பக்கங்கள்

திருக்குறள்

புதன், மே 09, 2012

டாஸ்மாக் விற்பனை 18 ஆயிரம் கோடியை தாண்டியது!!


*குடிக்கிறாங்கப்பா*


போதையில் தலை சுற்றி விழுபவர்களுக்குத் தமிழ்நாட்டில் பஞ்சமில்லை.


நீங்கள் குடிக்கவே குடிக்காத"பரிசுத்தமான' நூற்றில்...இல்லை... இல்லை... ஆயிரத்தில் ஒருவரா? அப்படியானால் நீங்களும் தலை சுற்றி விழப் போகிற செய்தி ஒன்று உள்ளது.

எல்லாம் "சரக்கு' போடுகிற மேட்டர்தான்!

"தமிழ்நாடு ஸ்டேட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் லிமிடெட்' உங்களுக்கு நன்கு தெரிந்த பெயர்தான்!

அதுதான் தடுக்கி விழுந்தால் அதன் வாசலில்தானே உங்களால் விழ முடியும்? ரொம்பவும் விழிக்காதீர்கள்! டாஸ்மாக்கின் விரிவுதான் இந்தத் தமிழ்நாடு... ஸ்டேட்....!

தமிழ்நாட்டில் அதிக வருவாய் தரும் துறையாக இந்த டாஸ்மாக் இருக்கிறது.

இந்த 2011 -12 ஆண்டில் மட்டும் மது விற்பனை இத்தனை ஆண்டுகள் இல்லாத அளவுக்கு உச்சத்தைத் தொட்டிருக்கிறது.

18 ஆயிரத்து 81 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியிருக்கிறது. சென்ற ஆண்டு 14 ஆயிரத்து 965 கோடி. விற்பனை வளர்ச்சி விகிதம் 21 சதவீதம் என்று கணக்கிட்டிருக்கிறார்கள்.

நல்ல வளர்ச்சி... நல்ல விகிதம்!

2003-04 இல் 3639.93 கோடி ரூபாய் விற்பனை. அடுத்த ஆண்டு சற்று எகிறி 4,872 கோடி ரூபாய்.

இப்படியே எகிறி எகிறி 2003 இல் இருந்ததைவிட இப்போது 4 மடங்கு விற்பனைத் தொகை அதிகரித்திருக்கிறது. இதிலே இன்னொரு கணக்கும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வெளிநாடு என்றாலே நமக்குக் கொஞ்சம் போதை அதிகம்.

இந்தியாவில் தயாராகும்வெளிநாட்டு மதுவகைகளின் விற்பனை
அதை உறுதிப்படுத்துகிறது.

2010 - 11 இல் 4.8 கோடி பெட்டிகள் விற்பனையான இ.த.வெ. மதுவகைகள், 2011-2012 இல் 5.36 கோடியாகத் தாவி அதிக விற்பனையாகியிருக்கிறதாம்!

குடிக்கப் பழகுகிறவர்கள் முதலில் தொடுவது பீர். அதில்தான் போதைஇல்லை என்று ஆரம்பிப்பார்கள்.

"மதுவெல்லாம் குடிக்கமாட்டேன். பீர் மட்டும்தான் குடிப்பேன்' என்று ரொம்ப ஒழுக்கமாகப் பேசுகிறவர்கள் இரண்டாண்டுக்குப் பின்பு விஸ்கி, பிராந்தி, வோட்கா என்று மூழ்கிப் போயிருப்பார்கள்.

2010-11 இல் 2.7 கோடி பெட்டி பீர் பாட்டில்கள் விற்பனையாகின. இது 2011-12 இல் 2.84 கோடி பெட்டிகளாக உயர்ந்திருக்கிறது.

ஏதோ டாஸ்மாக் கடையில் அடித்துப் பிடித்து பாட்டிலை வாங்கினோம். பக்கத்துக் கடையில் வாட்டர் பாக்கெட் வாங்கி,
பிளாஸ்டிக் கப்பில் கலக்கிக் குடித்துவிட்டு, 4 ரூபாய்க்கு காராசேவு பாக்கெட் வாங்கிக் கொறித்துவிட்டு தள்ளாடி நடந்தோம் என்று இருந்த குடிமகன்களின் வசதிக்காக இப்போது பார் அட்டாச்மென்ட்டும்
பெருகியிருக்கிறதாம்.

மொத்தமுள்ள 6,798 சில்லறை விற்பனைக் கடைகளில், 4,730 கடைகளில் பார் அட்டாச் பண்ணியிருக்கிறார்களாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக