பக்கங்கள்

திருக்குறள்

ஞாயிறு, அக்டோபர் 09, 2016

பால்நியூமன் துரோகம்

30 ஆண்டுகாலமாக தமிழனின விடுதலைக்க தங்கள் உயிர்களை தியாகம் செய்த உத்தம வீரர்களான விடுதலை புலிகள் மீது குற்றம் சுமத்திய  பால்நியூமன் 
இன்று சென்னையில் நூல் வெளியீடு விழாவில் கலந்து கொள்கிறார்.
பால்நியூமன் என்பவர் யார்?
நாம் தமிழர் கட்சியின் அனைத்துலக நாடுகள் ஒருங்கிணைப்பாளர் ஆவார். 2009 ஈழப்படுகொலைக்கு பின்னர் அது தொடர்பாக பல்வேறு நாடுகளில் இந்த இனப்படுகொலை சம்மந்தமான விசாரனை நடக்கும் பொழுது டப்ளிங் நீர்ப்பாயத்திலும் விசாரனை நடைபெற்றது போது. இந்த விசாரனை மிகவும் முக்கியமான விசாரனையாகவும் இருந்த நேரத்தில் அங்கு இந்த பால்நியூமன் விடுதலைப் புலிகளுக்கும், ஈழ விடுதலைக்கும் பச்சை துரோகம் செய்யும் விதமாக அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் புலிகள் குழந்தைகளை தமிழீழ போரில் ஈடுபடுத்தியதாகவும், அவர்களை பெற்றோரிடம் இருந்து வலுக்கட்டாயமாக பிடிங்கி, ராணுவத்தில் இணைத்துக் கொள்வதாகவும் அதற்கு பயந்து பெற்றோர்கள் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்து வைத்து விடுவதாகவும், அதையும் மீறி புலிகள் குழந்தைகளை தூக்கிக் கொண்டு போய் கட்டாயமாக சேர்த்தாகவும் அவ்வாறு திருமணமான பெண்களுக்கு கட்டாய கருக் கலைப்பை விடுதலைப் புலிகள் செய்ததாகவும் மேலும் போரின் இறுதிக் கட்டத்தில் ,விடுதலைப் புலிகள் அப்பாவி மக்களை  கேடயமாக பயன்படுத்தியதாகவும் பதிவு செய்திருந்தார் என பலர் பதிவு செய்திருந்தனர். இச்செயல் புலிகள் எந்த மக்களுக்காக உயிரை கொடுத்து போராடினார்களோ அவர்களுக்கான நீதியை பெறவும், தமிழ்ஈழத்தை பெற்றுத்தரவும் உருவாக்கிய கட்சி என கூவிக்கொண்டு தமிழகத்தில் இனவெறியை தூண்டி ஈழவிடுதலையை நோக்கிய பயணத்தை திசை திருப்பிக்கொண்டு இருக்கும் நாம் தமிழர் கட்சியின் அனைத்துலக நாடுகள் ஒருங்கிணைப்பாளர் பதிவு செய்தது அவர்களின் கட்சி தலைமைக்கு தெரியாமல் நடந்து இருக்க வாய்ப்பில்லை. இது சம்பந்தமான கேள்விகள் எழும் வேலையில் பால்நியூமனே அவரின் வாயால் கனடா வானொலியில் ஒப்புக்கொண்டு பேசியது மட்டும் இல்லாது அதை மறுமுறை பதிவு செய்து நியாயம் கற்பித்த ஆடியோ வெளியாகி பலரால் கண்டனத்திற்கு உள்ளாகி கொண்டு இருக்கிறது.
இதில் தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு உறுதுணையாக நிற்கின்றோம் என்பவர்களும் நிகழ்வில் கலந்து கொள்கிறார்கள்.
பால்நியூமனை... இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா?....
இல்லை தெரிந்தும் இவர்கள் கண்டுகொள்ளாமல் தங்களது அரசியலுக்கு 
விளம்பரம் தேடுகிறர்களா?# நன்றி வழக்கறிஞர்  ராசேந்திரன்


Read more: http://www.thaaitamil.com/2016/05/blog-post_19.html#ixzz4Mc0me7yr

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக