பக்கங்கள்

திருக்குறள்

வெள்ளி, பிப்ரவரி 24, 2012

பிரிக்க முடியாதது காங்கிரசும் ஊழலும்


கட்டுக்கடங்காத ஊழலை அனுமதிப்பதை விட, காங்கிரசை நாகரீகமான முறையில் புதைத்து விடுவதையே நான் விரும்புகிறேன்.   மகாத்மா காந்தி மே 1939
 1935 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி 1937ஆம் ஆண்டு ஆறு மாநிலங்களில் அமைக்கப்பட்ட காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழலைக் கண்டு இப்படி மனம் வெதும்பினார் மகாத்மாகாந்தி. காங்கிரஸ் கட்சி எப்போது ஆட்சிக்கு வந்ததோ அப்போதே இந்த நாட்டிற்க்கு ஊழலும் அறிமுகப் படுத்தப்பட்டது. இப்படி செய்யும் ஊழல்களை மறைக்க அவர்களுக்கு தேவைப்பட்டது காந்தியின் குல்லாவும், கதர் சட்டையும் தான்
சுதந்திர பாரதத்தில் 1948 ஆம் ஆண்டு, முதன் முதலாக காஷ்மீரில் ராணுவத்திற்க்கு ஜீப் வாங்கியதில் அப்போதைய இங்கிலாந்திற்க்கான ஹைகமிசனர் V.K.கிருஷ்ணமேனன், எந்த நடைமுறைகளையும் கடைபிடிக்காதது பெரும் ஊழலுக்கு வழி வகுத்தது. இதை விசாரித்த அனந்தசயனம் குழு பரிந்துரைத்தபடி நீதி விசாரனை போடப்படவேண்டுமென்ற எதிர்கட்சிகளின் கோரிக்கையை ஏற்க மறுத்த அரசு, பிரதமர் நேருவின் கட்டளைக்கிணங்க செப்30, 1955 ஆம் ஆண்டு இந்த ஊழல் பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவருவது என அரசாங்கம் அறிவித்தது. அப்போதைய மத்திய அமைச்சர் GB பந்த் “இந்த பிரச்சனையை அரசு இத்தோடு முடித்துக் கொள்வதாகவும், எதிர்கட்சிகளுக்கு இதில் திருப்தியளிக்கவில்லையென்றால் தேர்தலில் பிரச்சனையாக எழுப்பட்டும்” என அறிவித்தார். இதைத் தொடர்ந்து உடனடியாக ஊழல் செய்த VK கிருஷ்ணமேனனுக்கு பிப் 3 ஆம் தேதி, 1956 ஆம் ஆண்டு மத்திய அமைச்சரவையில் இலாகா இல்லாத அமைச்சராக பதவி வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார். 
1950 ஆம் ஆண்டு நிர்வாகத்தை மேம்படுத்த ஆலோசனைகளை வழங்குமாறு பாரத அரசு புகழ் பெற்ற நிர்வாக வல்லுனனரான R D கோர்வாலா அவர்களை கேட்டுக்கொண்டது. அவர் தனது அறிக்கையில் முக்கியமான இரண்டு கருத்துக்களை குறிப்பிட்டார். “ ஒன்று, பிரதமர் நேருவின் சக அமைச்சர்கள் பலர் ஊழல் புரிந்தவர்களாகவும், இது அனைவராலும் அறியப்பட்ட ஒன்று எனவும், இரண்டாவது, ஊழல் அமைச்சர்களை அரசு கேடயமாக இருந்து அந்த அமைச்சர்களை பாதுகாத்தது என பொறுப்பு வாய்ந்த ஒரு நிர்வாக அதிகாரி 1951 ஆரம்பகாலத்தில்  தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதையும்” சுட்டிக் காட்டியுள்ளார். (Report on Public Administration, Planning Commission, Government of India 1951)     
நேரு காலத்திலயே காங்கிரஸ் அமைச்சர்கள் முதன்மந்திரி ஆகியோர் சம்பந்தப்பட்ட புகழ் பெற்ற முடுகல் ஊழல்  (1951), முந்தரா ஊழல் (1951), டி.டி.கே நிதியமைச்சராக இருந்தபோது ஹரிதாஸ் முந்தரா என்பவரது நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதைக் காப்பாற்ற எல்.ஐ.சி.முறைகேடாக பங்குகளை வாங்கியதில், ஹரிஷ் முந்தரா 22 ஆண்டு ஜெயில் தண்டனையும், டி.டி.கே மந்திரி பதவியும் இழந்தார். அந்தக் காலத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்ட ஊழலாகும். மாளவியா சிராஜுதீன் ஊழல் (1953), பிரதாப்சிங் கைரோன் ஊழல் (1963), .பிரசித்திபெற்றவை. ஆனால் இதற்க்காக அமைச்சர்கள் யாரும் ராஜினாமா செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். 
அரசாங்கத்தில் நிலவி வரும் ஊழல் குறித்து ஆராய 1962ஆம் ஆண்டு  அரசால் நியமிக்கப்பட்ட சந்தானம் குழு, 1964 ஆம் ஆண்டு அளித்த  அறிக்கையில் அமைச்சர்கள் நேர்மையற்றவர்களாகவும், நாணயம் இல்லாதவர்களாக இருப்பதாகவும், கடந்த 16 ஆண்டு பதவிக் காலத்தில் நியாயமற்ற முறையில் சம்பாதித்து மிகவும் சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர். பல அமைச்சர்கள் தங்கள் மகன் மற்றும் உறவினர்களுக்கு முறையற்ற வழிகளில் வேலை வாய்ப்பு மற்றும் பல முறைகேடான உதவிகள் புரிந்து, பொது வாழ்க்கையில் நேர்மையற்றவர்களாக இருப்பதாக, மக்களிடம் கருத்து உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். 
மிகப் பெரும் ஊழலில் மாட்டிக்கொண்ட பஞ்சாப் முதன்மந்திரி பைரோன்சிங் கைரோன் மீது எதிர்கட்சிகள் ஜனாதிபதியிடம் புகார் அளித்தனர். அதுபற்றி நேரு கருத்து தெரிவிக்கும்போது, “உச்சநீதிமன்றம் அவருக்கு எதிராக  தெரிவித்திருக்கும் கருத்துக்கள் அடிப்படையில், அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென்ற கேள்வி எழுப்புகிறார்கள். நிர்வாகத்தில் ஏற்படும் தவறுகளுக்கு  அனைத்து அமைச்சர்களுமே பொறுப்பாவார்கள். சட்டசபைக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள். ஆக ஒரு அமைச்சரை நீக்குவது குறித்து முடிவு செய்யப்பட வேண்டிய இடம்  சட்டசபையாகும். சட்டத்தின்படி பெருவாரியான உறுப்பினர்கள் விருப்பம் இருந்தால் மட்டுமே அமைச்சரை நீக்குவது சாத்தியமாகும்“(Pathology of Corruption by S.S.Gill)  இதிலிருந்து  ஊழலை ஒழிப்பதில் நேரு எவ்வளவு அக்கறை காட்டினார் என்பது வெட்ட வெளிச்சமாகிறது. 
பிறகு ஆட்சிக்குவந்த நேருவின் மகள் இந்திரா காந்தி பிரதமர் பதவியையும், கட்சித் தலைவர் பதவியையும் தானே எடுத்துக்கொண்டார். இதன் மூலம் கட்சி பணத்தை தானே கையாளுவதைத் தொடர்ந்து அரசியலில் பண ஆதிக்கம் தொடங்கியது.. டெல்லி ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் காசாளர் மல்கோத்ராவிற்க்கு இந்திராவே தொலைபேசியில் நகர்வாலா என்பவருக்கு 60 லட்சம் கொடுக்கச் சொன்னதும்,பிறகு அதுபற்றி விசாரணை நடக்கும் போதே அவரும், விசாரனை அதிகாரி காஷ்யப் என்பவரும் கொல்லப்பட்டதும் பரபரப்பாக மக்களிடையே விவாதிக்கப்பட்ட ஒன்றாகும். இந்த ஊழல் விபரம் இன்று வரை  ஒரு மர்மமாகவே உள்ளது. அதிலிருந்து FAIRFAXHPJ பைப்லைன் மற்றும் HDW சப்மெரைன் ஒப்பந்தம் போன்ற காங்கிரசாரின் ஊழல்கள் வெளிவரத்துவங்கின. 1990ல் பாரத பிரதமர் நரசிம்மராவ் ரூ 2500 கோடி ஃபிரான்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து ஏர் பஸ் A 320 வாங்கியதில் கமிசன் தொகை பெற்றது, ஹர்ஷத் மேத்தா பங்குசந்தை ஊழல்1992, கோல்ட் ஸ்டார் அன்ட் அலாய் விவகாரம் 1992, JMM லஞ்சம் கொடுத்த ஊழல், ரூ 65 கோடி ஹவாலா ஊழல், உர ஊழல் 1996, போன்றவை காங்கிரஸ் பிரதமர் நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் புகழ் பெற்ற ஊழல்களாகும். இதைத்தொடர்ந்து போபர்ஸ் ஊழல் நாட்டையே உலுக்கவைத்தது. காங்கிரஸ் அரசால் இத்தாலி குட்ரோச்சி போன்ற குற்றவாளிகள் தப்பிக்க வைக்கப்பட்டார்கள். 
1980ல் ராஜிவ்காந்தி பிரதமாராக இருந்தபோது தனது மனைவி சோனியாவின் உறவினர் இத்தாலி குட்ரோச்சி மூலம் போபர்ஸ் பீரங்கி வாங்கியதில் ஊழல் 4000 கோடி டாலர் இதுவரை இந்தியா கண்டிராத அளவிற்க்கு ஊழல் வெளிப்பட்டது. பல ஆதாரங்கள் இருந்தும் இதில் லஞ்சம் பெற்றவர்களை தண்டிக்காமல் குற்றவாளிகளை விடுவித்தது காங்கிரஸ் அரசு. இது தவிர ராஜிவ்க்கு நெருக்கமான நண்பரும் பிரதான குற்றவாளியுமான குட்ரோச்சியை தப்பிக்கவிட்டதல்லாமல், ஸ்விஸ் வங்கியில் முடக்கிவைக்கப்பட்ட நாற்பது லட்சம் டாலர்களை விடுவிக்க இந்திய அரசு அண்மையில் உதவிபுரிந்தது. 1993ல் காங்கிரசின் சுக்ராம் தொலை தொடர்பு நிறுவனத்தில் பெரும் ஊழலில் ஈடுபட்டார்..2005 உணவுக்காக ஆயில் (united Nations oil for food scam) என்ற  ஐ.நா திட்டத்தில் பெரும் ஊழலில் சிக்கினார் காங்கிரசின் நட்வர் சிங்.
ரூ950 கோடி பீகார் மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் லாலுவுடன் காங்கிரசை சார்ந்த முன்னாள் முதல்வர் ஜெகன்னாத் மிஸ்ராபோன்றோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு வழக்கு நடந்து வருகிறது. அவ்வப்போது லாலுவை வளைக்க சி.பி.ஐ மூலம் காங்கிரஸ் இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறது. 
இதுபோன்ற பல, பல ஊழல்கள் காங்கிரஸ் ஆட்சியில் நடந்திருந்தாலும் தற்போது நடந்துள்ள 2 ஜி ஸ்பெக்ட்ரொம் ஊழல் சுமார் 165000 கோடி போன்று காங்கிரஸ் ஆட்சியில் இது வரை நடந்ததில்லை. இந்த ஊழல் பற்றி பேசி முடிவதற்க்குள், 70000 கோடி காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் ஊழல். வெளிநாடுகளில் நமது மானமே போனது. முதலில் காங்கிரசின் கல்மாடியை மட்டும் குற்றம் சாட்டினார்கள். இப்போது ஷீலா தீட்சித், ஜயபால்ரெட்டி, அம்பிகாசோனி என காங்கிரசார் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. தற்போது கார்கில் வீரர்களுக்கான வீட்டு ஊழல் பெருமளவில் நடந்துள்ளது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. வழக்கம் போல காங்கிரசின் முதல்வர் சவாண் பல முறைகேடுகளை செய்து தனது உறவினர்கள் காங்கிரஸ் தலைவர்கள் ஆகியோருக்கு ஒதுக்கீடு செய்துள்ளார்.
தற்போது காங்கிரசின் மூத்த தலைவர்கள் எட்டுக்கும் மேற்பட்டோர் இதில் சம்பந்தப்பட்டு இருப்பதாகவும், இது போன்று இன்னும் மூன்று ஊழல்களில் சவாண் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்த வண்ணமிருக்கின்றன. 
ஊழல்களின் ஊற்றுக்கண்ணாக இருப்பது காங்கிரஸ் கட்சி. இவர்கள் தான் நாட்டிலே அரசு நிர்வாகத் தூய்மையைப் பற்றி வாய் கிழிய பேசுகின்றனர். தற்போதைய காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல், கார்கில் வீரர்களுக்கான வீட்டு ஊழல், 2 ஜி ஸ்பெக்ட்ரொம் ஊழல், போன்ற ஊழல்களில் காங்கிரசார் சம்பந்தப்பட்ட ஊழல் என்பதால் அவர்களுடைய கைப்பாவையாக உள்ள சி.பிஐ. யை வைத்து வழக்கிலிருந்து தப்பி விடுவார்கள் அல்லது பல ஆண்டுகளுக்கு வழக்கை இழுத்து ஒன்றுமில்லாமல் போக்கி விடுவார்கள்.இதில் பாரதீய ஜனதாக்கட்சி சிறு அளவில்  சம்பந்தப்பட்டிருந்தால் கூட மிகப் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டு, உடனடியாக சி.பிஐ. செயல்பட்டிருக்கும்.. இது போன்ற எண்ணற்ற ஊழல்கள் காங்கிரஸ் ஆட்சியில் நடைபெறுவதும், அதை மறைக்க மற்றவர்கள் மீது திசை திருப்புவதும் வாடிக்கையான ஒன்று. ஆகவே இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள காங்கிரசார் தண்டிக்கப்படுவார்கள் என மக்கள் நினைத்தால், மக்கள் அறியாமையை நினைத்து பரிதாபப்படுவதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது.

1 கருத்து:

  1. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது ...

    தவறு என்பது தவறி செய்வது
    தப்பு என்பது தெரிந்து செய்வது

    தவறு செய்தவன் திருந்த பாக்கணும்
    தப்பு செய்தவன் வருந்தியாகணும்

    ஊழல் தேசியமயமகிவிட்டது ... வாழ்த்துக்கள் அரசியல் வியாதிகளே !

    பதிலளிநீக்கு