பக்கங்கள்

திருக்குறள்

ஞாயிறு, மார்ச் 18, 2012

இறை மறுப்பு ...


பீர்பால் இறை மறுப்புச்சிந்தனை உடையவர் என்பது குறித்து அக்பருக்கு வருத்தம். ஒரு நாள் அவரிடமே.”நீங்கள் ஏன் கடவுளை-மதத்தை நம்ப மறுக்கிறீர்கள்?” என்று நேரடியாகக் கேட்டு விடுகிறார்.

பீர்பால் தன் வழக்கமான புன்னாகையை உதிர்த்து , ”உலகம் முழுவதும் எத்தனை மதங்கள் இருக்கின்றன” என்று பதிலுக்கு கேட்டார்.

”ஆயிரக்கணக்கில் இருக்கலாம்” என்று அக்பர் பதில் சொன்னார்.

“ஆயிரக்கணக்கான மதங்களில் எத்தனை தெய்வங்களை மக்கள்” வழிபடுகின்றனர் என்றார்.

ஒரு நிமிடம் யோசித்த அக்பர்.”பல்லாயிரக்கணக்கில் இருக்கலாம்” என்றார்.

” நீங்கள் அத்தனை தெய்வங்களையும் ஏற்றுக் கொண்டு , நம்பி , வழிபடுகிறீர்களா ? ”என்றார்.

“இல்லை நான் ஒரு தெய்வத்தை மட்டும் நம்புகிறேன். வழிபடுகிறேன்” என்றார்.

“நீங்கள் பல்லாயிரக்கணக்கான தெய்வங்களை நிராகரித்து ஒன்றை மட்டும் ஏற்றுக் கொள்கிறீர்கள். நான் அந்த ஒன்றையும் சேர்த்தே நிராகரிக்கிறேன்” என்றாராம்.

- குழுமத்தில் பூபதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக