பக்கங்கள்

திருக்குறள்

ஞாயிறு, நவம்பர் 27, 2011

தனு உயிரோடுள்ளார்-சி.பி.ஐ

தனு அக்கா உயிரோடு இருப்பதாக கூறும் சிபிஐ!(வியப்பின் உச்சம்)

புதுடில்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ் மனிதவெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்த சம்பவத்தில், மனித வெடிகுண்டாக வந்த தனு என்ற பெண், சுப்ரீம் கோர்ட்டால் மரண தண்டனை விதிக்கப்பட்டார் என சி.பி.ஐ., இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கடந்த 1991ம் ஆண்டு மே 21ம் தேதி, முன்னாள் பிரதமர் ராஜிவ், ஸ்ரீபெரும்புதூரில் நடந்த மனிதவெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார். ஸ்ரீபெரும்புதூரில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த அவரை, தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த தனு (எ) தேன்மொழி ராஜரத்தினம் என்ற பெண், தன் உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச்செய்து கொலை செய்தார். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த இச்சம்பவம், நாடு முழுவதிலும் மட்டுமல்லாமல், தமிழகத்தையும் தற்போது வரை சூடாக வைத்திருக்கக்கூடிய சம்பவமாகும்.


இந்நிலையில், இவ்வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ., இணையதளத்தில், ராஜிவ் கொலை வழக்கில், சென்னை பூந்தமல்லி தடா கோர்ட்டில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டதாகவும், பின்னர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு, அது தனு உள்ளிட்ட 4 பேராக குறைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் பல்வேறு சிறைகளில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜிவ் கொலையின் போதே மனித வெடிகுண்டாக வந்த தனு என்ற பெண் இறந்தது உலகமறிந்த விஷயம் என்ற போதில், அது சி.பி.ஐ.,க்கு மட்டும் தெரியாமல் போனது வியப்பின் சரித்திர குறியீடு. -தேடல் இணையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக