பக்கங்கள்

திருக்குறள்

ஞாயிறு, மார்ச் 18, 2012

தமிழ்த் தேசியம்

தமிழ்த் தேசியம் ஒரு பல்முக சிக்கலான கருத்துருவம். அனைவரும் ஏற்றுக்கொண்ட அல்லது நிலையான வரையறை தமிழ்த் தேசியத்துக்கு இல்லை. பல்வேறு காலகட்டங்களில், சூழமைவுகளில், நிலைகளில் தமிழ்த் தேசியம் வெவ்வேறு போக்குகளில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இருப்பினும் தமிழ்த் தேசியம் என்ற கருத்தியல் நோக்கிச் சில பொதுப் பண்புகளை சுட்டலாம்.
தமிழ்த் தேசியம் தமிழர் மரபுத் தாயக நிலப்பரப்புகளான தமிழ்நாடு மற்றும் தமிழீழம், தமிழ் மொழி, தமிழர் பண்பாடு, தமிழர் சமூக-அரசியல்-பொருளாதார நலன்கள் ஆகியவற்றை முன்னிறுத்தி, அவற்றின் ஊடாக வெளிப்பட்டு, அவற்றால் பயன்பெற்று, அவற்றைப் பேணி, பகிர்ந்து, மேம்படுத்த ஏற்ற சூழமைவை கட்டமைப்பதை நோக்காக கொண்டது. இதன் அடிப்படைக் கருத்தியல் தமிழரிடையே காணப்படும் ஆண் ஆதிக்கம், சாதிக் கொடுமைகள், வர்க்க விரிசல்களுக்கு எதிராக அமைகின்றது. மேலும், சமய புவியல் சார்புகளை மீறி, ஒரு ஒற்றுமைக் கூட்டமைப்பை ஏற்படுத்தி, இன்றைய உலகமயமாதல் சூழமைவில் தமிழரின் அடையாளத்தையும், உரிமைகளையும், நலன்களையும் உறுதிசெய்ய இது முனைகின்றது. தமிழ்த் தேசியத்துக்கு எந்தவித சட்ட வரையறையும் இதுவரை இல்லை.

தமிழ்த் தேசியம் நோக்கி கருத்து நிலைகள்

தமிழ்த் தேசியம் எதை நோக்கி அமைகின்றது என்று மேலே சுட்டப்பட்டாலும், அதைப் பல்வேறு வழிகளில் வெவ்வேறு நபர்கள் வரையறை செய்துள்ளார்கள். அவற்றின் தொகுப்பு கீழே:
ஒரு தேசிய இனத்தின் அடிப்படையாக இரண்டு செய்திகளைப் பார்க்க முடியும். தன்னுடைய அடையாளத்திற்கான போராட்டம். இன்னொன்று சமத்துவத்திற்கான ஜனநாயகப் போராட்டம். பொதுவாக தேசிய இனப்போராட்டம் என்பது வர்க்கப் போராட்டம் அல்ல. அது ஒரு ஜனநாயகப் போராட்டம்தான். அந்த அடிப்படையில் தமிழுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கின்றன. தமிழ், தமிழர்கள் அடையாள அடிப்படையிலும், ஜனநாயக அடிப்படைகளிலும் நம் நாட்டில் உருவாக வேண்டிய தேசியம் தமிழ்த் தேசியம்தான்.
- பேராசிரியர் சுபவீ [1]
உலகமயத்தால் நசுக்கப்படும், உழவர்கள், தொழிலாளர்கள், ஒடுக்குண்ட சாதியினர், ஒதுக்கப்படும் சிறுபான்மையினர், சிறு, நடுத்தர தொழில் முனைவோர் முதலிய புரட்சிகர சக்திகளை உலகமய எதிர்ப்பில் ஒன்றிணைக்கிற மகத்தான புரட்சிகர ஆற்றல் தமிழ்த் தேசியம் தான். சூழல் பாதுகாப்பு, மரபான தொழில் நுட்பப் பாதுகாப்பு, மனித உரிமைப் பாதுகாப்பு ஆகிய தளங்களில் உலகமயத்திற்கு எதிராகக் களம் அமைப்போர் ஒன்றிணைய வேண்டிய தளமும் தமிழ்த் தேசியம் தான். தமிழ்த் தேசியப் புரட்சிதான் உலகமயத்தை முறியடிக்கும் ஆற்றல் கொண்டது.
- கி. வெங்கட்ராமன் [2]
தமிழ்த் ேதசியம் என்பதுதான் -மொழி- மொழி பேசுகிற இனம்- அதனுடைய நிலப்பரப்பு- அதனுடைய பண்பாடு- அதனுடைய உளவியல் உருவாக்கம்- அதனுடைய பொருளியல் பிணைப்பு என்று எல்லா அப்படைகளிலும் தேசம் என்பதற்குரிய வரலாற்று வழிப்பட்ட இலக்கணங்களின் அடிப்படையில் உண்மையான நேர்வகையான தேசம்.. தமிழ்த் தேசம் என்கிறபோது- அப்படி இருப்பது அங்கீகரிக்கப்படாமல் மறுக்கப்பட்டும் பிறிதொரு அரசமைப்புக்குடபட்டும் இருக்கிறபோது இயல்பாகவே அது ஒரு ஒடுக்குண்ட தேசத்தின் தேசியமாக இருக்கிறது.
- தியாகு [3]

[தொகு] தமிழ்த் தேசியம் நோக்கி விமர்சனங்கள்

பல்வேறு தளங்களில் இருந்து தமிழ்த் தேசியம் நோக்கி விமர்சனங்கள் உண்டு. அவற்றின் தொகுப்பு கீழே:
  • தமிழ்த் தேசியம் தமிழரிடையே இனத்துவ மொழித்துவ உணர்வுகளை வளர்த்து மனிதப் பொதுவுணர்வை மழுங்கடிக்கின்றது. அந்த உணர்வுகள் துவோச, ஆதிக்க, வன்முறை உணர்வாக வெளிப்படவும் உந்துகின்றது. இன்றைய பல்பண்பாட்டு, பல் இன அல்லது கலப்பின, உலகமயமாதல் சூழலில் தமிழ்த்தேசியம் குறுகிய எல்லைகளைத் தமிழருக்கு நிர்மானிக்கின்றது.
  • அன்றாட வாழ்வின் முதல் பிரச்சினை பொருளாதாரப் பிரச்சினையாக இருக்க, தமிழ்த் தேசியம் மொழியை முன்னிறுத்தி முற்போக்கான போராட்ட சக்திகளை வீணடிக்கின்றது. மனிதரிடையே காணப்படும் ஏழ்மை, ஏற்றதாழ்வுகள், வேலையின்மை போன்ற அடிப்படை பொருளாதார சிக்கல்களுக்கு தகுந்த முக்கியத்துவம் தராமல் தமிழ்த் தேசியம் கவனத்தை சிதறடிக்கின்றது. தமிழரிடையே சமத்துவத்தை முன்வைத்து எழுந்த பொதுவுடமை, இடதுசாரி போக்குகளுக்கு தமிழ்த் தேசியம் வலுச்சேர்க்கவில்லை. மாறாக வலதுசாரிப் போக்குக்களையே தமிழ்த் தேசியம் வெளிப்படுத்தியிருக்கின்றது.
  • தமிழ்த் தேசியம் தமிழ் மேற்குடி மக்களின் கருத்தியலாகவே இருக்கின்றது. நுண்கலைகள், இலக்கியத் தமிழ் சராசரித் தமிழருக்கு அப்பாலேயே இருக்கின்றன.
  • தமிழ்த் தேசியம் தனிப்பட்ட அரசியல், ஊடக, வணிக சுரண்டலுக்கான கருத்தியலாக இருக்கின்றதே தவிர, தமிழரின் அன்றாட வாழ்வியலுக்கு உதவும் ஒரு கருத்தியல் இல்லை.
  • பாசிச தமிழ்த் தேசியம்
  • "இன்றைவரைக்கும் தமிழ்த் தேசியவாதத்தால் முழுமையாக முகம்கொடுக்க இயலாத பிரச்சினையாகச் சாதியம் இருப்பதற்குக் காரணம், தமிழ்ச் சமூகத்துக்கு உள்ளே இருக்கிற ஒடுக்குமுறைகளை மழுப்பியே இதுவரை தமிழ்த் தேசியம் தன்னை நிலைநிறுத்தி வந்துள்ளதே என்பேன். புலம்பெயர் சூழலில் சாதிக்கு அர்த்தமில்லை என்ற வாதம் தருக்கரீதியாக ஏற்கக்கூடியது. அப்படியானால் நாட்டைவிட்டு நிரந்தரமாகவே புலம்பெயர்ந்தோரிடையே தொடரும் தேசிய உணர்வும் அர்த்தமற்றதாகாதா?நன்றி விக்கிபீடியா //

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக