பக்கங்கள்

திருக்குறள்

திங்கள், மார்ச் 12, 2012

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரிகள் வீடுகளில் ரெய்டு ஏன்?

PDF அச்சிடுக மின்-அஞ்சல்


5முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரிகளாக இருக்கும் பாண்டியன், வினோதகன், கணேசன் ஆகிய மூன்றுபேர் வீட்டில், லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனை நடந்து வருகிறது.

இவர்கள் மீது என்னக் குற்றச்சாட்டு அடிப்படையில் சோதனை நடந்து வருகிறது. முன்பாக இவர்களைப் பற்றி தெரிந்துக் கொள்வது தான் முறை.

பாண்டியன், வினோதகன், கணேசன் மூன்றுபேரும் ஆயுதப் படையில் கிரேட் 2 கான்ஸ்டபிளாக இருந்தவர்கள். இவர்கள் பாண்டியன் மட்டும் 1984-ல் கான்ஸ்டபிளாக பணியில் சேர்ந்தவர். மற்ற இருவரும் பாண்டியனுக்கு பின்னால் பணியில் சேர்ந்தவர்கள். பாண்டியன் டி.எஸ்.பி.யாகவும், மற்ற இருவரும் இன்ஸ்பெக்டர்களாகவும் பணியாற்றி வருகிறார்கள். இதில் டி.எஸ்.பி. யாக பாண்டியனுக்கு பதவி உயர்வு கொடுத்ததும், மற்ற இருவருக்கு இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு கொடுத்ததும் பெரும் சர்ச்சையிம் இருப்பது தனிக்கதை.

இந்த மூன்று பேரும் முதல்வர் கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரிகளாக இருந்து கொண்டு அவரை பாதுகாப்பது, தள்ளு வண்டி நாற்காலியில் வைத்துக் கொண்டு தள்ளுவது இந்த இரு விஷயங்களைக் கடந்து வேறு வேலைகளில்தான் அவர்கள் ஆர்வம் காட்டினார்கள்.

குறிப்பாக உயர் அதிகாரிகளுக்கு அதாவது, ஐ.பி.எஸ். படித்து மத்திய அரசால் பணிக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகளே இவர்களைப் பிடித்துத்தான் தங்களுக்கான பதவிகளை வாங்கிக் கொள்ள முடிந்தது.

அதிலும், பாண்டியன் மற்றும் வினோதகன் ஆதரவில்லாமல் முக்கியமான எந்தப் பதவியும் எந்த ஐ.பி.எஸ்.ஸும் வாங்க முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை. இன்னும் சொல்லப்போனால் தி.மு.க. ஆட்சியில் காந்திராஜன் என்ற ஐ.பி.எஸ். அதிகாரியை உளவுத்துறை ஐ.ஜி.யாக 2006ஆம் ஆண்டு கொண்டு வந்ததே பாண்டியன்தான்.

உளவுத்துறை ஐ.ஜி. மட்டுமல்ல சென்னை நகரின் கமிஷனர் உள்ளிட்ட அனைத்துப்2 பதவிகளும் பாண்டியனும் வினோதகனும்தான் முடிவு செய்யும் அதிகாரத்தைக் கொண்டிருந்தார்கள். இது தவிர, இவர்களை நெருங்கி கொடுக்க வேண்டியதை கொடுத்தால், மாவட்ட எஸ்.பி. மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பணிகள், வீடியோ பைரசி மற்றும் பணம் வரும் பணிகளை வாங்கித் தருவார்கள்.

இப்படி சர்வ வல்லமைப்படைத்த இந்த மூன்று பேருக்கும் முதலமைச்சரின் பொது விருப்ப ஒதுக்கீடு மூலம் சென்னை முகப்பேரில் வீட்டு வசதிவாரிய மனைகள் ஒதுக்கப்பட்டது. ஒவ்வொருவருக்கும் தலா 2 கிரவுண்டு வீட்டு மனைகள் வீட்டு வசதி வாரியத்தின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இந்த நிலத்தின் மார்க்கெட் விலை 2 கோடி ரூபாய். ஆனால் அரசு நிர்ணயித்த விலை 75 லட்சம் ரூபாய்தான். இந்த மூன்று பேரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மனைகளை 75 லட்சம் ரூபாய் கொடுத்து நிலத்தை வாங்கியிருக்க வேண்டும். ஆனால் இவர்கள் அப்படி செய்யவில்லை.

ஆயில் சண்முகம் என்ற குற்றப் பின்னணி உடையவரை பிடித்து இந்த மூன்று பேரும் அந்த நிலத்தை தனியாருடன் ஒப்பந்தம் போடுகிறார்கள். அந்தத் தனியார்தான் இந்த மூன்று வீட்டு மனைகளுக்கான பணத்தை செலுத்துகிறார்கள். அதாவது வீட்டுமனை ஒதுக்கீடு பெற்றவர்கள்தான் பணத்தை செலுத்த முடியும். ஆனால், ஒதுக்கீடு பெற்றவர்கள் அந்த நிலத்தை தங்கள் பெயருக்கு பத்திரப் பதிவு செய்யாமலேயே அதிகாரிகளுடன் ஒப்பந்தம் போட்டு மூன்று பேரும் தலா ஒன்றே முக்கால் கோடி ரூபாய்க்கு அந்த வீட்டு மனைகளை விற்று விடுகிறார்கள்.

4உலகத்தில் இப்படியொரு அப்பட்டமாக மோசடி நடந்திருக்குமா என்றால் இல்லை என்றே கூறலாம். மூன்று டி.எஸ்.பி.களுக்கு 75 லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள நிலத்தை வாங்குவதற்கே முடியாத காரியம். அந்தத் தொகையை அவர்கள் வங்கியிலோ அல்லது பைனான்ஸ் நிறுவனத்திலோ தான் கடன் வாங்கி வாங்க முடியும். ஒரு நாளில் அத்தனை பெரிய தொகையை டி.ஜி.பி. கூட செலுத்த முடியாது. சாதாரண டி.எஸ்.பி.யும் இரண்டு இன்ஸ்பெக்டர்களும் எப்படி செலுத்த முடியும்.

இந்த மூவரும் எல்லா மோசடிகளையும் இத்தனை துணிச்சலாக செய்ய துணை நின்றவர் அன்றைய முதல்வர் கருணாநிதி கூட இல்லை. அவர்களுக்கு துணை நின்றவர் அன்றைய உளவுத்துறை ஐ.ஜி.யாக இருந்த ஜாபர் சேட்.

இந்த மோசடி குறித்து, மூன்று பேர் மீதும் ஏகப்பட்ட புகார்கள் எழுதப்பட்டன. இவர்கள் மீது வந்த புகாரின் மீது லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. ஐகோர்ட்டில் வழக்கு போட்டாலும் மனு தள்ளுபடி தான்.

அதற்கு என்ன காரணம் என்றால் இவர்களைப் போலவே உளவுத்துறை ஐ.ஜி.ஆக இருந்த ஜாபர்சேட்டும் திருவான்மியூரில் அரசு வீட்டு வசதி நிலத்தை வாங்கி தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு விற்றவர் ஜாபர்சேட்.

இப்படிப்பட்ட ஜாபர்சேட் இருக்கும்போது அவருக்கு கீழே பணியாற்றும் மூன்று பேர் மீது கடந்த ஆட்சியில் யாராவது நடவடிக்கை எடுக்க முடியுமா?

இப்போது ஆட்சி மாறி கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் கழித்து இந்த மூன்று பேரின் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து சோதனை நடத்தி வருகிறது. இந்த விசாரணையிலாவது மோசடி அம்பலப்படுத்தி நீதியை நிலைநாட்டினால் நேர்மையான ஊழியர்கள் சந்தோஷப்படுவார்கள்.நன்றி தமிழ்லீடர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக