பக்கங்கள்

திருக்குறள்

சனி, மார்ச் 31, 2012

விழி பிதுங்கும் நமது பிரதமர் மன்மோகன்சிங்.!

தொடர்ந்து நிகழுகிற குண்டு வெடிப்புகள், தினந்தோறும் ஏறும் விலைவாசிகள், மணிக்கணக்கில் வெளியாகும் ஊழல்கள், இவைகள் தான் சோனியா காங்கிரஸ் பிரதமர் மன்மோகன் சிங்கின் மத்திய அரசின் சாதனைகளாகும். இதுதவிர சீன ஊடுருவல், பாகிஸ்தானின் தீவிரவாத அச்சுறுத்தல், மிகச்சிறிய நாடான இலங்கை போன்ற அண்டை நாடுகள் கூட நம்மை மதிக்காமல் எதிரிகளுடன் கைகோர்த்து செயல்படுதல் ஆகியவை இந்தியத் திருநாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தல்களாகும். இவைகளையெல்லாம் தீர்க்கக் கூடிய வலுவில்லாத அரசாக  மன்மோகன்சிங்  அரசு உள்ளது.  

விழி பிதுங்கும் நமது பிரதமர் மன்மோகன்சிங்.! 

என்ன செய்வது என்று திக்கு தெரியாமல் விழி பிதுங்கிக் கொண்டிருக்கிறார் நமது பிரதமர் மன்மோகன்சிங்.  ஊழலை ஒழிப்போம் என்று கூறிக்கொண்டு ஊழலுக்கு துணை பொய்க்கொண்டிருக்கிறார் மன்மோகன்சிங். 2G ஊழலாகட்டும், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழலாகட்டும், வோட்டுக்க்காக பாராளுமன்ற உறுப்பினர்களை விலை பேசிய ஊழலாகட்டும், ஆதர்ஷ் ஊழலாகட்டும், இவைகள் அனைத்திலுமே பிரதமர் உட்பட காங்கிரஸ் தலைவர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். அதனால், தன் கைவசமுள்ள CBI யை கைகட்டி, வாய்பொத்தி பேசாமல் உட்கார வைத்திருந்தார்கள். பிறகு உச்சநீதிமனற தலையீட்டின் பிறகே வழக்குகள் CBI யால் விசாரிக்கப்பட்டு வருகின்றன. 2G போன்ற வழக்குகளை உச்ச நீதிமன்றமே நேரடியாக கண்காணிக்கிறது. CBI எந்த வழக்குகளையும் அதுவரை விசாரிக்கவில்லை என்பதற்கு முக்கிய காரணம் காங்கிரஸ் தலைவர்கள் ஊழலில் சம்பந்தப் பட்டிருப்பதுதான். 

எதிர்கட்சிகளை சாடி என்ன பயன்? 

உண்மையான நிலை இப்படியிருக்க நமது மண்புமிகு பிரதமர் எதிர்கட்சிகள் தனது அரசை கவிழ்த்து தேர்தலை முன்கூட்டியே நடத்த சதி திட்டம் தீட்டுகிறது எனக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த மனிதரை நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது. சுய உணர்வுள்ள மனிதராக மன்மோகன் சிங் இருக்கிறாரா? என்பதே யோசிக்கக் கூடிய ஒன்றாகும். இன்று பெரிதாக பரபரப்பாக பேசப்பட்டுவரும் 2G ஊழல் ஏதோ எதிர்கட்சிகள் முன் வைத்த ஊழலல்ல. அதுமட்டுமல்ல அனைத்து ஊழல்களுமே அரசு (CAG) இயந்திரங்களால் வெளி உலகிற்கு அம்பலப்படுத்தப் பட்டவையாகும். அது மட்டுமல்ல மன்மோகன் அமைச்சரவை சகா ராஜா, தான் எடுத்த முடிவுகளெல்லாம் நிதி அமைச்சர், மற்றும் பிரதமர் ஆகியோருக்கு தெரியும் என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்ல தற்போதைய நிதி அமைச்சர் பிரணாப் ஊழலில் சிதம்பரத்திற்கு பங்கு உண்டு என்று பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். ஆக குற்றச்சாட்டுகளெல்லாம் ஆட்சியாளர்களிடமிருந்து வருகிறது. அப்படியிருக்க,  காங்கிரசின் மன்மோகன் சிங்கின் கையிலாகாத தனத்திற்கு, எதிர்கட்சிகளை சாடி என்ன பயன்? 

நம்பிக்கையில்லா தீர்மானம்! 

இப்படியிருக்க கடந்த 2008ஆம் ஆண்டு நம்பிக்கையில்லா தீர்மாணத்தின் வாக்கெடுப்பு நடந்த போது, காங்கிரஸ் அரசு அமர்சிங் மூலமாக பா.ஜ.கா உறுப்பினர்களை விலை பேசியது Sting operation மூலம் பாஜகவினரால் அம்பலப்படுத்தப்பட்டது. மூன்று ஆண்டுகள் இது குறித்து விசாரிக்காமல் இருந்த CBI, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, விசாரிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. காங்கிரஸின் கைப்பாவையான CBI, காசு கொடுத்தவர்களை தண்டிக்காமல், அம்பலப்படுத்தியவர்களை சிறையில் தள்ளியுள்ளது. 
இதைவிட கேவலாமன செயல் வேறு ஏதும் இருக்க முடியாது. தொலைக்காட்சி பேட்டியில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிசேக் மனு சிங்க்வி, நீதிமனற நடவடிக்கையின் மூலம் பா.ஜ.க காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டது நிரூபணமாகியுள்ளது என்று பேசியுள்ளார்? எவ்வளவு அப்பட்டமான பொய்? மக்கள் மூடர்கள் என்று நினைத்துக் கொண்டுள்ளார்கள். 

ஊழல் செய்தவர்கள் வெளியே, ஊழலை அம்பலப்படுத்தியவர்கள் உள்ளே! 

அன்றைய சூழ்நிலையை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். காங்கிரஸ் அரசு மீது எதிர்கட்சிகளால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள காங்கிரஸ் கூட்டாளியான அமர்சிங் மூலம் பா.ஜ.க வினர் விலைப் பேசப் படுகிறார்கள். இது அறிந்த பாஜாகாவினர் Sting operation மூலம் அம்பலப்படுத்தி, அமர்சிங் கொடுத்த கோடிகளை பாராளுமனறத்தில் கொட்டப்படுகிறது. பின்னர் சபாநாயகர் இது குறித்து விசாரிக்க உத்தரவிடுகிறார். மூன்று ஆண்டுகள் ஆகியும் CBI விசாரிக்காததால், பொதுநல வழக்கு ஒன்றின் மூலம் உச்சநீதிமன்றம் CBI விசாரித்து எடுதத்த நடவடிக்கை குறித்த விபரம் கோருகிறது. பின்னர் CBI விசாரிக்கிறது. இதில் அமர்சிங், மற்றும் Sting operation மூலம் பாராளுமனறத்தில் ஊழலை அம்பலப்படுத்திய பாஜக உறுப்பினர்கள் இன்று சிறையிலடைக்கப்பட்டுள்ளார்கள். இந்த சிறை அடைப்பைத்தான் நீதிமனற நடவடிக்கையின் மூலம் பா.ஜ.க காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டது நிரூபணமாகியுள்ளது என்று பேசியுள்ளார். 
அதாவது இந்த செய்கையால் பலனடைந்தது காங்கிரஸ் கட்சியினர். பணம் கொடுத்தவர்களும் அவர்களே. ஆனால் ஊழல் செய்தவர்கள் வெளியே, ஊழலை அம்பலப்படுத்தியவர்கள் உள்ளே. காங்கிரஸ் ஆட்சியில் நியாய தர்மங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதற்கு வேறு என்ன ஆதாரம் வேண்டும்? 

காங்கிரசாருக்கு சில கேள்விகள்? 

காங்கிரஸ் தனது அரசாங்கத்தைக் காக்க லஞ்சம் கொடுத்தது உண்மை என வெளியிட்டுள்ள விக்கிலீக்ஸ் பற்றி மவுனம் ஏன்?
WikiLeaks confirms ‘cash for vote’ scam of 2008
NEW DELHI - The WikiLeaks India cables have revealed some more shocking information. The latest one is on the purchase of votes by the Congress before the crucial vote of confidence in Lok Sabha in theyear 2008. 
Five days before the UPA government faced a crucial vote of confidence on the Indo-U.S.nuclear deal in 2008, Nachiketa Kapur, a political aide to Congress leader Satish Sharma showeda U.S. Embassy employee “two chests containing cash” he said was part of a bigger fund of Rs. 50 crore to Rs. 60 crore that the party had assembled to purchase the support of MPs. He also claimed the four MPs belonging to Ajit Singh’s Rashtriya Lok Dal had already been paid Rs. 10 crore each to ensure they voted the right way on the floor of the Lok Sabha. 
In a cable, dated July 17, 2008, sent to the State Department (162458: secret), accessed by The Hindu through WikiLeaks, U.S. Charge d’Affaires Steven White wrote about a visit the Embassy’s Political Counselor paid to Satish Sharma, who is described as “a Congress Party MP in the Rajya Sabha and a close associate of former Prime Minister Rajiv Gandhi considered to be a very close family friend of Sonia Gandhi.” 
Mr. Steven White reveals, “Sharma’s political aide Nachiketa Kapur mentioned to an Embassy staff member in an aside on July 16 that Ajit Singh’s RLD had been paid Rupees 10 crore (about $2.5 million) for each of their four MPs to support the government. Kapur mentioned that money was not an issue at all, but the crucial thing was to ensure that those who took the money would vote for the government.”
However, Ajit Singh who didn’t vote for the UPA during the trust vote has slammed the expose.
(http://www.newzfirst.com/web/guest/full-story/-/asset_publisher/Qd8l/content/wikileaks-confirms-%E2%80%98cash-for-vote%E2%80%99-scam-of-2008?redirect=/web/guest/full%20story) 
அமர்சிங் காரில் கொண்டுவரப்பட்ட பணம் என உறுதி செய்துள்ள CBI அந்த பணம் எங்கிருந்து யாரால் கொடுக்கப்பட்டது என்பதை ஏன் கண்டு பிடிக்கவில்லை? 
பாஜாகவின் எதிரியான அமர்சிங் யாருடைய கூட்டாளி? 
பாஜாக எதிரியான அமர்சிங் எப்படி பாஜாகவோடு இணைந்து செயல் பட்டிருக்க முடியும்? 
வாதத்திற்கு பாஜக வினரே வேண்டுமென்றே தனது கட்சியினரை வைத்து இந்த நாடகத்தை நடத்தியிருந்தால் அதன் மூலம் எவ்வாறு காங்கிரஸ் அரசை கவிழ்க்க முடியும். பாஜாக எப்படியிருந்தாலும் காங்கிரசை எதிர்த்துத் தானே வோட்டு போடும்? 
பாஜாக நாடகம் என்றால் காங்கிரஸ் ஏன் மூன்று ஆண்டுகள் இது குறித்து விசாரிக்கவில்லை? மவுனம் சாதித்தது ஏன்? 
உண்மையான குற்றவாளிகள் ஏன் காங்கிரசால் காப்பாற்றப் படுகிறார்கள்? 

இந்த ஊழல் வழக்குகள் எல்லாம் என்னவாகும்? 

2G உட்பட உச்ச நீதிமன்றம் கண்காணிக்கப்படும் அனைத்து வழக்குகளும் காங்கிரஸ் நலனுக்கு எதிரான ஒன்று. அந்த வழக்குகளை விசாரிக்க CBIக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தாலும், CBI காங்கிரசின் கைக்கூலி என்பதை மறந்துவிடலாகாது. அனைத்து வழக்குகளை விசாரித்து குற்றம் புரிந்தவர்கள் தப்பும் வைகையில் நிச்சயம் காங்கிரசார் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்கும் படி CBI செயல்பாடுகள் இருக்கும்.  இவர்கள் விசாரனையை வைத்துத் தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூற முடியுமே தவிர உச்சநீதிமன்றம் நேரடியாக எந்த விசாரனையும் செய்ய முடியாது. உதாரணத்திற்கு ராஜா வழக்க்றிஞர் அடித்த பல்டி பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகி உள்ளது. 
ராஜா வழக்க்றிஞர் அடித்த பல்டி 
புதுடில்லி: 2 ஜி., ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக சிறப்பு கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தபோது சிறையில் இருக்கும் மாஜி அமைச்சர் ராஜாவின் வக்கீல் இன்று அந்தர்பல்டி அடித்தார். நேற்று சிதம்பரத்தை சாட்சியாக அழைத்து விசாரிக்க வேண்டும் என்று கூறினார். 24 மணி நேரத்தி்ல் சிதம்பரத்தை விசாரிக்க வேண்டாம் , விசாரிக்கும் பட்சத்தில் வழக்கு விசாரணை போக்கில் காலதாமதம் ஏற்படும் என தெரிவித்தார். எல்லாம் தெரிந்த சிதம்பரத்தை விசாரிக்க வேண்டும் அதற்காக அவரை குற்றவாளியாக சித்தரிக்கவில்லை என ராஜா வக்கீல் சுசீல்குமார் ‌நேற்று கோர்ட்டில் கூறியிருந்தார் என்பது குறி்ப்பிடத்தக்கது. சிதம்பரத்தை விசாரிக்கும் பட்சத்தில் சிறையில் இருக்கும் கைதிகளின் ஜாமின் தள்ளிப்போகும் என்ற காரணத்தினால் வக்கீல் இவ்வாறு பல்டி அடித்துள்ளார். சி.பி.ஐ.,யும் சிதம்பரத்தை விசாரிக்க முடியாது என்று பட்டவர்த்தமாக கோர்ட்டில் தெரிவித்து விட்டது. (http://www.dinamalar.com//News_Detail.asp?Id=321421&) 
ஆக இப்படி தனது அதிகாரத்தின் மூலம் காங்கிரஸ் CBI யை ஆட்டிப்படைத்து, தனது ஆட்களை தப்பிக்க வைத்து விடும். உச்சநீதிமன்றத்தை நம்ப வைக்க இப்போது நடக்கும் அனைத்தும் நாடகங்களே! காங்கிரசில் உள்ள செல்வாக்கு வாய்ந்த தலைவர்கள் ஊழலில் சம்பந்தப்பட்டிருப்பதால், நிச்சயமாக அவர்களை தப்புவிக்க சி பி ஐ உதவும். சத்தில்லாத வாதத்தை வைப்பதன் மூலம் உச்ச நீதிமன்றத்தை ஏமாற்றுவதோடு, தங்களது கூட்டணி தர்மப்படி ஊழல் கூட்டாளிகளையும் தப்புவிக்க இயலும். நடப்பது நாடகம். மறைமுக வாக்குறுதிகளினால் சிறையில் ஊழல் பேர்வழிகள் சிலகாலமே பொறுத்திருக்க வேண்டி இருக்கும்.  
நடப்பது நாடகம்……
நாட்டுமக்கள் சி.ஐ.பிஐயும் காங்கிரசையும் நம்புவார்களாக. நீதி கிடைக்கும் என்று!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக