பக்கங்கள்

திருக்குறள்

ஞாயிறு, ஏப்ரல் 01, 2012

ஒப்பந்தத்தில் ரூ.500 கோடி சம்பாதித்த தெண்டுல்கர்




உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் சச்சின் தெண்டுல்கர். கிரிக்கெட்டின் பல்வேறு சாதனைகளுக்கு  சொந்தக்காரான அவர் சமீபத்தில் சர்வதேச போட்டியில் தனது 100-வது சதத்தை (டெஸ்ட் 51+ ஒருநாள்  போட்டி 49) அடித்து முத்திரை பதித்தார். 

100 சதம் அடித்த உலகின் முதல் வீரர் என்ற உலக சாதனையை அவர் படைத்தார். டெஸ்டில் அதிக ரன், அதிக சதம், ஒருநாள் போட்டியில் அதிக ரன், அதிக சதம் என்பது உள்பட பல சாதனைகளை அவர் புரிந்துள்ளார். கிரிக்கெட்டின் உச்சநிலையில் இருக்கும் தெண்டுல்கர் விளம்பரம் மூலமும் கோடிக் கணக்கில் பணம் சம்பாதிக்கிறார். 

அடிடாஸ், கோககோலா, பூஸ்ட் உள்பட 17 நிறுவனங்களில் அவர் ஒப்பந்தமாகி இருக்கிறார். தனது 22 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையில் தெண்டுல்கர் ரூ.500 கோடிக்கு மேல் சம்பாதித்து உள்ளதாக கூறப்படுகிறது.

தெண்டுல்கருக்கு ஒரு விளம்பரத்தின் சராசரி வருமானம்  ரூ.8 கோடியாகும். டோனிக்கு 9 முதல் ரூ.10 கோடி வரை கிடைக்கிறது என்றாலும் கிரிக்கெட் மூலம் அதிக பணம் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரர்களில் `நமபர் 1' இடத்தில் தெண்டுல்கர் தான் இருக்கிறார். 

தெண்டுல்கர் சமீபத்தில் தனது 100-வது சதம் அடித்தார். இந்த சதம் மூலம் மட்டுமே அவருக்கு ரூ.30 கோடி கிடைத்தது. ஹேமில்டன் பிளாண்ட் என்ற நிறுவனம் தெண்டுல்கரிடம் ஆட்டோ கிராபுக்காக இவ்வளவு தொகை கொடுத்தது. 100 சதம் அடித்ததையொட்டி பேட், ஜெர்சி, தொப்பி, குளோவ், ஹெல்மெட், பந்து ஆகியவற்றில் தெண்டுல்கரின் ஆட்டோகிராப் இருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக