பக்கங்கள்

திருக்குறள்

வெள்ளி, நவம்பர் 18, 2011

உலகில் அதிக சொற்கள் கொண்ட மொழி!!!!

உலகில் அதிக சொற்கள் கொண்ட மொழி எது? ஆங்கிலமா? என்று பலரும் கேட்கிறார்கள். ஆக்ஸ்போர்டு (Oxford) அகரமுதலி ஒரு பக்கத்தில் இந்த கேள்வியை எழுப்பி விடையும் தந்துள்ளனர்.
20 தொகுதி கொண்ட ஆக்ஸ்போர்டு அகரமுதலியில் 171,476 சொற்கள் உள்ளன. ஆனால் மொத்தம் 250,000 சொற்களுக்குக் குறையாமல் இருக்குமாம்.

சொற்பொருள்களைக் கணக்கில் கொண்டால் முக்கால் மில்லியன் (750,000) இருக்கலாம். ஆனால் தமிழில் 12,000 பக்கங்கள் கொண்ட தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலியில் ஏறத்தாழ 500,000 தமிழ்ச்சொற்கள் உள்ளன.
இந்த அகர முதலியில் மொத்தம் 31 தொகுதிகள். 37 ஆண்டுகளாக உழைத்து உருவாக்கப்பட்ட தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்டம் (Tamil etymological Dictionary project) அண்மையில் முழுமையடைந்தது.

பாவாணர் தொடங்கிய இத்திட்டம். பேராசிரியர் இரா.மதிவாணன் தலைமையில் இப்போது முழுமை பெற்றுள்ளது.

உலகில் வேறெந்த மொழிகளுக்காவது இத்தனை (ஏறத்தாழ 500,000) சொற்களின் சொற்பிறப்பியலோடு அகராதிகள் இருப்பதாகத் தெரியவில்லை. நன்றி E தமிழ்.

1 கருத்து:

  1. ஐயா, தங்கள் பதிவிற்கு நன்றிகள் மற்றும் மகிழ்ச்சி...

    ஆங்கிலத்தில் மொத்தம் உள்ள சொற்களின் எண்ணிக்கை நீங்கள் கூறியவாறு உள்ளது உண்மை என்பதை என்னால் அறிய முடிந்தது (http://oxforddictionaries.com/words/how-many-words-are-there-in-the-english-language).

    அதனைப்போலவே தமிழில் இத்தனை சொற்கள் உள்ளன என்பதற்க்கான ஆதாரம் (எனக்கு) கிடைக்கவில்லை. ஆகவே, தாங்கள் அதற்க்கான ஆதாரங்களை அளித்தீர்கள் என்றல், இதனை என் நண்பர்களுக்கு தெரிவிக்க ஏதுவாக அமையும்.

    நன்றிகளுடன்
    க.ஆனந்த்

    பதிலளிநீக்கு