பக்கங்கள்

திருக்குறள்

சனி, மார்ச் 31, 2012

சிதம்பர ரகசியம்..

மாண்புமிகு சிவகங்கை சீமான் சிதம்பரம் அவர்கள் இந்த நாட்டின் உள்துறை அமைச்சர். உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் உண்மையான முகம் உலகிற்கு தெரிய ஆரம்பித்துள்ளது. தான் ஒரு பெரிய அறிவு ஜீவி, தனக்கு மீறிய திறமைசாலிகள்  உலகிலேயே யாரும் இல்லை என்ற மமதை கொண்டவர். காங்கிரஸ் காமெடியன்களில் ஒருவரான திக்விஜய்சிங் இவரைப் பற்றி கூறியது நாடறியும். யாரையும் மதிக்காத போக்கு கொண்டவர். ஏளனம் செய்து பேசுவதும், தனது அதிகாரத்தால் தனக்கு அடிபணியாதவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை எப்படியாவது அடிய பணிய வைப்பது அல்லது அவர்களை பழிவாங்குவது அவருடைய இயல்பான குணம். அதே சமயம் வெளி உலகிற்கு நல்லவர் போல வேஷம் போடுவதில் வல்லவர். பெரும்பாலும் இவர் தனது அமைச்சக பணிகளில் அதிக கவனம் கொள்வதை விட எதிர்கட்சிகளை குறிப்பாக தன்னை எதிர்ப்போரை எப்படி அழிப்பது என்பதில் அக்கறை கொண்டு செயல்படுவதில் வல்லவர். அது அன்னா ஹஸாரேவாக இருந்தாலும் சரி அல்லது ராம்தேவாக இருந்தாலும் சரி, அவர்களை எப்படி அடியபணிய வைப்பது என்பதில் தனது கிரிமினல் புத்தியை, யுக்தியாக பயன்படுத்துபவர். அன்னஹஸரேவையும், ராம்தேவையும் எப்படியெல்லாம் அவதூறுகளுக்கு உள்ளாக்கினார்கள் என்பதை நாடறியும். 
தற்போது  நாட்டில்   குண்டு வெடித்த வண்ணமிருக்கிறது.  காங்கிரஸ் அரசு இருக்கும் வரை தீவிரவாதிகளுக்கு கவலை இல்லை எனக் கூறும் அளவிற்கு நிலைமை போய்க் கொண்டுள்ளது. காரணம்  தீவிரவாதிகளை   அச்சுறுத்த, தீவிரவாத  செயல்களுக்கு உள்ளூர்வாசிகள்   துணை  போகாதிருக்க   POTA, TADA  போனற சட்டங்கள்  இருந்தன.  நமது காங்கிரஸ் அரசு வாக்கு வங்கிக்காக அந்த சட்டங்களையெல்லாம் தூக்கி எறிந்து விட்டது. தீவிரவாதிகள்  உள்ளூர்  வாசிகள்  துணை கொண்டு தீவிரவாத  செயல்களை அரங்கேற்றி வருகின்றனர். காங்கிர்சின் மத்திய அரசு பல குண்டு வெடிப்புக்கான காரணங்களை கண்டு பிடிக்க முடியாமல் திணறுகின்றது. இந்த நிலையில் இந்த நாட்டின் விசுவாசிகளாக இருக்கும்  ஹிந்துக்களை  அடக்க  COMMUNAL VILONCE BILL  என்ற ஒரு சட்டத்தை கொண்டுவர காங்கிரஸ் முயலுகிறது. இந்த சட்டம் முழுக்க முழுக்க ஹிந்துக்களுக்கான எதிரான, சிறுபாண்மையினர் என்ன தவறு செய்தாலும், அந்த பாதிப்பு ஹிந்துக்களுக்கு மட்டுமே என்கிற அடிப்படையில் உள்ளது.  இதன்  மூலம்  ஹிந்துக்களை  ஒழித்துக்  கட்ட கிருத்துவர் சோனியாவின் முயற்சியால் திட்டம் தீட்டப்படுகிறதா என்ற சந்தேகம் வலுத்து வருகிறது. மேலும் சிதம்பரம் ஹிந்துக்களுக்கு எதிராக காவி தீவிரவாதம் என்ற புதிய சொற்றொடரை பயன் படுத்திவருகிறார். தீவிரவாதத்திற்கு மொழி, மதம், இனம் என்ற ஒரு அடையாளம் கிடையாது. அதுவும் சாத்வீகத்தை போதித்த ஹிந்து தர்மத்தின் அடையாளமான காவியை இழிவு படுத்தியுள்ளது அவருடைய உண்மையான முகத்தைக் காட்டியுள்ளது. யாரிடமும் இல்லாத குணம் இவரிடம் உண்டு. அதாவது அன்னா ஹஸாரே சொன்னது போல கிரிமினல் புத்தி உடையவர். மேலும் இவர் கிரிமினல் வழக்கறிஞரும் கூட. இயற்கையாகவே கிரிமினல் புத்தி கொண்ட இவருக்கு எதற்கெடுத்தாலும் பிரச்சனைகளை கிரிமினல் புத்தி கொண்டு அணுகுவதும், கிரிமினல் வழக்கறிஞர் பாணியில் பதில் கூறுவதும் இவரது வாடிக்கை. நீ ஏன் இப்படி செய்கிறாய் என்று கேட்டால், நீயும் இப்படி செய்தாயே என்பது போன்ற பதிலகளைத்தான் இவரிடம் எதிர்பார்க்கலாம். அதுமட்டுமல்ல பல விசயங்களில் தனது பலவீனத்தை மறைக்க அடுத்தவர்கள் மீது பழி போடுவது இவருக்கு கைவந்த கலை. அது மட்டுமல்ல தனது எதிரிகளை எப்படி சரி கட்டுவது என்பதை இவரிடம் தான் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். காங்கிரசை பாஜகா கடுமையாக எதிர்க்கிறது என்பது நாடறிந்த விசயம். அதற்க்காக நரேந்திர மோடி, மற்றும் கர்னாடக முதல்வர் ஆகியோர் மீது குற்றங்களை எப்படியாவது சுமத்த வேண்டும் என்று தனது சி பி ஐ போன்றவைகளை பயன் படுத்தி வருகிறது. 
ஆர் எஸ் எஸ் மீது குற்றம் சுமத்துவதின் மூலம் பாஜகாவை களங்கப் படுத்த முடியும் என்று நம்புகிறது. குண்டு வெடிப்பு வழக்குகளில் எப்படியாவது ஆர் எஸ் எஸ்ஸை சிக்க வைக்க பெருமளவில் திட்டமிடப்பட்டு முயற்சிகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆக தனக்கு எதிராக பேசக்கூடியவர்களை அடக்க வேண்டும் என்பதிலேயே தனது முழு கவனத்தையும் செலுத்தி வருவதால்,தீ விரவாதிகளை அடக்குவதில் ஆர்வம் கொள்வதில்லை. எதிர்கட்சிகளை ஒழிக்க காட்டிவரும் ஆர்வத்தில் மூன்றில் ஒரு பங்கை தீவிரவாதிகளை ஒழிப்பதில் காட்டினால் தீவிர வாதிகளுக்கு மீண்டும் குண்டு வெடிக்க தைரியம் வருமா? 
அண்மையில் இவரைப்பற்றி பாரத நிதியமைச்சர் பிரணாப்முகர்ஜி அவர்கள் 2G ஊழலில் இவருக்கு பங்கு உள்ளது என்று பிரதமருக்கு எழுதியிருந்த கடிதம் அம்பலத்திற்கு வந்துள்ளது. இது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2G ஊழலில் சிதம்பரத்திற்கு தொடர்பு உள்ளது என்று ஏற்கனவே பேசப்பட்டிருந்தாலும் அவ்வப்போது மறுக்கப்பட்டு வந்தது. 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ப.சிதம்பரமும் பலனடைந்துள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன அதிகாரியான ராஜா என்பவர் நீரா ராடியாடவுன் தொலை பேசியில் பேசிய பேச்சு விவரம் வெளியாகி புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது (17ஜூன்2011) ஆனால் அப்படி அவர் பேசியது தவறு என்றும் அதற்க்காக மன்னிப்பு கோருவதாகவும் ரிலையன்ஸ் நிறுவனமும், அந்த அதிகாரியும் பத்திரிக்கை செய்திகள் வந்து பரபரப்பு ஏற்படுத்திய சில நாட்களில் அறிவித்தனர். இதையடுத்து தான் குற்றவாளியில்லை என்று சிதம்பரம் பறை சாற்றிக் கொண்டார். ஆனால் அந்த அதிகாரி ராடியாவுடன் பேசியது உண்மை என நிரூபணமாகி விட்டது. மன்னிப்பு மட்டுமே கேட்டார்களே தவிர தான் அப்படி பேசவில்லையென்று ஒருபோதும் அந்த அதிகாரி கூறவில்லை. அப்படியென்றால் அந்தரங்கத்தில் உரையாடியது, அம்பலத்திற்கு வந்து, சிதம்பரத்தின் அதிகாரத்தால் அந்த அதிகாரியும், அந்த நிறுவனமும் மன்னிப்பு கேட்டிருப்பார்களே தவிர வேறொன்றும் கிடையாது. ஆனால் சி.பி.ஐ என்ன செய்து இருக்க வேண்டும்? இந்த உரையாடல் குறித்து விசாரித்து இருக்க வேண்டாமா? விசாரிக்காது. காரணம் சி.பி.ஐ(Congress bureo of investigation) காங்கிரஸ் பிரோ ஆஃப் இன்வ்வெஸ்டிகேஷன் ஆயிற்றே. அப்போது எதிர்கட்சிகள் எல்லாம் சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும் என கோரினர்? ஆனால் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பா.ஜ.க ஆதாரம் இருந்தால் கொடுக்கட்டும் எனக் கூறியிருந்தார்.
அதேபோன்று 2G விவகாரத்தில் எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும் பா சிதம்பரம் ஒப்புதல் அளித்தார் என்றும், பிரதமருக்கும் இதில் பங்கு உண்டு என்றும்,அவருக்கும் இது குறித்து தெரியும் என்று நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராசா கூறியிருந்தார். இதையும் காங்கிரஸ் மறுத்து வந்தது.
2 ஜி விவகாரத்தில் அனைத்தும் பிரதமர் முன்னிலையில் நடந்ததாகவும், டிபி ரியாலிட்டியின் பங்குகளை மாற்ற அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரமே அனுமதி அளித்தார் என்றும் முன்னாள் அமைச்சர் ஆ ராசா கூறியுள்ளதை மறுத்துள்ளார் ப.சிதம்பரம்.2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் முதல் குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா,
இன்றைய விசாரணையின்போது, “யூனிடெக், டிபி ரியாலிட்டி நிறுவனங்களின் பங்குகள் விற்பனை சட்டப்படியே நடந்தன. அதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. யூனிடெக் நிறுவனத்தின் பங்குகளை டெலிநார் வாங்கியதும் சட்டப்படிதான்.டி.பி. ரியாலிட்டி நிறுவனத்தின் பங்குகளை எடில்சாட் நிறுவனம் வாங்குவதற்கு அப்போதைய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் ஒப்புதல் அளித்தார்.பிரதமர் மன்மோகன் சிங்கின் முன்னிலையில் தான் இதற்கான ஒப்புதல் தரப்பட்டது. இதை பிரதமர் மறுக்க முடியாது. வேண்டுமானால் அதை அவர் மறுத்துப் பார்க்கட்டும் என்றார்.இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரதமரும் உள்துறை அமைச்சரும் இந்த வழக்கில் நேரடியாக இழுக்கப்பட்டுள்ளனர். (http://thatstamil.oneindia.in/news/2011/07/25/chidambaram-refutes-raja-says-he-didnt-approve-aid0136.html)
தன்னுடன் ஆட்சி செய்த அமைச்சரே பா.சிதம்பரம் மீதும்,பிரதமர் மீதும் நேரடியாக தொடர்பு இருப்பதாகக் கூறியும் காங்கிரஸ் மறுத்ததோடு சி பி ஐ யையும் விசாரிக்க விடாமல் சிதம்பரம் முடக்கிவிட்டார்.ஆனால் தற்போது மிக மூத்த நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி எழுதிய கடிதம் பா சிதம்பரத்தை நேரடியாக கை காட்டிவிட்டார்.
ஒன்இந்தியா » தமிழ் » செய்திகள் » இந்தியா
2ஜி ஊழலில் ப.சிதம்பரத்துக்கும் தொடர்பு?: பிரதமருக்கு பிரணாப் அனுப்பிய `பகீர்கடிதம்
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை விவகாரத்தில் நாட்டுக்கு நஷ்டம் ஏற்படுவதைத் தடுக்க அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று நிதியமைச்சகம் நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளது.இது தொடர்பாக நிதியமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இப்போதைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுடன் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ள கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் பிரணாப் முகர்ஜி- ப.சிதம்பரம் இடையே நடந்து வரும் மோதல் வெளியே தெரியவந்துள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் 2007ம் ஆண்டு நிதியமைச்சராக இருந்த இப்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்தக் கோரி ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனு மீது நீதிபதிகள் சிங்வி, கங்குலி ஆகியோர் முன்னிலையில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, சிதம்பரத்துக்கு எதிரான ஒரு கடிதத்தை சுப்பிரமணிய சாமி தாக்கல் செய்தார். இந்தக் கடிதம் கடந்த மார்ச் 25ம் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் அலுவலகத்தில் இருந்து பிரதமர் அலுவலகத்துக்கு அந்த கடிதம் அனுப்பப்பட்டதாகும். நிதியமைச்சகத்தின் Economic Affairs பிரிவின் துணை இயக்குனர் பதவியில் இருக்கும் ஒரு மூத்த அதிகாரி எழுதிய அந்தக் கடிதம் பிரணாப் முகரிஜியின் முழு ஒப்புதலுடன் பிரதமருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த 14 பக்க கடிதத்தில், 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஏலம் மூலம் விற்பனை செய்ய நிதியமைச்சக அதிகாரிகள் பரிந்துரைத்தனர். ஆனால், அதை நிராகரித்து விட்டு 2001ம் ஆண்டு விலையிலேயே, முதலில் வந்தவர்களுக்கு முதலில் என்ற முறையில், 2007ம் ஆண்டில் ஸ்பெக்ட்ரத்தை விற்க அப்போதைய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா எடுத்த முடிவுக்கு அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் அனுமதி அளித்துள்ளார். ராசாவைத் தடுத்து, ஸ்பெக்ட்ரத்தை ஏலம் மூலம் மட்டுமே விற்க வேண்டும் என்று சிதம்பரம் வலியுறுத்தி இருந்தால் ஸ்பெக்ட்ரம் ஊழலே நடந்திருக்காது. ஆனால், அவரைத் தடுக்காததால் செல்போன் நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ரூ. 1,600 கோடிக்கு மட்டுமே விற்கப்பட்டது. 2007ம் ஆண்டில் விற்பனைக்கான அனுமதி தரப்பட்டாலும், ஸ்பெக்ட்ரத்தை விற்றது 2008ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தான். இந்த இடைப்பட்ட காலத்தில், சிதம்பரம் நினைத்திருந்தால், இந்த விற்பனையை ரத்து செய்திருக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தை பிரதமருக்கு அனுப்பி வைத்ததன் மூலம், அதில் இடம் பெற்றுள்ள கருத்துக்களை பிரணாப் முகர்ஜி முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளார் என்பதும் தெளிவாகிறது. இதன்மூலம் மத்திய அரசுக்குள் மூத்த அமைச்சர்களான பிரணாப் முகர்ஜி-ப.சிதம்பரம் இடையே நடந்து வரும் மோதலும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.நிதியமைச்சகம் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பிய இந்தக் கடிதத்தை தகவல் அறியும் மூலம் விவேக் கார்க் என்பவர் பெற்றுள்ளார். அதை உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணிய சாமி தாக்கல் செய்துள்ளார். இந்த முக்கியமான கடிதத்தை உச்ச நீதிமன்றமும் ஏற்று பதிவு செய்து கொண்டுள்ளது.
இந்த கடிதம் குறித்து விவேக் கார்க் கூறுகையில், நிதியமைச்சகம் மற்றும் இதர அமைச்சகங்களின் தொடர்பு இல்லாமல் இவ்வளவு பெரிய ஊழல் நடந்திருக்க சாத்தியமில்லை. சிதம்பரத்துக்கும் வேறு சிலருக்கும் இந்த ஊழலில் தொடர்புள்ளதை இந்த கடிதம் தெளிவாகக் குறிப்பிடுகிறது என்றார் (http://thatstamil.oneindia.in/news/2011/09/22/pranab-vs-chidambaram-2g-politics-within-upa-aid0090.html)
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆதாரம் கேட்டிருந்தார். இப்போது காங்கிரஸ் நிதி அமைச்சர் ஆதாரம் தந்திருக்கிறார். இப்போதும் பிரதமர் சிதம்பரத்திற்கு வக்காலது வாங்குகிறார்.காரணம் அமைச்சர் ராசா சொன்னது போல சிதம்பரத்திற்கும்,பிரதமருக்கும் அனைத்தும் தெரியும் என்றும், அவர்கள் அனுமதியோடுதான் இவைகள் நடைபெற்றன என்றும் கூறியிருந்தது தற்போது சிதம்பரத்தைக் காப்பாறுவதன் மூலம் பிரதமர் தன்னை காத்துக்கொள்ள முயலுகிறார் என்பதையே உறுதிப்படுத்துகிறது.
சிதம்பரம் 2ஜி ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளார் என்ற விசயம் ஆதாரத்துடன் நிதிஅமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்களால் கண்டறியப்பட்டுள்ளது. அது குறித்து அனைத்து விசயங்களும் நிதிஅமைச்சகத்திடம் உள்ளது. அதன் காரணமாகவே தனக்கு எதிராக நிதி அமைச்சர் பிரணாப் சதி செய்கிறாரா என்பதை உளவு பார்க்கவே சிதம்பரம் முயன்றுள்ளார்.
 
டில்லியில், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் அலுவலகமான நார்த் பிளாக்கில், 16 இடங்களில் பசை தடவப்பட்டு, அவற்றில் மிகச் சிறிய கேமரா, மைக் உள்ளிட்டவற்றைப் பொருத்தி, உளவு பார்க்கப்பட்டதாக செய்திகள் வெளியாயின. அத்துடன், பிரணாப் முகர்ஜியின் மேஜைக்கு அடியில் மூன்று இடங்களில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சில பொருட்கள் ஒட்டப்பட்டிருந்ததாகவும், தரையில் சிறிய குழிகள் இருந்தன என்றும், அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு உளவுத் துறையினர் வெளியிட்ட அறிக்கையில், “அலுவலகச் சுவர்கள் மற்றும் பிரணாப்பின் மேஜைக்கு அடியில் ஒட்டப்பட்டிருந்த பொருள், “சூயிங்கம்ஆக இருக்கலாம். இவற்றை, அங்கு பணியாற்றும் ஊழியர்கள் தடவியிருக்கலாம்என்றனர். இதுகுறித்து, நேற்று செய்தியாளர்களிடம் பேசிய லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறியதாவது: நிதி அமைச்சரின் அலுவலகம் உளவு பார்க்கப்பட்டது, மிகவும் கவலை தரும் விஷயம்.
சில நெருக்கடிகளுக்கு ஆட்பட்டிருப்பதால், நிதியமைச்சர் வேண்டுமானால் இக்குற்றச்சாட்டை தள்ளி விடலாம். ஆனால், என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ள நாடு விரும்புகிறது. பிரதமருக்கு, நிதியமைச்சர் எழுதிய கடிதத்தில், தன் அலுவலகம், தன் ஆலோசகர் ஓமிதா பால் அறை உள்ளிட்ட 16 இடங்களில் ஏதோ ஒரு பொருள் ஒட்டப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அது, “சூயிங்கம்ஆக இருக்கலாம் என்று உளவுத் துறையினர் கூறியுள்ளது தான் மிகப் பெரிய வேடிக்கை. குழந்தைத் தனமான வாதம் இது. இதை நாடு நம்ப வேண்டும் என்று உளவுத் துறை விரும்புகிறது. உளவுத் துறையின் விளக்கத்தைக் கேட்கும் மக்கள் சிரிப்பர். போகும் இடம் எல்லாம் ஒட்டிக் கொள்ளும் இதுபோன்ற “உளவு சூயிங்கம்எங்கு கிடைக்கிறது என்று கேட்பர். “சூயிங் கம்முக்கும், பசை போன்ற பொருளுக்கும் உள்ள வித்தியாசத்தை பிரணாப் நிச்சயம் உணர்ந்திருப்பார். இவ்விவகாரத்தில் இரு கேள்விகள் எழுகின்றன. ஒன்று, தன் நிதியமைச்சரையே மத்திய அரசு வேவு பார்த்ததா என்பது. இரண்டாவது, தனியார் உளவு நிறுவனம் வேவு பார்த்ததா என்பது. இந்த இரண்டில் எது ஒன்று நடந்தது என்றாலும், அது கவலைக்குரிய பிரச்னையே. பிரணாப் முகர்ஜியின் கடிதத்தின் அடிப்படையில், அரசு மிகத் தீவிரமாக முழுமையாக இவ்விவகாரத்தை விசாரிக்க வேண்டும். அப்படி அரசு செய்யுமானால், அமைச்சர்களுக்கிடையில் ஒருவருக்கொருவர் நம்பிக்கையின்மையில் இருப்பது தெரியவரும். அல்லது இதில் தனியார் உளவு நிறுவனம் சம்பந்தப்பட்டிருப்பது வெளிச்சத்துக்கு வரும். இவ்விவகாரத்தை நான் “இந்தியாவின் வாட்டர்கேட்விவகாரம் என்றே குறிப்பிடுகிறேன். அமெரிக்காவில், “வாட்டர்கேட்ஊழல், எதிர்க்கட்சியினருக்கு எதிராக நடத்தப்பட்டது. அதில், அப்போதைய அமெரிக்க அதிபர் தன் பதவியை ராஜினாமா செய்தார். இங்கு, மத்திய அரசு தனது சொந்த நிதியமைச்சருக்கு எதிராக வேவு பார்த்துள்ளது. இவ்வாறு சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். (june 23,2011 http://www.dinamalar.com//News_Detail.asp?Id=262367&)
இது குறித்து சில மாதங்களுக்கு முன்னர் உள்துறை அமைச்சகம் ரகசியமாக நிதி அமைச்சகத்தை வேவு பார்த்தது என்று நிதி அமைச்சர் பிரணாப் பிரதமருக்கு கடிதம் எழுதியது அம்பலத்திற்கு வந்தது. ஆக சிதம்பரம் 2ஜி ஊழலில் சம்பந்தப் பட்டிருக்கிறார். அதை மறைக்கவே திரை மறைவில் பல ரகசியங்களை அரங்கேற்றி வருகிறார் என்பது உண்மை.
இதில் ஒரு வேடிக்கையென்னவென்றால் சி.பி.ஐயும் காங்கிரசும் எங்கப்பன் குதிருக்குள் இல்லையென்று கூறுவதுதான். பா ஜா க நிதியமைச்சரை சி பி ஐ விசாரிக்கும் போது தனது அமைச்சரவை சகாக்களே புகார்கள் கூறும் போது அப்போதைய நிதிஅமைச்சர் சிதமபரத்தை ஏன் சி பி ஐ விசாரிக்கவில்லை?
அதுமட்டுமல்ல உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசும் சி பி ஐயும் சிதம்பரத்தை விசாரிக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். ஏன் சிதம்பரம் என்ன வானத்தில் இருந்து குதித்தவரா? மேலும் ஏற்கனவே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து விட்ட நிலையில் புதிதாக யாரையும் சேர்க்க இயலாது என வாதிடுவது எங்கப்பன் குதிருக்குள் இல்லையென்பதையே காட்டுகிறது.
சிதமபரம் எந்த தப்பும் செய்யவில்லையென்றால் விசாரணக்கு ஒத்துக் கொள்வது தானே?  என்ன தயக்கம்?
ஒன்று நிச்சயம் சிதமபரத்திற்கு இறங்கு முகம் ஆரம்பமாகி விட்டது. அவர் செய்த சிதம்பர ரகசியங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய காலம் வந்து விட்டது. பாராளுமனறத்தேர்தலில் தோற்று, பின் வெற்றிபெற்றது உட்பட.

தீதும் நன்றும் பிறர் தாரா வாரா….!//////தர்மபூபதி ஆறுமுகம்////

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக