பக்கங்கள்

திருக்குறள்

செவ்வாய், மார்ச் 20, 2012

இந்தியா வல்லரசாம் !!!!!!!!!!!!!!


WE, THE PEOPLE OF INDIAhaving solemnly resolved to constitute India into a SOVEREIGN SOCIALIST SECULAR DEMOCRATIC REPUBLIC and to secure to all its citizens. 
மேலே படத்தில் இருக்கும் பெண்மணி வல்லரசு (அல்லது) developing country எனும் வேற்றுகிரகத்தை சேர்ந்தவர். இந்த வேற்றுக்கிரகவாசிகளை சாதாரண மனித உருவத்தில் தேனி - மதுரை முதற்கொண்டு ரயில்வே நிலையங்கள் வரை அநேகம்பேர் பார்த்திருப்போம். ஒருமுறை இதுபோன்றதொரு வேற்றுகிரகவாசியை சந்திக்க நேர்ந்தது. அவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது, மிகுந்த ஆச்சரியகரமான ஒரு விஷயம் தெரிய வந்தது. அந்த கிரகத்திலும் ஜாதி என்று அமைப்பு - ஒரு காலத்தில் நம் நாட்டில் இருந்ததே, அது போல இருக்கிறதாம். இந்த பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் 98% ஒரே ஜாதி தானாம். ஆஸ்துமா - காசநோய் - சர்மநோய்கள்(இன்னும் என்னென்னவோ நோய்கள் எல்லாம் சொன்னார்கள்)  எல்லாவற்றையும் விட கடுமையான மன உளைச்சல் - சமூக தீண்டாமை போன்றைவகள் எல்லாம் இருந்தும் இந்த வேலைதான் செய்வோம் என்று பிடிவாதமாக இருப்பதாக சொன்னார்கள். அதில் 30 - 40% வரை தங்களது வாரிசுகளையும் இந்த தெய்வ செயலுக்கே நேர்ந்து விட்டிருப்பதாய் சொன்னார்கள். 
இருந்தாலும் எனக்கு மனசு கேக்கவில்லை. ஏன் உங்கள் அரசாங்கம் பல நடவடிக்ககைள் எடுக்கிறதே. உங்களுக்கு உதவுவதற்கென்றே நிறைய திட்டங்கள் வகுத்துள்ளதே, அதெல்லாம் உங்களுக்கு தெரியாதா என்று கேட்க, அப்படியா என்று பதிலுக்கு அவர் என்னை கேட்கிறார். உங்க நாடு மாதிரி இல்ல தம்பி, இங்க ஜாதி ரொம்ப பாப்பாங்க. அதுவும் இந்த வேல செஞ்சவங்கனு தெரிஞ்சா வேற வேலையும் தர மாட்டேங்குறாங்க.  வேற வேல கெடைக்காட்டி என்ன பண்ண, மறுபடியும் இதுக்குதான் போகணும். ஆனா இப்ப கொஞ்சம் நெலம பராவாயில்ல. நிறைய பேர் வேற பக்கம் பொழப்பு தேடி போக ஆரம்பிச்சுட்டாங்க. 
இன்னொரு விஷயமும் சொன்னாரு. படிக்க பள்ளிகூடத்துக்கு போகுற அவுங்க பிள்ளைகள விட்டு ஆசிரியர்களே டாய்லெட்ட கழுவச் சொல்றாங்களாம். யப்பா....என்னவொரு கொடூர கிரகம் அது. நம்ம நாடு சொர்க்கமங்க. நல்லவேல, நம்மநாடு அந்த கிரகம் மாதிரி இல்ல. பயங்கர வசதியோட - அணுவுலை வெச்சு - நுக்ளியர் பார்க்லாம் கொண்டு வரப்போற பயங்கர வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும் நாடாக இருப்பதால் இந்த கீழ்த்தரமான - சக மனிதனை நடத்தும் அசிங்கம் எல்லாம் இங்க இல்ல. எத்துனை குடுத்து வைத்தவர்கள் நாம்.
During the partition of India and Pakistan in 1947, migration to India was allowed except for the manual scavengers, because if they were allowed to leave, then who would do their job? Government of India was concerned about Hindus residing in Pakistan but not them. The author of the Indian Constitution Dr. Ambedkar expressed his deep concern about this unfortunate community in Pakistan by writing a letter to the then Prime Minister Jawahar Lal Nehru. He said that the Hindu scavenging employees in Pakistan were being forced to do the degrading work warranting the intervention of the government of India. Yet, even after so many years of Independence the practice continues. It also exists in Bangladesh, Sri Lanka, Nepal and Pakistan but in different forms. In all the countries it is based on caste hierarchy.
மேல இருக்கும் தகவலகளை இந்த லிங்க்ல இருந்து எடுத்தது. கண்டிப்பா அனைவரும் படிக்க வேண்டுகிறேன். நா சொல்லியிருக்குறது நூத்துல பத்து சதவிகிதம் தான். மதுரையில் எவிடன்ஸ் அமைப்பினர் - கதிர் - கூட இதுபற்றி நிறைய பத்திரிக்கைகளில் எழுதியது நண்பர்களுக்கு நினைவிருக்கலாம். இன்னொரு முக்கிய விஷயம், இந்த புள்ளி விவரங்கள் அரசாங்கமே கொடுத்தது. அரசாங்க புள்ளி விவரங்கள் எப்படி இருக்கும்னு நமக்கு தெரியும். அப்ப, உண்மை நிலவரம் எப்படி இருக்குமோ ?

மேலும் அந்த கிரகத்த பத்தி நா தேடி எடுத்த புள்ளி விவரங்கள பாருங்க.
  • 65% மக்களுக்கு டாய்லெட் வசதி இல்லை, இருங்க இது வெறும் ஆரம்பம்தான். கொஞ்சம் பின்னாடி வரும் ஷாக்கிங்கான பாய்ன்ட்கள ஊன்றி படிங்க.

  • பிரசவத்தின் போதும் பிரசுவித்த பிறகு 42 நாட்களுக்கு பெண்கள் இறப்பு விகிதம்(Maternal mortality rate) - 8 நிமிசத்துக்கு ஒரு பெண் இங்க இறக்க நேரிடுகிறது (பங்களாதேஷ் - ஸ்ரீலங்கா கூட நமக்கு முன்னாடி தான். Again, இந்த இறப்பு விகிதம் லோயர் க்ளாஸ்ல தான் மிக அதிகம். 
           Source:

          Source:
  • Human Development index - மனிதவள மேம்பாட்டு குறியீட்டில், 134வது இடம். நமது ஆதர்ச ஹீரோக்கள் - அமேரிக்கா - பிரான்ஸ் - ஜெர்மனி -கனடா - இங்கிலாந்து எத்தனையாவது இடம் தெரியுமா ? (வல்லரசுனா இதுல காமிக்க வேண்டியதுதான உங்க வளர்ச்சிய). அட, நமக்கு முன்னாடி பல ஆப்ரிக்க நாடுகள் குட இருக்கு. 

          Source:
இதுமாதிரி பல புள்ளி விவரங்கள அடுக்கிகிட்டே போகலாம். அதுனால என்ன பிரயோஜனம் ? ஒண்ணும் கெடையாது. GDP அதிகமாகுறது மட்டுமே வளர்ச்சின்னு பல காலமா நம்ம பொது புத்தியில பதிய வெச்சாச்சு. இனி அத ஒண்ணும் பண்ண முடியாது. 
கவலையெல்லாம் இத்தன அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும் போது, இந்தளவுக்கு அணு சக்தி திட்டங்களில் முனைப்பு காட்ட வேண்டிய அவசியம் என்ன வந்துச்சு ? எந்த ரஷ்யன் விஞ்ஞானியோ, நம்ம ஆட்களின் போராட்டம் பத்தி டிவில நக்கலா பேட்டி தரான். அதையும் வெக்கமில்லாம நாம பாத்துகிட்டு இருக்கோம்.
இந்த வளரும் நாடு - சூப்பர் பவர் - அமெரிக்க - வல்லரசு - லொட்டு லொசுக்குன்னு பேசும் விஞ்ஞானிகள், மேல இருக்கும் கேள்விகளோட இந்த கேள்விகளுக்கும் பதில் சொல்லுவாங்கன்னு நம்புறேன்.
  • இந்தியா தவிர, அணு சக்தி பயன்படுத்தும் - நீங்க ஆதர்சமா அடிக்கடி இதுபோன்ற "வளர்ச்சிகளுக்கு" உதாரணம் காட்டும் பிரான்ஸ் - அமெரிக்க - ஜப்பான் - கனடா - ஜெர்மனி - இங்கலாந்து போன்ற நாடுகளில், இதுபோல பீயை கைகளில் அள்ளும் ஆட்களை காமிங்க பாப்போம். 
  • 1980கள் முதற்கொண்டு அணு திட்டம் மட்டும் போட தெரியுதுல்ல. சுதந்திரம் வாங்கி 65 வருஷத்துல இதுபோன்ற மனித கழிவுகள அகற்றும் ஆட்களுக்கு என்னத்த கிழிச்சீங்க.(ஓரளவு முன்னேற்றம் இருக்கு. ஆனா, படு பயங்கர ஸ்லோ. அத முன்னேற்றம்ன்னு கூட சொல்ல முடியாது)
  • உண்மையான வளர்ச்சி என்பது வெறும் அணு சக்தி தானா ? அடிப்படை வசதிகளான, சுகாதாரம் - மருத்துவம் - அதற்குறிய காப்பீடு - கல்வி - மாதிரியான விஷயங்கள் இல்லையா ? ரைட்டு, இந்த துறைகளில் முன்னேற்றம் இருக்கவே செய்யுது. ஆனா, உலகத்துலையே மெதுவா நகர்கிற உயிரினம் ஸ்லோத் என்பதுதான் - அதவிட மெதுவால இந்த துறைகளில் வளர்ச்சி இருக்கு.
  • மருத்துவம் - கல்வி வளர்ந்திருக்கு. ஆனா அதுலையே எத்தன ஏற்ற தாழ்வுகள். ஏன் ஒரே மாதிரி சிஸ்டம் இல்ல.
  • இன்னொரு பெரிய ஜோக். பாதுகாப்பு துறைய வலுப்படுத்தவாம். கிளிச்சாங்க. உலகளவில் பாதுகாப்புக்கு என்று அதிகளவில் நிதி ஒதுக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒண்ணு. ஆனா, என்ன பிரயோஜனம். சிறிலங்கா மாதிரி கொசுவ கூட ஒண்ணும் பண்ண முடியல. குறைந்தபட்சம் மிரட்டவாவது முடிஞ்சதா. அதுக்கு கூட துப்பில்ல. தென் கொரியா மாதிரி சின்ன நாடுகளுக்கு இருக்கும் தைரியத்தில் நூத்துல ஒரு சதவீதம் கூட நம்மகிட்ட இல்ல. அப்பறம் என்ன மயிறு பாதுகாப்பு துறை. (அந்த துறைல கூட ஊழல்)
  • இந்த அடிப்படை தேவைகள எல்லாம் பிற "வளர்ந்த" நாடுகள் மாதிரி ஆக்கிட்டு அப்பறம் இதுக்கு வர வேண்டியதுதான.
  • என்னமோ சொந்த மூளையில கண்டுபுடிச்ச டெக்னாலஜி மாதிரி இத்தன பீட்டரு....இதுவும் ஐரோப்பியர்கள் கண்டுபுடிச்ச விஷயம் தான. இதுல கூட புதுசா ஒண்ணும் கண்டுபுடிக்க முடியல. இதல எங்கிருந்து தன்னிறைவு ?
  • இத்தன வருஷமா - சுமார் முப்பது ஆண்டு காலமா என்னதான் இந்த அரசாங்கங்கள் மாற்று திட்டம் வெச்சிருந்தது ? இதுகுறித்து கொஞ்சம் கூட யோசிக்கலையா....இல்ல, யோசிக்க ரஷ்யாவின் டோலர்கள் விடலையா ? 
சரி, இத்தனையும் மீறி - இதுதெல்லாம் சகஜம் தான். "வளர்ச்சி" தான் முக்கியம்ன்னு சொல்றவங்கிட்ட ரெண்டே ரெண்டு கேள்வி மட்டும் கேட்க ஆசை.
  1. வாரன் ஆண்டர்சன் யாரு தெரியுமா ?
  2. போபால் மக்களுக்கு எவ்வளவு ஈழப்பீடு குடுத்தாங்க தெரியுமா ?
நண்பர்களே, அணுவுலை ஆதரித்து பேசுபவர்களிடம், உடனே இந்த ரெண்டு கேள்வியையும் கேளுங்க. மலங்க மலங்க முழிப்பாங்க. சர்வ நிச்சயம். மேற்கொண்டு பதில் சொல்லத் தெரிந்த ஆட்களிடம் மட்டும் கருத்து பரிமாற்றம் செய்யுங்க. மத்த ஆட்களிடம் பேசி ஒரு பிரயோஜனமும் இல்லை. குறைந்தபட்சம் போபால் விபத்து நடந்த ஆண்டையாவது கேளுங்க. ஒரு மயிறும் பதிலாக கிடைக்காது. 28 வருஷமா போராடும் மக்களுக்கு நீதி கிடைக்காத இந்த நாடு தானா இந்த விஷயங்களில் ட்ரான்ஸ்பரன்சியோட நடந்துக்க போகுது. ஒண்ணும் நடக்காது. 


பி.கு:
நண்பர்கள் தயவுசெய்து, இப்ப இல்லாட்டியும் டவுன்லோட் செஞ்சு வெச்சிட்டு - நேரம் கிடைக்கும் போது மேல இருக்கும் லிங்க்கள படிச்சு பார்க்கமாறு கேட்டுக் கொள்கிறேன். குறிப்பா, "வளர்ந்த" நமது ஆதர்ச நாடுகளுக்கும் நமக்குமான இடைவெளி - ரொம்ப முக்கியம். அதைவிட முக்கியம் குட்டி நாடுகளுக்கும் நமக்குமானது.-நன்றி குழந்த பிளாக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக