பக்கங்கள்

திருக்குறள்

ஞாயிறு, நவம்பர் 20, 2011

பெண்களின் புதிய கலாச்சாரம்...!!!!!

பண்ணை வீட்டில் நள்ளிரவில் நடனத்துடன் நடந்த மது விருந்தில் பங்கு கொண்ட 20 பெண்கள் உள்பட 110 பேர் கைது செய்யப்பட்டனர். இப்படி செய்திகள் தினம் தோறும் வந்து கொண்டு தான் இருக்கிறது..

ஆண்களே குடிக்க கூடாது என்று சொல்லி கொண்டு வந்தோம் இப்போது பெண்கள் குடிப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது..இன்றைய இளைய தலை முறை பெண்களுக்கு. மது குடிப்பதும் புகை பிடிப்பதும் ஒரு தவறு என்று தோன்றுவதே இல்லை..

வெளி நாட்டில் தானே பெண்கள் குடிக்கிறார்கள் என்று நாம் அதை கண்டு கொள்ளாமல் இருந்தோம், அது மெல்ல நகர்ந்து வட இந்தியாவிற்கு வந்தது,,அப்படியே நகர்ந்து இப்போது நம் தமிழ் நாட்டிலும் இந்த கலாச்சாரம் வந்துள்ளது..இந்த கலாச்சாரத்தால் நாட்டிற்க்கு மட்டும் கெடுதல் இல்லை வீட்டிற்கும் கெடுதல் .. அந்த பெண்ணின் உடல்நலத்திற்கும் கெடுதல் ....இந்த கலாச்சாரம் நாளை உங்கள் வீட்டிலும் நடக்கலாம்...சில பெண்கள் குடிப்பதால் அனைத்து பெண்களுக்கும் அது கெட்ட பெயர் வாங்கி தருகிறது...


வீட்டில் குழந்தைகள் முன்னாடி குடிக்கும் ஆண்கள் முதலில் இதை நிறுத்த வேண்டும். குழந்தைகள் முன்னாடி குடித்தால் அவர்களுக்கு குடிப்பது தவறு என்று தெரியமாலே போய் விடும்..


சீரியல் பார்க்கும் பெண்களே, அதை தட்டி கேட்க்க முடியாத ஆண்களே செல்லமே சீரியலில் பெண் குடிக்கும் காட்சி தினம் தோறும் வருகிறது அதை உங்கள் குழந்தைகளும் உங்கள் வீட்டு அம்மணியும் பார்த்தால் ஒரு நாள் அவர்களும் அதை செய்வார்கள்..இந்த மாதிரி காட்சி வரும் போது குறைந்த பட்சம் அந்த சேனலை மாற்ற வேண்டும்..
மது குடிக்கும் பெண்களுக்கு முகத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். அதற்கு முக்கிய காரணம் கல்லீரலில் ஏற்படும் பிரச்சினைகள். ஆண்களை விட பெண்களின் கல்லீரல் ஆல்கஹால் தாக்கத்தின் காரணமாக விரைவில் கெட்டுவிடும். ஆல்கஹாலின் தாக்கத்தால் கல்லீரல் சுருங்கி, கொழுப்பு அதிகமாகி விடுவதால், என்சைம்களில் அதிக சிக்கல் உண்டாகும். ஆண்களைவிட பெண்களுக்கு கொழுப்பு அதிகம் என்பதால், வெகுவிரைவில் கல்லீரல் கெட்டு, ரத்தத்திலும் மதுவின் தன்மை அதிகம் கலந்து விடும். சில நேரங்களில் மரணம் ஏற்படும் அபாயமும் உண்டு.

மதுவின் தாக்கம், பெண்களுக்கு கல்லீரலோடு, இதயத்தையும் சேர்த்து தாக்கும். பெண்களுக்கு மன அழுத்தமும், மதுவின் தாக்கமும் ஒன்றுசேர, இதயநோய் அழையா விருந்தாளியாக வந்து பாடாய் படுத்தும். மது குடிப்பதால் ரத்த அழுத்தம் அதிகமாகி, இதயத்தை பலவீனபடுத்தும். இதனால் ரத்த அழுத்தத்தை தாங்காமல் இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்கள் வீங்கும்.
சிலருக்கு அழுத்தம் அதிகமாகும்போது வெடித்து விடும் அபாயமும் உண்டு. இல்லாவிட்டால் இதயத்தில் அழுத்தம் தாங்காமல் ஓட்டை விழும். தேவையில்லாமல் இதயம் அதிகமாக துடிப்பதும், இல்லாவிட்டால் மெதுவாக துடிப்பதும் இதயநோய்க்கான அறிகுறிகள். மேலும் உடல் எடை அதிகரித்து, அனைத்து உறுப்புகளின் செயல்பாடுகளும் பாதிப்படைய வாய்ப்புண்டு!!!

விளையாட்டாக ஆரம்பிக்கும் இந்த பழக்கம் நாளடைவில் விட முடியமால் தவிக்கிறார்கள் பெண்கள்..இப்போது சில பெண்கள் நாளை?????----- தேடல் இணையம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக