பக்கங்கள்

திருக்குறள்

சனி, ஏப்ரல் 07, 2012

மல்லையா ரகசியங்கள் !!


மல்லையாவின் மலைக்கவைக்கும் ரகசியங்கள்… – விஜய் மல்லையா!

ஒரு கையில் ஏந்திய மதுக்கோப்பை, மறுகையில் வளைத்த தாரகை என்று உலா வரும் சாராய சாம்ராஜ்ய சக்கரவர்த்தி.

ஆனால் மல்லையாவின் `தயாரிப்புகளை’ ருசித்தவர்களைப் போல இவரது கிங் பிஷர் விமானப் போக்குவரத்து நிறுவனமும் `தள்ளாடுவது’ தான் சோகம்.

இருந்தபோதும் தனக்கே உரிய `தில்’லை விடாத விஜய் மல்லையா பற்றிய விவரங்கள் இங்கே…

விஜய் மல்லையாவின் தந்தை விட்டல், 20 தொழில்கள் அடங்கிய பிசினஸ் ராஜாங்கத்தை விட்டு விட்டு 1983-ல் மறைந்தபோது மல்லை யாவுக்கு இளம் வயது. ஆனாலும் 10 கோடி டாலர்களாக இருந்த சொத்தை, 400 கோடி டாலர்களாக உயர்த்தினார்.

தற்போது 56 வயதாகும் மல்லையா, தனது குழந்தைப் பருவத்தை கொல்கத்தாவில் கழித்தார். அங்கு லா மார்ட்டினீயர் மற்றும் செயின்ட் சேவியர்ஸ் கல்லூரிகளில் படித்தார்.

இரு மனைவிகள். ஒரு மகன் சித்தார்த் (முதல் மனைவி சமீராவுக்குப் பிறந்தவர்), இரு மகள்கள்- லீயானா, தான்யா (இரண்டாவது மனைவி ரேகாவுக்குப் பிறந்தவர்கள்).

மல்லையாவின் `யூ.பி. குரூப்’, அளவைப் பொறுத்தவரை உலகிலேயே இரண்டாவது பெரிய மதுபான நிறுவனம். மதுபானப் பிரியர்களின் சில பிரியமான பிராண்ட்கள் இந்நிறுவன தயாரிப்பே. மல்லையாவின் கீழ், மேலும் பல முக்கியமான மதுபான நிறுவனங்கள் வாங்கி இதில் இணைக்கப்பட்டன. தற்போது `யூ.பி.’ குரூப்பின் ஆண்டு விற்பனை 20 ஆயிரம் கோடி!

2003-ம் ஆண்டில் `கிங்பிஷர் ஏர்லைன்ஸை’ தொடங்கினார் மல்லையா. `சிக்கல்’ தொடங்குவதற்கு முன்னால் இந்தியாவில் இரண்டாவது பெரிய விமானப் போக்குவரத்து நிறுவனமாக விளங்கிய இதில் 64 விமானங்கள் இருந்தன. கடந்த 2007-ல், குறைந்த கட்டண விமான சேவை நிறுவன மான `ஏர் டெக்கானை’ வாங்கிய மல்லையா, அதை `கிங்பிஷர் ரெட்’ என்று பெயர் மாற்றினார். ஆனால் அது கடந்த 2011-ம் ஆண்டு மூடுவிழா கண்டுவிட்டது.

பணம் குவிக்கும் விளையாட்டில் மட்டுமல்ல, நிஜ விளையாட்டிலும் மல்லையாவுக்கு ஆர்வம் அதிகம். கடந்த 2007-ம் ஆண்டில் இவரும், ஓர் ஆலந்து குடும்பமும் இணைந்து, `ஸ்பைக்கர் பார்முலா ஒன் கார் பந்தய டீமை’ 88 மில்லியன் யூரோக்களுக்கு வாங்கினர். அதற்கு `போர்ஸ் இண்டியா’ என்று புதுநாமம் சூட்டினார் மல்லையா.

கொல்கத்தாவைச் சேர்ந்த கால்பந்து கிளப்களான மோகன் பகான் மற்றும் ஈஸ்ட் பெங்காலில் முதலீடு செய்திருக்கிறார் மல்லையா.

கவர்ச்சியும், பரபரப்புமாகத் தொடங்கப்பட்ட ஐ.பி.எல்.லில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 111.6 மில்லியன் டாலர்களுக்கு வாங்கி னார். கிரிக்கெட் உலகின் சூப்பர் ஸ்டார்கள் பலர் அடங்கிய இந்த அணி, கடந்த ஆண்டில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

மல்லையாவுக்கு உலகம் முழுவதும் 26 இடங்களில் சொத்துகள் இருக் கின்றன. அவற்றில், மொனாக்கோ, ஸ்காட்லாந்து, நியூயார்க், தென் ஆப்பிரிக்கா ஆகியவற்றில் உள்ள மாளிகைகளும், பெங்களூரில் உள்ள பரம்பரை வீடும் அடங்கும்.

மிகுந்த ஆன்மிக நம்பிக்கை கொண்டவர். `ராகு’ காலத்தில் பிசினஸ் பேசுவதில்லை. புதிய விமானம் ஒவ்வொன்றையும் திருப்பதியில் பூஜை போட்டபிறகுதான் பறக்க அனுமதிப்பார்.

விலையுயர்ந்த கார்கள், கலைப்படைப்புகள், அரிய பொருட்கள், மதுபானப் புட்டிகளின் `கலெக்ஷனை’ வைத்திருக்கிறார். கடந்த 2004-ம் ஆண்டு லண்டனில் நடந்த ஏலத்தில் திப்பு சுல்தானின் வாளை 1 லட்சத்து 75 ஆயிரம் பவுண்டுகள் கொடுத்து எடுத்தார். 2009-ல் நியூயார்க்கில் நடந்த ஏலத்தில் மகாத்மா காந்தியடிகளின் கடிதங்களை 1.8 மில்லியன் டாலர்களுக்கு வாங்கினார்.

மல்லையாவுக்குச் சொந்தமான `இண்டியன் எம்பரஸ்’ (இந்திய மகாராணி) என்ற 95 மீட்டர் நீளமுள்ள உல்லாசப் படகு, உலகிலேயே பெரிய தனிநபர் படகுகளில் ஒன்று. `கலிஸ்மா’ என்ற 48 மீட்டர் நீள மோட்டார் படகும் மல்லையாவுக்குச் சொந்தம்.

குதிரைப் பந்தயத்தில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். கர்நாடகத்தில் 400 ஏக்கரில் பரந்திருக்கும் `குனிகால் குதிரைப் பண்ணை’க்கு உரிமையாளராக இருக்கிறார்.

மேற்கண்ட செய்திகளைப் பார்க்கும் போது நாம் மலைக்காமல் வேறு என்ன செய்யமுடியும்? மயக்க வந்து கிறு கிறு என்று தலை சுற்றி விழாமல் இருந்தால் சரி..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக