பக்கங்கள்

திருக்குறள்

வியாழன், மார்ச் 15, 2012


நெப்போலியன் போனபர்டே வாழ்கை வரலாற்றை இப்படி சொல்லுகிறார் எமில் லுட்விக் (25 ஜனவரி 1881 –17 செப்டம்பர் 1948 )


நெப்போலியன் போனபர்டே((15 ஆகஸ்ட் 1769 – 5 மே 1821) தனது ஒரு வயதில் அன்னையிடம் தாய்பால் குடித்த கொண்டும் இருக்கும் வேளையில் அவரின் தந்தை நமது அழகிய "கோர்சிக்கா" தீவு பிரெஞ்சு நாட்டினர் கை பற்றி விட்டார்கள் தப்பி ஓடுங்கள் என்று கதறி கொண்டே ஓடி வருகிறார்....

நெப்போலியன், அவரின் இளம் பிராயத்தில் இப்படி சொல்லி கொண்டே வளர்ந்தான் .. தமது அழகிய குட்டி தீவை கைப்பற்றி நாசம் செய்த பிரெஞ்சு நாட்டினரை பார்த்து .., நீங்கள் எங்கள் எதிரிகள் உங்களை நான் வெல்வேன் ...வெல்வேன்..

பல யுத்த சாஸ்திரம் கற்று தந்த சாமானிய வீரன் , ஐரோப்பாவில் பல நாடுகளில் நடைமுறையில் இன்றும் இருக்கும் PUBLIC ADMINISTRATIVE SYSTEM வித்திட்டவன் , முப்பது ஐந்தாம் வயதில் பிரெஞ்சு அரசன் ஆகிறார் .அவர் ஆட்சி செய்த காலம் (18 May 1804 – 11 April 1814)..
***********
எனது ஜன்னல் வழியே அழைக்கிறேன் உங்களை இலங்கை பிரச்சனை @TN பார்வைக்கு :

School Days : பள்ளி காலங்கள் (1983~1988) :

நான் ராமகிருஷ்ண மிசன் பள்ளி படிக்கும் காலத்தில் 1982~1986 , இலங்கையில் நடந்து கொண்டு இருந்த வன்முறை சம்பவம் காரணமாக எராளமான தமிழர்கள் தாய் தமிழகத்துக்கு வந்து கொண்டு இருந்தார்தார்கள்.

இலங்கை பிரச்சனை @TN பற்றி எரிந்து கொண்டு இருந்த நேரம் ..அந்த காலத்தில் பிரபாகரன் தலைமையில் இலங்கை விடயம் இல்லை .. எப்போது பிரச்சனை தீவிரம் அடைகிறதோ , திமுக போராட்ட களத்தை தீவிர படுத்துகிறதோ அப்போது தமிழகத்தில் உள்ள அணைத்து பள்ளிகளும் ., கல்லூரிகளும் மூடப்பட்டு எம்ஜி யார் அரசாங்கத்தால் விடுமுறை அளிக்க படும் .. இப்படி வருடத்தில் சராசரியாக அம்பது நாட்கள் விடுமுறை தான் !!

திமுக தலைவர் கருணாநிதி இலங்கை தமிழர் ஆதரவாக இந்திய அரசியல் சாசனம் சட்டம் எரித்து விட்ட காரணமாக எம்ஜி யார் அரசாங்கம் அவரை சிறையில் அடைத்தது .அன்றைய எதிர்க்கட்சி தலைவருக்கு தண்டனையும் உறுதி செய்யப்பட்டு கருணாநிதி அவர்களுக்கு சிறைகைதி உடையும் போட்டு பார்த்த விஷயம் அப்போது மிகவும் சர்ச்சையாகி பேசப்பட்டது!

IPKF days (1986 and 1990 )
எம்ஜியார் இங்கு ஆட்சி செய்த காலத்தில் பிரபாகரனை தில்லியில் ராஜீவ் சர்க்கார் முலம் கிட்டதிட்ட கைதியாக வைத்து இந்திய இலங்கை அமைதி ஒப்பந்தம் செய்யபடுகிறது . கோபம் அடைந்த பிரபாகரன் இந்திய மண்ணில் இனி மேல கால் வைக்க மாட்டேன் என்று சொல்லிய பின்னர் ராஜீவ் ஆட்சில் இந்திய ராணுவம் இலங்கை அனுப்ப படுகிறது .

FACT : The IPKF suffered around 1,200 killed in action and several thousand wounded. The LTTE casualties assumed approximately 8000-11000 were killed and several thousand were injured.

அமைதிக்காக சென்ற இந்திய ராணுவம் பல ரத்தங்களை , வடுக்களை உருவாக்கிய பின்னர் பின்வாங்க படுகிறது., இதற்கு பின்னால் அன்றே விபி சிங் மத்திய சர்காரில் (2 December 1989 – 10 November 1990) அங்கம் வகித்த திமுக என்றும் ஊடகங்கள் எழுதின!!

இந்திய ராணுவம் திரும்பி வருகிறது ., இந்திய அரசு சட்டப்படி மாநில முதல்வர் இந்திய ராணுவத்தை வரவேற்க வேண்டும் . ஆனால் மாநில முதல்வர் மு .கருணாநிதி ராணுவத்தை வரவேற்க மறுத்து Indian Law Protocol மீறுகிறார். பெரிய சர்ச்சை அவரை சுற்றி சுழலுகிறது ..

அப்போதைய ஜனதா கட்சி எம்பி சுப்பிரமணி சாமீ , ராஜீவ் காந்தி , மற்றும் செல்வி ஜெயலலிதா அவர்கள் திமுக அரசை இதன் காரணமாக கலைக்க வேண்டும் என்று கோருகிறார்கள் . இதனை முதல்வரிடம் நிருபர்கள் கேட்கும் போது யார் அந்த சுப்ரமணிய சாமி பதில் கேள்வி என்று கேட்டு வைத்தார் !!

அரசியல் காலம்சுழல்கிறது .வெறும் 54 எம்பியை வைத்து ராஜீவ் காந்தி தலைவர் காங்கிரஸ் கட்சி தயவுடன் ஆட்சி அமைக்கும் சந்திரசேகர் பிரதம மந்திரி காலத்தில் , (1990–1991) சுப்ரமணிய சாமி , பிரதமற்கு அடுத்த நிலையில் மிகவும் முக்கிய அமைச்சர் ஆகுகிறார்.

இங்கு ஆட்சி செய்த திமுக , LTTE நடத்திய பத்மநாப படுகொலை காரணம் காட்டி , சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் , தமிழக திமுக அரசின் இலங்கை தமிழர் அதரவு நிலை , இந்திய இறையாண்மை அச்சமுட்டுகிறது என்ற காரணம் காட்டி , அன்றே தமிழக ஆளுனர் ஒப்புதல் இல்லாமலே இரண்டு வருட திமுக ஆட்சியை டிஸ்மிஸ் செய்தது .

அன்றைய முதல்வர் மு.கருணாநிதி , ராஜீவ் அரசாங்கம் அனுப்பிய IPKF இந்திய ராணுவத்தை வரவேற்க மறுத்த விஷயம் ஒரு முக்கிய ஆவணமாக இந்த கலைப்பிற்கு காரணமாக காட்டப்பட்டது ..அப்போது சுப்பிரமணி சாமி "பெரும் சிரிப்புடன்" பேட்டியில் சொன்னார் "இன்று என்னை பற்றி கருணாநிதிக்கு தெரிந்து இருக்கும் "

பெருவாரியான ஊடங்களும் தமிழ் மாநில அரசு கலைப்பை கண்டித்து,சட்ட மீறலை கடுமையாக எதிர்த்து தலையங்கம் எழுதியது . மு .கருணாநிதி தலையை வெட்டி வெள்ளி தாம்பளத்தில் வைத்து அன்றைய சந்திரசேகர் பிரதம மந்திரி ராஜிவிடம் கொடுக்கும் Cartoon கட்சியை வெளியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் (ஆங்கில எடு ) கிளப்பிய சர்ச்சை இன்னும் நினைவில்!!

நன்றாக நோக்குங்கள்!!

திமுகவை அரசாங்கத்தை டிஸ்மிஸ் செய்த பின்னர் அலெக்சாண்டர் தலைமையில் ஆளுனர் ஆட்சி நடைபெறும் காலத்தில் மே 1991 ராஜீவ் காந்தி கொல்லபடுகிறார் ..

சுப்ரமணிய சாமி (1990–1991) ,மிகவும் மிக மிகமுக்கிய அமைச்சர் காலத்தில் , அந்த ஆட்சி , ராஜீவ் காந்தியால் கவிழ்க்க பட்டு பின்னர் காபந்து சர்க்கார் (Care taker) அரசாக சந்திரசேகர் அரசு நடக்கும் காலத்தில் இந்த படுகொலை நிகழ்த்த படுகிறது ..பதவி போன கோபம் சுப்ரமணிய சாமிக்கு இருக்க வேண்டிய காரணத்தையும் இங்கு கவனத்தில் கொள்க ..

எந்த சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று டிஸ்மிஸ் செய்ய பட்டதோ அந்த காலத்தில் ராஜீவ் மரணம் நடக்கவே இல்லை !


செல்வி ஜெயலலிதா தலைமையில் உள்ள அணி பிரச்சாரம் இன்றி 14,738,042 வாக்குகளை பெற்று (59.8 % ), 225 எம்எல்ஏ பெற்று , மிக பெரிய வெற்றி பெறுகிறது .

@ 1991 திமுக அதன் சரித்திரத்திலே 5,535,668 வாக்குகளை மட்டுமே பெற்று (22.5%) , இரண்டு எம்எல்ஏ மட்டும் கிடக்க பெற்று மிக பெரிய தோல்வி அடைகிறது .

இலங்கை பிரச்சனை @TN (1991~1996) :
திமுகவிற்கு கிடைத்த HIGH VOLTAGE SHOCK என்றும் சொல்லலாம் ., எட்டு வருடம் முதல்வராய் இருந்த தமக்கு சிறை கைதி உடை கொடுத்த உணர்வு பெற்றும் ., இந்திய ராணுவம் அராஜகத்தை எதிர்க்க Chief Minster Protol மீறி வரவேற்பை கொடுக்க மறுத்த தமக்கு ., இரண்டு ஆண்டு ஆட்சி கலைக்க பட்டதுடன் நில்லாமல் ,மோசமான தோல்விக்கு திமுகவை தள்ளியே இலங்கை பிரச்சனை @TN விஷயத்தில் மு. கருணாநிதி அவர்களை சொல்ல வைத்தது "நான் இனி அரசியல் பேச போவதில்லை "


சொன்னபடியே அவர் அரசியல் பேசாமல் ஒதுங்கி இருந்த அந்த மூன்று ஆண்டு காலம் .
இந்த காலகட்டத்தில் Export Executive ஆக பணி புரிந்த காலத்தில் , எனது அலுவலகம் கொடுத்த பைக்கில் அவரின் கோபாலபுரம் வீடு வழியாக அலுவலகம் செல்ல நேரிடும் அந்த "லொடலொட வென்று "சத்தத்துடன் ஓடும் மின்விசிறி கிழே , எந்த பாதுகாப்பும் அற்ற வீட்டின் வாசல் வழியேஅவரை பலமுறை கண்டுள்ளேன் ..

@ 1994 ரோட்டில் நடந்து சென்ற எனக்கு ஒரு அதிர்ச்சி காத்து இருந்தது ., அது என்னவென்றால் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக