பக்கங்கள்

திருக்குறள்

செவ்வாய், ஏப்ரல் 03, 2012

சரி, தவறு !!

தர்க்கம் என்பது இன்று நம்மிடையே பிரிக்கமுடியாத ஒன்றாக மாறிவிட்டது தன்னுடைய கொள்கையை நிலைநாட்ட அல்லது தன் வாதத்தை நிலைநிறுத்த உண்மையா? பொய்யா? என்றுகூட மனிதன் யோசிப்பதில்லை. வாதத்தில் வெல்லவேண்டும் என்பதில் மட்டும் குறிக்கோளாக இருப்பதால் உண்மை பொய்யை அவன் ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை என்பது தான் உண்மை. தர்க்கித்தல், வாதப்பிரதிவாதங்களில் ஈடுபடுதல் என்பன மனித இயல்புகளில் உள்ளதாகும். ஆனால் எடுத்ததற்கெல்லாம், எது விசயமானாலும் தர்க்கம் செய்யும் இயல்பு கொண்டவனாக ஒருவன், இருக்கலாகாது.
**
ஒரு பிரச்சினையை வைத்து தர்க்கம் செய்து பிரிவினையை உருவாக்குவதை விட்டும் விலகிக் கொள்ளும் முகமாக, ஒருவர் தான் சரியான கருத்தில் இருப்பினும் தன்னுடைய உரிமையையும் கூட விட்டுக் கொடுத்து பின் வாங்கும் மனப்பான்மை மிகவும் உயர்ந்த தகுதியும் தரமும் வாய்ந்ததாகும். உண்மையை நிலைநாட்ட அழகிய முறையில் விவாதம் செய்வதை அனுமதிக்கும் அதேவேளை, அவ்விவாதத்தின் மூலம் மற்றவர் மீது காழ்ப்புணர்வும், கர்வமும், அகந்தையும் ஏற்படாமலும் அதன் மூலம் சமூகத்தில் பிரச்சனை எழுந்து சமூகம் பிளவுபடாமல் இருக்கவும் வலியுறுத்துகின்றது. அந்நிலையில் உண்மை தன் பக்கம் இருப்பினும் எவர் அதிலிருந்து பின்மாறுகின்றாரோ அவருக்கு க வனத்தில் ஒரு நன்மதிப்பு எழுப்பப்படுகின்றது
*
*** நன்றி இஸ்லாமிய அறிஞர் ஹுஸைனம்மா :*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக