பக்கங்கள்

திருக்குறள்

செவ்வாய், மார்ச் 13, 2012

மானம் கெட்ட தமிழனும்! மானம் உள்ள பீகாரிகளும்!





March 13: பீகார் மாநிலம், அவுரங்காபாத் அருகில் உள்ள நாபி என்ற இடத்தில் பீகார் மாநில அரசு 1800 மெகாவாட் உற்பத்தி திரன் கொண்ட அனல் மின்நிலையம் அமைத்து வருகிறது.

நாபியில் உள்ள பொது மக்களும் இந்த இடத்தில், அனல் மின்நிலையம் அமைக்க வேண்டாம் என்று போராடி வருகிறார்கள். (கவனிக்க வேண்டியது கூடங்குளம் அணு மின்நிலையம்  நாபி அனல் மின்நிலையம்).
 
இந்த நிலையில், தமிழகத்தில் திருச்சி மற்றும் இராணிப்பேட்டை ஆகிய இரண்டு இடங்களில் உள்ள பெல் நிறுவனத்திலிருந்து பீகார் மாநிலத்தில் அமையும் அந்த அனல் மின் நிலையத்துக்கு தேவையான தளவாட பொருட்களை ஏற்றிக்கொண்டு 60 லாரிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் புறப்பட்டது.

அவுரங்காபாத் அருகில் உள்ள நாபியை லாரிகள் நெருங்கிய போது போராட்டம் நடத்திய பீகார் மாநில பொதுமக்கள் தமிழக லாரிகளையும், அதிலுள்ள பொருட்களையும் இங்கு இறக்க கூடாது என்று சிறை பிடித்து வைத்துக் கொண்டனர். இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கூறியதாவது லாரி டிரைவர், கிளீனர்களுக்கு சரியான சாப்பாட்டு வசதியில்லாமல் கடந்த 57 நாட்களாக மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.  உடனே மத்திய, மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிந்திக்கவும்: மானம்கெட்ட கருணாநிதி, போலி கம்யூனிஸ்ட்கள், தீவிரவாத இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, பார்பன ஹிந்துத்துவா கூட்டமான தினமலர், சோ, சுபிரமனிய சாமி வகைறாக்கள் ஏன் இந்த செய்திகளை பற்றி பேசவில்லை. ஒரு மாநிலத்தின் 60  லாரிகள் 57 நாட்களாக சிறை வைக்கப்பட்டுள்ளது இதை பற்றி ஏன் யாரும் வாய்திறக்க வில்லை. ஏன் இந்த மவுனம்? அதை பற்றி பேசினால் கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறக்க வேண்டும் என்று சொல்லும் தங்களது மக்கள் விரோத முகமூடி களைந்து விடும் என்கிற பயமா.

பீகார் நாபி மக்கள் மானம்கெட்ட தமிழர்களுக்கு ஒரு முன்னோடியாக திகழ்கிறார்கள் என்று சொன்னால் மிகையாகாது. தமிழக மக்களை போன்ற ஒரு மானம் ஈனம் இல்லாத ஜென்மங்களை உலகில் வேறு எந்த இனத்திலும் பார்க்க முடியாது. தனது உறவுகள் ஈழத்திலே கொல்லப்படும் போதும், தமிழக மீனவர்கள் கொல்லப்படும்போதும், வேடிக்கைபார்த்த கூட்டம் இன்று தனக்கு மின்சாரம் வேண்டும் என்பதற்காக கூடங்குளம் மக்களை பலியாக கொடுக்க ஆயிரம் உப்பு, சப்பு இல்லாத காரணங்களை சொல்லி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

பீகார் மக்கள் எதிர்ப்பது அணு உலையை அல்ல அனல் மின்நிலையத்தைதான் என்பதை இங்கே கவனிக்க வேண்டும். தங்கள் பகுதியின் இயற்க்கை வளங்களை, சுகாதாரத்தை எதிர்கால சந்ததிகளின் வாழ்க்கையை கவனத்தில் கொண்டு அந்த மக்கள் தொலைநோக்கு சிந்தனையோடு இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள். தமிழர்கள் இனியாவது திருந்துவார்களா? கூடங்குளம் அணு உலைக்கு எதிராக மொத்த தமிழகமும் கொதித்தெலுமா. இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியாவை வாக்களிக்கும்படி செய்ய தமிழர்கள் குரல் கொடுப்பார்களா? இருப்பாய் தமிழாய் நெருப்பாய். ----நன்றி மலர்விழி தமிழ்மணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக