பக்கங்கள்

திருக்குறள்

புதன், பிப்ரவரி 22, 2012

ஜெயலலிதாவை சிக்க வைக்க டில்லியில் பிளான் ரெடி!



அரசியல் விமர்சகர் சோ ராமசாமி “அடுத்த பிரதமராவதற்கு தகுதியான ஒருவர் இதோ, இங்கே தமிழகத்தில் முதல்வராக இருக்கிறார்” என்று, மேடையில் அத்வானி முன்னிலையில் அறிவிப்பு செய்திருக்க….
ஜெயலலிதா தேசிய அரசியலில் காலடி எடுத்து வைக்கப் போகின்றார் என்று பத்திரிகைகள் எழுதிக் கொண்டிருக்க….
….முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான ‘பிறந்தநாள் பரிசு’ வழக்குக்கு உயிர் கொடுக்கும் வேலைகளில் முழுமூச்சாக இறங்கியுள்ளது சி.பி.ஐ.
பிரதமர் வேட்பாளர் ஆவதற்கு அதி உச்ச இமேஜ் தேவை என்ற நிலையில், சி.பி.ஐ. இந்த வழக்குக்கு இப்போது உயிர் கொடுப்பது, தேசிய அளவில் ஜெயலலிதாவின் இமேஜை சரிய வைக்கத்தான் போகிறது. எந்த அளவுவரை கீழே சரியும் என்பது, சி.பி.ஐ. இந்த வழக்கை எப்படி கொண்டு போகப் போகின்றது என்பதில் தங்கியிருக்கிறது.
நமக்கு கிடைத்த தகவல்களின்படி, சி.பி.ஐ. மிக மும்மரமாக தகவல்களை சேகரித்து, கேஸை கட்டி எழுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
சி.பி.ஐ.-க்கு மேலும் தகவல்களை சேகரிக்க சற்று அவகாசம் தேவை என்று சொல்லப்படுவதில் விஷயம் இருக்கிறது. முன்பு சேகரிக்கப்பட்ட தகவல்களைவிட, வித்தியாசமாக ஏதும் சேகரிக்க முடியாது. ஆனால், நாடாளுமன்ற தேர்தல்களுக்கு இன்னமும் அவகாசம் இருக்கிறது.
வழக்கின் கிளைமாக்ஸ், நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகும் காலத்தில் நடந்தால்தான், அரசியல் ரீதியாக அதன் பலன் மத்திய அரசுக்கு கிட்டும். அதுதான், சற்று கால அவகாசம் தேவை என்று சொல்லப்படுகிறது.
இதனால், சுப்ரீம் கோர்ட்டுக்கு அப்பீல் செய்ய மனு போட்டபோதே, தகவல்களை சேகரிக்க மேலும் கால அவகாசம் தேவை என்பதை முன்னெச்சரிக்கையுடன் குறிப்பிட்டிருந்தது சி.பி.ஐ. அந்தக் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டும் ஏற்றுக் கொண்டு விட்டது. அதி உற்சாகத்துடனும் முழு வேகத்துடனும் இறங்கியுள்ளது சி.பி.ஐ.
மத்திய அரசுக்கு இது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு. எனவே, இந்த வழக்கை கவனிக்க என்று ஸ்பெஷல் டீம் ஒன்று போடப்பட்டுள்ளது.
சி.பி.ஐ. இந்த வழக்கை எப்படி கொண்டு போகப்போகின்றது? அதற்கான ஸ்கெட்ச் போடப்பட்டுவிட்டது.
1992-ல் (அப்போதும் முதல்வராக இருந்த) ஜெயலலிதாவின் பிறந்தநாள் பரிசாக லோக்கலில் பணத்தை கொடுத்தவர்களில், அதிக பணம் கொடுத்த இருவர், செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோரில் தொடங்கி, வெளிநாட்டில் இருந்து பணம் வந்து சேர்ந்த விவகாரம் வரை தெளிவான ஸ்கெட்ச் போட்டிருக்கிறார்கள்.
வெளிநாட்டு பணம், 3 லட்சம் அமெரிக்க டாலர் ஒரே ட்ராஃப்டாக எடுக்கப்பட்டு, வழங்கப்பட்டது. தமது ANZ Grindlays Bank கணக்கில் இருந்து ஜெயலலிதா பெயருக்கு ட்ராஃப்ட எடுக்க 3 லட்சம் டாலர் ட்ரான்ஸ்ஃபர் செய்தவரின் பெயர் டாக்டர் கே.டி.பி.மேனன். அவருக்கும் எம்.ஏ.எம்.ராமசாமிக்கும் இடையேயுள்ள தொடர்பு, ஆகியவை சி.பி.ஐ.-யின் ஸ்கெட்சில் அடங்கும்.
ஜெயலலிதாவுக்கு பிறந்தநாள் பரிசு கொடுத்த அதே 1992-ம் ஆண்டு, டாக்டர் கே.டி.பி.மேனன், மர்மமான முறையில் இறந்து போனார்.
சி.பி.ஐ.-யில் இந்த கேஸை எப்படி பின்னப் போகிறார்கள் என்பது பாராளுமன்ற தேர்தலுக்கு ஊடகத்திற்கு தீனி கூடுதல் ..நன்றி விறுவிறு





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக