பக்கங்கள்

திருக்குறள்

வெள்ளி, நவம்பர் 25, 2011

பாராளுமன்றம் முடக்கம் இழப்பு பலகோடி!!

கடந்த 2001-ம் ஆண்டில் தெகல்கா ஊழல் விவகாரத்தில் பாராளுமன்றத்தில் 17 நாட்கள் தொடர் அமளி நீடித்தது. 1987-ம் ஆண்டில் போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் விவகாரத்தில் 45 நாட்கள் சபை நிகழ்ச்சிகள் பாதிக்கப்பட்டன. ஆனால், இதுவரை இல்லாத அளவில் தொடர் முழுவதுமே முடக்கப்பட்டது

இப்போதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. 2ஜி விவகாரத்தின் காரணமாக பாராளுமன்ற கூட்டத்தொடர் முடக்கப்பட்டதால் ரூ.146 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. பாராளுமன்ற கூட்டம், ஆண்டுதோறும் பட்ஜெட் தொடர், மழைக்காலம் மற்றும் குளிர்கால கூட்டத் தொடர் ஆகிய 3 தொடர்களாக நடைபெற்று வருகின்றன. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், பாராளுமன்றத்தின் குளிர்கால தொடர் அடியோடு முடக்கப்பட்டது. பாராளுமன்றத்துக்கும், பாராளுமன்ற விவகாரத்துறைக்கும் சேர்த்து ஆண்டு பட்ஜெட்டில் ரூ.527 கோடியே 45 லட்சம் ஒதுக்கப்படுகிறது. இதில், பாராளுமன்றத்தின் இரு சபைகளுக்கும் நாள் ஒன்றுக்கு ரூ.6 கோடியே 35 லட்சம் செலவிடப்படுகிறது. அதன்படி, நடப்பு கூட்டத் தொடர் முழுவதும் முடக்கப்பட்டதில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.146 கோடி என்று கணக்கிடப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக