பக்கங்கள்

திருக்குறள்

செவ்வாய், மார்ச் 27, 2012

ஜெனிவா தீர்மானத்தில் இலங்கைக்கு ஆதரவாக செயல்பட்ட நாடுகளின் உள்நோக்கம்.






இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமைப்பால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு அண்மையில் ஜெனீவா நகரில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் பதினைந்து நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். எதற்காக அவை இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தன என்பது பற்றிய சிறு கண்ணோட்டம்.

1 ) கொங்கோ: மத்திய ஆபிரிக்காவிலுள்ள இரண்டாவது மிக பெரிய நாடு.அண்மையில் இந்நாட்டிலும் இலங்கைக்கு எதிரான தீர்மானம் போல் ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.எனவே தன் நாட்டின் மீதான விமர்சனத்தை தவிர்பதற்காகவே இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது.

2 ) மூரித்தானியா: வடமேற்கு ஆபிரிக்காவிலுள்ள இஸ்லாமிய நாடு. அந்நாட்டின் சொந்த வரலாற்றிலே மனித உரிமை மீறல்கள் தொடர்பான பல சம்பவங்கள் உண்டு.எனவே ஒருவேளை இலங்கைக்கு எதிராக வாக்களித்தால் எங்கே தம் நாட்டின் மீதும் இவ்வாறான தீர்மானங்கள் கொண்டு வரக்கூடும் என்ற அச்சத்தால் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது.

3 ) உகாண்டா: கிழக்கு ஆபிரிக்காவிலுள்ள நாடுகளில் ஓன்று.சீன நாட்டின் வழுவான ஆதரவு கொண்ட நாடு. இந்நாட்டின் வணிகத்தில் குஜராத்திகளே அதிக ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.

4 ) வங்காளதேசம்: தெற்காசிய நாடுகளில் ஓன்று.தற்போதுள்ள அவாமி லீக் இந்திய மரபு சார்ந்த ஒரு அமைப்பாகவுள்ளது.அவர்களும் இதே மாதிரியான பாகிஸ்தானியர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

5 ) சீனா : ஆசிய நாடுகளில் ஓன்று. இலங்கைக்கு வழுவான ஆதரவு நாடு.இலங்கையில் பல இலட்சம் அப்பாவித் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டமைக்கு இந்நாட்டின் உதவியே மிக முக்கிய பங்கு வகித்திருந்தது.இந்தியாவை குறிவைப்பதற்கு அவர்களுக்கு தேவைப்படுவது ஹம்பாந்தோட்டை மற்றும் கச்சைதீவு.

6 ) இந்தோனேசியா: தென் கிழக்காசிய நாடுகளில் ஓன்று.ஏற்கனவே கிழக்கு திமோர் பிரிந்து சென்றமையால் பாதிக்கப்படிருந்தது, மேலும் இவ்வாறான ஒரு பிரிவினை ஏற்படக்கூடாது என்பதாலேயே இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது இந்தோனேசியா.

7 ): குவைத்: மத்திய கிழக்கு நாடுகளில் ஓன்று. இலங்கை இஸ்லாமிய சமூகத்தின் வழுவான ஒரு கூடமாக உள்ளது.அத்துடன் மலையாள சமூகத்தினர் அதிகம் வசிக்கும் மத்திய கிழக்கு நாடுகளில் இதுவும் ஓன்று என்பது குறிப்பிடத்தக்கது.

8 ) மாலைதீவு: இந்து சமுத்திரத்தில் இலங்கைக்கு அருகிலுள்ள ஒரு தீவு.இலங்கைக்கு சார்பான ஒரு நாடு அத்துடன் அங்கு பேசப்படும் மொழி சிங்களத்துக்கு இணையாக உள்ளது.அண்மையில் சீனாவின் பொறியில் சிக்கியுள்ளது மாலைதீவு.

9 ) பிலிப்பைன்ஸ் : தென் கிழக்காசியாவிலுள்ள ஒரு நாடு.இந்நாட்டிலும் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிராக பல ஒடுக்கு முறைகள் கையாளப்பட்டிருந்தது.அதனால் எங்கே தங்களுக்கும் இவ்வாறான தீர்மானம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது.

10 ) கட்டார்: மத்திய கிழக்கு நாடுகளில் ஓன்று.இலங்கை இஸ்லாமிய சமூகத்தின் வழுவான ஒரு கூடமாக உள்ளது.அத்துடன் மலையாள சமூகத்தினர் அதிகம் வசிக்கும் மத்திய கிழக்கு நாடுகளில் இதுவும் ஓன்று என்பது குறிப்பிடத்தக்கது.

11 ) சவூதி அரேபியா: மத்திய கிழக்கு நாடுகளில் ஓன்று.இலங்கை இஸ்லாமிய சமூகத்தின் வழுவான ஒரு கூடமாக உள்ளது.அத்துடன் மலையாள சமூகத்தினர் அதிகம் வசிக்கும் மத்திய கிழக்கு நாடுகளில் இதுவும் ஓன்று என்பது குறிப்பிடத்தக்கது.அத்துடன் அமெரிக்க கொள்கைக்கு எதிரான நாடு.

12 ) தாய்லாந்து: தென் கிழக்கு ஆசியாவிலுள்ள நாடுகளில் ஓன்று.பௌத்த மதத்தின் கீழ் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது.

13 ) கியூபா: கரீபியன் கடலிலுள்ள ஒரு தீவு.இவர்களுக்கு சுயமாக சிந்திக்கும் அறிவு எள்ளளவும் இல்லை. காரணம் இவர்கள் அமெரிக்க கொள்கைகளை கடுமையாக எதிர்பவர்கள். அமேரிக்கா எந்த தீர்மானம் கொண்டு வந்தாலும் அதை எதிர்ப்பதே இவர்கள் வேலை.

14 ) எக்குவடோர்: தென் அமெரிக்காவின் வடமேற்கு முனையில் அமைத்துள்ள நாடு.இவர்கள் கியூபா நாட்டோடு மிக தீவிர தொடர்புடையவர்கள்.அத்துடன் கியூபா நாட்டின் கொள்கைகளையே இவர்களும் பின்பற்றுகிறார்கள்.அமெரிக்க எதிப்பாளர்கள்.

15 ) ரஷ்யா: ஆசிய நாடுகளில் ஓன்று. இந்நாட்டிலும் இலங்கையில் உண்டானதுபோல் பல மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடந்ததுண்டு.அத்துடன் இலங்கையில் அப்பாவி தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டமைக்கு இவர்கள் உதவியும் குறிப்பிடத்தக்க அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி :அலை செய்திகள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக