பக்கங்கள்

திருக்குறள்

செவ்வாய், ஜனவரி 03, 2012

தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 150+700 கோடி ஒதுக்கீடு

தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு : நெற்பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ₨ 10,000 நிவாரணத் தொகை , மற்ற நீர்ப்பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ₨ 7500 நிவாரணம் , பலா, முந்திரி போன்ற தோட்டப் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ₨ ௯௦௦௦ , முழுவதும் சேதமடைந்த விசைப்படகுகளுக்கு தலா ₨ 5 லட்சம் நிவாரணம் , சேதமடைந்த FRP படகுகள் மற்றும் வலைகளுக்கு ₨ 75,000 நிவாரணம் , சேதமடைந்த வலைகளுடன் கூடிய கட்டுமரங்களுக்கு ₨ 32000 நிவாரணம் , சேதமடைந்த பாரம்பரிய மீன்பிடி படகுகளுக்கு ₨ 7500 நிவாரணம் , முழுமையாக பாதிக்கப்பட்ட குடிசைகளுக்கு தலா ₨ 5000 நிவாரணம் , ஓரளவு பாதிக்கப்பட்டுள்ள குடிசைகளுக்கு தலா ₨ 2500 நிவாரணம் , ஓடுகளை இழந்த வீடுகளுக்கும் தலா ₨ 5000 நிவாரணம் வழங்கப்படும் . நிவாரணத் தொகையை 5-ஆம் தேதிக்குள் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு . ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட 150 கோடியுடன் மேலும் 700 கோடி ஒதுக்கீடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக