பக்கங்கள்

திருக்குறள்

திங்கள், டிசம்பர் 05, 2011

உம்மன் சாண்டியின் வேடத்தை அவரது அட்வகேட் ஜெனரலே கலைத்தார் !!

உம்மன் சாண்டியின் வேடத்தை அவரது அட்வகேட் ஜெனரலே கலைத்தார் !!

உம்மன் சாண்டியின் வேடத்தை அவரது
அட்வகேட் ஜெனரலே கலைத்தார் !!
தெரிந்தோ தெரியாமலோ -
அறிந்தோ அறியாமலோ -
கேரளாவின் அட்வகேட் ஜெனரல் கே.பி.தண்டபாணி -
முதலமைச்சர் உம்மன் சாண்டியின் பொய் முகத்தை
கேரளாவின் உயர்நீதி மன்றத்தில்
வெளிப்படுத்தி விட்டார் !
கேரள முதல் அமைச்சரும், மற்ற அமைச்சர்களும்,
கேரள அரசியல்வாதிகளும், மீடியாக்களும்
தேவையின்றி விஷயத்தை பூதாகாரமாக்குகின்றன
என்கிற உண்மை அவர்களது அட்வகேட் ஜெனரலாலேயே
வெளிப்படுத்தப்பட்டு விட்டது.
முல்லைப் பெரியார் அணை உடைந்து விடும் என்று
அவர்கள் உள்நோக்கத்துடன் கிளப்பிய புரளி
அவர்களுக்கே எதிராகப் போனது.
வெள்ளிக்கிழமை அன்று கேரள உயர்நீதி மன்றம்
முன்பாக ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது.
அணை உடைந்தால் லட்சக்கணக்கான மக்கள்
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிர் இழப்பார்கள்.
எனவே அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க கேரள அரசுக்கு
நீதிமன்றம் உத்திரவிட வேண்டும் -
என்று கோரி பல பொது நல மனுக்கள்
கேரள ஹைகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.
இதற்கு உச்சகட்ட முக்கியத்துவம் கொடுத்த
தலைமை நீதிபதி மஞ்சுளா செல்லூர் மற்றும்
நீதிபதி பி.ஆர்.ராமச்சந்திர மேனன் ஆகியோரைக்
கொண்ட உயர்நீதிமன்ற பென்ச் -
இந்த விஷயத்தில் அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன
என்று கேட்டு 24 மணி நேரத்தில் பதில் அளிக்குமாறு
கேரள அரசுக்கு உத்திரவு இட்டது.
இதற்கு அவசரம் அவசரமாக பதில் மனு சமர்ப்பித்த
கேரளாவின் அட்வகேட்
ஜெனரல் கே.பி.தண்டபாணி -
இதில் பொதுமக்கள் அநாவசியமாக அச்சப்படத்
தேவை இல்லை என்று கூறி  காரணங்களையும்
விளக்கியுள்ளார்.
அவர் கூறியுள்ள மற்ற விஷயங்களோடு,
தமிழ் நாட்டிற்கு மிகவும் சாதகமான -
கீழ்க்கண்ட தகவல்களையும் தந்திருக்கிறார்.
1) அணை உடைய நேர்ந்தாலும், அதிலிருந்து
வெளியேறும் நீர் அனைத்தையும் -
அதன் நேர் கீழே 36 கிலோமீட்டர் தொலைவில்
உள்ள  இடுக்கி அணையிலும்,செருதோனி,
குலமாவு போன்ற நீர்த்தேக்கங்களிலும்
தேக்கி விட  முடியும்.
2)முல்லைப்பெரியாறு அணைக்கும்,
இடுக்கி அணைக்கும் இடையே உள்ள பகுதிகளில்
வெறும் 450 குடும்பங்கள்
மட்டுமே பாதிக்கப்படக்கூடிய  நிலையில் உள்ளன.
ஆபத்து காலங்களில் வெகு சுலபமாக அவர்களை
பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றிவிட முடியும்.
3)இதில் பயப்பட வேண்டிய அளவிற்கு எந்த
ஆபத்தும் இல்லை. ஊடகங்கள்தான் மக்கள் மனதில்
அநாவசியமாக பீதியை உண்டாக்குகின்றன.
இந்த பதில் மனு கேரளாவில்  பலத்த புயலைக்
கிளப்பியுள்ளது.
அட்வகேட் ஜெனரலுக்கு பலத்த கண்டனத்தையும்
எதிர்ப்பையும் ஒன்று சேரத் தெரிவித்துள்ள
கேரள ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச்
சேர்ந்த அரசியல்வாதிகள் -
உடனடியாக அவரைப் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்
என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கேரள அரசின் பொய் வேடத்தை –
அவர்களது அட்வகேட் ஜெனரலே
அம்பலப்படுத்தி இருக்கும் இந்த வினோதத்தை -
தமிழக  அரசு சுப்ரீம் கோர்ட்டில் வாதாடும்போது
சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக