பக்கங்கள்

திருக்குறள்

திங்கள், மார்ச் 26, 2012

ரூ. 205 ‌கோடி !




பாராளு மன்றத்தில் என்ன நடந்தாலும் கண்டுகொள்ளாமல் மௌன சாமியாராய்இருந்ததிற்கு / இருப்பதிற்கு நம்ம பிரதீபா அம்மையாருக்கு ஆளும் கட்சியின் பரிசா?


ஜனாதிபதியின் வெளிநாடு பயணத்திற்காக ரூ. 205 ‌கோடி வரை செலவிடப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இவர் மேற்கொண்ட வெளிநாட்டு பயணத்திற்காக இந்த செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வெளிநாடு சென்ற ஜனாதிபதிகளில் இவர் தான் அதிக முறை நாடுகளுக்கு சென்று சாதனை படைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டு ஜூலை மாதம் ஜனாதிபதியாக பிரதீபா பாட்டீல் பதவியேற்றார்.இவரது பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இவர் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள் குறித்தும் அதற்காக அரசு செலவிட்ட தொகை குறித்தும் மத்திய வெளியுறவு அமைச்சகத்திடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரப்பட்டது.இதற்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் ‌அளிக்கப்பட்டுள்ள பதிலில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 5 ஆண்டுகளில் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் 79 நாட்கள் என இதுவரை 12 முறை வெளிநாடு பயணம் மேற்கொண்டு 22 நாடுகளுக்கு அரசு முறைப்பணயமாக சென்றுள்ளார். இதில் ஏர் இந்தியா வாயிலாக சென்ற வகையில் விமானச்செலவு ரூ. 169 கோடி ரூபாயும், மற்றும் ஜனாதிபதிக்கான இதர சலுகைகள் மற்றும் தங்கும் வசதி உணவு போன்ற செலவினங்களாக ரூ. 36 ‌கோடியும் என மொத்தம் ரூ.205 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் ரூ.169 கோடி ரூபாயினை ராணுவ அமைச்சகம் ஏற்றுள்ளது . ரூ.153 ‌கோடி மட்டுமே ஏர்இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. பாக்கி தொக‌ை ரூ.16 கோடி நிலுவையில் உள்ளது. இவ்வாறு அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்ற‌ை தவிர அதிக நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட ஜனாதிபதிகளில் பிரதீபா பாட்டீல் தான் முன்னிலையில் உள்ளார். இதற்கு முன்பு அப்துல்கலாம் (47 நாட்கள்) 17 நாடுகளுக்கும், சங்கர்தயாள் ஷர்மா (1992-1997) 16 நாடுகளுக்கும், கே.ஆர். நாராயண் 10 நாடுகளுக்கும் தங்களது ஐந்து ஆண்டு பதவியில் வெளிநாடு சென்றுள்ளனர். தற்போதை ஜனாதிபதியாக உள்ள பிரதீபா பாட்டீல் 79 நாட்களில் 22 நாடுகளுக்கு வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு சாதனை படைத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக