பக்கங்கள்

திருக்குறள்

திங்கள், மார்ச் 12, 2012

ரொக்க கையிருப்பு விகிதம் 0.75% குறைப்பு

மும்பை : ரிசர்வ் வங்கி நேற்று எடுத்த அதிரடி முடிவால் வங்கிகளிடம் பண நடமாட்டம் ரூ.48,000 கோடி அதிகரிக்கும். வங்கிகள் தங்கள் டெபாசிட் தொகையில் ஒரு பகுதியை ரிசர்வ் வங்கியிடம் பராமரிக்க வேண்டும் என்ற விதி உள்ளது. இதை சிஆர்ஆர் (ரொக்க கையிருப்பு விகிதம்) என்கின்றனர். அந்த தொகை, வங்கிகளின் மொத்த டெபாசிட்டில் 5.5 சதவீதமாக இருந்தது. அதை ரிசர்வ் வங்கி நேற்று அதிரடியாக 0.75 சதவீதம் குறைத்தது. எனவே, வங்கிகளின் ரொக்க கையிருப்பு விகிதம் 4.75 சதவீதமாகி விட்டது.இதன் மூலம், வங்கிகளிடம் பணப் புழக்கம் ரூ.48,000 கோடி அதிகரிக்கும். அதில் வீடு, வாகனம், கல்வி, தொழில், விவசாயம் ஆகியவற்றுக்கு தாராள கடன் அளிக்க முடியும். இதுபற்றி ரிசர்வ் வங்கி நேற்று மாலை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘சிஆர்ஆர் 5.5 சதவீதத்தில் இருந்து 4.75 சதவீதமாக குறைக்கப்படுகிறது. இதனால், வங்கிகளிடம் முதன்மை பணப் புழக்கம் ரூ.48,000 கோடி உயரும். இது சனிக்கிழமை அமலுக்கு வரும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன் ஜனவரி 24ம் தேதி சிஆர்ஆர் விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.5 சதவீதம் குறைத்தது. அதில் ரூ.32,000 கோடி வங்கிகளில் பணப் புழக்கம் அதிகரித்தது. 40 நாட்களில் மீண்டும் சிஆர்ஆர் 0.75 சதவீதம் குறைக்கப்பட்டதால் மொத்தம் ரூ.80,000 கோடி புழக்கத்துக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக