பக்கங்கள்

திருக்குறள்

திங்கள், மார்ச் 26, 2012

இராணுவத் தளபதியின் குற்றச்சாட்டு: விசாரணைக்கு உத்தரவு

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் விகே சிங்
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் விகே சிங்
இராணுவ தளபாடங்களைக் கொள்வனவு செய்வதற்கான பேரத்தில் ஈடுபட்டிருந்த ஒருவர் தனக்கு பெருமளவு லஞ்சம் வழங்க முன்வந்ததாக இந்திய இராணுவத் தளபதி தெரிவித்துள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்துமாறு இந்திய பாதுகாப்பு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
தரமில்லாத 600 இராணுவ வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு அனுமதியளிக்குமாறு கோரி தனக்கு 14 கோடி ரூபாய் (2.7 மில்லியன் டாலர்)பணத்தை லஞ்சமாக வழங்க முயற்சிக்கப்பட்டதாக இராணுவத் தளபதி ஜெனரல் விகே.சிங் ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
இராணுவத் தளபதியின் இந்தக் குற்றச்சாட்டு இந்திய நாடாளுமன்றத்தில் பெரும் பிரச்சனையாக வெடித்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டு குறித்து மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரணை நடத்துமென்று பாதுகாப்பு அமைச்சர் ஏகே அந்தோனி கூறியுள்ளார்.
முன்னதாக, இந்த விவகாரத்துக்கு விளக்கமளிக்குமாறு நாடாளுமன்றத்தில் எதிரணிகள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டதை அடுத்து சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.
லஞ்சம் வழங்க முயற்சிக்கப்பட்ட சந்தர்ப்பத்திலேயே பாதுகாப்பு அமைச்சரிடம் தான் அதுதொடர்பில் முறையிட்டதாகவும் ஜெனரல் சிங் தெரிவித்துள்ளார்.
ஜெனரல் சிங், அவரது ஓய்வு பெறும் வயது தொடர்பில் அரச அதிகாரகளுடன் ஏற்கனவே முரண்பட்டிருந்தார்.
உச்ச நீதிமன்றம் வரை சென்ற அவர், அரச தரப்பில் தவறில்லை என்று நீதிமன்றம் கூறியதை அடுத்து வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.-நன்றி பிபிசி தமிழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக