான் ஜனநாயகம்.
  • கடவுள் மனிதனை பூமிக்கனுப்பும் போது ஒன்றே ஒன்று தான் சொல்லி அனுப்பினார். “நீ திரும்பவும் மனிதனாக வராதே, தெய்வமாக வாஎன்பதே அது.
  • வாலிப வயதில் முட்டாளாக இருந்ததாக நான் இப்போது நினைக்கிறேன். ஆனால் நடுத்தர வயதில் முட்டாளாக ஆவோம் என்று நான் அப்போது நினைத்ததில்லை.
  • அறுந்து போன பட்டம் எங்கே போய் விழும் என்பதும், ஆத்திரக்காரன் கதை எதிலே முடியுமென்பதும் ஆண்டவனுக்கு மட்டுமே தெரியும்.
  • நாலு நாள் வளர்த்த கோழிக்குக் கூடத் தான் வாழும் வீடு எது என்பது தெரிகிறது. நாட்டுச் சொத்தை நாற்பது வருஷம் சாப்பிட்ட மனிதனுக்குத் தேச பக்தி இல்லையே!
  • ஒவ்வொரு மரணமும் அழுகையோடு முடிந்து விடுகிறது. ஒவ்வொரு அழுகையும் மரணத்தோடு முடிந்து விடுகிறது.
  • இன்ன விஷயத்தைத் தான் ரசிப்பேன் என்று பிடிவாதம் செய்யும் ரசிகனுக்காக நான் எதையும் எழுத முடியாது. அப்படி எழுதினால் இன்னும் நாலு பக்கங்களுக்கு மேட்டர் வேண்டுமென்று கையைக் கட்டிக் கொண்டு நிற்கிற கம்பாஸிடருக்காக எழுதியது மாதிரி தான் இருக்கும்.
  • தெய்வ பக்தியுள்ளவன் வாழ்க்கையில் அஞ்சுகிறான்; ஆனால் மரணத்தைக் கண்டு அஞ்சுவதில்லை. நாத்திகன் வாழ்க்கையைக் கண்டு அஞ்சுவதில்லை. ஆனால் மரணத்தைக் கண்டு அஞ்சுகிறான்.
  • ஒரு விஷயத்தில் பிறரது அங்கீகரத்தை நீ எதிர்பார்த்தால், அது நீ முழு அறிவோடு சிந்தித்த விஷயமல்ல என்று பொருள்.
  • உங்களுக்குச் சோறு போடுவேன்என்று சொல்வதன் மூலமே, உங்கள் பசியைத் தீர்க்கக்கூடிய சக்தி அரசியல்வாதி ஒருவனுக்குத் தான் உண்டு.

கலைஞரை எதிர்த்து கண்ணதாசன் எழுதிய வனவாசம்-விமர்சனம்



வனவாசம் - வானதி பதிப்பகம் மூலம் 37 பதிப்புகள் வெளியாகி, பின் 2010 முதல் கண்ணதாசன் பதிப்பகத்தால் தொடர்ந்து வெளியிடப்படும் புத்தகம் !சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் கண்ணதாசன் தி.மு.க மீது ஈர்க்கப்பட்டதில் துவங்கி, அந்த கட்சியில் அவர் இருந்த காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை அலசி, பின் அவர் கட்சியிலிருந்து வெளிவருவதுடன் முடிகிறது. இதனாலேயே தி.மு.க எதிர்ப்பு நிலைப்பாடு கொண்டோருக்கு பிடித்தமான புத்தகமாக அமைந்து விடுகிறது. கலைஞர் அபிமானிகள் இப்புத்தகத்தை அதிகம் நேசிக்க மாட்டார்கள்!

துவக்கத்தில் கண்ணதாசனுக்கு மிக வேண்டியவரான இராம. கண்ணப்பன் கண்ணதாசனின் இளமை காலம் குறித்து எழுதி உள்ளார். கண்ணதாசனின் தந்தை எந்த வேலைக்கும் போகாமல் சீட்டு ஆடக்கூடியவர். இதனால் குடும்பம் மிக வறுமையில் வாடியிருக்கிறது. ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்த கண்ணதாசன் ஊரை விட்டு வெளியேறி வெளி இடங்களில் வேலை தேடியுள்ளார். முதலில் திருச்சி பின் சென்னை என பல இடங்களில் சிறு சிறு வேலைகள். போராட்டங்கள். பல்வேறு பத்திரிக்கைகளில் வேலை பார்த்து பின் ஒரு பத்திரிக்கை ஆசிரியர் ஆகவும் மாறி உள்ளார். பின் தி.மு.க மீது ஈர்க்கப்பட்டு கட்சியில் சேர்ந்தது, கட்சியில் கலந்து கொண்ட போராட்டங்கள், உள் கட்சி அரசியல் என விளாவாரியாக பேசுகிறது புத்தகம்.

காந்திஜியின் சத்திய சோதனை தான் இந்த சுய சரிதை எழுத காரணம் என சொல்லும் கண்ணதாசன் , சத்திய சோதனையில் உள்ளது போல, தான் செய்த பல தவறுகளை மனம் விட்டு கூறுகிறார். உதாரணத்துக்கு

- முதல் வேலையில் "பொருட்கள் சென்று வாங்கும் போது அதற்கு விலை ஏற்றி சொல்லி கமிஷன் அடித்தது

- விலை மாதர் இல்லம் சென்றது

- பல நாள் சாப்பிடாமல் இருந்து காசு கிடைத்ததும் ஹோட்டல் சென்று ஆறு மசால் தோசை ஒரே நேரத்தில் ஆர்டர் செய்து சாப்பிட்டது

- முதல் முறை பாட்டெழுதி நூறு ரூபாய் கிடைத்ததும் விலை மாது வீடு தேடி அலைந்தது

- நிலையான வருமானம் வந்ததும் ஒரு பெண்ணின் அழகில் மயங்கி மூன்று மாதம் வாழ்ந்தது- ஊருக்கு சென்று திரும்பும் போது அவர் வேறு நபருடன் வாழ்வது கண்டு மனம் வெறுத்தது

இப்படி எத்தனையோ சம்பவங்கள் சொல்கிறார்.

செட்டியார் சமூகத்தில் சுவீகாரம் செய்வது குறித்து பல தகவல்கள் தெரிய வருகிறது. " ஏழைகளுக்கு நிறைய குழந்தைகள் இருக்கும். பணக்காரர்கள் சிலருக்கு குழந்தைகள் இருக்காது. அவர்கள் ஒரு குறிப்பிட தொகை கொடுத்து தெரிந்த உறவினரிடம் குழந்தைகள் தத்தெடுப்பர்" என்கிறார்.

வாழ முடியாதவர்கள் என்கிற தலைப்பில் கலைஞர் எழுதிய சிறுகதையை பற்றி காட்டமாக விமர்சிக்கிறார். மனைவியை இழந்த கணவன். தன் மகளுடனே உறவு கொள்கிறான் என்கிறதாம் இக்கதை. இது பற்றி இவ்வாறு சொல்கிறார் கண்ணதாசன் " வெளி நாட்டவர்கள் கூட வறுமையை சித்தரிக்கும் போது பண்பாட்டோடு எழுதினார்கள். ஆனால் மகளை கெடுத்த தந்தையை வறுமைக்கு உதாரணமாக்கினார் முற்போக்கு ஆசிரியர்"

கண்ணதாசனின் அனுபவம் ஆங்காங்கு தத்துவமாக/ கருத்தாக வெளிப்படுகிறது:
 
" தன் துயரத்தை பகிர்ந்து கொள்ள இன்னொருவர் இருந்தால் மனதுக்கு ஆறுதல் கிடைக்கிறது. அந்த இன்னொருவர் பெண்ணாக இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுகிறது !"


" சில நேரங்களில் துணிவை மட்டுமே மூல தனமாக கொண்டு முன்னேற்றத்துக்கு தேவையான சந்தர்ப்பத்தை மனிதனால் ஆக்கி கொள்ள முடியும்."

" அரசியல் வாதிகளுடன் சில காலம் பழகியதிலேயே பல உண்மைகள் தெரிய ஆரம்பித்தது. தாம் கொண்ட கொள்கைகளில் யாருமே உறுதியாக இல்லை. ஜனங்கள் முட்டாள்கள் என்பதை நன்றாக உணர்ந்து கொண்டு அதை வெளியில் சொல்லாமலே அரசியல் நடத்துகிறார்கள் "
 
அரசியல் வாழ்க்கையில் பல சம்பவங்களை மிக விரிவாக விவரிக்கிறார். குறிப்பாக எம். எல். ஏ வாக ஆயிரம் விளக்கு தொகுதியில் நிற்க சொல்லி தி.மு.க சொல்ல, இவரோ தன் சொந்த ஊரான காரைக்குடி அருகே ஒரு தொகுதியில் நின்று தோற்றது ( ஆயிரம் விளக்கில் நின்றவர் வென்று விட்டாராம்)
 
சென்னை மாநாகராட்சி தேர்தலில் கண்ணதாசன் கடுமையாக தேர்தல் பணி செய்தாராம். அந்த தேர்தலில் தி.மு.க பெரும் வெற்றி பெற்ற போது வேட்பாளர்கள் பலர் அவர் வீடு தேடி வந்து நன்றி கூறினாராம். ஆனால் வெற்றி விழாவில் அண்ணா கலைஞருக்கு கணையாழி குடுத்து வெற்றிக்கு காரணம் இவரே என்றாராம். இது பற்றி கண்ண தாசன் அண்ணாவிடம் கேட்க, " நீயும் அவரை போல ஒரு மோதிரம் வாங்கி கொடுத்தால், உனக்கும் மேடையில் அணிவிக்கிறேன்" என்றாராம் !!

டால்மியாபுரம் போராட்டம் பற்றி மிக விரிவாக சொல்கிறார். அப்போது தான் தண்டவாளத்தில் தலை வைத்து படுக்கும் நிகழ்சிகள் நடந்தேறி உள்ளன. முதல் குருப் ஓடாத ரயில் முன் படுத்து கைதாகி விட்டது. அடுத்த குழுவிற்கு கண்ணதாசன் தலைமை ஏற்றிருக்கிறார். அந்த குழு சென்ற போது ரயில் நகர துவங்க, ஓடும் ரயில் முன் போய் விழ சொன்னார்களாம் ! ஓடும் ரயில் முன் விழுந்தால் நேரே சாக வேண்டியது தான் என கண்ணதாசன் செய்ய வில்லை. இந்த போராட்டத்தில் சிறைக்கு போய் பல மாதம் சிறையில் வாடி, குடும்பம் பணம் இன்றி கஷ்டப்பட்ட பின் தான் அரசியல் சற்று புளிக்க துவங்கி உள்ளது அவருக்கு !

கடைசி நூறு பக்கங்களில் தி.மு.கவில் அண்ணா- சம்பத் இடையே இருந்த சண்டை பற்றி விரிவாக பேசுகிறார். இவர் சம்பத் பக்கம் நின்றிருக்கிறார். அண்ணாவின் கருப்பு பக்கங்களும் இந்த புத்தகத்தில் பேச படுவது ஆச்சரியமாக உள்ளது. கலைஞரை நேரடியாக பல இடங்களிலும் " கலை ரசிகர்" என மறைமுகமாக பல இடங்களிலும் தாக்குகிறார்.

பெரிய சம்பவங்கள் அல்லது பிரச்சனைகள் முடிவுகள் எடுக்கும் போது தான் நமக்கெல்லாம் தூக்கம் பாதிக்கும். ஆனால் கண்ணதாசனோ பல முறை அத்தகைய சமபவங்கள் பற்றி சொல்லும் போதெல்லாம் அன்று இரவு நன்கு உறங்கினேன் என்று தான் முடிக்கிறார் !

வனவாசம் என அவர் சொல்லுவது தி.மு.கவில் இருந்த கால கட்டத்தை தான் ! கண்ண தாசனின் பாடல்களுக்கு ரசிகனான நான் அவர் அந்த பாடல்கள் குறித்தும் அவை எழுதிய சூழல், சில சுவையான சம்பவங்கள் எதிர் பார்த்தேன். ஆனால் இந்த நூல் எழுதிய கால கட்டத்தில் அவர் ஒரு புகழ் பெற்ற பாடலாசிரியராக இருந்தும், இந்த நூல் அவர் சுய சரிதை என்றாலும் அவர் பாடல்கள் குறித்து அதிகம் பேசாதது சற்று ஏமாற்றமே.

இது முழுக்க முழுக்க கண்ணதாசன் என்கிற தனி நபரின் தி.மு.க எதிரான நிலை பாடு ஏன் என்பதற்கான புத்தகம். கலைஞர் அல்லது அண்ணா அபிமானிகளிடம் இதற்கு நேர் எதிரான தங்கள் நிலை சார்ந்த கருத்துகள் இருக்க கூடும்.

ஒரு அரசியல் கட்சியில் உள்ளே நடக்கும் சம்பவங்களை இவ்வளவு விரிவாக பேசிய புத்தகம் என்கிற அளவில் நிச்சயம் இது ஒரு மாறுபட்ட புத்தகமே !
*******************
திண்ணை மார்ச் 19, 2012 தேதியிட்ட இதழில் வெளியானது 

கண்ணதாசனின் அரசியல் வாழ்வு

அரசியலில் இருந்துகொண்டே சினிமாவுக்கு பாடல் எழுதிய கண்ணதாசன் அவ்வப்போதைய அரசியல் சூழ்நிலை,தன் மன நிலை இரண்டையும் சினிமா பாடல்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்.திமுக வில் இருந்து சம்பத்தோடு வெளியேறிய சூழலில் அண்ணாதுரை பற்றி
  " அவனை நினைத்தே நானிருந்தேன். அவன் தன்னை நினைத்தே வாழ்ந்திருந்தான். இன்னும் அவனை மறக்கவில்லை . அவன் இத்தனை செய்தும் நான் வெறுக்கவில்லை. அண்ணன் காட்டிய வழியம்மா. " -படித்தால் மட்டும் போதுமா.

"அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான வுலகத்திலே " அவர் அண்ணா ஏ எல் எஸ் இவர் கேட்டு பணம் கொடுக்காததனால்.

தமிழ் தேசிய கட்சி காங்கிரஸில் இணையும் சூழலில் காமராஜரை குறித்து ' அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி. என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி.' வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி ' என்ற பாடல் - பட்டணத்தில் பூதம்.

அண்ணாத்துரை அமெரிக்காவில் புற்று நோய்க்கு வைத்தியம் பார்த்து விட்டு திரும்பி வந்த போது “நலம் தானா? நலம் தானா? உடலும் உள்ளமும் நலம் தானா?“

இப்படி பல பாடல்கள் பற்றி பட்டிமன்ற பேச்சாளர்கள் , பிரபலமான பேச்சாளர்கள் மட்டுமல்ல சாதாரண உரையாடல்களில் இப்படி பலரும் பல கண்ணதாசன் பாடல்கள் பற்றி பேசிகொள்வார்கள்.

நான் இங்கு குறிப்பிட போகும் பாடல் பற்றி யாருக்கும் தெரியாது. ஏனென்றால் இந்த பாடல் பற்றி யாருமே குறிப்பிட்டதில்லை.
"நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்" பாட்டின் சரண வரிகள்.

அப்போதெல்லாம் தி.மு.க வுக்கு அடுத்த இடத்தில் ஸ்தாபன காங்கிரஸ் இருந்தது. கண்ணதாசன் இந்திரா காங்கிரஸ். என்றாலும் கண்ணதாசனின் இயல்பான மீறல் காமராஜரை தன் தலைவராக வரித்து இரண்டு காங்கிரஸ் இயக்கமும் இணைந்து அரசியல் செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் உறுதி கொண்டிருந்தார். காமராஜர் மேல் அளவு கடந்த பற்று். திமுக வுக்கு எதிர்க்கட்சி ஸ்தாபன காங்கிரஸ. திமுக இறங்கினால் ஸ்தாபன காங்கிரஸ் ஆட்சி கட்டில் ஏறும் என்ற நிலை.( தீப்பொறி ஆறுமுகம் அப்போது ஸ்தாபன காங்கிரஸ் பேச்சாளர் !)

திடீரென்று எம்ஜியார் திமுகவிலிருந்து விலகி அண்ணா திமுக ஆரம்பித்தவுடன் மக்கள் செல்வாக்கு அவருக்கு வந்து விட்டது.

 நாஞ்சில் மனோகரன் தான் கண்ணதாசனின் அரசியல் எதிரி என்று கவிஞர் அறிவித்திருந்தார். திண்டுக்கல் பாராளுமன்ற இடைதேர்தலில் நாஞ்சில் மனோகரன் எம்ஜியாரால் வேட்பாளர் ஆக்கப்பட்டால் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என கண்ணதாசன் பகிரங்கமாக அறிவித்தார்.

திராவிட தலைவர்களில் நாஞ்சில் மனோகரனையும் மாதவனையும் கண்ணதாசனுக்கு பிடிக்காது . மந்திரகோல் மைனர் சுகவாசியாய் எந்த தியாகமும் செய்யாதவர் என்று கண்ணதாசனுக்கு கோபம் . மாதவன் திமுக வேட்பாளராய் கண்ணதாசன் நின்று தோற்ற தொகுதியை அடுத்த பொது தேர்தலில் திமுக வேட்பாளராய் கைப்பற்றியவர். அதற்கடுத்த தேர்தலில் மீண்டும் வென்று அண்ணா மந்திரி சபையில் மந்திரியானவர். மாதவனை பாராட்டி திமுக தொண்டர்கள் வீரவாள் கொடுத்தார்கள். உடனே கண்ணதாசன் தன் " கடிதம் " பத்திரிகையில் ' தம்பிகள் கத்தி கொடுத்தார்கள். பாவம் கிண்ணத்தை கொடுக்க மறந்து விட்டார்கள் ' என்று கிண்டல் செய்து எழுதினார்.
திமுகவை வெறுத்த கண்ணதாசனுக்கு திமுகவில் இரண்டு பேர் மேல் மட்டும் பாசம் கடைசிவரை இருந்தது. ஒருவர் கருணாநிதி! இன்னொருவர் அன்பில் தர்மலிங்கம்!  ஆமாம்.கண்ணதாசனே இப்படிச் சொன்னார்.
கருணாநிதிக்கும் கண்ணதாசனுக்கும் ஒருவிதமான Love and Hate relationship!ஒரு வேளை பூர்வஜென்ம பந்தமோ என்னவோ! முதல் முறையாக 1940களில் எம்.ஜி.சக்கரபாணி  கண்ணதாசனை அழைத்துப் போய் கருணாநிதியை அறிமுகப்படுத்திய போது தனக்கு
 ‘ காதலியை ப்பார்த்த உணர்வு’ ஏற்பட்டதாகவே கவிஞர் குறிப்பிட்டுள்ளார். கண்ணதாசன் இறந்த போது கருணாநிதி
 “ தென்றலாய் தீண்டியவனும் நீ! நெருப்பாய் சுட்டவ்னும் நீ! தாக்குகின்ற கணை எத்தனை நீ தொடுத்தபோதும் அத்தனையும் தாங்கும் என் நெஞ்சே உன் அன்னை!” என்று இரங்கல் எழுதினார்.

தாக்குதல் என்றால் சாதாரண தாக்குதல் அல்ல. வனவாசத்தில் எழுதியவை மட்டுமல்ல. மேடையிலும். கருணாநிதி ‘ காமராஜரின் தாயார் கருவாடு விற்றவர்’ என்று சொன்னதற்காக கண்ணதாசனின் பதிலடி’ ஆமாம். என் தலைவனின் தாய் கருவாடு தான் விற்றார். கருவாடு மட்டும் தான் விற்றார்!’

 கண்ணதாசன் பெத்தடின் இஞ்சக்சன் போதையில் அளவுக்கு மீறி மூழ்கிய போது கண்ணதாசனின் பிள்ளைகள் கருணாநிதியிடம் போய் அழுதார்கள். அப்போது கருணாநிதி கவிஞரிடம் கேட்ட வார்த்தைகள்: ’எங்களையெல்லாம் அழ வைக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுகிறாயா?’


திண்டுக்கல் பாராளுமன்ற இடை தேர்தலில் மாயத்தேவர் நிறுத்தப்பட்டு அண்ணா திமுக அமோக வெற்றி. ஸ்தாபன காங்கிரஸ் இரண்ட்ராமிடம் . திமுக மூன்றாமிடம். இந்திரா காங்கிரஸ் நான்காமிடம்.

'சிவகாமி உமையவளே முத்துமாரி உன் செல்வனுக்கு காலம் உண்டு முத்துமாரி '
என்று காமராஜர் எதிர்காலம் பற்றி கணித்த கண்ணதாசனுக்கு அரசியல் சூழல் மாறிவிட்டது என புரிந்து விட்டது.
எம்ஜியாரை கடுமையாக எதிர்த்தவர் கண்ணதாசன்.

 எம்ஜியாரும் அவர் கட்சியும் தமிழகத்தை ஆக்கிரமித்ததை அவலமாக நினைத்து தான்

" அழகாக தோன்றும் ஒரு கருநாகம் கண்டேன் .
அநியாயம் செய்பவர்க்கும் மரியாதை கண்டேன் .
சதிகார கும்பல் ஒன்று சபையேற கண்டேன் "

தன் பதற்றத்தை கண்ணதாசன் ' என் மகன் ' படப்பாடலில் வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து எம்ஜியாரை கடுமையாக சாடினார். எம்ஜியார் முதல் முறை ஆட்சியமைத்தபோது மதுவிலக்கை கடுமையாக அமல் படுத்தினார்.
கண்ணதாசன் பத்திரிகையில் ஒரு கேள்வி:

ஒன்றிற்கு மேற்பட்ட மது பெர்மிட் வைத்திருப்பவர்கள் சரண்டர் செய்யவேண்டும் என்று எம்ஜியார் ஆணையிட்டிருக்கிராரே?

கண்ணதாசன் பதில்:
'ஆண்டவனே வந்து கேட்டாலும் நான் சரண்டர் செய்யமாட்டேன். உங்கள் எம்ஜியாரிடம் இன்னொரு சட்டம் போட சொல்லுங்கள்; 'ஒரு காதலிக்கு மேல் வைத்திருப்பவர்களை சரண்டர் செய்ய சொல்லுங்கள் '

கடைசியில் எம்ஜியார் கண்ணதாசனை தமிழக அரசின் ஆஸ்தான கவியாக நியமித்தார். உடனே கண்ணதாசன் சொன்னார்!
" எம்ஜியாருடன் நான் வாழ்நாள் முழுவதும் நடத்திய யுத்தத்தில் கடைசியாக தோற்று விட்டேன் "

கண்ணதாசனின் பாடல்களை காட்டிலும் அவரது அரசியல் வாழ்க்கை தான் ரொம்ப விஷேசமானது.

ஒரு முறை குமுதம் கேள்வி பதிலில்
கேள்வி : எம்ஜியாரின் 'நான் ஏன் பிறந்தேன் ', கருணாநிதியின்' நெஞ்சுக்கு நீதி' , கண்ணதாசனின் 'வனவாசம்' ஆகிய சுயசரிதை நூல்களில் எந்த நூல் சிறந்தது?

அரசு பதில் : 'வன வாசம்' தான். ஏனென்றால் அதில் "உண்மை " இருக்கிறது.

எம்.ஜி.ஆர் கருணாநிதி பற்றி கவியரசர் கண்ணதாசன்

திமுக வில் இருந்து எம்.ஜி.ஆர்.நீக்கம் ஏன் என்பது பற்றியும் அப்போது தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த நிகழ்வுகளை தமது நான் பார்த்த அரசியல் எனும் புத்தகத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய வரலாற்று உண்மையை படித்தால் உண்மையாகவே அப்போது நடந்ததை வெளிச்சமிட்டு காட்டுகிறது. தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த உரையாடலை எழுதியுள்ளார்.
இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். விலகியதைப் பற்றி நான் சில விஷயங்களைச் சொல்வேண்டும்.
கருணாநிதியும் நானும் இந்தக் கட்டத்தில் நன்றாகப் பழகிக் கொண்டிருந்தோம். உள்ளுக்குள்ளே அவர்கள் இருவருக்கும் தகராறு நடந்து கொண்டிருந்தது.
திடீரென்று ஒருநாள் கருணாநிதி எனக்கு டெலிபோன் செய்து, “என்னய்யா செய்யலாம்” என்று கேட்டார்.
“சரி, அவர் கணக்குத்தானே கேட்கிறார். எல்லா ஊர்களிலேயிருந்தும் கணக்கு அனுப்ப வேண்டும் என்று செயற்குழுவிலே தீர்மானம் போட்டு, செயற்குழுவை ஒத்தி வைத்துவிடுங்கள். கணக்கு வருவதற்கு ஒரு தலைமுறையாகும். அதுவரை என்ன செய்வார் என்று பார்க்கலாம்,” என்று நான் சொன்னேன்.
செயற்குழுவுக்கு முதல் நாள் நண்பர் கருணாநிதி அவர்கள், எனக்கு டெலிபோன் செய்து, “இல்லை இல்லை. அது ஒன்றும் நடக்காது. இன்று ஒரேடியாக ஒழித்துவிட வேண்டியதுதான்” என்று சொன்னார்.
நான் சொன்னேன், “சில மக்கள் பின்னணி இருக்குமே” என்று.
“என்ன, பத்துப்பேர் கத்துவான். பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.
மறுநாள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கும் போது, நண்பர் ‘சோ’ அவர்கள் எனக்கு டெலிபோன் செய்தார்.
“தெரியுமா விஷயம்?” என்று கேட்டார்.
“என்ன?” என்றார். “தெரியாது” என்றேன்.
“எம்.ஜி.ஆரை டிஸ்மிஸ் செய்து விட்டார்கள்” என்றார்.
“இருக்காதே” என்றேன்.
“இப்பொழுது தான் எனக்குச் செய்தி வந்தது” என்றார்.
இது இரண்டு மணிக்கு நடந்திருக்கும் என்றால், எனக்கு இரண்டு ஐந்துக்கெல்லாம் இந்தச் செய்தி வந்தது.
அவர் டெலிபோனை வைத்த உடனேயே, டெலிபோன் மணி அடித்தது.
கருணாநிதி பேசினார்: “முதல் முதலாக உனக்குத் தானய்யா சொல்லுகிறேன். கேள்விப்பட்டாயா?” என்றார்.
“உங்களுக்கு முன்னாலே சோ போன் பண்ணினார் அய்யா” என்றேன்.
“என்ன நினைக்கிறாய்?” என்றார்.
“கொஞ்சம் கலகம் இருக்குமே” என்றேன்.
“பார்த்துக் கொள்ளலாம்”என்றார் அவர். “என்ன, பத்து ஊரிலே கலகம் செய்வார்கள். பார்ப்போம்” என்றார்.
ஆனால் அவர் போட்ட கணக்குத் தவறு. மக்கள் பின்னணி என்பது எழுச்சியாக எழுமானால் காரண காரியங்கள் இன்றியே அது பெருங்கூட்டமாகத் திரளும் என்பதை நான் பல கட்டங்களில் பார்த்திருக்கிறேன்.
1971 பொதுத் தேர்தலே சான்று.
அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு மிகப் பெரிய பின்னணி இருக்கிறது என்பதை கருணாநிதி கண்டு கொள்ள முடிந்தது.
இந்தச் சூழ்நிலையில், எம்.ஜி.ஆர். பிரிந்த பிறகும் கூட மாநில சுயாட்சி கோஷமாக ஆக்கி, வாயில் வந்தவாறு இந்திரா காந்தியைத் திட்டவும், காங்கிரஸைத் திட்டவும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தயாரானார்கள்.
திராவிட முன்னேற்றக் கழக்த்தின் கோயமுத்தூர் மாநில மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் கருணாநிதியினுடைய மகனே பேசும்போது, என்னுடைய அப்பா எல்லா விதவைகளுக்கும் ‘பென்ஷன்’ கொடுக்கிறார். இந்திராகாந்தி தேவையானால் வந்து வாங்கிக் கொள்ளட்டுமே” என்று பேசியதாகச் செய்தி வந்தது.
ஆசைதம்பி பேசும்போது இந்திராகாந்தியை, “என்ன இவள், எலெக்‌ஷன் நடத்தினால் நடத்தட்டும், இல்லா விட்டால் நாம் நடத்துவோம்” என்று பேசினார். அதே மாதிரி மற்றவர்களும் பேசினார்கள்.
இவையெல்லாம் சி.பி.ஐ. ரிப்போர்ட்டாக இந்திரா காந்திக்குப் போய்ச் சேரும் என்று அவர்கள் யாரும் அப்போது கருதவில்லை.
1970 – 1974 க்கு இடைப்பட்ட காலத்தில் எம்.ஜி.ஆர். அரசியல் தலைவரானதை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
அரசியலில் ஒரு கட்சியைத் துவக்க வேண்டும், தலைவராக வேண்டும் என்கின்ற விருப்பம் எப்போதுமே எம்.ஜி.ஆருக்கு இருந்ததில்லை என்பது எனக்குத் தெரியும்.
சினிமா உலகத்தில் தன்னுடைய ஆதிக்கத்தை விட்டு விடக்கூடாது, அரசியலில் தன்னுடைய பிடியை விட்டு விடக் கூடாது என்றுதான் அவர் நினைப்பாரே தவிர, முழு அரசியல்வாதியாக முழு நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ள அவர் எப்போதும் விரும்புவதில்லை.
ஆனால் அவரை வலுக்கட்டாயமாக அரசியலில் ஒரு தலைவராக்கிய பெருமை நண்பர் கருணாநிதிக்கு உண்டு. கட்சியிலிருந்து அவரை விலக்கியதன் மூலமாக ஏராளமான கூட்டத்தை அவர் பக்கத்தில் ஓடவிட்ட பெருமையும் கருணாநிதிக்கு உண்டு.
எம்.ஜி.ஆரைப் பின் தொடர்ந்து தொண்டர்கள் அனைவரும் போய் விட்டார்கள்.
முதன் முதலில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1961 ஏப்ரலில் பிளவு ஏற்பட்டது.
அந்தப் பிளவுக்கு நானும் சம்பத்தும் காரணமாக இருந்தோம். எங்களைப் பின்பற்றி வந்தவர்கள் மாவட்டங்களில் நல்ல தலைவர்களாக இருந்தார்களே தவிர, தொண்டர்களாக இல்லை. ஏராளமான தொண்டர்கள் தி.மு.கழகத்திலிருந்து எங்களுக்குக் கிடைக்கவில்லை. எங்களுக்குக் கிடைத்ததெல்லாம் காங்கிரஸ் தொண்டர்களும், திராவிடக் கழகத் தொண்டர்களும்தான்.
ஆனால் எம்.ஜி.ஆர். விலக்கப்பட்ட பிற்பாடு, அவருக்குப் பின்னணியாக நின்றவர்கள் அனைவரும் மிக அற்புதமான தி.மு.கழகத் தொண்டர்களாக இருந்தார்கள்.
கட்டுப்பாடற்ற, முறையாக செயல் திட்டமற்ற தொண்டர்கள் தான் என்றாலும், ஒரே தலைவரின் கீழே திரண்டவர்கள். எம்.ஜி.ஆரிடம் அவர்கள் உயிரையே வைத்திருந்தார்கள்.
அந்த முறையில் எம்.ஜி.ஆரைப் பின்பற்றியே அனைவரும் போனார்கள் என்பது மட்டுமல்லாமல், அரசியல் கட்சியில் ஒரு தலைவர் நீக்கப்பட்டார் என்பதற்காக நாடு முழுவதிலும் கொந்தளிப்பு ஏற்பட்ட சம்பவம் இது இரண்டாவது முறையாகும்.
இந்திராகாந்தி நீக்கப்பட்ட போது முதன் முதலில் எப்படி நாடு முழுவதிலும் ஒரு எதிரொலி ஏற்பட்டதோ, அப்படியேதான் எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டவுடனே தமிழ்நாடு முழுவதிலும் எதிரொலி ஏற்பட்டது.
இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைப் போலவே ஒரு மாபெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. ஆங்காங்கே கார்களையும், பஸ்களையும், லாரிகளையும், நிறுத்தி அதில் எழுதத் தொடங்கினார்கள்.
சின்னச் சின்னப் பள்ளி மாணவர்களிலேயிருந்து கல்லூரி மாணவர்கள் வரை, அதில் ஈடுபட்டார்கள். தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். கை வண்டி இழுப்பவர்களில் இருந்து, கடலை விற்போர்கள் வரையில் ஆத்திரப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
ஆகவே, ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற ஒரு பெரிய இயக்கத்தைத் துவக்க வேண்டிய நிர்பந்தம் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது.
அப்படித் துவங்கியவுடனே அது தமிழக அளவில் பெரிதாக வளர்ந்ததும் மிகச் சுலபமாக நடந்தது. வளர்ந்தது என்று சொல்வதைவிட வளர்ந்த நிலையிலேயே அது உருவாயிற்று என்று சொல்வது பொருந்தும்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும் கட்சியாகத் தமிழகத்தில் விளங்கும் என்று நான் எதிர் பார்த்ததுண்டு. அது நியாயமாக நடந்துவிட்டது.
அதைச் சரிக்கட்டவும், ‘அப்படியொன்றும் இல்லை’ என்று காட்டவும் நண்பர் கருணாநிதி பல்வேறு திசையில் பிராயணம் செய்து பார்த்தார். பல ஊர்களில் அவர் பேசவே முடியாமல் போயிற்று.
எம்.ஜி.ஆர். மீது ஜனங்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் இருந்த பிரியம் என்பது சாதாரணமானதாக இல்லை.
அதற்குக் காரணம் நியாயமா இல்லையா என்று ஆராய்வதைவிட, ஏதோ சில காரியங்களை அவர் செய்திருக்கிறார், செய்யக்கூடியவர், நியாயமானவர், நேர்மையானவர், ஒழுக்கமானவர் என்றெல்லாம் மக்கள் எண்ணினார்கள். அப்படி எண்ணிய மக்களின் நம்பிக்கை வீண் போகவில்லை.
கருணாநிதியின் மீது மக்களுக்கிருந்த நல்ல பெயரை அதுதான் போக்கடித்தது.
எம்.ஜி.ஆரை அவர் விலக்காமல் இருந்திருந்தால் நிலைமைகள் வேறுபட்டிருக்கக் கூடும்.
திராவிட முன்னேற்றக் கழகத்தைக் தவிர வேறு யாரும் ஆட்சிக்கு வருவதென்பது இன்னும் ஒரு 25 ஆண்டுக் காலத்துக்கு நடக்காமலேயே போயிருக்கும்.
அதனால் எம்.ஜி.ஆருடைய விலகம் காரணமாக, எம்.ஜி.ஆர் விலக்கப்பட்டதன் காரணமாக, திராவிட முன்னேற்றக் கழகம் மெலியும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற கட்சி ஓங்கி வளரும் என்று நம்பினேன்.
மற்ற நடிகர்களைப் போல் அவரும் ஒரு நடிகர்தான் என்றாலும், அரசியல் ஈடுபாட்டில் அவருக்கு இருந்த பிடிப்பின் காரணமாக, சில அரசியல் தத்துவங்களையும் அவர் உணர்ந்து கொண்டிருந்தார்.
விஷயங்களுக்குப் பதில் சொல்வதில் கெட்டிக்காரராக விளங்கினார். பிரச்சனைகளுக்குப் பரிகாரம் தேடுவதிலும் கெட்டிக்காரராக விளங்கினார். ஒரு கட்சியை நடத்தக் கூடிய சாமர்த்தியம் தனக்கு இருக்கிறது என்பதையும் காட்டினார்.
“பிரித்தலும் பேணிக் கொளலும் பிரித்தார்ப் பொருத்தலும் வல்லது அமைச்சு”
- என்றும் அவர் காட்டினார்.
அவர் கட்சிக்குள் மிக முக்கியமான ஆட்களும் உள்ளே நுழைய ஆரம்பித்தார்கள்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக்த்தில் அங்கம் வகித்தவர்களில் பட்டதாரிகள் அதிகமாக இருந்தார்கள். அதே அளவுக்கு பட்டமோ, படிப்போ இல்லாத கிராம வாசிகளும் அதிகமாக இருந்தார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் எவ்வளவு எரிச்சல் அடைந்தும் கூட இந்த வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.
எம்.ஜி.ஆருக்கு எதிராகக் கருணாநிதி அதிகார பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டும் கூட அவரால் அவருடைய வளர்ச்சியை நிறுத்த முடியவில்லை.
யாரோட உறவு கொண்டால் எந்த எதிரியைத் தீர்த்துக் கட்டலாம் என்பதில் கருணாநிதியைவிட எம்.ஜி.ஆர் கெட்டிக்காரராக விளங்கினார். கருணாநிதிக்கு இல்லாத சில புதிய திறமைகளும், எம்.ஜி.ஆருக்கு இருந்ததாக அந்தக் காலங்களில் கருதப்பட்டது. உண்மையாகவே ஒரு கட்டத்தில் ஆகிவிட்டது.
எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையில் நீண்டகாலமாகத் தொழில் தொடர்பு உண்டு. அந்தத் தொடர்புகளில் கசப்பு இருந்தாலும், இனிப்பும் இருந்தது.
ஆனால் அரசியலில் அவர் நடந்து கொண்ட முறையும், சாமர்த்தியமும் எனக்கே திகைப்பாக இருந்தன. நமக்குக்கூட அந்த அளவுக்கு உழைக்கின்ற சக்தி இல்லை என்பது புரிந்தது.
திண்டுக்கல் தேர்தலில் அவர் ஈடுபட்ட போது, அந்தத் தேர்தலுக்கு அவர் பட்டபாடு, அதிகாலையிலிருந்து இரவு வரையில் அவர் செய்துவந்த சுற்றுப்பயணங்கள், இவை வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
சோம்பல் என்பது துளியும் இல்லாமல், அவர் எந்தச் சூழ்நிலையிலேயும் யாரையும் சந்திப்பதற்குத் தயாராக இருந்து மாபெரும் வெற்றி ஒன்றை, எல்லாக் கட்சிகளையும் எதிர்த்துப் பெற்றார் என்பது, தமிழக வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகும்.
இந்த நேரத்தில் நண்பர் கருணாநிதி அவர்களைப் பற்றியும் தெளிவாகச் சில விஷயங்களைச் சொல்லி விடுவது நல்லது என்று நான் கருதுகிறேன்.
ஏற்கனவே ‘வனவாச’த்திலும் மற்ற இடங்களிலும் நான் அவரைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன் என்றாலும், அரசியல் ரீதியாக இரண்டொரு விஷயங்களை நான் கூறியாக வேண்டும்.
கருணாநிதி அரசியல் நிர்வாகத்தில் மிகுந்த திறமைசாலி. ‘எங்கே எந்தத் தொண்டன் இருக்கிறான், எந்த மாவட்டத்தில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள், எந்த ஊரில் கிளை இருக்கிறது இல்லை’ என்கிற அனைத்தும் அவர் விரல் நுனியில் அடங்கி இருந்தன. அவ்வளவு திறமைசாலி.
பேச்சில் ஒருவரை வளைக்க வேண்டும் என்றால் அவரால் வளைக்க முடியும். முன்னாலே உட்கார்ந்திருப்பவர்களை அழ வைக்க வேண்டும் என்றால் அழ வைக்க முடியும். யாரைப் பக்கத்திலே இழுக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ, அவர்களை சாகசம் பண்ணியாயவது வரவழைத்து விடுவார், உள்ளே இழுத்து விடுவார்.
கம்யூனிஸ்டு கட்சியில் இருந்துகூட ஆட்களை இழுத்துக் கொள்ளக் கூடிய சாமர்த்தியம் அவருக்கு மட்டுமே உண்டு. எந்தக் கட்டுப்பாட்டையும் உடைத்து ஆட்களை இழுக்கக் கூடியவர்.
எம்.ஜி.ஆர். விஷயத்தில், யானை தடம் தப்பியதைப் போலத் தப்பினாரே தவிர, மற்றபடி அவருக்கு அரசியல் சாமர்த்தியம் என்பது மிக அதிகம்.
நிர்வாகத்தில் ஏற்கனவே இருந்த எல்லாரையும் விட அவர் திறமைசாலி என்று செக்ரட்டேரியட்டில் இன்றைக்கும் எல்லாரும் ஒப்புக் கொள்கிறார்கள்.
ஆனால் அவரைப் பொறுத்தவரைக்கும் இருந்த மிகப் பெரிய பலவீனம், ‘பணம், பதவி’ இந்த இரண்டும் தன்னுடைய குடும்பத்திற்குப் போகத்தான் மற்றவர்களுக்கு என்று, ஒன்றை வைத்திருந்தார்.
இந்த எண்ணம் எம்.ஜி.ஆரிடம் எப்போதும் இருந்ததில்லை. இந்தப் பணமும், பதவியும், தனக்கும் தன் வீட்டுக்கும் என்று அவர் கருதியதில்லை.
ஆனால் கருணாநிதியைப் பொறுத்தவரை ஒரு பதவி காலியானால் அதில் மாறனைப் போடலாமா, மற்ற நெருங்கிய நண்பர்களைப் போடலாமா, உறவினர்களைப் போடலாமா என்று தான் கருதுவார். பணம் ஏதாவது கிடைக்குமானால் குடும்பத்திற்கு ஒதுக்கிக் கொண்டு மீதியில்தான் மற்றவர்களுக்கு செலவழிக்கலாம் என்று கருதுவார்.
அதே நேரத்தில் நானும் அவரோடு 25 வருடங்களாகப் பழகியிருந்தேன். காரில் ஏறி உட்கார்ந்தாலோ, கடை வீதியில் இறங்கினாலோ, யாராவது பிச்சைக்காரர்கள் வந்து காசு கேட்டாலோ நாலணா போடலாம் என்கின்ற எண்ணம் ஒருபோதும் இவருக்கு வந்ததில்லை. அப்படிப் போடுவது பயனற்றது என்றும் அவர் கருதுவார்.
ஆனால் எம்.ஜி.ஆர். அவர்களைப் பொறுத்துவரைக்கும் 10,000 கொடுக்க வேண்டிய இடத்தில் 20,000-மாவது கொடுத்து நல்ல பேர் வாங்க வேண்டும் என்று அவர் கருதுவார்.
இரண்டு பேருக்கு இடையிலே பேதம் இது என்றால் கருணாநிதியினுடைய சுபாவம் இது.
பணத்தையும் பதவியையும் பெரிதாக நினைத்த காரணத்தினால்தான், அந்த பலஹீனத்தினால்தான், மிகப் பெரிய அவருடைய பலங்களெல்லாம் அடிப்பட்டுப்போய் கடையில் அவருக்குப் பல சிரமங்கள் தோன்றின என்று நான் கருதுகிறேன்.
ஆதாரம் -
கவிஞர் கண்ணதாசன் (நான் பார்த்த அரசியல்)