பக்கங்கள்

திருக்குறள்

புதன், மார்ச் 28, 2012

புற்றுநோய் ஆய்வில் அதிர்ச்சி


தி லான்செட் இதழில் வெளியான ஆய்வறிக்கையின் படி, இந்தியாவில் 2010ம் ஆண்டு புற்றுநோய் பாதித்து 5,56,400 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 3,95,000 பேர் 30 முதல் 69 வயதுக்குட்பட்டவர்கள்தான். இவர்களில் 2,00,000 பேர் ஆண்கள், 1,95,000 பேர் பெண்கள் ஆவர்.
 ஆண்களில் புற்றுநோய் தாக்கி உயிரிழந்தவர்களில் 23 சதவீதத்தினர் வாய்ப் புற்றுநோய் ஏற்பட்டும், 12 சதவீதத்தினர் வயிற்றுப் புற்றுநோயாலும், 11 விழுக்காட்டினர் நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்டும் உயிரிழந்துள்ளனர்.
பெண்களில், கழுத்துத் தொடர்பான புற்றுநோய் தாக்கி 17 சதவீதத்தினரும், மார்பகப் புற்றுநோய் தாக்கி 10 சதவீதத்தினரும் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 42 சதவீத ஆண்களும், 18 சதவீத பெண்களும் புகைப்பிடிப்பது மற்றும் புகையிலைப் பயன்படுத்தியதால் வரும் புற்றுநோய் தாக்கி உயிரிழந்துள்ளனர். மேலும் இவர்களில் பெரும்பாலானவர்கள் நடுத்தர வயதுடையவர்கள்.-
நன்றி: தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக